1 சாமுவேல் 3 : 1 (ECTA)
கடவுள் சாமுவேலுக்குத் தோன்றுதல் சிறுவன் சாமுவேல் ஏலியின் மேற்பார்வையில் ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தான். அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை அரிதாக இருந்தது. காட்சியும் அவ்வளவாக இல்லை. [* லூக் 1:46- 55 ]
1 சாமுவேல் 3 : 2 (ECTA)
அப்போது ஒரு நாள் ஏலி தம் உறைவிடத்தில் படுத்திருந்தார். கண் பார்வை மங்கிவிட்டதால் அவரால் பார்க்க முடியவில்லை. [* லூக் 1:46- 55 ]
1 சாமுவேல் 3 : 3 (ECTA)
கடவுளின் விளக்கு இன்னும் அணையவில்லை. கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் சாமுவேல் படுத்திருந்தார். [* லூக் 1:46- 55 ]
1 சாமுவேல் 3 : 4 (ECTA)
அப்போது ஆண்டவர், “சாமுவேல்” என்று அழைத்தார். அதற்கு அவன், “இதோ! அடியேன்” என்று சொல்லி, [* லூக் 1:46- 55 ]
1 சாமுவேல் 3 : 5 (ECTA)
ஏலியிடம் ஓடி, “இதோ! அடியேன் என்னை அழைத்தீர்களா?” என்று கேட்டான். அதற்கு அவர், “நான் அழைக்கவில்லை. திரும்பிச் சென்று படுத்துக்கொள்” என்றார். அவனும் சென்றுபடுத்துக் கொண்டான். [* லூக் 1:46- 55 ]
1 சாமுவேல் 3 : 6 (ECTA)
ஆண்டவர் மீண்டும் “சாமுவேல்” என்று அழைக்க, அவன் ஏலியிடம் சென்று, “இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா?” என்று கேட்டான். அவரோ, “நான் அழைக்கவில்லை மகனே! சென்று படுத்துக்கொள்” என்றார். [* லூக் 1:46- 55 ]
1 சாமுவேல் 3 : 7 (ECTA)
சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறியவில்லை. அவனுக்கு ஆண்டவரின் வார்த்தை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. [* லூக் 1:46- 55 ]
1 சாமுவேல் 3 : 8 (ECTA)
மூன்றாம் முறையாக ஆண்டவர் “சாமுவேல்” என்று அழைத்தார். அவன் எழுந்து ஏலியிடம் சென்று “இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா?” என்று கேட்டான். அப்பொழுது சிறுவனை ஆண்டவர்தாம் அழைத்தார் என்று ஏலி தெரிந்துகொண்டார். [* லூக் 1:46- 55 ]
1 சாமுவேல் 3 : 9 (ECTA)
பின்பு, ஏலி சாமுவேலை நோக்கி “சென்று படுத்துக்கொள். உன்னை அவர் மீண்டும் அழைத்தால் அதற்கு நீ, ‘ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்’ என்று பதில் சொல்” என்றார். சாமுவேலும் தம் இடத்திற்குச் சென்று படுத்துக் கொண்டான். [* லூக் 1:46- 55 ]
1 சாமுவேல் 3 : 10 (ECTA)
அப்போது ஆண்டவர் வந்து நின்று, “சாமுவேல், சாமுவேல்” என்று முன்பு போல் அழைத்தார். அதற்கு சாமுவேல், “பேசும், உம் அடியான் கேட்கிறேன்” என்று மறு மொழி கூறினான். [* லூக் 1:46- 55 ]
1 சாமுவேல் 3 : 11 (ECTA)
ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது: “இதோ கேட்போர் அனைவரின் இரு காதுகளும் அதிர்ச்சியடையக்கூடிய ஒரு செயலை நான் இஸ்ரயேலில் செய்யப்போகிறேன்.
1 சாமுவேல் 3 : 12 (ECTA)
அந்நாளில் ஏலியிடம் நான் அவன் வீட்டுக்கு எதிராக பேசியது அனைத்தையும் தொடக்கத்திலிருந்து முடிவுவரை நிறைவேற்றுவேன்.
1 சாமுவேல் 3 : 13 (ECTA)
ஏனெனில், அவன் தன் புதல்வர்கள் கீழ்த்தரமாக நடந்து கொண்டதை அறிந்திருந்தும் தடுக்காத குற்றத்திற்காக அவனது வீட்டிற்கு நீங்காத தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன் என்று அறிவித்தேன்.
1 சாமுவேல் 3 : 14 (ECTA)
ஆகவே, ஏலி வீட்டின் குற்றத்துக்கு பலியினாலோ படையல்களினாலோ என்றென்றும் கழுவாய் செய்யப்பட முடியாது என்று நான் ஏலி வீட்டுக்கு ஆணையிட்டுக் கூறியுள்ளேன்.”
1 சாமுவேல் 3 : 15 (ECTA)
சாமுவேல் காலை வரை படுத்திருந்தான். பிறகு ஆண்டவரது இல்லத்தின் கதவுகளைத் திறந்து வைத்தான். தான் கண்ட காட்சியை ஏலியிடம் சொல்ல அஞ்சினான்.
1 சாமுவேல் 3 : 16 (ECTA)
பிறகு ஏலி “சாமுவேல், என் மகனே!”, என்று கூப்பிட, சாமுவேல். “இதோ அடியேன்” என்று பதில் சொன்னான்.
1 சாமுவேல் 3 : 17 (ECTA)
அவர் அவனை நோக்கி உனக்கு அவர் சொன்ன வார்த்தை என்ன? தயவு செய்து என்னிடம் மறைக்காதே. அவர் உன்னிடம் பேசியதிலிருந்து நீ என்னிடம் எதையாவது மறைத்தால், கடவுள் உனக்கு தகுந்தவாறும் அதற்கு மேலும் செய்வார்” என்றார்.
1 சாமுவேல் 3 : 18 (ECTA)
சாமுவேல் அவருக்கு எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னான். அவரிடமிருந்து எதையும் மறைக்கவில்லை. அதற்கு அவர், “அவர் ஆண்டவர் தான்! அவரது பார்வையில் எது நல்லதோ அதை அவர் செய்யட்டும்” என்றார்.
1 சாமுவேல் 3 : 19 (ECTA)
சாமுவேல் வளர்ந்தான்; ஆண்டவர் அவனோடு இருந்தார்; சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை.
1 சாமுவேல் 3 : 20 (ECTA)
சாமுவேல் ஆண்டவரின் இறைவாக்கினராக நியமிக்கப்பட்டு விட்டார் என்று தாண் முதல் பெயேர்செபா வரையிலும் அனைத்து இஸ்ரயேலரும் அறிந்து கொண்டனர்.
1 சாமுவேல் 3 : 21 (ECTA)
ஆண்டவர் மீண்டும் சீலோவில் தோன்றினார். அங்கேதான் சாமுவேலுக்கு ஆண்டவர் தம் வார்த்தையை வெளிப்படுத்தினார்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21