1 சாமுவேல் 28 : 1 (ECTA)
அக்காலத்தில் பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்கு எதிராகப் போர் தொடுக்க தங்கள் படைகளை ஒன்று திரட்டினர். அப்பொழுது ஆக்கிசு தாவீதிடம், "நீரும் உம் ஆள்களும் என்னோடு போர்க்களம் வரவேண்டும் என்பதை அறிந்து கொள்ளும்" என்றார்.
1 சாமுவேல் 28 : 2 (ECTA)
அதற்குத் தாவீது ஆக்கிசை நோக்கி, "மிக நல்லது உம் பணியாளன் செய்யப்போவதை நீர் அறிந்து கொள்வீர்" என்றார். ஆக்கிசு தாவீதிடம், "எனக்கு என்றும் மெய்க்காப்பாளராய் இருக்ககும்படி உம்மை நான் நியமிக்கிறேன்" என்று சொன்னார்.
1 சாமுவேல் 28 : 3 (ECTA)
சாமுவேல் இறந்தார். இஸ்ரயேலர் அனைவரும் அவருக்காகத்; துக்கம் கொண்டாடியபின் அவரது நகரான இராமாவில் அவரை அடக்கம் செய்தனர். சவுல் சூனியக்காரரையும் குறிச்சொல்பவர்களையும் நாட்டிலிருந்து துரத்தியிருந்தார்.
1 சாமுவேல் 28 : 4 (ECTA)
பெலிஸ்தியர் ஒன்று திரண்டு வந்து சூனேமில் பாளையம் இறங்கினர். சவுல் இஸ்ரயேலர் அனைவரையும் ஒன்று திரட்ட அவர்கள் கில்போவாவில் பாளைமிறங்கினர்.
1 சாமுவேல் 28 : 5 (ECTA)
பெலிஸ்தியரின் படையைக் கண்ட போது சவுல் அச்சம் கொண்டார்; அவருடைய உள்ளம் பெரிதும் திகிலுற்றது.
1 சாமுவேல் 28 : 6 (ECTA)
சவுல் ஆண்டவரிடம் ஆலோசனைக் கேட்க, ஆண்டவர் கனவு மூலமோ, ஊரிம் மூலமோ அவருக்கு பதிலளிக்கவில்லை.
1 சாமுவேல் 28 : 7 (ECTA)
பின்பு சவுல் தம் பணியாளரிடம் "குறி சொல்லும் ஒரு பெண்ணைத் தேடி என்னிடம் அழைத்து வாருங்கள்; நான் அவளிடம் ஆலோசனைக் கேட்க வேண்டும் "என்றார். அதற்கு அவர்தம் பணியாளர்கள் அவரை நோக்கி, "இதோ ஏன்தோரில் குறி சொல்பவள் ஒருத்தி இருக்கிறாள் "என்றார்.
1 சாமுவேல் 28 : 8 (ECTA)
சவுல் மாறுவேடமிட்டு வேற்றுடைஅணிந்து கொண்டார். அவரும் அவருடன் இரு ஆள்களும் இரவில் புறப்பட்டு அப்பெண்ணிடம் சென்றனர். அவர் அவளை நோக்கி, ஏதாவதொரு ஆவியின் துணைக்கொண்டு குறிகேட்டுச் சொல். நான் பெயரிட்டுச் சொல்பவனை எனக்காக எழுப்பு, என்றார்.
1 சாமுவேல் 28 : 9 (ECTA)
அப்பெண் அவரை நோக்கி,சவுல், "சூனியக்காரர்களையும் குறிச்சொல்பவர்களையும் நாட்டிலிருந்து துரத்தி விட்ட செய்தியை நீர் அறிவீர்; என்னைக் கொல்லத்தானே இப்பொழுது என் உயிருக்குக் கண்ணிவைக்கிறீர்? என்றாள்.
1 சாமுவேல் 28 : 10 (ECTA)
அதற்கு சவுல் வாழும் ஆண்டவர் மேல் ஆணை! இது குறித்து எத்தண்டனையும் உனக்கு வராது! என்று ஆண்டவர் மேல் ஆணையிட்டுக் கூறினார்.
1 சாமுவேல் 28 : 11 (ECTA)
பின்பு அப்பெண், "நான் உமக்காக யாரை எழுப்ப வேண்டும்? என்று கேட்க, அவர் சாமுவேலை எழுப்பு என்று பதிலளித்தார்.
1 சாமுவேல் 28 : 12 (ECTA)
அப்பெண்ணின் பார்வையில் சாமுவேல் பட்டவுடன் உரத்த குரலில் கதறி, "நீர் தாமே சவுல், ஏன் என்னை ஏமாற்றினீர்? என்று சவுலை நோக்கிக் கூறினாள்.
1 சாமுவேல் 28 : 13 (ECTA)
அதற்கு அரசர் அவளை நோக்கி, "அஞ்சாதே நீர் பார்ப்பது என்ன? என்று கேட்க அதற்கு அவள் சவுலிடம், "நிலத்திலிருந்து ஒரு தெய்வ உருவம் வெளிவருவதைக் காண்கிறேன் "என்றாள்.
1 சாமுவேல் 28 : 14 (ECTA)
அவர் அவளிடம் அதன் தோற்றம் என்ன? என்று கேட்க அவள் "முதியவர் ஒருவர் எழுந்து வருகிறார். அவர் ஒர் போர்வை அணிந்திருக்கிறார், என்றாள். அவர் சாமுவேல் தான் என்று சவுல் அறிந்து முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து வணங்கினார்.
1 சாமுவேல் 28 : 15 (ECTA)
அப்பொழுது சவுல் சாமுவேலை நோக்கி, "என்னை எழுப்பி நீ ஏன் தொந்தரவு செய்கிறாய்? என்று கேட்க அதற்குச் சவுல் "நான் பெரும் இக்கட்டில் இருக்கிறேன்? ஏனெனில் பெலிஸ்தியர் எனக்கெதிராக போர் தொடுத்து வந்துள்ளனர். கடவுள் என்னை விட்டு அகன்று சென்று விட்டார்; இறைவாக்கினர் மூலமாகவோ அவர் எனக்குப் பதில் சொல்வதில்லை; ஆதலால் நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு அறிவிக்கும்படி உம்மை நான் அழைத்தேன்" என்றார்.
1 சாமுவேல் 28 : 16 (ECTA)
அதற்குச் சாமுவேல், "ஆண்டவர் உன்னை விட்டு விலகி என் பகைவராய் மாறியப்பின் என்னிடம் ஏன் ஆலோசனைக் கேட்கிறாய்?
1 சாமுவேல் 28 : 17 (ECTA)
ஆண்டவர் உன் மூலம் உரைத்தது போல் உனக்குச் செய்தார்; அரசை உன் கையினின்று பறித்து உனக்கு அடுத்திருப்பவனாகிய தாவீதிடம் கொடுப்பார்.
1 சாமுவேல் 28 : 18 (ECTA)
நீ ஆண்டவர் வார்த்தையைக் கேளாமலும், அமலேக்கின் மேல் அவருக்கு இருந்த வெஞ்சினத்திற்கு ஏற்ப நீ நடந்துகொள்ளாமலும் இருந்ததால், ஆண்டவர் இன்று இதைச் செய்துள்ளார்.
1 சாமுவேல் 28 : 19 (ECTA)
மேலும் ஆண்டவர் உன்னையும் உன்னோடு இருக்கும் இஸ்ரயேல் மக்களையும் பெலிஸ்தியரிடம் ஒப்புவிப்பார். நாளை நீயும் உன் புதல்வர்களும் என்னுடன் இருப்பீர்கள்; ஆண்டவர் இஸ்ரயேல் படையையும் பெலிஸ்தியர் கையில் ஒப்புவிப்பார்.
1 சாமுவேல் 28 : 20 (ECTA)
சாமுவேலின் வார்த்தைகளினால் அச்சமுற்ற, சவுல் உடனே தரையில் நெடுங்கிடையாய் விழுந்தார். மேலும் அவர் இரவு பகலாய் ஒன்றும் உண்ணாது இருந்தமையால் வலிமையற்றிருந்தார்.
1 சாமுவேல் 28 : 21 (ECTA)
அப்பெண் சவுலிடம் நெருங்கி வந்து, அவர் மிகவும் கலக்கமுற்றிருப்பதைக் கண்டு அவரை நோக்கி, "இதோ உம் அடியாள் உம் சொல்லைக் கேட்டு, என் உயிரைப் பொருட்படுத்தாது நீர் சொன்ன உம் வார்த்தைகளுக்கு கீழ்ப் படிந்தேன்.
1 சாமுவேல் 28 : 22 (ECTA)
ஆதலால் இப்பொழுது நீரும் உம் அடியாளின் வார்த்தைகளும் கேளும். நான் உமக்கு முன் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன். வழிப் பயணத்திற்கான வலிமையை நீர் பெறுவதற்கு அதை நீர் உண்ணும்" என்றாள்.
1 சாமுவேல் 28 : 23 (ECTA)
அதற்கு அவர் "நான் உண்ண மாட்டேன்" என்று மறுத்தார். ஆனால் அப்பெண்ணுடன் சேர்ந்து அவருடைய பணியாளர்கள் வற்புறுத்தவே அவர் அவர்களது சொல்லுக்கு இசைந்தார்; அதனால் அவர் தரையிலிருந்து எழுந்து படுக்கையின் மேல் உட்கார்ந்தார்.
1 சாமுவேல் 28 : 24 (ECTA)
அப்பெண் வீட்டில் ஒரு கொழுத்த கன்றுக்குட்டி வைத்திருந்தாள்; அதை விரைவில் அடித்து, மாவை எடுத்துப் பிசைந்து புளிப்பற்ற அப்பங்கள் சுட்டாள்.
1 சாமுவேல் 28 : 25 (ECTA)
அவள் அவற்றை சவுலுக்கும் அவர்தம் பணியாளர்களுக்கும் முன்னே வைத்தாள். அவர்களும் உண்டனர்; பின்னர் அவர்கள் எழுந்து அன்றிரவே புறப்பட்டுச் சென்றனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25

BG:

Opacity:

Color:


Size:


Font: