1 சாமுவேல் 27 : 1 (ECTA)
பின்னர் தாவீது இங்கே "நான் சவுலின் கையில் ஒருநாள் மடிவது திண்ணம். ஆதலால் பெலிஸ்தியர் நாட்டுக்குச் சென்று தப்பித்துக் கொள்வதைவிட எனக்கு வேறு வழியில்லை; அப்பொழுது தான் இஸ்ரயேலின் எல்லைக்குள் என்னைக் கண்டு பிடிக்கலாமென்ற நம்பிக்கை சவுலுக்கு அற்றுப் போகும்; நானும் அவர் கையிலிருந்து தப்பி விடுவேன்" என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.
1 சாமுவேல் 27 : 2 (ECTA)
பின் தாவீது அவருடன் இருந்த அறுநூறு ஆள்களும் புறப்பட்டுச் சென்று மாவோகின் மகனும் காத்து மன்னருமான ஆக்கிசு என்பவரிடம் சேர்நதனர்.
1 சாமுவேல் 27 : 3 (ECTA)
அங்கே தாவீதும் அவர் தம் ஆள்களும் அவரவர் குடும்பத்தாரும் தாவீதோடு அவருடைய இருமனைவியரான இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமும், நாபாலின் மனைவியும் கர்மேலைச் சார்ந்தவருமான அபிகாயிலும் காத்து நகரில் ஆக்கிசுடன் தங்கினார்.
1 சாமுவேல் 27 : 4 (ECTA)
தாவீது காத்து நகருக்கு ஓடிவிட்டார் என்று சவுலுக்கு அறிவித்தார். அதன் பின் அவர் அவரைத் தேடிச்செல்லவில்லை.
1 சாமுவேல் 27 : 5 (ECTA)
தாவீது ஆக்கிசை நோக்கி, என் மேல் உமக்கு இரக்கம் இருந்தால் நான் குடியிருக்க நாட்டுப் புற ஊர்கள் ஒன்றில் எனக்கு இடம் தாரும்; உம் அடியான் உம்மோடு தலைநகரில் ஏன் வாழ வேண்டும்? என்றார்.
1 சாமுவேல் 27 : 6 (ECTA)
ஆதலால் அன்று ஆக்கிசு அவருக்குச் சிக்லாகைக் கொடுத்தார்; அதனால் இந்நாள் வரை சிக்லாகு யூதா அரசருக்கு உரியதாய் இருக்கிறது.
1 சாமுவேல் 27 : 7 (ECTA)
தாவீது பெலிஸ்திய எல்லைக்குள் ஓர் ஆண்டும் நான்கு மாதங்களும் குடியிருந்தார்.
1 சாமுவேல் 27 : 8 (ECTA)
பின்னர் தாவீதும் அவர் தம் ஆள்களும் புறப்பட்டுக் கெசூரியர், கிர்சியர், அமலேக்கியர் ஆகியோரைக் கொள்ளையடித்துச் சென்றனர். ஏனெனில் சூர் தொடங்கி எகிப்து நாடுவரை உள்ள நிலப்பகுதியில் பண்டைக்காலந்தொட்டு இவர்கள் குடியிருந்தனர்.
1 சாமுவேல் 27 : 9 (ECTA)
தாவீது அந்நாட்டைத் தாக்கியபோது ஆண் பெண் எவரையும் உயிரோடு விட்டுவைக்கவில்லை; ஆனால் ஆடு, மாடுகள் கழுதைகள், எருதுகள், ஒட்டகங்கள், ஆடைகள் ஆகியவற்றைக் கைப்பற்றிக கொண்டு ஆக்கிசிடம் திரும்பிவந்தார்.
1 சாமுவேல் 27 : 10 (ECTA)
ஆக்கிசு அவரிடம், ".இன்று யாரை நீர் கொள்ளையடித்தீர்? என்று கேட்க தாவீது மறுமொழியாக, "யூதாவின் தென் பகுதியில், அல்லது "எரகு மவேலரின் தென்பகுதியில் அல்லது "கேனியரின் தென்பகுதியியல் கொள்ளையடித்தேன் "என்பார்.
1 சாமுவேல் 27 : 11 (ECTA)
தாவீது ஆண் பெண் எவரையும் உயிரோடு விட்டுவைப்பதில்லை; ஏனெனில் அவர்கள் யாராவது காத்துக்குச் செய்தி கொண்டுவந்தால், "இவ்வாறெல்லாம் தாவீது எங்களுக்குச் செய்தான்" என்று மன்னரிடம் தம்மைப் பற்றித் தெரிவித்துவிடுவார்கள் "என்று தாவீது நினைத்தார். அவர் பெலிஸ்தியர் நாட்டில் குடியிருந்த நாளில் காலமெல்லாம் இதுவே அவரது வழக்கமாய் இருந்தது.
1 சாமுவேல் 27 : 12 (ECTA)
ஆக்கிசு தாவீதின் மேல் நம்பிக்கை வைத்தார்; ஏனெனில் அவர் "இஸ்ரயேலராகிய தம் மக்களின் முழு வெறுப்புக்கு ஆளாகியுள்ளதால், அவர் என்றும் என் பணியாளராய் இருப்பார்" என்று நினைத்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

BG:

Opacity:

Color:


Size:


Font: