1 சாமுவேல் 23 : 1 (ECTA)
கெயிலா நகரைத் தாவீது பாதுகாத்தல் பின்னர், “பெலிஸ்தியர் கெயிலாவுக்கு எதிராகப் போர் தொடுத்துக் களஞ்சியங்களைக் கொள்ளையடிக்கின்றனர்” என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது.
1 சாமுவேல் 23 : 2 (ECTA)
ஆதலால், தாவீது, “நான் சென்று இப்பெலிஸ்தியரை முறியடிக்கலாமா?” என்று ஆண்டவரிடம் ஆலோசனை கேட்டதற்கு, ஆண்டவர் தாவீதிடம், “நீ போய் பெலிஸ்தியரை முறியடித்துக் கெயிலாவைக் காப்பாற்று!” என்று பதிலளித்தார்.
1 சாமுவேல் 23 : 3 (ECTA)
ஆனால், தாவீதின் வீரர்கள் அவரை நோக்கி, “நாம் யூதாவில் இருக்கும் போதே இப்படி அஞ்சுகிறோம். பெலிஸ்தியர் படைகளுக்கு எதிராக நாம் கெயிலாவுக்கு சென்றால் இன்னும் எவ்வளவு அஞ்வோம்?” என்றனர்.
1 சாமுவேல் 23 : 4 (ECTA)
தாவீது மீண்டும் ஆண்டவரிடம் ஆலோசனை கேட்டார்; ஆண்டவர் மீண்டும் மறுமொழியாக, “கெயிலாவுக்குப் புறப்பட்டுப் போ! ஏனெனில், பெலிஸ்தியரை உன்னிடம் ஒப்புவிப்பேன்” என்றார்.
1 சாமுவேல் 23 : 5 (ECTA)
பின்பு, தாவீதும் அவர்தம் வீரர்களும் கெயிலாவுக்குச் சென்று, பெலிஸ்தியரோடு போரிட்டனர். அவர் அவர்களுக்குப் பேரிழப்பை உண்டாக்கி அவர்களின் கால்நடைகளை ஓட்டிச்சென்றார். இவ்வாறு, தாவீது கெயிலாவாழ் மக்களை விடுவித்தார்.
1 சாமுவேல் 23 : 6 (ECTA)
அகிமெலக்கின் மகன் அபியத்தார் தாவீதிடம் ஓடிவந்த போது ஓர் ஏபோதை தம்முடன் எடுத்து வந்திருந்தார்.
1 சாமுவேல் 23 : 7 (ECTA)
பின்னர், தாவீது கெயிலாவுக்கு வந்திருப்பது பற்றிச் சவுலுக்கு தெரிவிக்கப்பட்டபோது, சவுல் “கடவுள் அவனை என்னிடம் ஒப்புவித்துள்ளார். ஏனெனில், கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள நகரில் நுழைந்து அவன்மாட்டிக் கொண்டான்” என்றார்.
1 சாமுவேல் 23 : 8 (ECTA)
அடுத்து, கெயிலாமீது படையெடுத்துத் தாவீதையும் அவர் வீரர்களையும் முற்றுக்கையிடுமாறு சவுல் தம் வீரர்கள் எல்லாரையும் போருக்கு அழைத்தார்.
1 சாமுவேல் 23 : 9 (ECTA)
சவுல் தமக்குத் தீங்கு செய்யத்திட்டமிடுகிறார் என்று தாவீது அறிந்து, குரு அபியத்தாரிடம், “ஏபோதை இங்குக் கொண்டுவா” என்றார்.
1 சாமுவேல் 23 : 10 (ECTA)
பிறகு தாவீது, “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே, என் பொருட்டு சவுல் கெயிலாவுக்கு வந்து அந்நகரை அழிக்க திட்டமிட்டுள்ளதை உம் அடியான் நான் பன்முறை கேள்விப்பட்டேன்.
1 சாமுவேல் 23 : 11 (ECTA)
கெயிலாவின் குடிமக்கள் என்னை அவரிடம் ஒப்புவிப்பார்களா? உம் அடியான் கேள்விப்பட்டது போல் சவுல் வருவாரா? என்று கேட்டார். அதற்கு ஆண்டவர்,“அவன் வருவான்” என்று பதிலளித்தார்.
1 சாமுவேல் 23 : 12 (ECTA)
மீண்டும் தாவீது, “கெயிலா மக்கள் என்னையும் என் வீரர்களையும் சவுலிடம் ஒப்புவிப்பார்களா?” என்று கேட்டார். அதற்கு ஆண்டவர், “அவர்கள் உங்களை ஒப்புவிப்பார்கள்” என்றார்.
1 சாமுவேல் 23 : 13 (ECTA)
பின்பு, தாவீதும் அவருடன் இருந்த சுமார் அறுநூறு பேரும் கெயிலாவைவிட்டுப் புறப்பட்டு இடமாறிச் சென்று கொண்டிருந்தார்கள். தாவீது தப்பிவிட்டதைக் கேள்விப்பட்ட சவுல், மேலும் தொடர்வதைக் கைவிட்டார்.
1 சாமுவேல் 23 : 14 (ECTA)
மலைநாட்டில் தாவீது தாவீது பாலைநிலத்தில் பாதுகாப்பான இடத்தில் தங்கியிருந்தார். மலை நாடான சீபு பாலை நிலப் பகுதிகளில் தங்கியிருந்தவரைச் சவுல் ஒவ்வொரு நாளும் தேடியும் கடவுள் அவரை அவரிடம் ஒப்புவிக்கவில்லை.
1 சாமுவேல் 23 : 15 (ECTA)
சவுல் தம்மைக் கொலைச் செய்யத் தேடுகிறார் என்று அறிந்த தாவீது மிகுந்த அச்சம் கொண்டார்; ஆதலால், ஓர்சாவில் உள்ள சீபு பாலைநிலத்தில் தங்கியிருந்தார்.
1 சாமுவேல் 23 : 16 (ECTA)
சவுலின் மகன் யோனத்தான் புறப்பட்டு ஓர்சாவில் இருந்த தாவீதிடம் வந்து கடவுள் அவரைப் பாதுகாப்பார் என்று திடப்படுத்தினார்.
1 சாமுவேல் 23 : 17 (ECTA)
அவர் தாவீதிடம், “அஞ்சாதே! என் தந்தை சவுல் உன்னைக் கண்டு பிடிக்கமாட்டார். நீ இஸ்ரயேலுக்கு அரசனாவாய்; அப்பொழுது நான் உனக்கு அடுத்த இடத்தை வகிப்பேன்; என் தந்தை சவுல் கூட இதை அறிவார்” என்றார்.
1 சாமுவேல் 23 : 18 (ECTA)
ஆண்டவர் திருமுன் இருவரும் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர். தாவீது ஓர்சாவிலேயே இருக்க, யோனத்தான் வீடுதிரும்பினான். [* 1 சாமு 18: 3 ]
1 சாமுவேல் 23 : 19 (ECTA)
பின்பு, சீபியர் கிபாயாவிலிருந்த சவுலிடம் சென்று, “தாவீது எங்கள் பகுதியில் எசிமோனுக்குத் தெற்கே உள்ள அக்கிலா என்ற மலைநாட்டில் ஓர்சாவின் பாதுகாப்பான இடத்தில் ஒளிந்துக் கொண்டிருக்கிறான் அல்லவா? * திபா 54 தலைப்பு..
1 சாமுவேல் 23 : 20 (ECTA)
அரசே, உம் விருப்பத்தின் படி இப்பொழுதே வாரும்; அவனை நாங்களே அரசரிடம் ஒப்புவிக்கிறோம்” என்று கூறினர்.
1 சாமுவேல் 23 : 21 (ECTA)
சவுல் அவர்களைப் பார்த்து, “நீங்கள் என் மீது இரக்கம் காட்டியதால் ஆண்டவரின் ஆசியைப் பெறுவீர்களாக!
1 சாமுவேல் 23 : 22 (ECTA)
நீங்கள் போய் அவன் நடமாடுகிற இடம் எதுவென்றும், யார் அவனை அங்கு பார்த்தவன் என்றும் இன்னும் நன்றாக ஆய்ந்து அறியுங்கள்; ஏனெனில், அவன் மிகவும் சூழ்ச்சிமிக்கவன் என்று எனக்குத் தெரிய வந்தது.
1 சாமுவேல் 23 : 23 (ECTA)
ஆதலால் அவன் ஒளிந்துக் கொண்டிருக்கும் எல்லா மறைவிடங்களையும் குறித்துக் கொண்டு, உறுதியான தகவல்களுடன் என்னிடம் திரும்பி வாருங்கள். அப்பொழுது நான் உங்களோடு செல்வேன். அவன் நாட்டில் இருந்தால் பல்லாயிர யூதா மக்கள் வாழும் பகுதியிலும் அவனைத் தேடிக் கண்டுபிடித்துவிடுவேன்” என்றார்.
1 சாமுவேல் 23 : 24 (ECTA)
அவர்கள் சவுலுக்கு முன்னரே சீபுக்குப் புறப்பட்டுச் சென்றனர். பின்பு, தாவீதும் அவர்தம் ஆள்களும் எசிமோனுக்குத் தெற்கே, அராபாவிலுள்ள மாவோன் பாலைநிலத்தில் இருந்தனர்.
1 சாமுவேல் 23 : 25 (ECTA)
சவுலும் அவர் ஆள்களும் அவரைத் தேடிச் சென்றனர். தாவீது இதை அறிந்து மாவோன் பாலைநிலத்தில் உள்ள பாறைக்குச் சென்றார். சவுல் இதை கேள்வியுற்று, அவரும் மாவோன் பாலைநிலத்தில் தாவீதைத் தேடினார்.
1 சாமுவேல் 23 : 26 (ECTA)
சவுல் மலையின் ஒரு பக்கத்தில் செல்ல, தாவீதும் அவர் ஆள்களும் அதே மலையின் மறுப்பக்கத்தில் நடந்தனர். சவுலிடமிருந்து தப்பித்துக்கொள்ள தாவீது விரைந்து சென்ற போது, சவுலும் அவர்தம் ஆள்களும் தாவீதையும் அவர்தம் ஆள்களையும் பிடிப்பதற்கு வளைத்துக் கொண்டனர்.
1 சாமுவேல் 23 : 27 (ECTA)
அவ்வேளையில் ஒரு தூதன் சவுலிடம் வந்து, “விரைந்து வாரும்! பெலிஸ்தியர் நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள்” என்றான்.
1 சாமுவேல் 23 : 28 (ECTA)
அதனால், சவுல் தாவீதைக் தொடர்வதைக் கைவிட்டு, பெலிஸ்தியரை எதிர்க்கச் திரும்பிச் சென்றார். ஆதலின், அவ்விடம் “பிரிக்கும் பாறை” என்று அழைக்கப்பட்டது.
1 சாமுவேல் 23 : 29 (ECTA)
தாவீது அங்கிருந்து புறப்பட்டு ஏன்கேதிலுள்ள பாதுகாப்பான இடத்தில் தங்கினார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29