1 சாமுவேல் 13 : 1 (ECTA)
பெலிஸ்தியருக்கு எதிராய்ப் போர் சவுல் அரசராகி ஓராண்டு ஆனபின், இஸ்ரயேல் மீது இரண்டாம் ஆண்டு ஆட்சி செய்து கொண்டிருந்தார்.
1 சாமுவேல் 13 : 2 (ECTA)
அப்பொழுது சவுல் தமக்காக இஸ்ரயேலிருந்து மூவாயிரம் பேரைத் தேர்ந்து கொண்டார். மிக்மாசிலும் பெத்தேல் மலையிலும் சவுலுடன் இரண்டாயிரம் பேர் இருந்தனர். பென்யமினைச் சார்ந்த கிபயாவில் யோனாத்துடன் ஆயிரம் பேர் இருந்தனர். எஞ்சிய மக்களை அவர் அவரவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்.
1 சாமுவேல் 13 : 3 (ECTA)
யோனத்தான் கெபாவில் எல்லைக் காவலில் இருந்த பெலிஸ்தியரை வெட்டி வீழ்த்தினார். பெலிஸ்திய மக்கள் அதைக் கேள்வியுற்றனர். ‘எபிரேயரும் இதைக் கேட்கட்டும்’ என்று நாடெங்கும் சவுல் எக்காளம் ஊதுவித்தார்.
1 சாமுவேல் 13 : 4 (ECTA)
சவுல் பெலிஸ்தியரின் எல்லைக் காவலரை வெட்டி வீழ்த்தியதையும் அதனால் பெலிஸ்தியருக்கு இஸ்ரயேல்மீது கடும்பகை ஏற்பட்டதையும் அறிந்து இஸ்ரயேலர் அனைவரும் சவுலோடு சேர்ந்து கொண்டு கில்காலுக்குச் சென்றனர்.
1 சாமுவேல் 13 : 5 (ECTA)
பெலிஸ்தியர் இஸ்ரயேலோடு போரிட முப்பதாயிரம் தேர்களோடும் ஆறாயிரம் குதிரை வீரர்களோடும் கடற்கரை மணலளவு வீரர்களோடும் திரண்டு வந்து பெத்தேலுக்குக் கிழக்கே மிக்மாசில் பாளையம் இறங்கினார்கள்.
1 சாமுவேல் 13 : 6 (ECTA)
இஸ்ரயேலர் தங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியினால் இன்னலுற்று குகைகளிலும், புதர்களிலும், பாறைகளிலும், கல்லறைகளிலும், பள்ளங்களிலும் ஒளிந்து கொண்டனர்.
1 சாமுவேல் 13 : 7 (ECTA)
எபிரேயர் சிலர் யோர்தனைக் கடந்து காத்து, கிலயாது நாடுகளுக்குச் சென்றனர். சவுல் இன்னும் கில்காலில் இருந்தார். மக்கள் அனைவரும் நடுங்கிக் கொண்டே அவரைப் பின்சென்றனர்.
1 சாமுவேல் 13 : 8 (ECTA)
அவர் சாமுவேல் குறிப்பிட்ட படி ஏழு நாள்கள் காத்திருந்தார். ஆனால்,சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை. ஆகவே, மக்கள் அவரைவிட்டுச் சிதறத் தொடங்கினர். [* 1 சாமு 10: 8 ]
1 சாமுவேல் 13 : 9 (ECTA)
அப்போது சவுல் “எரிபலியையும் நல்லுறவுப் பலியையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று சொல்லி அவ்வாறே எரிபலி செலுத்தினார்.
1 சாமுவேல் 13 : 10 (ECTA)
அவர் எரிபலி செலுத்தி முடிந்தவேளை சாமுவேல் அங்கு வந்தார். சவுல் அவரை சந்திக்கச் சென்று வரவேற்றார்.
1 சாமுவேல் 13 : 11 (ECTA)
சாமுவேல், “நீர் என்ன செய்தீர்? என்று கேட்க அதற்கு சவுல் கூறியது: “மக்கள் என்னிடமிருந்து சிதறிப் போவதைக் கண்டேன். நீரும் குறித்த காலத்தில் வரவில்லை. பெலிஸ்தியரும் மிக்ஸ்பாவில் ஒன்று திரண்டு கொண்டிருந்தார்கள்.
1 சாமுவேல் 13 : 12 (ECTA)
அப்பொழுது ‘பெலிஸ்தியர் எனக்கு எதிராகக் கில்காலுக்கு இறங்கி வருவர்; நானோ இன்னும் ஆண்டவரின் தயவை நாடவில்லை’ என்று உணர்ந்ததால், நான் எரிபலி செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானேன்.”
1 சாமுவேல் 13 : 13 (ECTA)
சாமுவேல் சவுலை நோக்கி, “நீர் அறிவீனமாய்ச் செயல்பட்டீர். உம் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைப்படி நீர் நடக்கவில்லை. இல்லையேல் ஆண்டவர் இஸ்ரயேல் மீது உமது அரசை என்றென்றும் நிறுவியிருந்திருப்பார்.
1 சாமுவேல் 13 : 14 (ECTA)
ஆனால், உமது அரசு நிலைக்காது. ஆண்டவர் தம் மனதிற்கு ஏற்ப ஒருவரைத் தமக்கெனத்தேடி அவரையே தம் மக்களின் தலைவராய் நியமித்துள்ளார். ஏனெனில், ஆண்டவர் கட்டளையின் படி நீர் நடக்கவில்லை” என்றார். [* திப 13: 22 ]
1 சாமுவேல் 13 : 15 (ECTA)
சாமுவேல் எழுந்து கில்காலிலிருந்து பென்யமினைச் சார்ந்த கிபயாவுக்கு சென்றார். சவுல் தம்மோடு இருந்த வீரர்களைக் கணக்கெடுத்தார். அவர்கள் ஏறத்தாழ அறுநூறு பேர்.
1 சாமுவேல் 13 : 16 (ECTA)
சவுலும் அவர் மகன் யோனத்தானும், அவரோடு இருந்த வீரர்களும் பென்யமினைச் சார்ந்த கெபாவில் தங்கினர். பெலிஸ்தியரோ மிக்மாசில் பாளையம் இறங்கியிருந்தார்கள்.
1 சாமுவேல் 13 : 17 (ECTA)
பெலிஸ்தியரின் பாளையத்திலிருந்து மூன்று படைகளாகக் கொள்ளைக்காரர் புறப்பட்டு வந்தனர். ஒரு படையினர் ஒபிரா வழியாகச் சூவால் நாட்டிற்குப் பிரிந்து சென்றனர்.
1 சாமுவேல் 13 : 18 (ECTA)
இன்னொரு படையினர் பெத்கோரோன் வழியாகச் சென்றனர். வேறொரு படையினர் பாலைநில கெபோயிமின் பள்ளத்தாக்குக்கு எதிரான எல்லை வழியில் சென்றனர்.
1 சாமுவேல் 13 : 19 (ECTA)
“எபிரேயர் தங்களுக்காக வாள்களையும் ஈட்டிகளையும் செய்து கொள்ளக்கூடாது” என்று பெலிஸ்தியர் திட்டமிட்டிருந்ததால் இஸ்ரயேல் நாடெங்கும் கொல்லன் எவனும் காணப்படவில்லை.
1 சாமுவேல் 13 : 20 (ECTA)
இஸ்ரயேலர் அனைவரும் தங்கள் கலப்பைக் கொழுக்களையும் மண்வெட்டிகளையும், கடப்பாரைகளையும், கோடாரிகளையும், அரிவாள்களையும் தீட்டுவதற்காகப் பெலிஸ்தியரிடமே சென்றனர்.
1 சாமுவேல் 13 : 21 (ECTA)
தீட்டுவதற்கான கூலி கலப்பைக் கொழு, மண்வெட்டி, முக்கூர்க்கருவி, கோடாரி, தாற்றுக்கோல் ஆகிய ஒவ்வொன்றும் எட்டுகிராம் அளவுள்ள நாணயம்* ஆகும். * ‘பீம்’ என்பது எபிரேய பாடம்..
1 சாமுவேல் 13 : 22 (ECTA)
ஆகவே, போரிடும் நாள் வந்த போது சவுலோடும் யோனத்தானோடும் இருந்த வீரர் கையில் வாளோ ஈட்டியோ கிடையாது. சவுலும் யோனத்தானும் மட்டும் அவற்றை வைத்திருந்தார்கள்.
1 சாமுவேல் 13 : 23 (ECTA)
பெலிஸ்தியரின் எல்லைக் காவல் மிக்மாசு கணவாய் வரை நீடித்திருந்தது.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23