1 பேதுரு 4 : 1 (ECTA)
மாற்றம் பெற்ற வாழ்க்கை எனவே, கிறிஸ்து தம் ஊனுடலில் துன்புற்றார். அப்பொழுது அவர் கொண்டிருந்த மனநிலையை நீங்களும் படைக்கலமாகப் பூண்டுகொள்ளுங்கள். ஊனுடலில் துன்புறுவோர் பாவத்தை விட்டு விடுகின்றனர்.
1 பேதுரு 4 : 2 (ECTA)
அவர்கள் தங்கள் ஊனுடல் வாழ்வின் எஞ்சிய காலமெல்லாம் மனிதருடைய தீயநாட்டங்களுக்கு இசையாமல் கடவுளின் திருவுளப்படி வாழ்கின்றார்கள்.
1 பேதுரு 4 : 3 (ECTA)
பிற இனத்தினர் செய்ய விரும்புவதையெல்லாம் நீங்கள் கடந்த காலத்தில் செய்து வந்தது போதும். அப்பொழுது நீங்கள் காமவெறி, இச்சை, மதுமயக்கம், களியாட்டம், குடிவெறி, வெறுப்புக்குரிய சிலைவழிபாடு ஆகியவற்றில் காலத்தைக் கழித்தீர்கள்.
1 பேதுரு 4 : 4 (ECTA)
இப்போதோ நீங்கள் அவர்களோடு சேர்ந்து அத்தகைய தாறுமாறான வழிகளில் நடப்பதில்லை. இதை அவர்கள் கண்டு வியப்படைகிறார்கள்; இதனால் உங்களைப் பழிக்கிறார்கள்.
1 பேதுரு 4 : 5 (ECTA)
ஆனால், உயிருள்ளோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பளிக்க ஆயத்தமாய் இருப்பவருக்கு அவர்கள் கணக்குக் கொடுப்பார்கள்.
1 பேதுரு 4 : 6 (ECTA)
இறந்தோர் ஊனுடலில் மனிதருக்குரிய தீர்ப்புப் பெறுவர்; ஆவியில் கடவுளுக்குரிய வாழ்வு பெறுவர். இதற்காகவே இறந்தோருக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது.
1 பேதுரு 4 : 7 (ECTA)
அருள்கொடைகளின் பொறுப்பாளர்கள் எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கிவிட்டது. எனவே, இறைவனிடம் வேண்டுதல் செய்யுமாறு கட்டுப்பாடோடும் அறிவுத் தெளிவோடும் இருங்கள்.
1 பேதுரு 4 : 8 (ECTA)
எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள். ஏனெனில், அன்பு திரளான பாவங்களையும் போக்கும். [* நீமொ 10: 12 ]
1 பேதுரு 4 : 9 (ECTA)
முணுமுணுக்காமல் ஒருவருக்கொருவர் விருந்தோம்புங்கள்.
1 பேதுரு 4 : 10 (ECTA)
நீங்கள் கடவுளுடைய பல்வகை அருள்கொடைகளின் சீரிய பொறுப்பாளர்கள். எனவே, உங்களுள் ஒவ்வொருவருக்கும் தாம் பெற்றுக் கொண்ட அருள்கொடையைப் பயன்படுத்தி, ஒருவருக்கொருவர் பணிபுரியுங்கள்.
1 பேதுரு 4 : 11 (ECTA)
ஒருவர் பேசும் கொடையைப் பெற்றிருந்தால், அவரது பேச்சு கடவுளுடைய வார்த்தைகளைப் போல் இருக்கட்டும். ஒருவர் பணி செய்யும் கொடையைப் பெற்றிருந்தால், கடவுள் அருளும் ஆற்றலைப் பெற்றவர் போல் பணி செய்யட்டும்; இவ்வாறு, இயேசு கிறிஸ்துவின் வழியாகக் கடவுள் அனைத்திலும் பெருமை பெறுவார். அவருக்கே மாட்சியும் வல்லமையும் என்றென்றும் உரித்தாகுக! ஆமென்.
1 பேதுரு 4 : 12 (ECTA)
4.துன்புறுத்தப்படுவோருக்கு அறிவுரைகிறிஸ்தவ வாழ்வில் துன்பங்கள் அன்புக்குரியவர்களே, துன்பத்தீயில் நீங்கள் சோதிக்கப்படும்போது, ஏதோ எதிர்பாராதது நேர்ந்துவிட்டதென வியக்காதீர்கள்.
1 பேதுரு 4 : 13 (ECTA)
மாறாக, கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்கள் இத்துணை பங்கு கொள்கிறீர்கள் என எண்ணி மகிழுங்கள். அப்பொழுது கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படும் வேளையில் இன்னும் மகிழ்ந்து பேருவகை கொள்வீர்கள்.
1 பேதுரு 4 : 14 (ECTA)
கிறிஸ்துவின்பொருட்டுப் பிறர் உங்கள்மீது வசை கூறும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில், கடவுளின் மாட்சிமிக்க* தூய ஆவி உங்கள் மேல் தங்கும். * ‘கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவி’ என்னும் சொற்றொடர் சில முக்கிய கையெழுத்துப் படிகளில் ‘கடவுளின் மாட்சியும் வல்லமையும் மிக்க தூய ஆவி’ என்று காணப்படுகிறது..
1 பேதுரு 4 : 15 (ECTA)
ஆனால், உங்களுக்கு வரும் துன்பங்கள், நீங்கள் கொலைஞராகவோ, திருடராகவோ, தீமை செய்பவராகவோ, பிறர் காரியங்களில் தலையிடுபவராகவோ இருப்பதால் வந்தவையாய் இருக்கக்கூடாது.
1 பேதுரு 4 : 16 (ECTA)
மாறாக, நீங்கள் கிறிஸ்தவராய் இருப்பதால் துன்புற்றால், அதற்காக வெட்கப்படலாகாது. அந்தப் பெயரின் பொருட்டுக் கடவுளைப் போற்றிப் புகழுங்கள்.
1 பேதுரு 4 : 17 (ECTA)
ஏனெனில், தீர்ப்புக்கான காலம் கடவுளின் வீட்டாரிடத்தில் தொடங்கிவிட்டது. நம்மிடையே அது முதலில் தொடங்குகிறதென்றால், கடவுளின் நற்செய்தியை ஏற்காதவர்களின் முடிவு என்னவாகும்?
1 பேதுரு 4 : 18 (ECTA)
“நேர்மையாளரே மீட்கப்படுவது அரிதென்றால், இறைப்பற்றில்லாதோரும், பாவிகளும் தண்டனை பெறுவது திண்ணமன்றோ!” [* நீமொ 11: 31 ]
1 பேதுரு 4 : 19 (ECTA)
ஆகவே, கடவுளின் திருவுளப்படி துன்பப்படுகிறவர்கள் நன்மை செய்வதில் நிலைத்திருந்து படைத்தவரிடம் தங்களை ஒப்படைப்பார்களாக! அவர் நம்பத்தக்கவர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19