1 இராஜாக்கள் 6 : 1 (ECTA)
{சாலமோன் திருக்கோவில் கட்டுதல்} [PS] இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறின நானூற்று எண்பதாம் ஆண்டு, சாலமோன் இஸ்ரயேலுக்கு அரசரான நான்காம் ஆண்டு, ‘சிவு’ என்ற இரண்டாம் மாத்தில் அவர் ஆண்டவரின் இல்லத்தைக் கட்டத் தொடங்கினார்.
1 இராஜாக்கள் 6 : 2 (ECTA)
அரசர் சாலமோன் ஆண்டவருக்கென கட்டின இல்லத்தின் அளவு; நீளம் அறுபது முழம், அகலம் இருபது முழம், உயரம் முப்பது முழம்.
1 இராஜாக்கள் 6 : 3 (ECTA)
கோவிலது தூயகத்தின் முன் மண்டபம், கோவிலின் அகலத்திற்குச் சமமாய் இருபது முழ நீளமும், கோவிலுக்கு முன்னால் பத்து முழு அகலமும், கொண்டிருந்தது.
1 இராஜாக்கள் 6 : 4 (ECTA)
வெளிப்புறம் குறுகி உட்புறம் விரிந்த பலகணிகளை அவர் கோவிலில் அமைத்தார்.
1 இராஜாக்கள் 6 : 5 (ECTA)
கோவிலின் சுவரைச் சுற்றி, — அதாவது தூயகத்தையும் கருவறையையும் சுற்றி இருந்த — சுவரை ஒட்டி மேடை எழுப்பி அதன் மேல் அடுக்கடுக்காய்ச் சிற்றறைகளைக் கட்டினார்.[PE]
1 இராஜாக்கள் 6 : 6 (ECTA)
[PS] கீழிருந்த அறைகள் ஐந்து முழ அகலமும், நடுவிலிருந்த அறைகள் ஆறு முழ அகலமும், மேலிருந்த அறைகள் ஏழு முழ அகலமுமாய் இருந்தன. அந்த அறைகளின் விட்டங்கள் கோவிலின் சுவருக்குள் போகாதபடி அவற்றைத் தாங்குவதற்கென, சுற்றிலும் வெளிப்புறத்தில் ஒட்டுச்சுவர் அமைத்தார்.[PE]
1 இராஜாக்கள் 6 : 7 (ECTA)
[PS] செதுக்கி முடித்த கற்களாலேயே கோவில் கட்டப்பட்டதால், அது கட்டப்பட்டபோது, சுத்தியல் உளி போன்ற எந்த இரும்புக் கருவியின் ஒலியும் கோவிலில் கேட்கவில்லை.[PE]
1 இராஜாக்கள் 6 : 8 (ECTA)
[PS] கீழறைகளுக்குப் போகும் வாயில் கோவிலின் தென்புறம் இருந்தது. சுழற்படிகளால் நடு அறைகளுக்கும், அங்கிருந்து மேல் அறைகளுக்கும் ஏறிச் செல்வர்.
1 இராஜாக்கள் 6 : 9 (ECTA)
அவர் கேதுரு மர விட்டங்களாலும் பலகைகளாலும் கோவிலுக்கு மச்சுப்பாவி அதைக் கட்டிமுடித்தார்.
1 இராஜாக்கள் 6 : 10 (ECTA)
கோவிலைச் சுற்றிலும் ஐந்து முழ உயரமாகச் சுற்றுக்கட்டு எழுப்பி, அதைக் கேதுரு மரங்களால் கோவிலோடு இணைத்தார்.[PE]
1 இராஜாக்கள் 6 : 11 (ECTA)
[PS] அப்போது ஆண்டவரின் வாக்கு சாலமோனுக்கு உரைக்கப்பட்டது. [* விப 26:33-34 ]
1 இராஜாக்கள் 6 : 12 (ECTA)
அவர், “நீ என் நியமங்களின்படி ஒழுகி, என் நீதிச்சட்டங்களின்படி செயலாற்றி, என் கட்டளைகளைக் கடைப்பிடித்து நடந்து வருவாயாகில், நீ கட்டுகிற இக் கோவிலைக் குறித்து நான் உன் தந்தை தாவீதுக்குச் சொன்ன என் வாக்கை உன்னிடம் நிறைவேற்றுவேன்.
1 இராஜாக்கள் 6 : 13 (ECTA)
இஸ்ரயேல் மக்களிடையே குடியிருப்பேன்; என் மக்களாகிய இஸ்ரயேலரைக் கைவிடமாட்டேன்” என்றார்.
1 இராஜாக்கள் 6 : 14 (ECTA)
சாலமோன் கோவிலைக் கட்டிமுடித்தார்.[PE]
1 இராஜாக்கள் 6 : 15 (ECTA)
{திருக்கோவிலின் உள் வேலைப்பாடுகள்[BR](2 குறி 3:8-14)} [PS] பின்னர், கோவில் சுவர்களின் உட்புறத்தைக் கீழ்த்தளம் முதல் மேல் மச்சுவரை, கேதுரு பலகைகளால் அவர் மூடினார்; இவ்வாறு உட்புறம் முழுவதையும் மரத்தால் அவர் மூடினார்; மேலும் கோவிலின் கீழ்த்தளத்தை நூக்கு மரப்பலகைகளால் பாவினார்.
1 இராஜாக்கள் 6 : 16 (ECTA)
கோவிலின் பிற்பகுதியில் இருபது முழ இடத்தை, கீழ்த்தளம் முதல் மேல் மச்சுவரை, கேதுருப் பலகைகளால் தடுத்து, திருத்தூயகமாகிய கருவறையை அவர் அமைத்தார்.
1 இராஜாக்கள் 6 : 17 (ECTA)
அதற்கு முன்னால் நாற்பது முழஇடம் கோவில் தூயகமாய் அமைந்தது.
1 இராஜாக்கள் 6 : 18 (ECTA)
கோவிலின் உட்புறமெங்கும் மூடியிருந்த கேதுருப் பலகைகளில் மொக்கு வடிவங்களும் விரிந்த மலர்களின் வடிவங்களும் செதுக்கப்பட்டிருந்தன. உட்புறமெங்கும் முற்றிலும் கேதுருப் பலகை மூடியிருந்ததால் கல்லே காணப்படவில்லை.
1 இராஜாக்கள் 6 : 19 (ECTA)
ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை வைப்பதற்கென்று கோவிலின் உட்புறத்தில் கருவறையை அவர் அமைத்திருந்தார்.
1 இராஜாக்கள் 6 : 20 (ECTA)
கருவறை இருபது முழ நீளமும், இருபது முழ அகலமும், இருபது முழ உயரமுமாய் இருந்தது. அவர் அதனைப் பசும்பொன் தகடுகளால் மூடினார். பீடத்தையும் கேதுருப் பலகைகளால் மூடினார்.
1 இராஜாக்கள் 6 : 21 (ECTA)
கோவிலின் உட்புறத்தைச் சாலமோன் பசும் பொன்னால் மூடினார்; கருவறைக்கு முன்னால் பொன்னில் பொதியப்பட்ட பொற்சங்கிலிகளைத் தொங்கவிட்டார்.
1 இராஜாக்கள் 6 : 22 (ECTA)
இவ்வாறு, கோவில் முழுவதையும், ஓரிடமும் விடாமல், பொன்னால் அவர் மூடினார்; கருவறைப் பீடம் முழுவதையும் பொன்னால் மூடினார்.[PE]
1 இராஜாக்கள் 6 : 23 (ECTA)
[PS] கருவறையில் ஒலிவ மரத்தால் பத்து முழ உயரமான இரு கெருபுகளை அவர் செய்து வைத்தார். [* விப 30:1-3 ]
1 இராஜாக்கள் 6 : 24 (ECTA)
முதல் கெருபின் ஓர் இறக்கையின் நீளம் ஐந்து முழம், கெருபின் மறு இறக்கையின் நீளமும் ஐந்து முழம். இரு இறக்கை நுனிகளுக்கு இடையே இருந்த தூரம் பத்து முழம். [* விப 25:18-20. ]
1 இராஜாக்கள் 6 : 25 (ECTA)
இரண்டாம் கெருபின் அளவும் இருந்தன. இரண்டாம் கெருபின் அளவும் பத்து முழம். இரு கெருபுகளும் ஒரே அளவாயும் ஒரே வடிவமாயும் இருந்தன. [* விப 25:18-20. ]
1 இராஜாக்கள் 6 : 26 (ECTA)
ஒரு கெருபு பத்து முழ உயரம் இருந்தது. [* விப 25:18-20. ]
1 இராஜாக்கள் 6 : 27 (ECTA)
மற்ற கெருபும் அதே அளவாய் இருந்தது. அவர் அந்தக் கெருபுகளைக் கோவிலின் உட்பகுதியில் வைத்தார். அவற்றின் இறக்கைகள் விரிந்தவாறு இருந்தன. ஒரு கெருபின் இறக்கை ஒரு பக்கத்துச் சுவரையும் மறு கெருபின் இறக்கை மறுபக்கத்துச் சுவரையும் தொட்டுக் கொண்டிருந்தன. [* விப 25:18-20. ]
1 இராஜாக்கள் 6 : 28 (ECTA)
அவர் அக்கெருபுகளையும் பொன்னால் மூடினார். [* விப 25:18-20. ]
1 இராஜாக்கள் 6 : 29 (ECTA)
கோவிலின் சுவர்களெங்கும் சுற்றிலும், உள்ளும் புறமும் கெருபுகள், ஈச்ச மரங்கள், விரிந்த மலர்கள் ஆகியவற்றின் வடிவங்களை அவர் செதுக்கி வைத்தார். [* விப 25:18-20. ]
1 இராஜாக்கள் 6 : 30 (ECTA)
கோவிலின் பிற்பகுதியிலும் முற்பகுதியிலும் தளத்தைப் பொன்னால் அவர் மூடினார்.[PE]
1 இராஜாக்கள் 6 : 31 (ECTA)
[PS] கருவறையின் நுழைவாயிலுக்கு இரட்டைக் கதவையும் ஐங்கோண வடிவத்தில் கதவு நிலைகளையும் ஒலிவ மரத்தால் அவர் செய்து வைத்தார்.
1 இராஜாக்கள் 6 : 32 (ECTA)
ஒலிவ மரத்தாலான இந்த இரட்டைக் கதவில் கெருபுகள், விரிந்த மலர்கள் ஆகியவற்றின் வடிவங்களை அவர் செதுக்கி வைத்தார். அவற்றைப் பொன்னால் வேய்ந்தார்.[PE]
1 இராஜாக்கள் 6 : 33 (ECTA)
[PS] அவர் தூயக நுழைவாயிலுக்கு நாற்கோண வடிவத்தில் கதவு நிலைகளை ஒலிவ மரத்தால் செய்து நிறுத்தினார்.
1 இராஜாக்கள் 6 : 34 (ECTA)
அதன் இரு கதவுகளும் நூக்கு மரத்தால் செய்யப்பட்டிருந்தன. மறுகதவும் இரு மடிப்பாய்ச் செய்யப்பட்டிருந்தது.
1 இராஜாக்கள் 6 : 35 (ECTA)
அவற்றில் கெருபுகள்,ஈச்ச மரங்கள், விரிந்த மலர்கள் ஆகியவற்றின் வடிவங்களைச் செதுக்கி, அவற்றின் அளவுக்கேற்ற பொன் தகட்டால் அவர் மூடினார்.
1 இராஜாக்கள் 6 : 36 (ECTA)
உள் முற்றத்தின் சுவர்களை, மூன்று வரிசை செதுக்கிய கற்களாலும், ஒரு வரிசை கேதுருக் கட்டைகளாலும் அவர் அமைத்தார்.[PE]
1 இராஜாக்கள் 6 : 37 (ECTA)
[PS] நான்காம் ஆண்டு “சிவு” மாதத்தில் ஆண்டவரின் இல்லத்திற்கு அடித்தளம் இடப்பட்டது.
1 இராஜாக்கள் 6 : 38 (ECTA)
பதினோராம் ஆண்டு “பூல்” என்ற எட்டாம் மாதத்தில் கோவிலின் எல்லாப் பகுதிகளும் திட்டமிட்டபடியே கட்டி முடிக்கப்பட்டன. இவ்வாறு கோவிலைக் கட்டி முடிக்க ஏழு ஆண்டுகள் ஆயின.[PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38

BG:

Opacity:

Color:


Size:


Font: