1 இராஜாக்கள் 4 : 1 (ECTA)
சாலமோனின் அலுவலர் சாலமோன் அரசர் இஸ்ரயேலர் அனைவர்மீதும் ஆட்சி செலுத்தி வந்தார்.
1 இராஜாக்கள் 4 : 2 (ECTA)
அவருடன் இருந்த அதிகாரிகள் இவர்களே;
1 இராஜாக்கள் 4 : 3 (ECTA)
குரு: சாதோக்கின். மகன் அசரியா. தலைமைச் செயலர்; சீசாவின் மைந்தர் எலிகோரேபு, அகியா. அமைச்சன்; அகிலூதின் மகன் யோசபாத்து.
1 இராஜாக்கள் 4 : 4 (ECTA)
படைத் தலைவன்; யோயாதாவின் மகன் பெனாயா. குருக்கள்; சாதோக்கு, அபியத்தார்.
1 இராஜாக்கள் 4 : 5 (ECTA)
தலைமைக் கண்காணிப்பாளன்; நாத்தானின் மகன் அசரியா. அரசரின் ஆலோசகன்; நாத்தானின் மகன் குரு சாபூது.
1 இராஜாக்கள் 4 : 6 (ECTA)
அரண்மனை மேற்பார்வையாளன்; அகிசார். கட்டாய வேலைக்காரர் மேற்பார்வையாளன்; அப்தாவின் மகன் அதோனிராம்.
1 இராஜாக்கள் 4 : 7 (ECTA)
இஸ்ரயேல் நாடெங்கும் சாலமோனின் கீழ் பன்னிரு ஆளுநர் இருந்தனர். அவர்கள் அரசருக்கும் அவரது அரண்மனைக்கும் வேண்டிய உணவுப் பொருட்களைச் சேகரித்துக் கொடுத்து வந்தார்கள். அவர்கள் மாதத்திற்கு ஒருவராக ஆண்டு முழுவதும் தேவையான பொருள்களைச் சேகரித்துத் தந்தார்கள்.
1 இராஜாக்கள் 4 : 8 (ECTA)
அவர்களின் பெயர்கள்: பென்கூர் — மலை நாடான எப்ராயிம் இவனுக்கு உரியது.
1 இராஜாக்கள் 4 : 9 (ECTA)
பென்தெக்கர் — மாக்காசு, சாயல்பிம், பேத்சமேசு, ஏலோன் பெத்கானான் ஆகிய நகர்கள் இவனுக்கு உரியவை.
1 இராஜாக்கள் 4 : 10 (ECTA)
பென்கெசது — அருபோத்து, சோக்கோவும் ஏபேர் பகுதி முழுவதும் இவனுக்கு உரியவை.
1 இராஜாக்கள் 4 : 11 (ECTA)
சாலமோனின் மகள் தாப்பாத்தின் கணவன் பென் அபினதாபு — நாபத்தோர் பகுதி முழுவதும் இவனுக்கு உரியது.
1 இராஜாக்கள் 4 : 12 (ECTA)
அகிலூதின் மகன் பாகனா — தானாக்கு, மெகிதோ, பெத்சான் நகர்ப் பகுதிகளும் சாரத்தானை அடுத்து, இஸ்ரயேலுக்குத் தெற்கே, பெத்சானிலிருந்து ஆபேல் மெகோலா வரை, யோக்மாயாமின் மறுபக்கம் உள்ள பகுதியும் இவனுக்குரியவை.
1 இராஜாக்கள் 4 : 13 (ECTA)
பென்கெபர் — ராமோத்து கிலயாதும் மனாசேயின் மகன் யாயிர்க்குச் சொந்தமான கிலயாது நாட்டுச் சிற்றூர்களும், பாசானிலுள்ள அர்கோபு நாட்டின் மதிற்சுவர்களும் வெண்கலக் குறுக்குக் கம்பிகளும் கொண்ட அறுபது நகர்களும் இவனுக்கு உரியவை.
1 இராஜாக்கள் 4 : 14 (ECTA)
இத்தோவின் மகன் அகினதாபு — மகனயிம் இவனுக்கு உரியது.
1 இராஜாக்கள் 4 : 15 (ECTA)
சாலமோனின் மகள் பாஸ்மத்தின் கணவன் அகிமாசு — நப்தலி இவனுக்கு உரியது.
1 இராஜாக்கள் 4 : 16 (ECTA)
ஊசாயின் மகன் பாகனா — ஆசேர், பெயலோத்து இவனுக்கு உரியவை.
1 இராஜாக்கள் 4 : 17 (ECTA)
பாருவாகின் மகன் யோசபாத்து — இசக்கார் இவனுக்கு உரியது.
1 இராஜாக்கள் 4 : 18 (ECTA)
ஏலாவின் மகன் சிமயி — பென்யமின் இவனுக்கு உரியது.
1 இராஜாக்கள் 4 : 19 (ECTA)
ஊரியின் மகன் கெபேர் — எமேரியரின் மகன் சீகோனுக்கும் பாசானின் மன்னன் ஓகுக்கும் உரியதாய் இருந்த கிலயாது நாடு இவனுக்குரியது.
1 இராஜாக்கள் 4 : 20 (ECTA)
சாலமோனின் சீரும் சிறப்பும் இவர்களைத் தவிர யூதாப் பகுதிக்கு ஆளுநர் ஒருவர் இருந்தார். யூதா, இஸ்ரயேல் மக்கள் கடற்கரை மணலைப் போல் திரளாய் இருந்தனர்; உண்டு குடித்து மகிழ்ந்திருந்தனர்.
1 இராஜாக்கள் 4 : 21 (ECTA)
சாலமோன், யூப்பிரத்தீசு, தொடங்கிப் பெலிஸ்தியரின் நாடு வரையிலும், எகிப்தின் எல்லை வரையிலும் இருந்த நாடுகளின் மேலும் ஆட்சி செலுத்தி வந்தார். அவரது வாழ்நாள் முழுவதும் அந்நாடுகளின் மக்கள் சாலமோனுக்குக் கப்பம் கட்டி அடிபணிந்திருந்தனர். [* தொநூ 15:18;2 குறி 9: 26 ]
1 இராஜாக்கள் 4 : 22 (ECTA)
சாலமோன் வீட்டில் நாள்தோறும் உணவுக்காகத் தேவைப்பட்டவை; முப்பது ‘கலம்’* மிருதுவான மாவு; அறுபது “கலம்’** நொய்; * ‘கோர்’ என்பது எபிரேய பாடம்.
1 இராஜாக்கள் 4 : 23 (ECTA)
கொழுத்த மாடுகள் பத்து; மேய்ச்சலிலிருந்து வந்த மாடுகள் இருபது; ஆடுகள் நூறு; கலைமான்கள், சிறுமான்கள், வரையாடுகள், கொழுத்த கோழிகள் ஆகியவை.
1 இராஜாக்கள் 4 : 24 (ECTA)
திப்சாவிலிருந்து காசா வரையிலும் யூப்பரத்தீசின் மேற்குப் புறத்தில் உள்ள நாடுகள் அனைத்தின் மீதும், அந்த ஆற்றுக்கு மேற்கே இருந்த அரசுகள் அனைத்தின் மீதும் அவர் ஆட்சி செலுத்தி வந்தார். எல்லைப்புறப் பகுதிகள் அனைத்திலும் அமைதி நிலவியது.
1 இராஜாக்கள் 4 : 25 (ECTA)
சாலமோனின் வாழ்நாளெல்லாம் தாண் முதல் பெயேர்செபா வரையிலும் பரவியிருந்த யூதா, இஸ்ரயேல் மக்கள் பாதுகாப்புடன் வாழ்ந்தனர். அவர்களுள் ஒவ்வொருவரும் திராட்சைத் தோட்டங்களையும் அத்திமரங்களையும் உடைமையாகக் கொண்டிருந்தனர்;
1 இராஜாக்கள் 4 : 26 (ECTA)
சாலமோனுக்கு இருந்த தேர்க்குதிரை இலாயங்கள் நாற்பதினாயிரம்; குதிரை வீரர்கள் பன்னீராயிரம். [* 1 அர 10:26; 2 குறி 1:14; 9: 25 ]
1 இராஜாக்கள் 4 : 27 (ECTA)
ஆளுநர்கள் அவரவர் முறைப்படி மாதந்தோறும் அரசர் சாலமோனுக்கும் அவரோடு உணவு அருந்தி வந்த அனைவருக்கும் தேவையான உணவுப் பொருள்களைக் கொடுத்து வந்தார்கள். ஒரு குறையும் வைக்கவில்லை.
1 இராஜாக்கள் 4 : 28 (ECTA)
மேலும், அவர்கள் தேர்க் குதிரைகளுக்கும் கோவேறு கழுதைகளுக்கும் தேவைப்பட்ட வாற்கோதுமையையும் வைக்கோலையும் தங்களுக்குக் குறிக்கப்பட்ட முறையின்படி, அவை இருந்த இடத்திற்குக் கொண்டு வந்தார்கள்.
1 இராஜாக்கள் 4 : 29 (ECTA)
கடவுள் சாலமோனுக்கு மிகுந்த ஞானத்தையும் அறிவுக் கூர்மையையும் கடற்கரை மணலெனப் பரந்த அறிவாற்றலையும் அளித்திருந்தார்.
1 இராஜாக்கள் 4 : 30 (ECTA)
கீழை நாட்டினர் அனைவரின் ஞானத்தையும், எகிப்தியரின் எல்லாவகை ஞானத்தையும்விடச் சாலமோனின் ஞானம் சிறந்ததாய் விளங்கிற்று.
1 இராஜாக்கள் 4 : 31 (ECTA)
எசுராகியனான ஏத்தானைவிட, ஏமான், கல்கோல், தர்தா என்ற மாகோலின் புதல்வர், மற்ற மனிதர் அனைவரையும் விட, அவரே ஞானத்தில் சிறந்து விளங்கினார். * திபா 89 தலைப்பு..
1 இராஜாக்கள் 4 : 32 (ECTA)
சுற்றிலுமிருந்த நாடுகள் அனைத்திலும் அவர் புகழ் பரவிற்று. அவர் மூவாயிரம் நீதிமொழிகளை உரைத்தார். அவர் இயற்றிய பாடல்களின் எண்ணிக்கை ஆயிரத்து ஐந்து. [* நீமொ 1:1; 10:1; 25:1; இபா 1: 1 ]
1 இராஜாக்கள் 4 : 33 (ECTA)
லெபனோனின் கேதுரு முதல் சுவரில் முளைக்கும் ஈசோப்பு வரை உள்ள எல்லா மரவகைகளைக் குறித்தும் நடப்பன, பறப்பன, ஊர்வன, நீந்துவன ஆகியவற்றைக் குறித்தும் கருத்துரை வழங்கினார்.
1 இராஜாக்கள் 4 : 34 (ECTA)
சாலமோனின் ஞானத்தைக் கேட்கப் பல்வேறு இனத்தைச் சார்ந்தவர் அவரை நாடி வந்தனர். அவரது ஞானத்தைப் பற்றிக் கேள்வியுற்ற பின்னர் அனைவரும் அவரைத் தேடி வந்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34