1 கொரிந்தியர் 16 : 1 (ECTA)
7.இறைமக்களுக்காக நன்கொடை திரட்டல் இப்போது இறைமக்களுக்கு வழங்கும் நன்கொடையைக் குறித்துப் பார்ப்போம். கலாத்திய திருச்சபைகளுக்கு நான் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள். [* உரோ 15:25, 26 ]
1 கொரிந்தியர் 16 : 2 (ECTA)
நீங்கள் ஒவ்வொருவரும் வாரத்தின் முதல் நாளில் அவரவர் வருவாய்க்கு ஏற்றவாறு ஒரு தொகையைச் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். அப்படிச் செய்தால் நான் அங்கு வந்தபின் நன்கொடை திரட்ட வேண்டியதிராது.
1 கொரிந்தியர் 16 : 3 (ECTA)
தகுதியுள்ளவர்கள் என நீங்கள் கருதுவோரிடம் நான் வரும்போது அறிமுகக் கடிதங்களைக் கொடுத்து உங்கள் கொடையை எருசலேமுக்கு அனுப்பி வைப்பேன்.
1 கொரிந்தியர் 16 : 4 (ECTA)
நானும் போவது நல்லது எனத் தோன்றினால் நானும் போவேன்; அவர்கள் என்னோடு வரலாம்.
1 கொரிந்தியர் 16 : 5 (ECTA)
8.முடிவுரைபயணத்திட்டம் நான் மாசிதோனியா வழியாகச் செல்லவிருக்கிறேன். மாசிதோனியாவைக் கடந்தபின் உங்களிடம் வருவேன். [* திப 19: 21 ]
1 கொரிந்தியர் 16 : 6 (ECTA)
நான் ஒருவேளை உங்களோடு தங்கலாம்; குளிர் காலத்தை அங்கே கழிக்கலாம். அப்போது நான் அடுத்ததாகப் போகுமிடத்திற்கு நீங்கள் என்னை வழி அனுப்பி வைக்கலாம்.
1 கொரிந்தியர் 16 : 7 (ECTA)
போகிற போக்கில் உங்களைப் பார்த்துவிட்டுச் செல்ல நான் விரும்பவில்லை; ஆண்டவர் அனுமதிப்பாரானால் சிறிது காலம் உங்களிடம் வந்து தங்கலாம் என நம்புகிறேன்.
1 கொரிந்தியர் 16 : 8 (ECTA)
பெந்தக்கோஸ்து விழா வரை எபேசில் தங்கியிருப்பேன். [* திப 19:8- 10 ]
1 கொரிந்தியர் 16 : 9 (ECTA)
அங்கு எதிரிகள் பலர் இருந்தாலும் பயனுள்ள முறையில் எபேசில் பணியாற்ற நல்லதொரு வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. [* திப 19:8- 10 ]
1 கொரிந்தியர் 16 : 10 (ECTA)
திமொத்தேயு உங்களிடம் வரும்போது அவருக்கு எவ்விதக் குறையும் இராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அவரும் என்னைப் போலவே ஆண்டவருடைய வேலையைத்தான் செய்கிறார். [* 1 கொரி 4: 17 ]
1 கொரிந்தியர் 16 : 11 (ECTA)
ஆகையால், யாரும் அவரை இழிவாக நடத்தக் கூடாது. அவர் என்னிடம் வந்து சேர நலமாய் வழி அனுப்பிவையுங்கள். ஏனெனில், நானும் இங்குள்ள சகோதரர்களும் அவருக்காகக் காத்திருக்கிறோம்.
1 கொரிந்தியர் 16 : 12 (ECTA)
நம் சகோதரராகிய அப்பொல்லோவைக் குறித்துக் கேட்டீர்களே! அவர் மற்றச் சகோதரர்களுடன் உங்களிடம் வருமாறு அவரைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன். இப்போது உங்களிடம் வர அவருக்கு மனமேயில்லை. ஆனால், தகுந்த நேரம் வரும்போது அவர் உங்களிடம் வருவார்.
1 கொரிந்தியர் 16 : 13 (ECTA)
இறுதி அறிவுரையும் வாழ்த்தும் விழிப்பாயிருங்கள்; நம்பிக்கையில் நிலைத்திருங்கள்; துணிவுடன் நடந்து கொள்ளுங்கள்; வலிமையுடன் செயல்படுங்கள்.
1 கொரிந்தியர் 16 : 14 (ECTA)
அனைத்தையும் அன்போடு செய்யுங்கள்.
1 கொரிந்தியர் 16 : 15 (ECTA)
அன்பர்களே, இன்னுமொரு வேண்டுகோள்; ஸ்தேவனா வீட்டாரை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் அக்காயா நாட்டில் முதன் முதல் கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டவர்கள். இறை மக்களுக்குத் தொண்டு செய்யத் தங்களையே அர்ப்பணித்தவர்கள். [* 1 கொரி 1: 16 ]
1 கொரிந்தியர் 16 : 16 (ECTA)
இத்தகையோருக்கும் இவர்களுடன் இணைந்து செயல்படுவோர், பாடுபட்டு உழைப்போர் அனைவருக்கும் பணிந்திருங்கள்.
1 கொரிந்தியர் 16 : 17 (ECTA)
ஸ்தேவனா, பொர்த்துனாத்து, அக்காயிக்கு ஆகியோர் வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. நீங்கள் இங்கு இல்லாத குறையை அவர்கள் நீக்கினார்கள்.
1 கொரிந்தியர் 16 : 18 (ECTA)
அவர்கள் என் உள்ளத்திற்கும் உங்கள் உள்ளத்திற்கும் புத்துயிர் ஊட்டினார்கள். இத்தகையோருக்கு மதிப்பு அளியுங்கள்.
1 கொரிந்தியர் 16 : 19 (ECTA)
ஆசியாவிலுள்ள திருச்சபைகள் உங்களை வாழ்த்துகின்றன. அக்கிலாவும் பிரிஸ்காவும் தங்கள் வீட்டில் கூடும் திருச்சபையோடு சேர்ந்து ஆண்டவரோடு இணைந்துவாழும் உங்களுக்கு வாழ்த்துகள் பல கூறுகிறார்கள். [* திப 18: 2 ]
1 கொரிந்தியர் 16 : 20 (ECTA)
சகோதரர் சகோதரிகள் அனைவரும் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறார்கள். தூய முத்தம் கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள்.
1 கொரிந்தியர் 16 : 21 (ECTA)
இவ்வாழ்த்து பவுலாகிய நான் என் கைப்பட எழுதியது.
1 கொரிந்தியர் 16 : 22 (ECTA)
ஆண்டவரிடம் அன்பு செலுத்தாத எவரும் சபிக்கப்படுக! மாரனாத்தா! * ‘மாரனாத்தா’ என்பதற்கு ‘ஆண்டவரே வருக’ என்பது பொருள்..
1 கொரிந்தியர் 16 : 23 (ECTA)
ஆண்டவர் இயேசுவின் அருள் உங்களோடு இருப்பதாக!
1 கொரிந்தியர் 16 : 24 (ECTA)
கிறிஸ்து இயேசுவோடு இணைந்துவாழும் உங்களனைவருக்கும் என் அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24