1 நாளாகமம் 9 : 1 (ECTA)
சிறைமீண்ட மக்கள் இஸ்ரயேலர் அனைவரும் தங்கள் தலைமுறை அட்டவணையின்படி புதிவு செய்யப்பட்டனர். இவை இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்று நூலில் எழுதப்பட்டுள்ளன. யூதா மக்கள் அவர்களது துரோகத்தை முன்னிட்டு பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
1 நாளாகமம் 9 : 2 (ECTA)
தங்களுக்குச் சொந்தமான இடங்களிலும் நகர்களிலும் முதன் முதலாகக் குடியேறியவர்கள் இஸ்ரயேலரும் குருக்களும் லேவியரும் கோவில் பணியாளருமே. * எஸ்ரா 2:27; நெகே 7:73..
1 நாளாகமம் 9 : 3 (ECTA)
யூதா, பென்யமின் எப்ராயிம் மனாசே மக்களுள் எருசலேமில் குடியிருந்தவர்; * எஸ்ரா 2:27; நெகே 7:73..
1 நாளாகமம் 9 : 4 (ECTA)
ஊத்தாய்; இவர் அம்மிகூதின் மகன்; இவர் ஓம்ரியின் மகன்; இவர் இம்ரியின் மகன்; இவர் பானியின் மகன்; இவர் பெரேட்சியின் புதல்வருள் ஒருவர்; இவர் யூதாவின் மகன்.
1 நாளாகமம் 9 : 5 (ECTA)
சீலோன் மரபில் தலைமகன் அசாயாவும் அவர் புதல்வரும்.
1 நாளாகமம் 9 : 6 (ECTA)
கேராகின் புதல்வருள் எகுவேல்; அவர் உறவினர் அறுநூற்றுத் தொண்ணூறுபேர்.
1 நாளாகமம் 9 : 7 (ECTA)
பென்யமின் புதல்வருள் சல்லூ; இவர் மெசுல்லாமின் மகன்; இவர் ஓதவியாவின் மகன்; இவர் அஸ்னுவாவின் மகன்;
1 நாளாகமம் 9 : 8 (ECTA)
எரோகாமின் மகன் இப்னயா; மிக்ரீயின் புதல்வராகிய உசீயின் மகன் ஏலா; இப்னயாவின் புதல்வராகிய இரகுவேலுக்குப் பிறந்த செபத்தியாவின் மகன் மெசுல்லாம்.
1 நாளாகமம் 9 : 9 (ECTA)
தலைமுறை அட்டவணைப்படி அவர்கள் உறவினர் தொள்ளாயிரத்து ஐம்பத்து ஆறுபேர். இந்த ஆள்கள் அனைவரும் தங்கள் மூதாதையர் மரபில் குடும்பத் தலைவர்களாயிருந்தனர்.
1 நாளாகமம் 9 : 10 (ECTA)
எருசலேமில் வாழ்ந்த குருக்கள் குருக்கள் எதாயா, யோயாரிபு, யாக்கின்;
1 நாளாகமம் 9 : 11 (ECTA)
அசரியா; இவர் இல்க்கியாவின் மகன்; இவர் மெசுல்லாமின் மகன்; இவர் சாதோக்கின் மகன்; இவர் மெராயோத்தின் மகன்; இவர் கடவுளின் இல்லப் பொறுப்பளாரான அகித்தூபின் மகன்.
1 நாளாகமம் 9 : 12 (ECTA)
அதாயா; இவர் மல்கியாவின் புதல்வரான பஸ்கூருக்குப் பிறந்த எரொகாமின் மகன்; இவர் அதியேலின் மகன்; இவர் யாகிசேராவின் மகன்; இவர் மெசுல்லாமின் மகன்; இவர் மெசில்லேமித்தின் மகன்; இவர் இம்மேரின் மகன்.
1 நாளாகமம் 9 : 13 (ECTA)
அவர்கள் உறவினரும் அவர்கள் மூதாதையர் மரபில் குடும்பத் தலைவர்களுமாயிருந்த ஆற்றல்மிகு வீரர் ஆயிரத்து எழுநூற்று அறுபது பேர். இவர்கள் கடவுளின் இல்லப்பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
1 நாளாகமம் 9 : 14 (ECTA)
எருசலேமில் வாழ்ந்த லேவியர் லேவியருள் செமாயா; இவர் அசூபின் மகன்; இவர் அஸ்ரிகாமின் மகன்; இவர் அசபியாவின் மகன்; இவர் மெராரியின் புதல்வருள் ஒருவர்.
1 நாளாகமம் 9 : 15 (ECTA)
பகபக்கர், எரேசு, காலால்; ஆசாவின் புதல்வர் சிக்ரிக்குப் பிறந்த மீக்காவின் மகன் மத்தனியா.
1 நாளாகமம் 9 : 16 (ECTA)
எதுத்தூனின் புதல்வன் காலாலுக்குப் பிறந்த செமாயாவின் மகன் ஒபதியா; நெற்றோபாவியரின் சிற்றூர்களில் வாழ்ந்த எல்கானாவுக்குப் பிறந்த ஆசாவின் மகன் பெரக்கியா.
1 நாளாகமம் 9 : 17 (ECTA)
எருசலேமில் வாழ்ந்த கோயிற் காவலர் வாயில் காப்போர் சல்லூம், அக்கூபு, தல்மோன், அகிமான், மற்றும் இவர்கள் உறவினர்; சல்லூம் இவர்களின் தலைவர்.
1 நாளாகமம் 9 : 18 (ECTA)
இவர்கள் இன்றுவரை கிழக்கில் அரச வாயிலைக் காத்து வருகின்றனர். இவர்களே லேவியர் பாளையத்தின் காவலராய் இருந்தவர்கள்.
1 நாளாகமம் 9 : 19 (ECTA)
கோராகின் புதல்வர் எபியாசாபுக்குப் பிறந்த கோரேயின் மகன் சல்லூமும் அவர் தந்தையின் வீட்டாரும் உறவினருமாகிய கோராகியரும் கூடார நுழைவாயில் மேற்பார்வைப்பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தனர். முன்பே அவர்களின் மூதாதையர் ஆண்டவரது பாளையவாயிலைக் காத்து வந்தனர்.
1 நாளாகமம் 9 : 20 (ECTA)
எலயாசர் மகன் பினகாசு முற்காலத்தில் அவர்களின் அதிகாரியாக இருந்தார். ஆண்டவர் அவரோடிருந்தார்.
1 நாளாகமம் 9 : 21 (ECTA)
மெசல்லேமியாவின் மகன் செக்கரியா சந்திப்புக் கூடார நுழைவாயிலின் காவலராக இருந்தார்.
1 நாளாகமம் 9 : 22 (ECTA)
நுழைவாயில்களைக் காப்பதற்குத் தெரிந்துகொள்ளப்பட்ட இவர்களின் எண்ணிக்கை இருநூற்றுப் பன்னிரண்டு . இவர்கள் தங்கள் சிற்றூர்களில் தலைமுறை அட்டவணைப்படி பதிவு செய்யப்பட்டவர்கள். அவர்கள் நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்ததால், தாவீதும், திருக்காட்சியாளர் சாமுவேலும் அவர்களை இப்பணியில் அமர்த்தினார்கள்.
1 நாளாகமம் 9 : 23 (ECTA)
அவர்களும் அவர்கள் புதல்வரும் கடவுளின் இல்லக் கூடாரத்தின் வாயில்களைக் காத்து வந்தனர்.
1 நாளாகமம் 9 : 24 (ECTA)
வாயில் காப்போர், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு பக்கங்களிலும் இருந்தனர்.
1 நாளாகமம் 9 : 25 (ECTA)
சிற்றூர்களில் இருந்த அவர்களின் உறவின் முறையினர் ஏழு நாள்கள் இவர்களோடிருக்க மாறி மாறி வரவேண்டும்.
1 நாளாகமம் 9 : 26 (ECTA)
தலைமை வாயில் காவலராகிய நான்கு லேவியரும் கடவுளின் இல்லப் பண்டக சாலைகளுக்கும், கருவூலங்களுக்கும் பொறுப்பாளர்களாய் இருந்தனர்.
1 நாளாகமம் 9 : 27 (ECTA)
காவல் காக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருந்ததால் அவர்கள் கடவுளின் இல்லத்தைச் சுற்றிலும் இரவில் தங்கியிருந்து காலைதோறும் கதவுகளைத் திறந்து விடுவார்கள்.
1 நாளாகமம் 9 : 28 (ECTA)
வேறு லேவியர் அவர்களில் சிலரிடம் வழிபாட்டுக்குரிய கலங்களின் பொறுப்பு இருந்தது. அவற்றை உள்ளே கொண்டு போகும் போதும் வெளியே கொண்டு வரும்போதும் எண்ணிச் சரிபார்ப்பர்.
1 நாளாகமம் 9 : 29 (ECTA)
மற்றும் சிலரிடம் தட்டுமுட்டுகள், எல்லாப்புனித கலங்கள், மிருதுவான மாவு, திராட்சை ரசம், எண்ணெய், சாம்பிராணி, நறுமணப்பொருள்கள் ஆகியவற்றின்மேல் பொறுப்பு தரப்பட்டிருந்தது.
1 நாளாகமம் 9 : 30 (ECTA)
குருக்களின் புதல்வர் சிலர் நறுமணப் பொருள்களில் இருந்து நறுமணக் கலவை தயாரித்தனர்.
1 நாளாகமம் 9 : 31 (ECTA)
கோராகியரான சல்லூமின் தலைமகன் மத்தித்தியா என்ற லேவியருக்குத் தட்டைச் சட்டியில் பண்டங்கள் சுடும் பொறுப்பு விடப்பட்டிருந்தது.
1 நாளாகமம் 9 : 32 (ECTA)
அவர்கள் உறவினராகிய கோகாத்தியரின் புதல்வருள் சிலருக்கு ஓய்வுநாள்தோறும் திருமுன் அடுக்கும் அப்பங்களைத் தயாரிக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தது.
1 நாளாகமம் 9 : 33 (ECTA)
இவர்களில் லேவியரின் மூதாதையருள் பாடகர் கடவுளின் இல்ல அறைகளிலேயே தங்கயிருந்தனர். ஏனெனில்,அவர்கள் இரவும் பகலும் பணி செய்ய வேண்டியிருந்ததால், பிற பணியின்றிக் கடவுளின் இல்ல அறைகளிலேயே தங்கியிருந்தனர்.
1 நாளாகமம் 9 : 34 (ECTA)
தலைவராகிய இவர்களே தலைமுறை அட்டவணைப்படி லேவியருள் குடும்பத் தலைவர்கள்; எருசலேமில் குடியிருந்த தலைவர்கள்.
1 நாளாகமம் 9 : 35 (ECTA)
அரசர் சவுலின் மூதாதையரும் வழிமரபினரும்
(8:29-38)
கிபயோனில் கிபயோனின் தந்தை எயியேல் வாழ்ந்து வந்தார். அவர் மனைவியின் பெயர் மாக்கா.
1 நாளாகமம் 9 : 36 (ECTA)
அவர் தலைமகன் அப்தோன்; மற்றவர்கள் சூர், கீசு, பாகால், நேர், நாதாபு,
1 நாளாகமம் 9 : 37 (ECTA)
கெதார், அகியோ, செக்கரியா, மிக்லோத்து.
1 நாளாகமம் 9 : 38 (ECTA)
மிக்லோத்திற்கு சிமயாம் பிறந்தார். இவர்கள் எருசலேமில் தங்கள் உறவின்முறையாரோடு வாழ்ந்து வந்தார்கள்.
1 நாளாகமம் 9 : 39 (ECTA)
நேருக்குக் கீசு பிறந்தார்; கீசுக்கு சவுல் பிறந்தார்; சவுலுக்கு யோனத்தான், மல்கிசூவா, அபினதாபு, எஸ்பாகால் ஆகியோர் பிறந்தனர்.
1 நாளாகமம் 9 : 40 (ECTA)
யோனத்தானின் மகன் மெரிபு பாகால்; மெரிபு பாகாலுக்கு மீக்கா பிறந்தார்.
1 நாளாகமம் 9 : 41 (ECTA)
மீக்காவின் புதல்வர்கள் பித்தோன், மெலேக்கு, தகரேயா, ஆகாசு.
1 நாளாகமம் 9 : 42 (ECTA)
ஆகாசுக்கு யாரா பிறந்தார்; யாராவுக்கு அலமேத், அஸ்மாவேத், சிம்ரி பிறந்தனர். சிம்ரிக்கு மோட்சா பிறந்தார்.
1 நாளாகமம் 9 : 43 (ECTA)
மோட்சாவுக்கு பினேயா பிறந்தார்; இவர் மகன் இரபாயா; இவர் மகன் எலயாசர்; இவர் மகன் ஆட்சேல்.
1 நாளாகமம் 9 : 44 (ECTA)
ஆட்சேலுக்கு ஆறு புதல்வர்கள் இருந்தனர். அவர்கள் பெயர்களாவன; அசிரிக்காம், பொக்கரு, இஸ்மயேல், செயர்யா, ஒபதியா, ஆனான். இவர்கள் ஆட்சேலின் புதல்வர்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44