1 நாளாகமம் 7 : 1 (ECTA)
இசக்காரின் வழிமரபினர் இசக்காரின் புதல்வர்: தோலா, பூவா, யாசபு, சிம்ரோன் என்ற நால்வர்.
1 நாளாகமம் 7 : 2 (ECTA)
தோலாவின் புதல்வர்: உசீ, இரபாயா, எரியேல், யாகுமாய், இபிசாம், செமுவேல். தோலாவுக்குப் பிறந்த அவர்கள் தங்கள் மூதாதை வீட்டுத் தலைவர்களாகவும், தங்கள் தலைமுறைகளில் வலிமைமிகு வீரர்களாயும் திகழ்ந்தார்கள். தாவீதின் நாள்களில் அவர்களின் எண்ணிக்கை இருபத்தி இரண்டாயிரத்து ஐநூறாக இருந்தது.
1 நாளாகமம் 7 : 3 (ECTA)
உசீயின் புதல்வர்: இஸ்ரகியா, அவர்தம் புதல்வர்களான மிகேல், ஒபதியா, யோவேல், இசியா என்னும் ஐவர். அவர்கள் யாவரும் தலைவர்களாய் இருந்தனர்.
1 நாளாகமம் 7 : 4 (ECTA)
அவர்கள் மூதாதையர் குடும்பங்களின் தலைமுறை அட்டவணைப்படி போர் அணிகளில் முப்பத்தாறாயிரம் வீரர்கள் இருந்தனர். ஏனெனில், அவர்களுக்கு மனைவியரும் புதல்வரும் ஏராளமாய் இருந்தனர்.
1 நாளாகமம் 7 : 5 (ECTA)
இசக்காரின் அனைத்துக் குடும்பங்களின் உறவின்முறையில் வலிமைமிகு வீரர்கள் யாவரும் வழிமரபு அட்டவணையின்படி எண்பத்தேழாயிரம் பேர்.
1 நாளாகமம் 7 : 6 (ECTA)
பென்யமின் மற்றும் தாணின் வழிமரபினர் பென்யிமினின் புதல்வர்: பேலா, பெக்கேர், எதியேல் என்னும் மூவர்.
1 நாளாகமம் 7 : 7 (ECTA)
பேலாவின் புதல்வர்: எட்சவோன், உசீ, உசியேல், எரிமோத்து, ஈரி என்னும் ஐவர். அவர்கள் தங்கள் மூதாதையர் வீட்டுத் தலைவர்களாயும் வலிமை மிகு வீரர்களாயும் திகழ்தனர். அவர்களுள் வழிமரபு அட்டவணையில் குறிக்கப்படடோர் இருபத்து இரண்டாயிரத்து முப்பத்து நான்கு.
1 நாளாகமம் 7 : 8 (ECTA)
பெக்கேரின் புதல்வர்: செமிரா, யோவாசு, எலியேசர், எல்யோவனாய், ஓம்ரி, எரேமோத்து, அபியா, அனத்தோத்து, அலமேத்து. இவர்கள் யாவரும் பெக்கேரின் புதல்வர்.
1 நாளாகமம் 7 : 9 (ECTA)
அவர்களின் தலைமுறை அட்டவணைப்படி தங்கள் மூதாதையர் வீட்டுத் தலைவர்களாகவும் வலிமைமிகு வீரர்களாகவும் திகழ்ந்தோரின் எண்ணிக்கை இருபத்து இரண்டாயிரத்து இருநூறு.
1 நாளாகமம் 7 : 10 (ECTA)
எதியேலின் புதல்வர்: பில்கான்; பில்கானின் புதல்வர்: எயூசு, பென்யமின், ஏகூது, கெனானா, சேத்தான், தர்சீசு, அகிசாகர்.
1 நாளாகமம் 7 : 11 (ECTA)
எதியேலின் புதல்வரான இவர்கள் யாவரும் தம் மூதாதையர் வீட்டுத் தலைவர்களாகவும், போருக்குச் செல்லத்தக்க வலிமைமிகு வீரர்களாகவும் திகழ்ந்தார்கள். அவர்களின் எண்ணிக்கை பதினேழாயிரத்து இருநூறு.
1 நாளாகமம் 7 : 12 (ECTA)
சுப்பிமும் குப்பிமும் ஈரின் புதல்வர்கள். ஊசிம் அகேரின் புதல்வர்.
1 நாளாகமம் 7 : 13 (ECTA)
நப்தலியின் வழிமரபினர் நப்தலி புதல்வர்: யாட்சியேல், கூனி, எட்சேர், சல்லூம்; இவர்கள் பில்காவின் பேரப்பிள்ளைகள்.
1 நாளாகமம் 7 : 14 (ECTA)
மனாசேயின் வழிமரபினர் மனாசேயின் புதல்வர்: அவரின் அரமேயமறுமனைவி பெற்றெடுத்த அஸ்ரியேல், கிலயாதின் மூதாமையான மாக்கீர்.
1 நாளாகமம் 7 : 15 (ECTA)
குப்பிம், சுப்பிம் ஆகியோருக்கு மாக்கிர் பெண்களை மணமுடித்து வைத்தார். அவர் சகோதரியின் பெயர் மாக்கா. மனாசேயின் இரண்டாம் புதல்வர் பெயர் செலோபுகாது. சேலோபுகாதிற்குப் புதல்வியர் இருந்தனர்.
1 நாளாகமம் 7 : 16 (ECTA)
மாக்கிரின் மனைவி மாக்கா ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்து அதற்குப் பெரேட்சு என்று பெயரிட்டார். அவர் சகோதரர் பெயர் செரேசு. பெரேட்சியின் புதல்வர்: ஊலாம், இரக்கேம். * விப ..
1 நாளாகமம் 7 : 17 (ECTA)
ஊலாமின் புதல்வர்: பெதான். இவர்கள் மனாசே மகன் மாக்கிருக்குப் பிறந்த கிலயாதின் புதல்வர். * விப ..
1 நாளாகமம் 7 : 18 (ECTA)
கிலயாதின் சகோதரி அம்மோலக்கேத்து பெற்றெடுத்தவர்; இஸ்கோது, அபியேசர், மக்லா. * விப ..
1 நாளாகமம் 7 : 19 (ECTA)
செமிதாவின் புதல்வர்: அகியான், செக்கேம், இலிக்கி, அனியாம். * விப ..
1 நாளாகமம் 7 : 20 (ECTA)
எப்ராயிமின் வழிமரபினர் எப்ராயிமின் புதல்வர்: சுத்தெலாகு; அவர் மகன் பெரேது; அவர் மகன் தகாத்து; அவர் மகன் எலயாதா; அவர் மகன் தகாத்து;
1 நாளாகமம் 7 : 21 (ECTA)
அவர் மகன் சாபாது; அவர் மகன் சுத்தெலாகு; மற்றும் எட்சேர், எலயாது. இவர்கள் கால்நடைகளைக் கவர்ந்து கொள்ளச் சென்றபொழுது அந்நாட்டில் பிறந்து வாழ்ந்த காத்தின் புதல்வரால் கொல்லப்பட்டார்கள்.
1 நாளாகமம் 7 : 22 (ECTA)
அவர்களின் தந்தை எப்ராயிம் பல நாள்களாகப் புலம்பியழுதார். அவர்களின் சகோதரர் அவருக்கு ஆறுதல் கூற வந்தனர்.
1 நாளாகமம் 7 : 23 (ECTA)
எப்ராயிம் தம் மனைவியுடன் உறவு கொண்டார். அவர் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தார். அவர் அவருக்குப் பெரியா என்று பெயரிட்டார். ஏனெனில், தீங்கு அவர் வீட்டை வந்தடைந்தது.
1 நாளாகமம் 7 : 24 (ECTA)
எப்ராயிமின் மகள் செயேரா, கீழ்-மேல் பெத்கோரோனையும் உசேன்செயேராவையும் கட்டியெழுப்பினார்.
1 நாளாகமம் 7 : 25 (ECTA)
எப்ராயிமின் மற்றப் புதல்வர்: அவர் மகன் இரபாகு; மற்றும் இரசேபு; அவர் மகன் தெலாகு; அவர் மகன் தாகான்;
1 நாளாகமம் 7 : 26 (ECTA)
அவர் மகன் லாதான்; அவர் மகன் அம்மிகூது; அவர் மகன் எலிசாமா;
1 நாளாகமம் 7 : 27 (ECTA)
அவர் மகன் நூன்; அவர் மகன் யோசுவா.
1 நாளாகமம் 7 : 28 (ECTA)
அவர்கள் உடைமைப் பகுதிகளும் குடியிருப்புகளும் இவையே; பெத்தேல், அதன் சிற்றூர்கள்; கீழ்ப்புறத்தில் நாரான்; மேற்புறத்தில் கெசேர், அதன் சிற்றூர்கள்; செக்கேம், அதன் சிற்றூர்கள்; அய்யா, அதன் சிற்றூர்கள்.
1 நாளாகமம் 7 : 29 (ECTA)
மனாசேயின் புதல்வரை அடுத்துள்ள பகுதிகளில் பெத்சான், அதன் சிற்றூர்கள்; தானாக்கு, அதன் சிற்றூர்கள்; மெகிதோ, அதன் சிற்றூர்கள்; தோர், அதன் சிற்றூர்கள். இவற்றில் இஸ்ரயேலின் மகன் யோசேப்பின் புதல்வர் வாழ்ந்து வந்தனர்.
1 நாளாகமம் 7 : 30 (ECTA)
ஆசேரின் வழிமரபினர் ஆசேரின் புதல்வர்: இம்னா, இஸ்வா, இஸ்வீ, பெரியா; அவர்களின் சகோதரி செராகு.
1 நாளாகமம் 7 : 31 (ECTA)
பெரியாவின் புதல்வர்: எபேர், மல்கியேல், அவர் பிர்சாவித்தின் மூதாதை.
1 நாளாகமம் 7 : 32 (ECTA)
ஏபேருக்குப் பிறந்தோர்; யாப்லேற்று, சோமேர், ஓதாம், அவர்களின் சகோதரி சூவா.
1 நாளாகமம் 7 : 33 (ECTA)
யாப்லேற்றின் புதல்வர்: பாசாக்கு, பிம்கால், அஸ்வாத்து; இவர்கள் யாப்லேற்றின் புதல்வர்.
1 நாளாகமம் 7 : 34 (ECTA)
செமேரின் புதல்வர்: அகீ, ரோககா, எகுபா, ஆராம்.
1 நாளாகமம் 7 : 35 (ECTA)
அவர் சகோதரர் ஏலேமின் புதல்வர்: சோப்பாகு, இம்னா, சேலேசு, ஆமால்.
1 நாளாகமம் 7 : 36 (ECTA)
சோப்பாகின் புதல்வர்: சூவாகு, கர்னப்பேர், சூவால், பேரி, இம்ரா.
1 நாளாகமம் 7 : 37 (ECTA)
பெட்சேர், ஓது, சம்மா, சில்சா, இத்ரான், பெயேரா.
1 நாளாகமம் 7 : 38 (ECTA)
எத்தேரின் புதல்வர்: எபுன்னே, பிஸ்பா, அரா.
1 நாளாகமம் 7 : 39 (ECTA)
உல்லாவின் புதல்வர்: ஆராகு, அன்னியேல், ரிட்சியா.
1 நாளாகமம் 7 : 40 (ECTA)
ஆசேர் புதல்வருள் இவர்கள் யாவரும் தங்கள் மூதாதையர், வீட்டுத் தலைவர்களும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் வலிமைமிகு வீரர்களும் தலைவர்களுள் முதல்வருமாய் இருந்தார்கள். அவர்கள் தலைமுறை அட்டவணைகளில் போருக்குச் செல்லத்தக்க படை வீரரின் எண்ணிக்கை இருபத்தாறாயிரம்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40