1 நாளாகமம் 5 : 1 (ECTA)
ரூபனின் வழிமரபினர் இஸ்ரயேலின் தலைமகன் ரூபனின் புதல்வர்: அவர் தலைமகனாய் இருந்தும் தம் தந்தையின் மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தியதால் அவரது தலைமகனுரிமை இஸ்ரயேலின் மகன் யோசேப்பின் புதல்வர்களுக்கு வழங்கப்பட்டது. எனவே, தலைமுறை அட்டவணையில் அவர் தலைமகனாய்க் கருதப்படவில்லை. [* தொநூ 35:22; 49:3- 4 ]
1 நாளாகமம் 5 : 2 (ECTA)
யூதா, தம் சகோதரருள் வலிமைமிக்கவராயிருந்தும் அவரிடமிருந்து தலைவர் ஒருவர் தோன்றியபோதிலும், தலைமகனுரிமை யோசேப்புக்கே உரித்தாயிற்று. [* தொநூ 49:8- 10 ]
1 நாளாகமம் 5 : 3 (ECTA)
இஸ்ரயேலின் தலைமகன் ரூபனின் புதல்வர்: அனோக்கு, பல்லூ, எட்சரோன், கர்மி.
1 நாளாகமம் 5 : 4 (ECTA)
யோவேலின் புதல்வர்: அவர் மகன் செமாயா, அவர் மகன் கோகு, அவர் மகன் சிமயி,
1 நாளாகமம் 5 : 5 (ECTA)
அவர் மகன் மீக்கா, அவர் மகன் இரயாயா, அவர் மகன் பாகால்,
1 நாளாகமம் 5 : 6 (ECTA)
அவர் மகன் பெயேரா; ரூபனியரின் தலைவரான அவரை அசீரிய மன்னன் தில்கத்பில்னேசர் சிறைப்படுத்திச் சென்றான். [* 2 அர 15: 29 ]
1 நாளாகமம் 5 : 7 (ECTA)
அவர்களது உறவின்முறையில் குடும்ப வாரியாகத் தலைமுறை அட்டவணையில் குறிக்கப்பட்டோர்; தலைவர் எயியேல், செக்கரியா,
1 நாளாகமம் 5 : 8 (ECTA)
யோவேல் மகன் செமாவிற்குப் பிறந்த ஆசாசு புதல்வன் பெலா. அவர் வழிமரபினர் அரோயேரிலிருந்து நேபோ, பாகால்மெயோன் வரை குடியேறியிருந்தனர்.
1 நாளாகமம் 5 : 9 (ECTA)
அவர்கள் கிழக்கே யூப்பிரத்தீசு நதி முதல் பாலைநிலத்தின் எல்லை வரை வாழ்ந்து வந்தனர்; கிலயாது நாட்டில் அவர்களின் கால்நடைகள் பெருகின.
1 நாளாகமம் 5 : 10 (ECTA)
அவர்கள் சவுலின் நாள்களில் அகாரியருடன் போர்த்தொடுத்துத் தம் கையால் அவர்களை வீழ்த்தினர்; கிலயாதின் கிழக்குப் புறம் எங்கும் தங்கள் கூடாரங்களில் வாழ்ந்தனர்.
1 நாளாகமம் 5 : 11 (ECTA)
காத்தின் வழிமரபினர் அவர்களுக்கு வடக்கே பாசான் நிலப்பகுதியில் சலிக்காவரை காத்தின் புதல்வர் குடியேறியிருந்தனர்.
1 நாளாகமம் 5 : 12 (ECTA)
பாசானில், தலைவரான யோவேல், அடுத்தவரான சாப்பாம், யானாய், சாப்பாத்து ஆகியோர் வாழ்ந்தனர்.
1 நாளாகமம் 5 : 13 (ECTA)
அவர்கள் மூதாதையர் வீட்டுச் சகோதரர் மிக்கேல், மெசுல்லாம், சேபா, யோராய், யாக்கான், சீயா, ஏபேர் என்னும் ஏழு பேர்.
1 நாளாகமம் 5 : 14 (ECTA)
இவர்கள் ஊரிக்குப் பிறந்த அபிகயிலின் புதல்வர்: ஊரி யாரோவாகின் மகன்; அவர் கிலெயாதின் மகன்; அவர் மிக்கேலின் மகன்; அவர் எசிசாயின் மகன்; அவர் யாகுதோவின் மகன்; அவர் பூசின் மகன்.
1 நாளாகமம் 5 : 15 (ECTA)
கூனிக்குப் பிறந்த அப்தியேலின் மகன் அகி அவர்களின் மூதாதை வீட்டுக்குத் தலைவராய் இருந்தார்.
1 நாளாகமம் 5 : 16 (ECTA)
அவர்கள் கிலயாது, பாசான், அதைச் சார்ந்த நகர்கள், சாரோனின் மேய்ச்சல் நிலப்பகுதிகள் மற்றும் அவற்றின் எல்லைகள்வரை குடியேறினர்.
1 நாளாகமம் 5 : 17 (ECTA)
அவர்கள் யாவரும் யூதா அரசன் யோத்தாம் காலத்திலும் இஸ்ரயேல் அரசன் எரொபவாம் நாள்களிலும் தலைமுறை அட்டவணையில் பதிவு செய்யப்பட்டனர்.
1 நாளாகமம் 5 : 18 (ECTA)
கிழக்குப் பழங்குடிகளின் படைகள் ரூபனின் புதல்வர், காத்தின் புதல்வர், மனாசேயின் பாதிக்குலத்தார் ஆகியோர்களிடையே கேடயத்தையும் வாளையும் ஏந்தி, வில் எய்து, போர்ப்பயிற்சி பெற்ற வலிமைமிக்கோர் நாற்பத்து நாலாயிரத்து எழுநூற்று அறுபது பேர் இருந்தனர்.
1 நாளாகமம் 5 : 19 (ECTA)
அவர்கள் ஆகாரியர், எத்தூர், நாப்பிசு, நோதாபு ஆகியோரை எதிர்த்துப் போரிட்டனர்.
1 நாளாகமம் 5 : 20 (ECTA)
அப்பொழுது அவர்கள் ஆகாரியரையும் அவர்களோடு இருந்த யாவரையும் எதிர்ப்பதற்குரிய ஆற்றலைக் கடவுளிடமிருந்து பெற்றார்கள். பகைவரும் அவர்களிடம் கையளிக்கப்பட்டனர். ஏனெனில், அவர்கள் போர் நடக்கும் போது கடவுளை நோக்கி மன்றாடினார்கள். அவர் மேல் அவர்கள் நம்பிக்கை வைத்ததால் அவரும் அவர்களின் மன்றாட்டைக் கேட்டருளினார்.
1 நாளாகமம் 5 : 21 (ECTA)
அவர்கள் தம் எதிரிக்குச் சொந்தமான கால்நடைகளான ஐம்பதாயிரம் ஒட்டகங்களையும், இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் ஆடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும், இலட்சம் ஆள்களையும் உயிருடன் கைப்பற்றினார்கள்.
1 நாளாகமம் 5 : 22 (ECTA)
அந்தப் போர் கடவுளால் நடத்தப்பட்டதால், பலர் வெட்டி வீழ்த்தப்பட்டனர். நாடு கடத்தப்படும்வரை அவர்கள் அங்கேயே வாழ்ந்தார்கள்.
1 நாளாகமம் 5 : 23 (ECTA)
கிழக்கு மனாசே பகுதியின் மக்கள் மனாசேயின் பாதிக்குலத்துப் புதல்வரும் இந்த நாட்டிலேயே வாழ்ந்த வந்தனர். அவர்கள் பாசான் முதல் பாகால்எர்மோன், செனிர், எர்மோன் மலைவரைக்கும் பெருவாரியாகப் பெருகியிருந்தனர்.
1 நாளாகமம் 5 : 24 (ECTA)
அவர்களின் மூதாதை வீட்டுத் தலைவர்கள் இவர்களே; ஏப்பேர், இசி, எலியேல், அஸ்ரியேல், எரேமியா, ஓதவியா, எகுதியேல். அவர்கள் ஆற்றல்மிக வீரர்களாகவும் புகழ்மிக்கவர்களாகவும் தம் மூதாதை வீட்டுத் தலைவர்களாகவும் திகழ்ந்தார்கள்.
1 நாளாகமம் 5 : 25 (ECTA)
கிழக்குப் பழங்குடிகளின் வெளியேற்றம் அவர்களோ தங்கள் கண்முன்னே கடவுள் அழித்து விட்ட நாட்டு மக்களின் தெய்வங்களைப் பின்பற்றிய வேசித்தனத்தின் மூலம் தங்கள் மூதாதையரின் கடவுளுக்குத் துரோகம் செய்தனர்.
1 நாளாகமம் 5 : 26 (ECTA)
ஆதலால், இஸ்ரயேலின் கடவுள் அசீரிய மன்னன் பூலையும், அசீரிய மன்னன் தில்கத்பில்னேசரையும் கிளர்ந்தெழச் செய்தார். அவன் ரூபனியரையும், காத்தியரையும், மனாசேயின் பாதிக்குலத்தாரையும் சிறைப்படுத்தி, அலாகு, ஆபோர், ஆரா, கோசான் ஆற்றுப்பகுதி ஆகிய இடங்களுக்கு இழுத்துச் சென்றான். இன்று வரை அவர்கள் அங்கேயே உள்ளனர். * 2 அர 15:19,29; 17:6..
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26