1 நாளாகமம் 4 : 1 (ECTA)
யூதாவின் வழிமரபினர் யூதாவின் புதல்வர்: பெரேட்சு, எட்சரோன், கர்மி, கூர், சோபால்.
1 நாளாகமம் 4 : 2 (ECTA)
சோபாலின் மகன் இரயாயாவுக்கு யாகத்து பிறந்தார்; யாகத்துக்கு அகுமாயும் இலாகாதும் பிறந்தனர்; சோராவியர் குடும்பங்கள் இவையே.
1 நாளாகமம் 4 : 3 (ECTA)
ஏத்தாம் என்னும் மூதாதையின் வழிமரபினர் இவர்கள்; இஸ்ரியேல், இஸ்மா, இத்பாசு; அவர்களின் சகோதரி பெயர் அட்சலெல்போனி.
1 நாளாகமம் 4 : 4 (ECTA)
மேலும், கெதோரின் மூதாதை பெனுவேல், ஊசாவின் மூதாதை எட்சேர். இவர்கள் பெத்லகேமியரின் மூதாதையும் எப்ராத்தா என்பவரின் தலைமகனுமான கூரின் புதல்வர்கள்.
1 நாளாகமம் 4 : 5 (ECTA)
தெக்கோவாவின் மூதாதையான அஸ்கூருக்கு ஏலா, நாரா என்னும் இரு மனைவியர் இருந்தனர்.
1 நாளாகமம் 4 : 6 (ECTA)
நாரா அவருக்கு அகுசாம், ஏப்பேர், தேமனி, அகஸ்தாரி ஆகியோரைப் பெற்றெடுத்தாள்; நாராவின் புதல்வர் இவர்களே.
1 நாளாகமம் 4 : 7 (ECTA)
ஏலாவின் புதல்வர்: செரேத்து, இட்சகார், எத்னான்.
1 நாளாகமம் 4 : 8 (ECTA)
அனுபு, சோபேபா, ஆரூம் மகன் அகரகேலின் குடும்பத்தினர் ஆகியோருக்குக் கோசு தந்தை.
1 நாளாகமம் 4 : 9 (ECTA)
யாபேசு தம் சகோதரரைவிடச் சிறப்பு மிக்கவராய் இருந்தார். அவர் தம் தாய் ‘நான் வேதனையுற்று அவனைப் பெற்றெடுத்தேன்’ என்று சொல்லி அவருக்கு ‘யாபேசு’ என்று பெயரிட்டார்.
1 நாளாகமம் 4 : 10 (ECTA)
யாபேசு இஸ்ரயேலின் கடவுளை நோக்கி, “கடவுளே, மெய்யாகவே நீர் எனக்கு ஆசிவழங்கி, என் எல்லையைப் பெரிதாக்குவீராக! உம் கை என்னோடு இருப்பதாக! தீங்கு என்னைத் துன்புறுத்தாது நீர் பாதுகாத்தருள்வீராக!” என்று மன்றாடினார். கடவுளும் அவர் வேண்டியதை அருளினார்.
1 நாளாகமம் 4 : 11 (ECTA)
பிற மரபினர் சூகாவின் சகோதரருக்குக் கெலுபுக்கு மெகீர் பிறந்தார். அவர் எஸ்தோனின் மூதாதை.
1 நாளாகமம் 4 : 12 (ECTA)
எஸ்தோனுக்கு பெத்ராபா, பாசயாகு, ஈர்னகாசின் மூதாதை தெகின்னா ஆகியோர் பிறந்தனர். இவர்கள் இரேக்காவில் வாழும் மனிதர்கள்.
1 நாளாகமம் 4 : 13 (ECTA)
கெனாசின் புதல்வர்: ஒத்னியேல், செராயா; ஒத்னியேலின் புதல்வர்: அத்தாத்து, மெயோனத்தாய்.
1 நாளாகமம் 4 : 14 (ECTA)
மெயோனத்தாய்க்கு ஒப்ரா பிறந்தார்; கோராசிம் பள்ளத்தாக்கில் வாழ்ந்த கைவினைஞரின் மூதாதையான யோவாபு செராயாவுக்குப் பிறந்தார்.
1 நாளாகமம் 4 : 15 (ECTA)
எப்புன்னே மகன் காலேபின் புதல்வர்: ஈரு, ஏலா, நாவாம்; ஏலாவின் மகன் கெனானி.
1 நாளாகமம் 4 : 16 (ECTA)
எகலலேலின் புதல்வர்: சீபு, சிப்பா, தீரியா, அசரேல்.
1 நாளாகமம் 4 : 17 (ECTA)
எஸ்ராவின் புதல்வர்: எத்தேர், மெரேது, ஏப்பேர், யாலோன். மெரேது மணந்த பார்வோன் மகள் பித்தியா பெற்றெடுத்த புதல்வர்: மிரியாம், சம்மாய், எஸ்தமோவாவின் மூதாதை இஸ்பாக்;
1 நாளாகமம் 4 : 18 (ECTA)
மெரேகின் யூதா குல மனைவி பெற்றெடுத்தவர்; கெதோரின் மூதாதை எரேது, சோக்கோவின் மூதாதை கெபேர், சானோவக்கின் மூதாதை எகுத்தியேல்.
1 நாளாகமம் 4 : 19 (ECTA)
நகாமின் சகோதரியாகிய ஓதியாவின் மனைவி பெற்றெடுத்தவர்; கர்மியரான கெயிலாவின் மூதாதை, மாக்காத்தியரான எஸ்தெமோவாவின் மூதாதை.
1 நாளாகமம் 4 : 20 (ECTA)
சீமோனின் புதல்வர்: அம்னோன், ரின்னா, பென்கனான், தீலோன்; இசீயின் புதல்வர்: சோகேத்து, பென்சோகேத்து.
1 நாளாகமம் 4 : 21 (ECTA)
சேலாவின் வழிமரபினர் யூதாவின் மகன் சேலாவின் புதல்வர்: லேக்காவின் மூதாதை ஏர், மாரேசாவின் மூதாதை இலாதா, பெத்தஸ் பெயவில் நார்ப்பட்டு நெய்த தொழிலாளர் குடும்பங்கள்,
1 நாளாகமம் 4 : 22 (ECTA)
யோக்கீம், கோஸ்பாவைச் சார்ந்த ஆள்கள், மோவாபியரை மணந்த யோவாசு, சாராபு என்பவர்களுமே. அவர்கள் பெத்லகேம் திரும்பியுள்ளார்கள். இவற்றுக்கான பதிவேடுகள் பழங்காலத்தவை.
1 நாளாகமம் 4 : 23 (ECTA)
அவர்கள் நெத்தாயிமிலும் கெதேராவிலும் குயவராய் வாழ்ந்தனர். அவர்கள் அரசப் பணிக்கென அரசருடன் அங்கே வாழ்ந்து வந்தனர்.
1 நாளாகமம் 4 : 24 (ECTA)
சிமியோனின் வழிமரபினர் சிமியோனின் புதல்வர்: நெமுவேல், யாமின், யாரிபு, செராகு, சாவூல்
1 நாளாகமம் 4 : 25 (ECTA)
அவர் மகன் சல்லூம், அவர் மகன் மிப்சாம், அவர் மகன் மிஸ்மா.
1 நாளாகமம் 4 : 26 (ECTA)
மிஸ்மாவின் புதல்வர்: அவர் மகன் அம்முயேல், அவர் மகன் சக்கூர், அவர் மகன் சிமயி.
1 நாளாகமம் 4 : 27 (ECTA)
சிமயிக்கு பதினாறு புதல்வரும் ஆறு புதல்வியரும் இருந்தனர்; அவரின் சகோதரர்களுக்குப் புதல்வர் பலர் இருந்ததில்லை; அவர்கள் குடும்பங்கள் அனைத்தும் யூதாவின் புதல்வரைப்போல் பெருகவில்லை.
1 நாளாகமம் 4 : 28 (ECTA)
அவர்கள் குடியேறிய இடங்கள்; பெயேர்செபா, மேலதா, அட்சார் சூவால், * யோசு 19:2-8..
1 நாளாகமம் 4 : 29 (ECTA)
பில்கா, எட்சேம், தோலாது, * யோசு 19:2-8..
1 நாளாகமம் 4 : 30 (ECTA)
பெத்துவேல், ஒர்மா,சீக்லாகு, * யோசு 19:2-8..
1 நாளாகமம் 4 : 31 (ECTA)
பெத்மர்காபோத்து, அட்சார்சூசிம், பெத்பிரி, சாரயிம் என்பவை. தாவீது அரசாளும்வரை இவை அவர்களின் நகர்களாய் இருந்தன. * யோசு 19:2-8..
1 நாளாகமம் 4 : 32 (ECTA)
அவர்கள் வாழ்ந்த ஐந்து வேறு இடங்கள்; ஏத்தாம், அயின்; ரிம்மோன், தோக்கேன், ஆசான்; * யோசு 19:2-8..
1 நாளாகமம் 4 : 33 (ECTA)
இந்நகர்களைச் சுற்றிலும் பாகால்வரை அமைந்த அனைத்துச் சிற்றூர்களும் அவர்களுடையவை. இவை அவர்களின் குடியிருப்புகள்; அவர்கள் தங்களுக்கென ஒரு தலைமுறைக் குறிப்பேடு வைத்திருந்தனர். * யோசு 19:2-8..
1 நாளாகமம் 4 : 34 (ECTA)
மெசோபாபு, யம்லேக்கு, அமட்சியா மகன் யோசா,
1 நாளாகமம் 4 : 35 (ECTA)
யோவேல், அசியேலின் மகன் செராயாவுக்குப் பிறந்த யோசிபியாவின் மகன் ஏகூ,
1 நாளாகமம் 4 : 36 (ECTA)
எலியோவனாய், யாக்கோபா, எசோகாயா, அசாயா, அதியேல், எசிமியேல், பெனாயா,
1 நாளாகமம் 4 : 37 (ECTA)
செமாயாவின் மகன் சிம்ரிக்குப் பிறந்த எதாயாவின் புதல்வனான அல்லோனின் மகன் சிபியின் புதல்வன் சீசா.
1 நாளாகமம் 4 : 38 (ECTA)
பெயர் பெயராகக் குறிக்கப்பட்டிருந்த இவர்கள் தம் குடும்பங்களில் தலைவர்களாய் இருந்தனர். இவர்களின் மூதாதை வீட்டார் பெருவாரியாகப் பெருகினர்.
1 நாளாகமம் 4 : 39 (ECTA)
அவர்கள் தங்கள் மந்தைக்கு மேய்ச்சலைத் தேடிப் பள்ளத்தாக்கின் கீழ்ப்புறத்தில் கெதோர் நுழைவுவரை சென்றனர்.
1 நாளாகமம் 4 : 40 (ECTA)
அங்கே அவர்கள் செழிப்புமிகு, நல்ல மேய்ச்சலைக் கண்டார்கள். நிலம் விரிந்து பரந்து, அமைதியுடனும் வளத்துடனும் இருந்தது. காமைச் சார்ந்தோர் முன்பு அங்குக் குடியிருந்தனர்.
1 நாளாகமம் 4 : 41 (ECTA)
பெயர் பெயராகக் குறிக்கபட்டுள்ள இவர்கள் யூதா அரசன் எசேக்கியாவின் நாள்களில் அங்குச் சென்றார்கள். அங்குக் காணப்பட்ட கூடாரங்களையும் மெயுனியரையும் வெட்டி வீழ்த்தினர். இந்நாளில் இருப்பது போல் அவர்களை அழித்தொழித்து, தங்களின் ஆட்டுமந்தைக்கு மேய்ச்சல் நிலத்தைக் கண்டதால், அங்கேயே அவர்கள் குடியேறினார்கள்.
1 நாளாகமம் 4 : 42 (ECTA)
சிமியோன் புதல்வர்களாகிய அவர்களுள் ஐந்நூறு பேர், இசீயின் புதல்வர்களான பெலத்தியா, நெகரியா, இரபாயா, உசியேல் ஆகியோரின் தலைமையில் சேயிர் மலைக்குச் சென்றனர்.
1 நாளாகமம் 4 : 43 (ECTA)
அவர்கள் அமலேக்கியருள் தப்பிப் பிழைத்த எஞ்சியோரை அழித்து, அன்று முதல் இந்நாள்வரை அங்கே வாழ்ந்து வருகின்றனர்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43