1 நாளாகமம் 27 : 1 (ECTA)
படைத்தலைவர்களும் குலத்தலைவர்களும் இஸ்ரயேல் மக்களின் குடும்பத் தலைவர்கள், ஆயிரத்தவர் தலைவர்கள், நூற்றுவர் தலைவர்கள், மற்றும் அரச அலுவலர்கள் ஆகியோர் இவர்களே: ஆண்டின் ஒவ்வொருமாதமும் வெவ்வேறு பிரிவினர் மாறி மாறி அரசருக்கான பணியில் பங்கேற்றனர். அப்பிரிவுகள் ஒவ்வொன்றிலும் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
1 நாளாகமம் 27 : 2 (ECTA)
முதல் மாதத்தில், முதல் படைப்பிரிவுக்குச் சப்தியேலின் மகன் யாசொபியாம் தலைவராய் இருந்தார். அவரது பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
1 நாளாகமம் 27 : 3 (ECTA)
பெரேட்சு வழிவந்த அவர், முதல் மாதத்தில் எல்லாப் படைத் தலைவர்களுக்கும் தலைவராய் இருந்தார்.
1 நாளாகமம் 27 : 4 (ECTA)
இரண்டாம் மாதத்தில் இரண்டாம் படைப்பிரிவுக்கு அகோகியரான தோதாய் தலைவராய் இருந்தார். மிக்லோத்து இவரின்கீழ் படைத்தலைவராய் இருந்தார். இவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
1 நாளாகமம் 27 : 5 (ECTA)
மூன்றாம் மாதத்தில் மூன்றாம் படைப்பிரிவுக்கு குரு யோயாதாவின் மகன் பெனாயா தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
1 நாளாகமம் 27 : 6 (ECTA)
இந்த பெனாயா முப்பதின்மருக்குள் ஆற்றல்மிக்கவரும், அவர்களுக்குத் தலைவருமாய் இருந்தவர். அவர் மகன் அம்மிசபாது அவர் பிரிவை மேற்பார்வை செய்து வந்தார்.
1 நாளாகமம் 27 : 7 (ECTA)
நான்காம் மாதத்தில், நான்காம் படைப்பிரிவுக்கு யோவாபின் சகோதரராகிய அசாவேலும் அவருக்குப் பின் அவர் மகன் செபதியாவும் தலைவராய் இருந்தனர். அவர்களுக்குக்கீழ் இருபத்துநாலாயிரம் பேர் இருந்தனர்.
1 நாளாகமம் 27 : 8 (ECTA)
ஐந்தாம் மாதத்தில் ஐந்தாம் படைப்பிரிவுக்கு இஸ்ராகியரான சங்கூத்து தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
1 நாளாகமம் 27 : 9 (ECTA)
ஆறாம் மாதத்தில், ஆறாம் படைப்பிரிவுக்கு தெக்கோவாவியரான இக்கேசு மகன் ஈரா தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
1 நாளாகமம் 27 : 10 (ECTA)
ஏழாம் மாதத்தில், ஏழாம் படைப்பிரிவுக்கு எப்ராயிம் குலத்துப் பெலோனியரான ஏலேசு தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
1 நாளாகமம் 27 : 11 (ECTA)
எட்டாம் மாதத்தில், எட்டாம் படைப்பிரிவுக்கு சர்கியைச் சார்ந்த ஊசாயரான சிபக்காய் தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
1 நாளாகமம் 27 : 12 (ECTA)
ஒன்பதாம் மாதத்தில், ஒன்பதாம் படைப்பிரிவுக்கு பென்யமின் குலத்து அனத்தோத்தியரான அபியேசர் தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
1 நாளாகமம் 27 : 13 (ECTA)
பத்தாம் மாதத்தில், பத்தாம் படைப்பிரிவுக்கு சர்கியைச் சார்ந்த நெற்றோபாயரான மகராய் தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
1 நாளாகமம் 27 : 14 (ECTA)
பதினொன்றாம் மாதத்தில், பதினொன்றாம் படைப்பிரிவுக்கு எப்ராயிம் குலத்து பிராத்தோனியரான பெனாயா தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
1 நாளாகமம் 27 : 15 (ECTA)
பன்னிரண்டாம் மாதத்தில், பன்னிரண்டாம் படைப்பிரிவுக்கு ஒத்னியேல் வழிவந்த நெற்றோபாயரான கெல்தாய் தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
1 நாளாகமம் 27 : 16 (ECTA)
இஸ்ரயேலில் குல நிர்வாகம் இஸ்ரயேலில் குலத் தலைவர்களாய் இருந்தவர்கள் வருமாறு: ரூபனியருக்குத் தலைவர் சிக்ரியின் மகன் எலியேசர்; சிமியோனியருக்கு மாக்காலின் மகன் செபற்றியா;
1 நாளாகமம் 27 : 17 (ECTA)
லேவியருக்குக் கெமுயேல் மகன் அசபியா; ஆரோனியருக்குச் சாதோக்கு;
1 நாளாகமம் 27 : 18 (ECTA)
யூதாவினர்க்குத் தாவீதின் சகோதரரில் ஒருவராகிய எலிகூ; இசக்கார் குலத்துக்கு மிக்கேல் மகனான ஓம்ரி;
1 நாளாகமம் 27 : 19 (ECTA)
செபுலோனியருக்கு ஒபதியாவின் மகன் இஸ்மாயா; நப்தலி குலத்துக்கு அஸ்ரியேல் மகன் எரிமோத்து;
1 நாளாகமம் 27 : 20 (ECTA)
எப்ராயிம் மக்களுக்கு அசரியாவின் மகன் ஓசேயா; மனோசேயின் பாதிகுலத்துக்கு பெதாயாவின் மகன் யோவேல்;
1 நாளாகமம் 27 : 21 (ECTA)
கிலயாதிலுள்ள மனாசேயின் பாதிக் குலத்துக்குச் செக்கரியாவின் மகன் இத்தோ, பென்யமினியருக்கு அப்னேரின் மகன் யாகசியேல்;
1 நாளாகமம் 27 : 22 (ECTA)
தாண் குலத்துக்கு எரொகாமின் மகன் அசரியேல்; இவர்கள் இஸ்ரயேல் குலங்களுக்குத் தலைவர்களாய் இருந்தனர்.
1 நாளாகமம் 27 : 23 (ECTA)
“இஸ்ரயேலை வானத்தின் விண்மீன்களைப் போல் பெருகச் செய்வேன்” என்று ஆண்டவர் வாக்களித்திருந்ததால், அரசர் தாவீது இருபது வயதுக்குட்பட்டோரைக் கணக்கிடவில்லை. [* தொநூ 15:5; 22:17; 26: 4 ]
1 நாளாகமம் 27 : 24 (ECTA)
செருயாவின் மகன் யோவாபு கணக்கெடுக்கத் தொடங்கியபொழுது, இஸ்ரயேலின்மேல் கடுஞ்சினம் வீழ்ந்ததால், அவர் அதை முடிக்கவில்லை. எனவே, அரசர் தாவீதின் குறிப்பேட்டில் எண்ணிக்கை இடம் பெறவில்லை. * 2 சாமு 24:1-15; 1 குறி 21:1-4..
1 நாளாகமம் 27 : 25 (ECTA)
அரச உடைமைகளின் நிர்வாகம் அரசரது கருவூலத்திற்கு அதியேல் மகன் அஸ்மாவேத்து பொறுப்பேற்றிருந்தார். வயல்வெளிகள், நகர்கள், சிற்றூர்கள், கோட்டைகள் ஆகியவற்றிலிருந்த கருவூலங்களுக்கு உசியாவின் மகன் யோனத்தான் பொறுப்பேற்றிருந்தார்.
1 நாளாகமம் 27 : 26 (ECTA)
வயல்வெளியில் உழைக்கும் விவசாயிகளுக்குக் கெலூபின் மகன் எஸ்ரி கண்காணியாய் இருந்தார்.
1 நாளாகமம் 27 : 27 (ECTA)
திராட்சைத் தோட்டங்களுக்கு இராமாவைச் சார்ந்த சிமயி; திராட்சை ரசக் கிடங்குகளுக்கு சிபிமியரான சப்தி;
1 நாளாகமம் 27 : 28 (ECTA)
செபேலாவின் ஒலிவமரங்களுக்கும் அத்திமரங்களுக்கும் கெதேரியரான பாகால்கானான்; எண்ணெய்க் கிடங்குகளுக்கு யோவாசு;
1 நாளாகமம் 27 : 29 (ECTA)
சாரோனின் மாட்டு மந்தைகளுக்கு சாரோனியரான சித்ராய்; பள்ளத்தாக்குகளின் மாட்டு மந்தைகளுக்கு அத்லாயின் மகன் சாபாத்து;
1 நாளாகமம் 27 : 30 (ECTA)
ஒட்டகங்களுக்கு இஸ்மயேலரான ஓபில்; கழுதைகளுக்கு மெரோனோவியரான எகுதியா,
1 நாளாகமம் 27 : 31 (ECTA)
ஆட்டு மந்தைகளுக்கு ஆகாலியரான யாசிசு. இவர்கள் எல்லாரும் அரசர் தாவீதின் உடைமைகளுக்குப் பொறுப்பாளர் ஆவர்.
1 நாளாகமம் 27 : 32 (ECTA)
தாவீதின் சிறப்பு ஆலோசகர் தாவீதின் சிற்றப்பா யோனத்தான் விவேகமிகு ஆலோசகரும், எழுத்தருமாய் இருந்தார். அவரும் அக்மோனியின் மகனான எகியேலும் அரசரின் புதல்வருக்குப் பொறுப்பேற்றிருந்தனர்.
1 நாளாகமம் 27 : 33 (ECTA)
அகித்தோபல் அரசரின் ஆலோசகர்; அர்கியரான ஊசாய் அரசரின் நண்பர்.
1 நாளாகமம் 27 : 34 (ECTA)
அகித்தோபலுக்குப் பின் பெனாயாவின் மகன் யோயாதாவும், அபியத்தாரும் அவர் பதவியை ஏற்றனர். யோவாபு அரசரின் படைத் தலைவராய் இருந்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34