1 நாளாகமம் 26 : 1 (ECTA)
வாயிற்காவலர் வாயில் காப்போரின் பிரிவுகளாவன; கோராகியரில், ஆசாபின் குடும்பத்தைச் சேர்ந்த கோரேயின் மகன் மெசலேமியா;
1 நாளாகமம் 26 : 2 (ECTA)
மெசலேமியாவின் புதல்வருள் செக்கரியா மூத்தவர்; இரண்டாமவர் எதியவேல், மூன்றாமவர் செபதியா, நான்காமவர் யாத்தனியேல்
1 நாளாகமம் 26 : 3 (ECTA)
ஐந்தாமவர் ஏலாம், ஆறாமவர், யோகனான், ஏழாவது எல்யகோவெனாய்.
1 நாளாகமம் 26 : 4 (ECTA)
ஓபேதுஏதோமின் புதல்வருள், செமாயா மூத்தவர், இரண்டாமவர் யோசபாத்து, மூன்றாமவர் யோவாகு, நான்காமவர் சாக்கார், ஐந்தாமவர் நெத்தனியேல், * 2 சாமு 6:11; 1 குறி 13:14..
1 நாளாகமம் 26 : 5 (ECTA)
ஆறாமவர் அம்மியேல், ஏழாமவர் இசக்கார், எட்டாமவர் பெயுலத்தாய்; கடவுள் ஓபேது ஏதோமுக்கு ஆசி வழங்கியிருந்தார். * 2 சாமு 6:11; 1 குறி 13:14..
1 நாளாகமம் 26 : 6 (ECTA)
அவருடைய புதல்வர் செமாயாவுக்கும் புதல்வர் பிறந்தனர்; அவர்கள் ஆற்றல் மிக்கவராய் இருந்தனர்; தங்கள் தந்தையின் குடும்பத்தின்மீது ஆட்சி செய்தனர்.
1 நாளாகமம் 26 : 7 (ECTA)
செமாயாவின் புதல்வர்: ஒத்னி, இரபாவேல், ஓபேது, எல்சபாது. அவர்கள் சகோதரர் எலிகூ, செமக்கியா ஆகியோர் ஆற்றல் மிக்கவராயிருந்தனர்.
1 நாளாகமம் 26 : 8 (ECTA)
ஓபேது ஏதோமின் புதல்வருள் அவர்களின் புதல்வரும் உறவின் முறையினரும் அறுபத்து இரண்டு பேர். அவர்கள் தங்கள் வேலையில் திறமைமிக்கவராய் இருந்தனர்.
1 நாளாகமம் 26 : 9 (ECTA)
மெசலேமியாவின் புதல்வருள் அவர்கள் சகோதரரும் திறமைமிக்கவர்கள்; இவர்கள் பதினெட்டுப் பேர்.
1 நாளாகமம் 26 : 10 (ECTA)
மெராரியின் புதல்வருள் ஒருவர் கோசா. இவர்தம் புதல்வருள் சிம்ரி தலைமகன் அல்லாதவராயிருந்தும், அவர் தந்தை அவரைத் தலைவராக்கியிருந்தார்.
1 நாளாகமம் 26 : 11 (ECTA)
இரண்டாமவர் இலிக்கியா, மூன்றாமவர் தெபலியா, நான்காமவர் செக்கரியா. கோசாவின் புதல்வரும் சகோதரருமாகப் பதின்மூன்று பேர்.
1 நாளாகமம் 26 : 12 (ECTA)
இந்தப் பிரிவுகளில் இருந்த அவர்கள் சகோதரரைப் போல் வாயில்காப்போர் தங்கள் தலைவர்கள்கீழ் ஆண்டவரின் கோவிலில் பணிபுரிய நியமிக்கப்பட்டனர்.
1 நாளாகமம் 26 : 13 (ECTA)
அவர்கள், தாங்கள் காவல் புரியவேண்டிய வாயிலைத் தெரிந்துகொள்ளுமாறு, தங்கள் தந்தையின் குடும்பங்களின்படி, சிறியோர் பெரியோர் என்னும் வேறுபாடின்றி, சீட்டுப்போட்டனர்.
1 நாளாகமம் 26 : 14 (ECTA)
கிழக்கு வாயிலுக்கான சீட்டு செலேமியாவுக்கு விழுந்தது. அவர் மகனும் விவேகமுள்ள ஆலோசகருமான செக்கரியாவுக்கு வடக்கு வாயிலுக்கான சீட்டு விழுந்தது.
1 நாளாகமம் 26 : 15 (ECTA)
தெற்கு வாயிலுக்கான சீட்டு ஓபேது ஏதோமுக்கு விழுந்தது; அவர் புதல்வருக்குப் பண்டசாலைகளுக்கானது விழுந்தது.
1 நாளாகமம் 26 : 16 (ECTA)
சுப்பிமுக்கும், ஓசாவுக்கும் மேற்கு வாயிலும், மேட்டுப்பாதை நோக்கிய சல்லக்கேத்து வாயிலும் விழுந்தன. காவல் முறை ஒரே சீராக அமைந்திருந்தது.
1 நாளாகமம் 26 : 17 (ECTA)
கிழக்கே லேவியர் ஆறு பேரும், வடக்கே நாளுக்கு நான்கு பேரும், தெற்கே நாளுக்கு நான்கு பேரும், கருவூலத்தில் இரண்டு இரண்டு பேரும்,
1 நாளாகமம் 26 : 18 (ECTA)
நெடுஞ்சாலை நோக்கிய மேற்கு தூண்வரிசை வாயிலில் நால்வரும், உட்புறத்தில் இருவரும் நியமிக்கப்பட்டனர்.
1 நாளாகமம் 26 : 19 (ECTA)
கோராகின் புதல்வருக்கும் மெராரியின் புதல்வருக்கும் குறிக்கப்பட்ட காவல்முறை இதுவே.
1 நாளாகமம் 26 : 20 (ECTA)
கோவிலின் பிற பணிகள் லேவியருள் அகியா என்பவர் கடவுளுடைய கோவிலின் கருவூலத்திற்கும் புனிதப் பொருள்கள் வைக்கப்பட்ட கருவூலத்திற்கும் பொறுப்பேற்றிருந்தார்.
1 நாளாகமம் 26 : 21 (ECTA)
இலாதானின் புதல்வர்: இலாதான் வழிவந்த கெர்சோனியர்; கெர்சோனியரான இலாதாவின் வழிமரபில் மூதாதையர் குடும்பத் தலைவரான எகியேலி,
1 நாளாகமம் 26 : 22 (ECTA)
எகியேலின் புதல்வருள் சேத்தாமும் அவர் சகோதரராகிய யோவேலும் ஆண்டவரின் இல்லக் கருவூலத்திற்குப் பொறுப்பேற்றிருந்தனர்.
1 நாளாகமம் 26 : 23 (ECTA)
அம்ராமியர், இட்சகாரியர், எப்ரோனியர், உசியேலியர் ஆகியோருக்கும் பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன.
1 நாளாகமம் 26 : 24 (ECTA)
மோசேயின் மகனான கெர்சோமின் வழிமரபில் தோன்றிய செபுவேல் கருவூலத்திற்குப் தலைமைப் பொறுப்பேற்றிருந்தார்.
1 நாளாகமம் 26 : 25 (ECTA)
அவர் சகோதரர் எலியேசர், இவர் மகன் இரகபியா, இவர் மகன் ஏசாயா, இவர் மகன் யோராம், இவர் மகன் சிக்ரி, இவர் மகன் செலோமித்து.
1 நாளாகமம் 26 : 26 (ECTA)
தாவீது அரசரும், மூதாதையர் குடும்பத் தலைவர்களும், ஆயிரத்தவர் தலைவர்களும், நூற்றுவர் தலைவர்களும், படைத்தளபதிகளும், அர்ப்பணித்த புனித பொருள்களின் கருவூலம் முழுவதற்கும் இந்தச் செலோமித்தும் அவர் சகோதரரும் பொறுப்பாய் இருந்தனர்.
1 நாளாகமம் 26 : 27 (ECTA)
அவர்கள் போரில் கைப்பற்றிய கொள்ளைப் பொருள்களினின்றும் எடுத்து ஆண்டவரின் இல்லத்தைப் பழுது பார்ப்பதற்காக அர்ப்பணித்திருந்தனர்.
1 நாளாகமம் 26 : 28 (ECTA)
அவ்வாறே, திருக்காட்சியாளர் சாமுவேல், கீசின் மகன் சவுல், நேரின் மகன் அப்னேர், செரூயாவின் மகன் யோவாபு ஆகியோர் அர்ப்பணித்திருந்தவை யாவும், செலோமித்தினுடையவும், அவர் சகோதரருடையவும் பொறுப்பில் இருந்தன.
1 நாளாகமம் 26 : 29 (ECTA)
மற்ற லேவியரின் பணிகள் இட்சகாரியரில், கெனனியாவும் அவர் புதல்வரும் இஸ்ரயேலின் மேல் பொதுநிர்வாகப் பணியை ஏற்று அதிகாரிகளாகவும் நீதிபதிகளாகவும் செயல்பட்டனர்.
1 நாளாகமம் 26 : 30 (ECTA)
எப்ரோனியரில், அசபெயாவும் அவர் உறவின்முறையினருள் திறமை மிக்க ஆயிரத்து எழுநூறு பேர் யோர்தானுக்கு மேற்குப்புற இஸ்ரயேலின் மேல் ஆண்டவரின் பணி, அரசரின் பணி அனைத்திலும் நிர்வாகப் பொறுப்பேற்றிருந்தனர்.
1 நாளாகமம் 26 : 31 (ECTA)
எப்ரோனியரில், எரியா தன் மூதாதையின் தலைமுறை அட்டவணைப்படி தலைவராய் இருந்தார். தாவீது ஆட்சி நாற்பதாம் ஆண்டில் எப்ரோனியருள் ஆற்றல்மிகு வீரர்களைத் தேடியபோது, அவர்கள் கிலயாதிலுள்ள யாசேரில் இருப்பதாகத் தெரிய வந்தது.
1 நாளாகமம் 26 : 32 (ECTA)
ரூபன் குலம், காத்தின் குலம், மனாசேயின் பாதிக்குலம் ஆகியோர்க்குக் குறிக்கப்பட்ட ஆண்டவரின் பணி, அரசரின் பணி அனைத்துப் பொறுப்பையும் வலிமைமிகுந்தவர்களும் மூதாதையர் குடும்பத் தலைவர்களுமான எரியாவின் உறவின்முறையினர் இரண்டாயிரத்து எழுநூறு பேரிடம் அரசர் தாவீது ஒப்படைத்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32