1 நாளாகமம் 25 : 1 (ECTA)
கோவில் பாடற்குழுவினர் தாவீதும் படைத்தலைவர்களும் ஆசாபு, எமான், எதுத்தூன் ஆகியோரின் புதல்வருள் சிலரைத் தெரிந்தெடுத்தனர். அவர்கள் சுரமண்டலங்களையும், தம்புருகளையும், கைத்தாளங்களையும் இசைத்து இறைவாக்குரைக்க நியமிக்கப்பட்டனர். பணியாளர் பட்டியலும், அவர்கள் செய்த பணிகளும் பின்வருமாறு: [* 1 அர 1:1- 40 ]
1 நாளாகமம் 25 : 2 (ECTA)
ஆசாபின் புதல்வர் சக்கூர், யோசேப்பு நெத்தனியா, அசரேலா. இவர்கள் ஆசாபின் மேற்பார்வையில் அரச கட்டளைப்படி இறைவாக்குரைத்தனர்.
1 நாளாகமம் 25 : 3 (ECTA)
எதுத்தூனும், கெதலியா, செரீ, ஏசாயா, அசபியா, மத்தித்தயா ஆகிய எதுத்தூனின் புதல்வர்கள் மொத்தம் அறுவர். இவர்கள் தந்தை எதுத்தூனின் மேற்பார்வையில் சுரமண்டலத்துடன் இறைவாக்குரைத்து ஆண்டவருக்கு நன்றியும் புகழும் செலுத்தினர்.
1 நாளாகமம் 25 : 4 (ECTA)
ஏமானின் புதல்வர் புக்கியா, மத்தனியா, உசியேல், செபுவேல், எரிமோத்து, அனனியா, அனானி, எலியாத்தா, கிதல்த்தி, ரோமம்த்தி, எசேர், யோசபக்காசா, மல்லோத்தி, ஓதிர், மகசியோத்து.
1 நாளாகமம் 25 : 5 (ECTA)
இவர்கள் அனைவரும் அரசரின் திருக்காட்சியாளரான ஏமானின் புதல்வர். ஆற்றலை உயர்த்துவதாகக் கூறிய வாக்குறுதியின்படியே, கடவுள் ஆமானுக்குப் பதினான்கு புதல்வரையும் மூன்று புதல்வியரையும் அளித்திருந்தார்.
1 நாளாகமம் 25 : 6 (ECTA)
இவர்கள் எல்லாரும் தங்கள் தந்தையின் மேற்பார்வையில் ஆண்டவரின் கோவிலில் கைத்தாளம், தம்புரு, சுரமண்டலம் ஆகியவற்றை இசைத்துக் கடவுளின் கோவிலில் பணியாற்றினர். இவ்வாறு, ஆசாபு, எதுத்தூன், ஏமான் ஆகியோர் அரசரின் கட்டளைப்படி செயல்பட்டனர்.
1 நாளாகமம் 25 : 7 (ECTA)
இவர்களும் இவர்களின் உறவின்முறையினராக ஆண்டவரின் பாடல்களில் தேர்ச்சி பெற்றவர்களும் மொத்தம் இருநூற்று எண்பத்து எட்டுப்பேர்.
1 நாளாகமம் 25 : 8 (ECTA)
முதியோரும் இளைஞரும், ஆசிரியரும் மாணவரும் யாவரும் ஒன்றுபோல் திருவுளச்சீட்டின் மூலமாக முறைப்பணிக்கு நியமிக்கப்பட்டார்கள்.
1 நாளாகமம் 25 : 9 (ECTA)
சீட்டு விழுந்த முறை; முதல் சீட்டு ஆசாபு குடும்பத்தின் யோசேப்புக்கு; இரண்டாவது கெதலியா, அவர் சகோதரர்களும் அவர் புதல்வர்களும் ஆகிய பன்னிருவர்க்கும்,
1 நாளாகமம் 25 : 10 (ECTA)
மூன்றாவது சக்கூர், அவர் புதல்வர்கள் அவர் சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
1 நாளாகமம் 25 : 11 (ECTA)
நான்காவது இட்சரி, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
1 நாளாகமம் 25 : 12 (ECTA)
ஐந்தாவது, நெத்தனியா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
1 நாளாகமம் 25 : 13 (ECTA)
ஆறாவது புக்கியா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
1 நாளாகமம் 25 : 14 (ECTA)
ஏழாவது அசரேலா, அவர் புதல்வர்கள் சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
1 நாளாகமம் 25 : 15 (ECTA)
எட்டாவது ஏசாயா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
1 நாளாகமம் 25 : 16 (ECTA)
ஒன்பதாவது மத்தனியா, அவர் புதல்வர்கள் சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
1 நாளாகமம் 25 : 17 (ECTA)
பத்தாவது சிமயி, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
1 நாளாகமம் 25 : 18 (ECTA)
பதினொன்றாவது அசரியேல், அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
1 நாளாகமம் 25 : 19 (ECTA)
பன்னிரண்டாவது அசபியா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
1 நாளாகமம் 25 : 20 (ECTA)
பதின்மூன்றாவது சூபாவேல், அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
1 நாளாகமம் 25 : 21 (ECTA)
பதினான்காவது மத்தித்தியா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
1 நாளாகமம் 25 : 22 (ECTA)
பதினைந்தாவது எரேமோத்து, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
1 நாளாகமம் 25 : 23 (ECTA)
பதினாறாவது அனனியா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும், [* விப 28: 1 ]
1 நாளாகமம் 25 : 24 (ECTA)
பதினேழாவது யோசபக்காசா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
1 நாளாகமம் 25 : 25 (ECTA)
பதினெட்டாவது அனானி, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
1 நாளாகமம் 25 : 26 (ECTA)
பத்தொன்பதாவது மல்லோத்தி, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும், [* இச 10: 8 ]
1 நாளாகமம் 25 : 27 (ECTA)
இருபதாவது எலியாத்தா, அவர் புதல்வர், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
1 நாளாகமம் 25 : 28 (ECTA)
இருபத்து ஒன்றாவது ஓதீர், அவர் புதல்வர், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும், * எண் 3:5-9..
1 நாளாகமம் 25 : 29 (ECTA)
இருபத்து இரண்டாவது கிதல்த்தி, அவர் புதல்வர், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும், * எண் 3:5-9..
1 நாளாகமம் 25 : 30 (ECTA)
இருபத்து மூன்றாவது மகசியோத்து, அவர் புதல்வர், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும். * எண் 3:5-9..
1 நாளாகமம் 25 : 31 (ECTA)
இருபத்து நான்காவது ரோமம்த்திஎசேர், அவர் புதல்வர், சகோதரர்கள் பன்னிருவர்க்கும். * எண் 3:5-9..
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31