1 நாளாகமம் 24 : 1 (ECTA)
குருக்களின் பணிகள் ஆரோனின் புதல்வர்தம் பிரிவுகளாவன:ஆரோனின் புதல்வர் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர். [* 1 அர 1:1- 40 ]
1 நாளாகமம் 24 : 2 (ECTA)
நாதாபும், அபிகூவும் புதல்வரின்றி அவர்கள் தந்தைக்கு முன்னரே இறந்து போயினர். எலயாசரும், இத்தாமரும் குருக்களாகப் பணி செய்தனர்.
1 நாளாகமம் 24 : 3 (ECTA)
தாவீது எலயாசரின் குடும்பத்தைச் சார்ந்த சாதோக்கு, இத்தாமர் குடும்பத்தைச் சார்ந்த அகிமெலக்கு ஆகியோரின் துணைகொண்டு பதவிவாரியாகவும் பணிவாரியாகவும் அவர்களில் பிரிவுகளை ஏற்படுத்தினார்.
1 நாளாகமம் 24 : 4 (ECTA)
இத்தாமரின் குடும்பத்தை விட எலயாசரின் குடும்பம் மிகுதியான தலைவர்களைக் கொண்டிருந்தது. எனவே, எலயாசரின் புதல்வரில் பதினாறு பேர் அவர்கள் மூதாதையரின் குடும்பத்துக்கும், இத்தாமரின் புதல்வரில் எட்டுப்பேர் அவர்கள் மூதாதையரின் குடும்பத்துக்கும் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
1 நாளாகமம் 24 : 5 (ECTA)
எலயாசர், இத்தாமர் ஆகிய இரு குடும்பங்களின் புதல்வரிலும் திருத்தலத் தலைவர்களும் இறைப்பணித் தலைவர்களும் இருந்தமையால், சீட்டுக் குலுக்கல் முறையில் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன.
1 நாளாகமம் 24 : 6 (ECTA)
நெத்தனியேலின் மகனும் லேவியனும் எழுத்தனுமான செமாயா, அரசர் அலுவலர்கள், குருக்களாகிய சாதோக்கு, அபியத்தாரின் மகன் அகிமெலக்கு, குருத்துவக் குடும்பங்களின் தலைவர்கள், லேவியர் குடும்பங்களின் தலைவர்கள் முன்னிலையில் பதிவுசெய்தான். எலயாசரின் குடும்பத்திற்கும், இத்தாமரின் குடும்பத்திற்கும் சீட்டுப் போடப்பட்டது.
1 நாளாகமம் 24 : 7 (ECTA)
சீட்டு விழுந்த முறை; முதல் சீட்டு யோயாரிபுக்கு; இரண்டாம் சீட்டு எதாயாவுக்கு;
1 நாளாகமம் 24 : 8 (ECTA)
மூன்றாவது ஆரிமுக்கு; நான்காவது செயோரிமுக்கு;
1 நாளாகமம் 24 : 9 (ECTA)
ஐந்தாவது மல்கியாவுக்கு; ஆறாவது மியாமினுக்கு;
1 நாளாகமம் 24 : 10 (ECTA)
ஏழாவது அக்கோட்சுக்கு; எட்டாவது அபியாவுக்கு;
1 நாளாகமம் 24 : 11 (ECTA)
ஒன்பதாவது ஏசுவாவுக்கு; பத்தாவது செக்கனியாவுக்கு;
1 நாளாகமம் 24 : 12 (ECTA)
பதினொன்றாவது எலியாசிபுக்கு; பன்னிரண்டாவது யாக்கிமுக்கு;
1 நாளாகமம் 24 : 13 (ECTA)
பதின்மூன்றாவது உப்பாவுக்கு; பதினான்காவது எசேபயாவுக்கு;
1 நாளாகமம் 24 : 14 (ECTA)
பதினைந்தாவது பில்காவுக்கு; பதினாறாவது இம்மேருக்கு;
1 நாளாகமம் 24 : 15 (ECTA)
பதினேழாவது ஏசீருக்கு; பதினெட்டாவது அப்பிசேசுக்கு;
1 நாளாகமம் 24 : 16 (ECTA)
பத்தொன்பதாவது பெத்தகியாவுக்கு; இருபதாவது எசக்கேலுக்கு;
1 நாளாகமம் 24 : 17 (ECTA)
இருபத்தொன்றாவது யாக்கினுக்கு; இருபத்திரண்டாவது காமுலுக்கு;
1 நாளாகமம் 24 : 18 (ECTA)
இருபத்து மூன்றாவது தெலாயாவுக்கு; இருபத்து நான்காவது மாசியாவுக்கு.
1 நாளாகமம் 24 : 19 (ECTA)
இவர்களே தங்கள் மூதாதையாகிய ஆரோன் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து தந்த விதிமுறைகளை, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புக்கேற்ற வரிசை முறைப்படி ஆண்டவரின் இல்லம் சென்று, அங்கு நிறைவேற்றுவதற்காகப் பதிவு செய்யப்பட்டவர்கள்.
1 நாளாகமம் 24 : 20 (ECTA)
லேவியர் அட்டவணை எஞ்சிய லேவியின் மக்களுள், அம்ராமின் புதல்வருள் சூபாவேல்; சூபாவேலின் புதல்வருள் எகதியா;
1 நாளாகமம் 24 : 21 (ECTA)
இரகபியாவின் புதல்வர்களுள் இசியா தலைவராய் இருந்தார்.
1 நாளாகமம் 24 : 22 (ECTA)
இசுராகியரில் செலமோத்தும், செலமோத்தின் புதல்வருள் யாகாத்தும்;
1 நாளாகமம் 24 : 23 (ECTA)
இவருடைய புதல்வருள் முதல் மகன் எரிய்யா, இரண்டாம் மகன் அமரியா, மூன்றாம் மகன் யாகசியேல், நான்காவது மகன் எகமயாம். [* விப 28: 1 ]
1 நாளாகமம் 24 : 24 (ECTA)
உசியேலின் புதல்வர், மீக்கா; மீக்காவின் புதல்வர் சாமீர்;
1 நாளாகமம் 24 : 25 (ECTA)
மீக்காவின் சகோதரர் இசியா; இசியாவின் புதல்வருள் செக்கரியா;
1 நாளாகமம் 24 : 26 (ECTA)
மெராரியின் புதல்வர் மக்லி, மூசி; மற்றும் அவர் மகன் யகசியா; [* இச 10: 8 ]
1 நாளாகமம் 24 : 27 (ECTA)
மெராரியின் மகனான யகசியாவின் புதல்வர்கள்; சோகாம், சக்கூர், இப்ரி.
1 நாளாகமம் 24 : 28 (ECTA)
மக்லியின் புதல்வர்: புதல்வர்கள் இல்லாத எலயாசர்; * எண் 3:5-9..
1 நாளாகமம் 24 : 29 (ECTA)
மற்றும் கீசு, கீசின் புதல்வர் எரகுமவேல். * எண் 3:5-9..
1 நாளாகமம் 24 : 30 (ECTA)
மூசியின் புதல்வர் மக்லி, ஏதேர், எரிமோத்து. தங்கள் மூதாதையர் வீட்டு லேவியரின் புதல்வர் இவர்களே. * எண் 3:5-9..
1 நாளாகமம் 24 : 31 (ECTA)
இவர்களும், தங்கள் சகோதரர்களாகிய ஆரோனின் புதல்வர் செய்ததுபோல, தாவீது அரசர், சாதோக்கு, அகிமலேக்கு, குருத்துவக் குடும்பங்களின் தலைவர், லேவியர் குடும்பங்களின் தலைவர் ஆகியோர் முன்னிலையில் ஒவ்வொரு குடும்பத்தின் தலைவரும் அவர் இளைய சகோதரருள் ஒருவருமாகச் சீட்டுப் போட்டு, தங்கள் பணிகளைப் பங்கிட்டுக் கொண்டனர். * எண் 3:5-9..

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31