1 நாளாகமம் 23 : 1 (ECTA)
தாவீது வயது முதிர்ந்து கிழவரான போது, தம் மகன் சாலமோனை இஸ்ரயேலுக்கு அரசனாக்கினார். [* 1 அர 1:1- 40 ]
1 நாளாகமம் 23 : 2 (ECTA)
லேவியரின் அலுவல் அவர் இஸ்ரயேலின் எல்லாத் தலைவர்களையும், குருக்களையும் லேவிரையும் ஒன்றுகூட்டினார்.
1 நாளாகமம் 23 : 3 (ECTA)
லேவியருள் முப்பதும் அதற்கு மேற்பட்ட வயதினரும் எண்ணப்பட்டனர். அவர்கள் மொத்தம் முப்பத்து எட்டாயிரம் ஆண்கள்.
1 நாளாகமம் 23 : 4 (ECTA)
அவர்களுள் இருபத்து நாலாயிரம் பேரை ஆண்டவரின் இல்லப் பணிகளுக்குப் பொறுப்பாளராகவும், ஆறாயிரம் பேரை அலுவலர், நீதிபதிகளாகவும்,
1 நாளாகமம் 23 : 5 (ECTA)
நாலாயிரம் பேரை வாயில்காப்போராகவும், நாலாயிரம் பேரை ஆண்டவரைப் புகழ்வதற்காகத் தாம் செய்து வைத்திருந்த இசைக்கருவிகளுடன் புகழ் பாடுவோராகவும் நியமித்தார்.
1 நாளாகமம் 23 : 6 (ECTA)
தாவீது அவர்களை லேவிய மக்களான கேர்சோன், கோகாத்து, மெராரி என்னும் குடும்பங்களின்படி பிரித்தார்:
1 நாளாகமம் 23 : 7 (ECTA)
கேர்சோனியரில் இலாதானும் சிமயியும்;
1 நாளாகமம் 23 : 8 (ECTA)
இலாதானின் புதல்வர்: தலைவரான எகியேல், சேத்தாம், யோவேல் ஆகிய மூவர்;
1 நாளாகமம் 23 : 9 (ECTA)
சிமயின் புதல்வர்: செலமோத்து, அசியேல், ஆரான், ஆகிய மூவர். இவர்கள் இலாதானின் மூதாதையரில் தலைவர்கள்.
1 நாளாகமம் 23 : 10 (ECTA)
சிமயின் புதல்வர்: யாகாத்து, சீனா, எயூசு, பெரியா இந்த நால்வர் சிமயியின் புதல்வர்.
1 நாளாகமம் 23 : 11 (ECTA)
இவர்களுள் யாகாத்து மூத்தவர், சீசா இரண்டாம் மகன், எயூசுக்கும் பெரியாவுக்கும் புதல்வர் பலர் இல்லாததால், ஒரே மூதாதையரின் குடும்பத்தினராய்க் கணக்கிடப்பட்டனர்.
1 நாளாகமம் 23 : 12 (ECTA)
கோகாத்தின் புதல்வர்: அம்ராம், இட்சகார், எப்ரோன், உசியேல் ஆகிய நால்வர்.
1 நாளாகமம் 23 : 13 (ECTA)
அம்ராமின் புதல்வர்: ஆரோன், மோசே. ஆரோனும் அவர் புதல்வரும் திருத்தூயகத்தை என்றும் புனிதமாய்க் காக்கவும், என்றென்றும் ஆண்டவருக்கு முன்பாகத் தூபங்காட்டவும், அவர்தம் திருமுன் பணிசெய்யவும், அவர் பெயரால் ஆசி வழங்கவும், அர்ப்பணிக்கப்பட்டனர்.
1 நாளாகமம் 23 : 14 (ECTA)
கடவுளின் அடியவரான மோசேயின் புதல்வரும் லேவி குலத்தாரோடு சேர்த்துக் கணக்கிடப்பட்டனர்.
1 நாளாகமம் 23 : 15 (ECTA)
மோசேயின் புதல்வர்: கெர்சோம், எலியேசர்,
1 நாளாகமம் 23 : 16 (ECTA)
கெர்சோமின் புதல்வருள் செபுயேல் தலைவராய் இருந்தார்.
1 நாளாகமம் 23 : 17 (ECTA)
எலியேசர் புதல்வருள் இரகபியா தலைவராய் இருந்தார். எலியேசருக்கு வேறு புதல்வர் இல்லை. ஆனால், இரகபியாவுக்குப் புதல்வர் பலர் இருந்தனர்.
1 நாளாகமம் 23 : 18 (ECTA)
இட்சகார் புதல்வருள் செலோமித்து தலைவராய் இருந்தார்.
1 நாளாகமம் 23 : 19 (ECTA)
எப்ரோன் புதல்வர்: தலைவரான எரிய்யா, இரண்டாமவர் அமரியா, மூன்றாமவர் யாகசியேல், நான்காமவர் எக்கமயாம்.
1 நாளாகமம் 23 : 20 (ECTA)
உசியேல் புதல்வர்: தலைவரான மீக்கா, இரண்டாமவர் இசியா.
1 நாளாகமம் 23 : 21 (ECTA)
மெராரியின் புதல்வர்: மக்லி, மூசி, மக்லியின் புதல்வர்: எலயாசர், கீஸ்.
1 நாளாகமம் 23 : 22 (ECTA)
எலயாசர் இறந்தபோது அவருக்குப் புதல்வியரேயன்றிப் புதல்வர் எவரும் இல்லை. அவர் சகோதரராகிய கீசின் புதல்வர் அவர்களை மணந்து கொண்டனர்.
1 நாளாகமம் 23 : 23 (ECTA)
மூசியின் புதல்வர் மக்லி, ஏதேர், எரேமோத்து ஆகிய மூவர். [* விப 28: 1 ]
1 நாளாகமம் 23 : 24 (ECTA)
தங்கள் மூதாதையரின் குலங்களின்படியே, மூதாதையர் குடும்பத் தலைவர்களாய் இருந்த லேவியரின் புதல்வர் இவர்களே. இவர்கள் இருபதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்கள். தனித்தனியே நபர்களின் பெயர்களின் எண் வரிசைப்படியே பதிவு செய்யப்பட்டு ஆண்டவரின் திருக்கோவிலின் பணியோடு தொடர்புகொண்ட வேலைகளைச் செய்யவேண்டியவர்கள்.
1 நாளாகமம் 23 : 25 (ECTA)
ஏனெனில், “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி தந்து, எருசலேமில் என்றும் குடியிருக்கிறார்.
1 நாளாகமம் 23 : 26 (ECTA)
அதுவுமன்றி, லேவியர் திருக்கூடாரத்தையும் வழிபாட்டுக்கான அனைத்துக் கலங்களையும் இனிச் சுமக்க வேண்டுவதில்லை” என்று தாவீது கூறினார். [* இச 10: 8 ]
1 நாளாகமம் 23 : 27 (ECTA)
தாவீதின் இறுதிச் சொற்களின்படி லேவியருள் இருபதும் அதற்கு மேற்பட்ட வயதினர் யாவரும் பதிவு செய்யப்பட்டனர்.
1 நாளாகமம் 23 : 28 (ECTA)
அவர்கள், ஆண்டவரின் இல்லப்பணியில் ஆரோனின் புதல்வரின்கீழ் வேலை செய்யவும், முற்றங்களையும் உள்ளறைகளையும் புனிதக் கலங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்தவும், கோவிலில் எவ்வகைப் பணியையும் செய்யவும் வேண்டும்; * எண் 3:5-9..
1 நாளாகமம் 23 : 29 (ECTA)
திருமுன்னிலை அப்பங்கள், உணவுப்பலிக்கான மிருதுவான மாவு, புளிப்பற்ற அப்பம், சட்டிகளில் சுட்ட, பொரித்த அடைகள் ஆகியவற்றைத் தயாரித்து, அவற்றின் எடையையும் அளவையும் கணக்கிடுதல் வேண்டும். * எண் 3:5-9..
1 நாளாகமம் 23 : 30 (ECTA)
ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் ஆண்டவருக்கு நன்றி கூறவும் அவரைப் போற்றவும் வேண்டும்; * எண் 3:5-9..
1 நாளாகமம் 23 : 31 (ECTA)
அத்தோடு ஓய்வு நாள்களிலும் அமாவாசை நாள்களிலும் மற்றைய விழாக்களிலும் ஆண்டவருக்கு எரிபலி செலுத்தும்போது எண்ணிக்கைப்படியும் பிரிவுகளின்படியும் ஆண்டவர் முன் எப்போதும் நிற்கவேண்டும். * எண் 3:5-9..
1 நாளாகமம் 23 : 32 (ECTA)
ஆண்டவர் தங்கும் சந்திப்புக் கூடாரத்தையும், திருத்தலத்தையும் கண்காணிக்கவும், ஆரோனின் வழிமரபில் வந்த அவர்கள் சகோதரரான குருக்களுக்கு ஆண்டவரின் இல்லப் பணியில் உதவி செய்யவும் வேண்டும். * எண் 3:5-9..
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32