1 நாளாகமம் 2 : 1 (ECTA)
யூதாவின் வழிமரபினர் இஸ்ரயேலின் மைந்தர்; ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன், * யோசுவா )..
1 நாளாகமம் 2 : 2 (ECTA)
தாண், யோசேப்பு, பென்யமின், நப்தலி, காத்து, ஆசேர்.
1 நாளாகமம் 2 : 3 (ECTA)
யூதாவின் புதல்வர்: ஏர், ஓனான், சேலா, இம்மூவரும் கானானியப் பெண் பத்சூவாவிடம் அவருக்குப் பிறந்தவர்கள். அவர்களில் யூதாவின் தலைமகன் ஏர் ஆண்டவரின் பார்வையில் தீயவனாய் இருந்ததால் அவர் அவனைச் சாகடித்தார்.
1 நாளாகமம் 2 : 4 (ECTA)
யூதாவின் மருமகள் தாமார் அவருக்குப் பெற்ற புதல்வர்: பேரேட்சு, செராகு; யூதாவின் புதல்வர் மொத்தம் ஐந்து பேர்.
1 நாளாகமம் 2 : 5 (ECTA)
பெரேட்சின் புதல்வர்: எட்சரோன், ஆமூல்.
1 நாளாகமம் 2 : 6 (ECTA)
செராகின் புதல்வர்: சிமிரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா, ஆக மொத்தம் ஐந்து பேர்.
1 நாளாகமம் 2 : 7 (ECTA)
விலக்கப்பட்டதை வைத்துக் கொண்டதால் தவறிழைத்து இஸ்ரயேலருக்குப் பெருங்கேடு விளைவித்த ஆக்கார்* கர்மியின் புதல்வருள் ஒருவன். [* யோசு 7: 1 ; * எபிரேயத்தில் ‘பெருங்கேடு’ என்பது பொருள்; மறுபெயர் ‘ஆக்கான்’ (காண். ]
1 நாளாகமம் 2 : 8 (ECTA)
ஏத்தானின் மகன் அசரியா.
1 நாளாகமம் 2 : 9 (ECTA)
அரசர் தாவீதின் மூதாதையர் எட்சரோனுக்குப் பிறந்த புதல்வர்: எரகுமவேல், இராம், கெலூபாய்.
1 நாளாகமம் 2 : 10 (ECTA)
இராமுக்கு அம்மினதாபு பிறந்தார், அம்மினதாபுக்கு யூதா மக்களின் தலைவராகிய நகசோன் பிறந்தார்.
1 நாளாகமம் 2 : 11 (ECTA)
நகசோனுக்கு சல்மா பிறந்தார்: சல்மாவுக்குப் போவாசு பிறந்தார்.
1 நாளாகமம் 2 : 12 (ECTA)
போவாசுக்குப் ஒபேது பிறந்தார்: ஓபேதுக்கு ஈசாய் பிறந்தார்.
1 நாளாகமம் 2 : 13 (ECTA)
ஈசாய்க்குப் பிறந்தவர்கள்: தலைமகன் எவியாபு, இரண்டாம் மகன் அபினதாபு, மூன்றாம் மகன் சிமயா.
1 நாளாகமம் 2 : 14 (ECTA)
நான்காம் மகன் நெத்தனியேல், ஐந்தாம் மகன் இரதாய்,
1 நாளாகமம் 2 : 15 (ECTA)
ஆறாம் மகன் ஒட்சேம், ஏழாம் மகன் தாவீது.
1 நாளாகமம் 2 : 16 (ECTA)
இவர்களின் சகோதரரிகள்; செரூயா, அபிகாயில். செருயாவின் புதல்வர்: அபிசாய், யோவாப், அசாயேல் என்னும் மூவர்.
1 நாளாகமம் 2 : 17 (ECTA)
அபிகாயில் இஸ்மயேலராகிய எத்தேருக்கு அமாசாவைப் பெற்றெடுத்தார்.
1 நாளாகமம் 2 : 18 (ECTA)
எட்சரோனின் வழிமரபினர் எட்சரோனின் மகன் காலேபுக்கு தம் மனைவி எரியோதைச் சார்ந்த அசூபா மூலம் பிறந்த புதல்வர் இவர்களே: ஏசேர், சோபாபு, அர்தோன்.
1 நாளாகமம் 2 : 19 (ECTA)
அசூபா இறந்தபோது, காலேபு எப்ராத்தை மணந்து கொண்டார்; அவர் அவருக்குக் கூரைப் பெற்றெடுத்தார்.
1 நாளாகமம் 2 : 20 (ECTA)
கூருக்கு ஊரி பிறந்தார். ஊரிக்கு பெட்சலயேல் பிறந்தார்.
1 நாளாகமம் 2 : 21 (ECTA)
பின்பு, எட்சரோன் தமக்கு அறுபது வயதானபோது கிலயாதின் மூதாதையான மாக்கிரின் புதல்வியை மணந்து அவருடன் உறவு கொண்டார். அவர் அவருக்குச் செகூபைப் பெற்றெடுத்தார்.
1 நாளாகமம் 2 : 22 (ECTA)
செகூபுக்கு யாயிர் பிறந்தார். இவருக்கு கிலயாது நாட்டில் இருபத்து மூன்று நகர்கள் இருந்தன.
1 நாளாகமம் 2 : 23 (ECTA)
கெசூரும் ஆராமும் அவர்களிடமிருந்து அவ்வோத்யாயிரையும் கெனாத்திலுள்ள சிற்றூர்களையும் சேர்த்து மொத்தம் அறுபது நகர்களைக் கைப்பற்றினார்கள். இவை யாவும் கிலயாதின் மூதாதையாகிய மாக்கிரின் புதல்வர்களுக்கு உரியவை.
1 நாளாகமம் 2 : 24 (ECTA)
எட்சரொன் எப்ராத்தாவில் இறந்தபின், அவர் மனைவி அபியா காலேபுக்கு தெக்கோவாவின் மூதாதையான அஸ்கூரைப் பெற்றெடுத்தாள்.
1 நாளாகமம் 2 : 25 (ECTA)
எரகுமவேலின் வழிமரபினர் எட்சரோனின் தலைமகனான எரகுமவேலின் மைந்தர்; தலைமகன் இராம் மற்றும் பூனா, ஒரேன், ஒட்சேம், அகியா.
1 நாளாகமம் 2 : 26 (ECTA)
எரகுமவேலுக்கு அத்தாரா என்ற மற்றொரு மனைவி இருந்தார். அவரே ஒனாமின் தாய்.
1 நாளாகமம் 2 : 27 (ECTA)
எரகுமவேலின் தலை மகனான இராமின் புதல்வர்: மாகாசு, யாமின், ஏக்கேர்.
1 நாளாகமம் 2 : 28 (ECTA)
ஓனாமின் புதல்வர்: சம்மாய், யாதா; சம்மாயின் புதல்வர்: நாதாபு, அபிசூர்.
1 நாளாகமம் 2 : 29 (ECTA)
அபிசூரின் மனைவியின் பெயர் அபிகாயில்; அவர் அவருக்கு அக்பானையும் மோலிதையும் பெற்றெடுத்தார்.
1 நாளாகமம் 2 : 30 (ECTA)
நாதாபின் புதல்வர்: செலேது, அப்பயிம்; செலேது புதல்வரின்றி இறந்தார்.
1 நாளாகமம் 2 : 31 (ECTA)
அப்பயிம் புதல்வர், இசி; இசியின் புதல்வர், சேசான்; சேசானின் புதல்வருள் அக்லாய் ஒருவர்.
1 நாளாகமம் 2 : 32 (ECTA)
சம்மாயின் சகோதரரான யாதாவின் புதல்வர்: எத்தேர், யோனத்தான். எத்தேர் புதல்வரின்றி இறந்தார்.
1 நாளாகமம் 2 : 33 (ECTA)
யோனத்தானின் புதல்வர்: பெலேத்து, சாசா; இவர்கள் எரகுமவேலின் வழிமரபினர்.
1 நாளாகமம் 2 : 34 (ECTA)
சேசானுக்கு புதல்வர் இல்லை; புதல்வியர் மட்டுமே இருந்தனர். சேசானுக்கு யார்கா என்ற எகிப்தியப் பணியாளர் ஒருவர் இருந்தார்.
1 நாளாகமம் 2 : 35 (ECTA)
சேசான் தம் புதல்வியருள் ஒருவரை யார்கா என்ற தம் பணியாளருக்கு மணமுடித்துக் கொடுத்தார். அவர் அவருக்கு அத்தாயைப் பெற்றெடுத்தார்.
1 நாளாகமம் 2 : 36 (ECTA)
அத்தாய்க்கு நாத்தான் பிறந்தார்; நாத்தானுக்குப் சாபாத்து பிறந்தார்.
1 நாளாகமம் 2 : 37 (ECTA)
சாபாத்துக்கு எப்லால் பிறந்தார்; எப்லாலுக்கு ஓபேது பிறந்தார்.
1 நாளாகமம் 2 : 38 (ECTA)
ஓபேதுக்கு ஏகூ பிறந்தார். ஏகூவுக்கு அசரியா பிறந்தார்.
1 நாளாகமம் 2 : 39 (ECTA)
அசரியாவுக்கு ஏலேசு பிறந்தார்; ஏலேசுக்கு எலயாசா பிறந்தார்.
1 நாளாகமம் 2 : 40 (ECTA)
எலியாசாவுக்குச் சிஸ்மாய் பிறந்தார்; சிஸ்மாய்க்குச் சல்லூம் பிறந்தார்.
1 நாளாகமம் 2 : 41 (ECTA)
சல்லூமுக்கு எக்கமியா பிறந்தார்; எக்கமியாவுக்கு எலிசாமா பிறந்தார்.
1 நாளாகமம் 2 : 42 (ECTA)
காலேபின் பிறவழிமரபினர் எரகுமவேலின் சகோதரரான காலேபின் மைந்தர்; தலைமகன் மேசா; இவர் சீபின் தந்தை; இவர் எப்ரோனின் தந்தையாகிய மாரேசாவின் புதல்வர்.
1 நாளாகமம் 2 : 43 (ECTA)
எப்ரோனின் புதல்வர்: கோராகு, தப்புவாகு, இரக்கேம், செமா.
1 நாளாகமம் 2 : 44 (ECTA)
செமாவுக்கு இரகாம் பிறந்தார்; இவர் யோர்க்கயாமின் தந்தை. இரக்கேமுக்கு சம்மாய் பிறந்தார்.
1 நாளாகமம் 2 : 45 (ECTA)
சம்மாயின் புதல்வர்: மாகோன்; மாகோன் பெத்சூரின் தந்தை.
1 நாளாகமம் 2 : 46 (ECTA)
காலேபின் மறுமனைவி ஏப்பா ஆரானையும், மோசாவையும், காசேசையும் பெற்றெடுத்தார்; ஆரானுக்குக் காசேஸ் பிறந்தார்.
1 நாளாகமம் 2 : 47 (ECTA)
யக்தாயின் புதல்வர்: இரகேம், யோத்தாம், கேசான், பெலேது, ஏப்பா, சாகாபு.
1 நாளாகமம் 2 : 48 (ECTA)
காலேபின் மறுமனைவி மாக்கா செபேரையும் திர்கனாவையும் பெற்றெடுத்தார்.
1 நாளாகமம் 2 : 49 (ECTA)
மேலும், அவர் மத்மன்னாவின் தந்தை சாகாபையும் மக்பேனாவிற்கும் கிபயாவிற்கும் தந்தையான செவாவையும் பெற்றெடுத்தார்; காலேபின் புதல்வி அக்சா.
1 நாளாகமம் 2 : 50 (ECTA)
இவர்களே காலேபின் புதல்வர்கள்: எப்ராத்தாவின் தலைமகனான கூரின் புதல்வர்: கிரியத்து எயாரிமின் மூதாதையான சோபால்.
1 நாளாகமம் 2 : 51 (ECTA)
பெத்லகேமின் மூதாதையான சல்மா, பெத்காதேரின் மூதாதையான ஆரேபு.
1 நாளாகமம் 2 : 52 (ECTA)
கிரியத்து எயாரிமின் மூதாதையாகிய சோபாலின் மற்ற புதல்வர்: ஆரோவே, ஆட்சி மெனுகோத்து.
1 நாளாகமம் 2 : 53 (ECTA)
கிரியத்து எயாரிமின் குடும்பங்கள்: இத்திரியர், பூத்தியர், சுமாத்தியர், மிஸ்ராவியர், இவர்களிடமிருந்து சோராத்தியரும் எஸ்தாவோலியரும் தோன்றினர்.
1 நாளாகமம் 2 : 54 (ECTA)
சல்மாவின் புதல்வர்: பெத்லகேமியர், நெற்றோபாயர், அற்றரோத் பெத்யோவாபு, மானகத்தியரிலும் பாதி மக்களான சோரியர்.
1 நாளாகமம் 2 : 55 (ECTA)
யாபேத்தில் குடியிருந்த எழுத்தரின் குடும்பங்கள்: திராத்தியர், சிமயாத்தியர், சூக்காத்தியர்; இரேக்கபு வீட்டாரின் மூதாதையான அமாத்திலிருந்து தோன்றிய கேனியர் அவர்களே.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55