1 நாளாகமம் 16 : 1 (ECTA)
அவர்கள் கடவுளின் பேழையைக் கொண்டு வந்து, தாவீது அதற்கென்று அமைத்திருந்த கூடாரத்தின் நடுவே வைத்தனர். பின்பு, கடவுளின் முன் எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளையும் செலுத்தினர்.
1 நாளாகமம் 16 : 2 (ECTA)
தாவீது எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளையும் செலுத்திய பின்பு மக்களுக்கு ஆண்டவரின் பெயரால் ஆசி வழங்கினார்.
1 நாளாகமம் 16 : 3 (ECTA)
அவர் இஸ்ரயேலராகிய ஆண் பெண் அனைவருக்கும் ஆளுக்கு ஓர் அப்பமும், ஒரு துண்டு இறைச்சியும், ஒரு திராட்சைப்பழ அடையும் கொடுத்தார்.
1 நாளாகமம் 16 : 4 (ECTA)
பின்பு, அவர் ஆண்டவரின் பேழையின் முன் வழிபாடு நடத்தவும், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு நன்றி செலுத்தவும், அவரைப் போற்றவும், லேவியரில் சிலரைத் திருப்பணியாளராக நியமித்தார்.
1 நாளாகமம் 16 : 5 (ECTA)
ஆசாபு தலைவராகவும், செக்கரியா துணைத் தலைவராகவும் எயியேல், செமிரா மோத்து, எகியேல், மத்தித்தியா, எலியாபு, பெனாயா, ஓபேது-ஏதோம், எயியேல் ஆகியோர் தம்புரு, சுரமண்டலக் கருவிகளை வாசிக்கவும், ஆசாபு கைத்தாளம் கொட்டவும்,
1 நாளாகமம் 16 : 6 (ECTA)
பெனாயா, யகசியேல் ஆகிய குருக்கள் இருவரும் கடவுளின் உடன்படிக்கைப் பேழையின் முன் இடைவிடாமல் எக்காளங்களை ஊதவும் நியமிக்கப்பட்டனர்.
1 நாளாகமம் 16 : 7 (ECTA)
இறை புகழ்ச்சிப் பாடல்
(திபா 105:1-15; 96:1-13; 106:1,47-48) இவ்வாறு, தாவீது ஆண்டவருக்கு நன்றிப்பாடல்களைப் பாடும் பொறுப்பை ஆசாபுக்கும் அவர் உறவின்முறையினருக்கும் முதன்முதலாக அளித்தார்;
1 நாளாகமம் 16 : 8 (ECTA)
“ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்; அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.
1 நாளாகமம் 16 : 9 (ECTA)
அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்; அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்!
1 நாளாகமம் 16 : 10 (ECTA)
அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!
1 நாளாகமம் 16 : 11 (ECTA)
ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்; அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!
1 நாளாகமம் 16 : 12 (ECTA)
அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்; அவர்தம் அருஞ்செயல்களையும் அவரது வாய் மொழிந்த நீதித்தீர்ப்பு களையும் நினைவில் கொள்ளுங்கள்.
1 நாளாகமம் 16 : 13 (ECTA)
அவரின் ஊழியராம் இஸ்ரயேலின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் புதல்வரே!
1 நாளாகமம் 16 : 14 (ECTA)
அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித்தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன.
1 நாளாகமம் 16 : 15 (ECTA)
அவரது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்ளுங்கள்; ஆயிரம் தலைமுறைக்கென அவர் அளித்த வாக்குறுதியை மறவாதீர்கள்!
1 நாளாகமம் 16 : 16 (ECTA)
ஆபிரகாமுடன் அவர் செய்து கொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்கு அவர் ஆணையிட்டுக் கூறியதையும் நினைவில் கொள்ளுங்கள்! [* தொநூ 12:7; 26: 3 ]
1 நாளாகமம் 16 : 17 (ECTA)
யாக்கோபுக்கு நியமமாகவும் இஸ்ரயேலுக்கு என்றுமுள உடன்படிக்கையாகவும் அதை அவர் உறுதிப்படுத்தினார். [* தொநூ 28: 13 ]
1 நாளாகமம் 16 : 18 (ECTA)
‘கானான் நாட்டை உனக்கு அளிப்பேன்; அப்பங்கே உனக்கு உரிமைச்சொத்தாய் இருக்கும்’ என்றார் அவர். [* தொநூ 28: 13 ]
1 நாளாகமம் 16 : 19 (ECTA)
அப்போது, அவர்கள் மதிப்பிலும் எண்ணிக்கையிலும் மிகக் குறைந்தவராய் இருந்தார்கள்; அங்கே அந்நியராய் இருந்தார்கள்.
1 நாளாகமம் 16 : 20 (ECTA)
ஒரு நாட்டினின்று மற்றொரு நாட்டிற்கும் ஓர் அரசினின்று மற்றொரு மக்களிடமும் அலைந்து திரிந்தார்கள்.
1 நாளாகமம் 16 : 21 (ECTA)
யாரும் அவர்களை ஒடுக்குமாறு அவர் விட்டுவிடவில்லை; அவர்களின் பொருட்டு மன்னர்களை அவர் கண்டித்தார்; [* தொநூ 20:3- 7 ]
1 நாளாகமம் 16 : 22 (ECTA)
‘நான் அருள்பொழிவு செய்தாரைத் தொடாதீர்; என் இறைவாக்கினர்க்குத் தீங்கிழைக்காதீர்’, என்றார் அவர். [* தொநூ 20:3- 7 ]
1 நாளாகமம் 16 : 23 (ECTA)
உலகெங்கும் வாழ்வோரே! ஆண்டவருக்குப் புகழ்பாடுங்கள்; அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்!
1 நாளாகமம் 16 : 24 (ECTA)
பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.
1 நாளாகமம் 16 : 25 (ECTA)
ஏனெனில், ஆண்டவர் மாட்சிமிக்கவர்; பெரிதும் போற்றத்தக்கவர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே!
1 நாளாகமம் 16 : 26 (ECTA)
மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே! ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர்!
1 நாளாகமம் 16 : 27 (ECTA)
மாட்சியும் புகழ்ச்சியும் அவர் திருமுன் உள்ளன! ஆற்றலும் அக்களிப்பும் அவரது திருத்தலத்தில் உள்ளன!
1 நாளாகமம் 16 : 28 (ECTA)
மக்களினங்களின் குடும்பங்களே! ஆண்டவருக்குச் சாற்றுங்கள்! மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்!
1 நாளாகமம் 16 : 29 (ECTA)
ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள்; உணவுப் படையல் ஏந்தி அவர்திருமுன் வாருங்கள்; தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்!
1 நாளாகமம் 16 : 30 (ECTA)
உலகெங்கும் வாழ்வோரே! அவர் திருமுன் நடுங்குங்கள்; உலகம் உறுதியுடன் நிலை கொண்டுள்ளது; இனி அது அசைக்கப்படுவதில்லை.
1 நாளாகமம் 16 : 31 (ECTA)
விண்ணுலகம் மகிழ்வதாக! மண்ணுலகம் களிகூர்வதாக! ‘ஆண்டவர் ஆள்கின்றார்’ என்று பிற இனத்தார்க்கு அறிவிப்பராக!
1 நாளாகமம் 16 : 32 (ECTA)
கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்; வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்!
1 நாளாகமம் 16 : 33 (ECTA)
அப்பொழுது காட்டு மரங்கள் ஆண்டவர் திருமுன் மகிழ்ந்து பாடட்டும்! ஏனெனில், அவர் மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்.
1 நாளாகமம் 16 : 34 (ECTA)
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு! [* 2 குறி 5:13; எஸ்ரா 3:11; திபா 100:5; 106:1; 107:1; 118:1; 136:1; எரே 33: 11 ]
1 நாளாகமம் 16 : 35 (ECTA)
எங்கள் மீட்பராகிய கடவுளே! எங்களை விடுவித்தருளும்! வேற்று நாடுகளினின்று எங்களை விடுவித்து ஒன்று சேர்த்தருளும்! அப்பொழுது, நாங்கள் உமது திருப்பெயருக்கு நன்றி செலுத்துவோம்; உம்மைப் புகழ்வதில் பெருமை கொள்வோம்;
1 நாளாகமம் 16 : 36 (ECTA)
‘இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் ஊழி ஊழியாகப் புகழப் பெறுவாராக’ என்று சொல்லுங்கள். அப்பொழுது, மக்கள் அனைவரும் ‘ஆமென்’ என்று சொல்லி, ஆண்டவரைப் போற்றினர்.
1 நாளாகமம் 16 : 37 (ECTA)
எருசலேம், கிபயோனில் வழிபாடு பின்பு, தாவீது ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையின்முன் தொடர்ந்து எந்நாளும் பணிவிடை செய்வதற்காக, பேழைக்கு முன்பாக இருக்குமாறு ஆசாபையும் அவரின் உறவின் முறையாரையும் பணித்தார்.
1 நாளாகமம் 16 : 38 (ECTA)
ஓபேது ஏதோமும் அவரின் உறவின் முறையாளர்களான அறுபத்து எட்டுப்பேரும் அவர்களுக்கு உதவி செய்யவேண்டும். எதுத்தூணின் மகனான ஓபேது ஏதோமும், கோசாவும் வாயில் காவலராக நியமிக்கப்பட்டனர்.
1 நாளாகமம் 16 : 39 (ECTA)
குரு சாதோக்கும் அவர் உறவின் முறைக் குருக்களும் கிபயோன் தொழுகைமேட்டில் ஆண்டவரின் திருக்கூடாரத்தின்முன் பணிசெய்ய வேண்டும்.
1 நாளாகமம் 16 : 40 (ECTA)
இஸ்ரயேலுக்கு ஆண்டவர் கட்டளையாகத் தந்த திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி, காலையிலும் மாலையிலும் தவறாமல் எரி பலிபீடத்தின் மேல் அவர்கள் எரிபலிகளைச் செலுத்த வேண்டும்.
1 நாளாகமம் 16 : 41 (ECTA)
இவர்களோடு ஏமானையும் எதுத்தூனையும் பெயர் சொல்லித் தேர்ந்து கொள்ளப்பட்ட சிலரையும் ‘ஆண்டவரின் பேரன்பு என்றென்றும் உள்ளது’ என்றுரைத்து அவருக்கு நன்றி செலுத்துமாறு கட்டளையிட்டார்;
1 நாளாகமம் 16 : 42 (ECTA)
இவர்களோடு ஏமான், எதுத்தூன் ஆகியோரை எக்காளங்களையும், கைத்தாளங்களையும், இறைப்பாடலுக்குரிய இசைக் கருவிகளையும் இசைக்க ஏற்படுத்தினார்; எதுத்தூனின் புதல்வரை வாயில் காவலராக நியமித்தார்.
1 நாளாகமம் 16 : 43 (ECTA)
பின்னர், மக்கள் அனைவரும் தம் வீடு திரும்பினர்; தாவீதும் தம் வீட்டாருக்கு ஆசி வழங்க, வீடு திரும்பினார். * 2 சாமு 6:19-20..
❮
❯