1 நாளாகமம் 16 : 1 (ECTA)
[PS] அவர்கள் கடவுளின் பேழையைக் கொண்டு வந்து, தாவீது அதற்கென்று அமைத்திருந்த கூடாரத்தின் நடுவே வைத்தனர். பின்பு, கடவுளின் முன் எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளையும் செலுத்தினர்.
1 நாளாகமம் 16 : 2 (ECTA)
தாவீது எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளையும் செலுத்திய பின்பு மக்களுக்கு ஆண்டவரின் பெயரால் ஆசி வழங்கினார்.
1 நாளாகமம் 16 : 3 (ECTA)
அவர் இஸ்ரயேலராகிய ஆண் பெண் அனைவருக்கும் ஆளுக்கு ஓர் அப்பமும், ஒரு துண்டு இறைச்சியும், ஒரு திராட்சைப்பழ அடையும் கொடுத்தார்.[PE]
1 நாளாகமம் 16 : 4 (ECTA)
[PS] பின்பு, அவர் ஆண்டவரின் பேழையின் முன் வழிபாடு நடத்தவும், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு நன்றி செலுத்தவும், அவரைப் போற்றவும், லேவியரில் சிலரைத் திருப்பணியாளராக நியமித்தார்.
1 நாளாகமம் 16 : 5 (ECTA)
ஆசாபு தலைவராகவும், செக்கரியா துணைத் தலைவராகவும் எயியேல், செமிரா மோத்து, எகியேல், மத்தித்தியா, எலியாபு, பெனாயா, ஓபேது-ஏதோம், எயியேல் ஆகியோர் தம்புரு, சுரமண்டலக் கருவிகளை வாசிக்கவும், ஆசாபு கைத்தாளம் கொட்டவும்,
1 நாளாகமம் 16 : 6 (ECTA)
பெனாயா, யகசியேல் ஆகிய குருக்கள் இருவரும் கடவுளின் உடன்படிக்கைப் பேழையின் முன் இடைவிடாமல் எக்காளங்களை ஊதவும் நியமிக்கப்பட்டனர்.[PE]
1 நாளாகமம் 16 : 7 (ECTA)
{இறை புகழ்ச்சிப் பாடல்[BR](திபா 105:1-15; 96:1-13; 106:1,47-48)} [PS] இவ்வாறு, தாவீது ஆண்டவருக்கு நன்றிப்பாடல்களைப் பாடும் பொறுப்பை ஆசாபுக்கும் அவர் உறவின்முறையினருக்கும் முதன்முதலாக அளித்தார்;[PE]
1 நாளாகமம் 16 : 8 (ECTA)
[PS] [QS][SS] “ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்;[SE][SS] அவர்தம் பெயரைச் சொல்லி[SE][SS] வழிபடுங்கள்; அவர்தம்[SE][SS] செயல்களை மக்களினங்கள்[SE][SS] அறியச் செய்யுங்கள்.[SE][QE]
1 நாளாகமம் 16 : 9 (ECTA)
[QS][SS] அவருக்குப் பாடல் பாடுங்கள்;[SE][SS] அவரைப் புகழ்ந்தேத்துங்கள்;[SE][SS] அவர்தம் வியத்தகு செயல்கள்[SE][SS] அனைத்தையும் எடுத்துரையுங்கள்![SE][QE]
1 நாளாகமம் 16 : 10 (ECTA)
[QS][SS] அவர்தம் திருப்பெயரை[SE][SS] மாட்சிப்படுத்துங்கள்;[SE][SS] ஆண்டவரைத் தேடுவோரின் இதயம்[SE][SS] அக்களிப்பதாக![SE][QE]
1 நாளாகமம் 16 : 11 (ECTA)
[QS][SS] ஆண்டவரையும் அவரது[SE][SS] ஆற்றலையும் தேடுங்கள்;[SE][SS] அவரது திருமுகத்தை[SE][SS] இடையறாது நாடுங்கள்![SE][QE]
1 நாளாகமம் 16 : 12 (ECTA)
[QS][SS] அவர் செய்த வியத்தகு செயல்களை[SE][SS] நினைவு கூருங்கள்;[SE][SS] அவர்தம் அருஞ்செயல்களையும்[SE][SS] அவரது வாய் மொழிந்த நீதித்தீர்ப்பு[SE][SS] களையும் நினைவில் கொள்ளுங்கள்.[SE][QE]
1 நாளாகமம் 16 : 13 (ECTA)
[QS][SS] அவரின் ஊழியராம் இஸ்ரயேலின்[SE][SS] வழிமரபே![SE][SS] அவர் தேர்ந்துகொண்ட[SE][SS] யாக்கோபின் புதல்வரே![SE][QE]
1 நாளாகமம் 16 : 14 (ECTA)
[QS][SS] அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்![SE][SS] அவரின் நீதித்தீர்ப்புகள்[SE][SS] உலகம் அனைத்திற்கும் உரியன.[SE][QE]
1 நாளாகமம் 16 : 15 (ECTA)
[QS][SS] அவரது உடன்படிக்கையை[SE][SS] என்றென்றும் நினைவில்[SE][SS] கொள்ளுங்கள்;[SE][SS] ஆயிரம் தலைமுறைக்கென[SE][SS] அவர் அளித்த வாக்குறுதியை[SE][SS] மறவாதீர்கள்![SE][QE]
1 நாளாகமம் 16 : 16 (ECTA)
[QS][SS] ஆபிரகாமுடன் அவர் செய்து[SE][SS] கொண்ட உடன்படிக்கையையும்[SE][SS] ஈசாக்குக்கு அவர்[SE][SS] ஆணையிட்டுக் கூறியதையும்[SE][SS] நினைவில் கொள்ளுங்கள்![SE][QE]
1 நாளாகமம் 16 : 17 (ECTA)
[QS][SS] யாக்கோபுக்கு நியமமாகவும்[SE][SS] இஸ்ரயேலுக்கு என்றுமுள[SE][SS] உடன்படிக்கையாகவும்[SE][SS] அதை அவர் உறுதிப்படுத்தினார். [* தொநூ 12:7; 26:3 ] [SE][QE]
1 நாளாகமம் 16 : 18 (ECTA)
[QS][SS] ‘கானான் நாட்டை உனக்கு[SE][SS] அளிப்பேன்; அப்பங்கே உனக்கு[SE][SS] உரிமைச்சொத்தாய் இருக்கும்’[SE][SS] என்றார் அவர். [* தொநூ 28:13 ] [SE][QE]
1 நாளாகமம் 16 : 19 (ECTA)
[QS][SS] அப்போது, அவர்கள்[SE][SS] மதிப்பிலும் எண்ணிக்கையிலும்[SE][SS] மிகக் குறைந்தவராய் இருந்தார்கள்;[SE][SS] அங்கே அந்நியராய் இருந்தார்கள். [* தொநூ 28:13 ] [SE][QE]
1 நாளாகமம் 16 : 20 (ECTA)
[QS][SS] ஒரு நாட்டினின்று மற்றொரு[SE][SS] நாட்டிற்கும் ஓர் அரசினின்று[SE][SS] மற்றொரு மக்களிடமும் அலைந்து[SE][SS] திரிந்தார்கள்.[SE][QE]
1 நாளாகமம் 16 : 21 (ECTA)
[QS][SS] யாரும் அவர்களை ஒடுக்குமாறு[SE][SS] அவர் விட்டுவிடவில்லை;[SE][SS] அவர்களின் பொருட்டு[SE][SS] மன்னர்களை அவர் கண்டித்தார்;[SE][QE]
1 நாளாகமம் 16 : 22 (ECTA)
[QS][SS] ‘நான் அருள்பொழிவு செய்தாரைத்[SE][SS] தொடாதீர்;[SE][SS] என் இறைவாக்கினர்க்குத்[SE][SS] தீங்கிழைக்காதீர்’, என்றார் அவர். [* தொநூ 20:3-7 ] [SE][QE]
1 நாளாகமம் 16 : 23 (ECTA)
[QS][SS] உலகெங்கும் வாழ்வோரே![SE][SS] ஆண்டவருக்குப் புகழ்பாடுங்கள்;[SE][SS] அவர் தரும் மீட்பை நாள்தோறும்[SE][SS] அறிவியுங்கள்! [* தொநூ 20:3-7 ] [SE][QE]
1 நாளாகமம் 16 : 24 (ECTA)
[QS][SS] பிற இனத்தார்க்கு அவரது[SE][SS] மாட்சியை எடுத்துரையுங்கள்;[SE][SS] அனைத்து மக்களினங்களுக்கும்[SE][SS] அவர்தம் வியத்தகு செயல்களை[SE][SS] அறிவியுங்கள்.[SE][QE]
1 நாளாகமம் 16 : 25 (ECTA)
[QS][SS] ஏனெனில், ஆண்டவர் மாட்சிமிக்கவர்;[SE][SS] பெரிதும் போற்றத்தக்கவர்;[SE][SS] தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக[SE][SS] அஞ்சுதற்கு உரியவர் அவரே![SE][QE]
1 நாளாகமம் 16 : 26 (ECTA)
[QS][SS] மக்களினங்களின் தெய்வங்கள்[SE][SS] அனைத்தும் வெறும் சிலைகளே![SE][SS] ஆண்டவரோ விண்ணுலகைப்[SE][SS] படைத்தவர்![SE][QE]
1 நாளாகமம் 16 : 27 (ECTA)
[QS][SS] மாட்சியும் புகழ்ச்சியும்[SE][SS] அவர் திருமுன் உள்ளன![SE][SS] ஆற்றலும் அக்களிப்பும்[SE][SS] அவரது திருத்தலத்தில் உள்ளன![SE][QE]
1 நாளாகமம் 16 : 28 (ECTA)
[QS][SS] மக்களினங்களின் குடும்பங்களே![SE][SS] ஆண்டவருக்குச் சாற்றுங்கள்![SE][SS] மாட்சியையும் ஆற்றலையும்[SE][SS] ஆண்டவருக்குச் சாற்றுங்கள்![SE][QE]
1 நாளாகமம் 16 : 29 (ECTA)
[QS][SS] ஆண்டவரின் பெயருக்குரிய[SE][SS] மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள்;[SE][SS] உணவுப் படையல் ஏந்தி[SE][SS] அவர்திருமுன் வாருங்கள்;[SE][SS] தூய கோலத்துடன் ஆண்டவரை[SE][SS] வழிபடுங்கள்![SE][QE]
1 நாளாகமம் 16 : 30 (ECTA)
[QS][SS] உலகெங்கும் வாழ்வோரே![SE][SS] அவர் திருமுன் நடுங்குங்கள்;[SE][SS] உலகம் உறுதியுடன்[SE][SS] நிலை கொண்டுள்ளது;[SE][SS] இனி அது அசைக்கப்படுவதில்லை.[SE][QE]
1 நாளாகமம் 16 : 31 (ECTA)
[QS][SS] விண்ணுலகம் மகிழ்வதாக![SE][SS] மண்ணுலகம் களிகூர்வதாக![SE][SS] ‘ஆண்டவர் ஆள்கின்றார்’ என்று[SE][SS] பிற இனத்தார்க்கு அறிவிப்பராக![SE][QE]
1 நாளாகமம் 16 : 32 (ECTA)
[QS][SS] கடலும் அதில் நிறைந்துள்ளனவும்[SE][SS] முழங்கட்டும்;[SE][SS] வயல்வெளியும் அதில் உள்ள[SE][SS] அனைத்தும் களிகூரட்டும்![SE][QE]
1 நாளாகமம் 16 : 33 (ECTA)
[QS][SS] அப்பொழுது காட்டு மரங்கள்[SE][SS] ஆண்டவர் திருமுன் மகிழ்ந்து[SE][SS] பாடட்டும்![SE][SS] ஏனெனில்,[SE][SS] அவர் மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு[SE][SS] வழங்க வருகின்றார்.[SE][QE]
1 நாளாகமம் 16 : 34 (ECTA)
[QS][SS] ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்![SE][SS] ஏனெனில், அவர் நல்லவர்;[SE][SS] என்றென்றும் உள்ளது அவரது[SE][SS] பேரன்பு![SE][QE]
1 நாளாகமம் 16 : 35 (ECTA)
[QS][SS] எங்கள் மீட்பராகிய கடவுளே![SE][SS] எங்களை விடுவித்தருளும்![SE][SS] வேற்று நாடுகளினின்று எங்களை[SE][SS] விடுவித்து ஒன்று சேர்த்தருளும்![SE][SS] அப்பொழுது, நாங்கள்[SE][SS] உமது திருப்பெயருக்கு[SE][SS] நன்றி செலுத்துவோம்; உம்மைப்[SE][SS] புகழ்வதில் பெருமை கொள்வோம்; [* 2 குறி 5:13; எஸ்ரா 3:11; திபா 100:5; 106:1; 107:1; 118:1; 136:1; எரே 33:11 ] [SE][QE]
1 நாளாகமம் 16 : 36 (ECTA)
[QS][SS] ‘இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர்[SE][SS] ஊழி ஊழியாகப் புகழப்[SE][SS] பெறுவாராக’ என்று சொல்லுங்கள்.[SE][SS] அப்பொழுது, மக்கள் அனைவரும் ‘ஆமென்’[SE][SS] என்று சொல்லி, ஆண்டவரைப் போற்றினர்.[SE][PE][QE]
1 நாளாகமம் 16 : 37 (ECTA)
{எருசலேம், கிபயோனில் வழிபாடு} [PS] பின்பு, தாவீது ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையின்முன் தொடர்ந்து எந்நாளும் பணிவிடை செய்வதற்காக, பேழைக்கு முன்பாக இருக்குமாறு ஆசாபையும் அவரின் உறவின் முறையாரையும் பணித்தார்.
1 நாளாகமம் 16 : 38 (ECTA)
ஓபேது ஏதோமும் அவரின் உறவின் முறையாளர்களான அறுபத்து எட்டுப்பேரும் அவர்களுக்கு உதவி செய்யவேண்டும். எதுத்தூணின் மகனான ஓபேது ஏதோமும், கோசாவும் வாயில் காவலராக நியமிக்கப்பட்டனர்.[PE]
1 நாளாகமம் 16 : 39 (ECTA)
[PS] குரு சாதோக்கும் அவர் உறவின் முறைக் குருக்களும் கிபயோன் தொழுகைமேட்டில் ஆண்டவரின் திருக்கூடாரத்தின்முன் பணிசெய்ய வேண்டும்.
1 நாளாகமம் 16 : 40 (ECTA)
இஸ்ரயேலுக்கு ஆண்டவர் கட்டளையாகத் தந்த திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி, காலையிலும் மாலையிலும் தவறாமல் எரி பலிபீடத்தின் மேல் அவர்கள் எரிபலிகளைச் செலுத்த வேண்டும்.
1 நாளாகமம் 16 : 41 (ECTA)
இவர்களோடு ஏமானையும் எதுத்தூனையும் பெயர் சொல்லித் தேர்ந்து கொள்ளப்பட்ட சிலரையும் ‘ஆண்டவரின் பேரன்பு என்றென்றும் உள்ளது’ என்றுரைத்து அவருக்கு நன்றி செலுத்துமாறு கட்டளையிட்டார்;
1 நாளாகமம் 16 : 42 (ECTA)
இவர்களோடு ஏமான், எதுத்தூன் ஆகியோரை எக்காளங்களையும், கைத்தாளங்களையும், இறைப்பாடலுக்குரிய இசைக் கருவிகளையும் இசைக்க ஏற்படுத்தினார்; எதுத்தூனின் புதல்வரை வாயில் காவலராக நியமித்தார்.[PE]
1 நாளாகமம் 16 : 43 (ECTA)
[PS] பின்னர், மக்கள் அனைவரும் தம் வீடு திரும்பினர்; தாவீதும் தம் வீட்டாருக்கு ஆசி வழங்க, வீடு திரும்பினார்.[PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43

BG:

Opacity:

Color:


Size:


Font: