1 நாளாகமம் 15 : 1 (ECTA)
உடன்படிக்கைப் பேழை எருசலேமுக்குக் கொண்டு வரப்படல் தாவீது நகரில் அவர் தமக்கு வீடுகளைக் கட்டினார். கடவுளின் பேழைக்கென ஓர் இடத்தில் ஏற்பாடு செய்து அதற்கென ஒரு கூடாரத்தையும் அமைத்தார்.
1 நாளாகமம் 15 : 2 (ECTA)
பின்னர், தாவீது, “கடவுளின் பேழையைச் சுமக்கவும், என்றென்றும் தமக்குப் பணிவிடை செய்யவும் ஆண்டவர் தேர்ந்துகொண்ட லேவியர் தவிர வேறொருவரும் கடவுளின் பேழையைச் சுமக்கலாகாது” என்றார். [* இச 10: 8 ]
1 நாளாகமம் 15 : 3 (ECTA)
ஆண்டவரின் பேழைக்கெனத் தாம் ஏற்பாடு செய்திருந்த இடத்துக்கு அதைக் கொண்டு வரும்படி தாவீது இஸ்ரயேலர் அனைவரையும் எருசலேமில் ஒன்று திரட்டினார்.
1 நாளாகமம் 15 : 4 (ECTA)
அவ்வாறே, தாவீது ஆரோனின் புதல்வரையும் லேவியரையும் ஒன்று திரட்டினார்.
1 நாளாகமம் 15 : 5 (ECTA)
கோகாத்தின் புதல்வருள் தலைவர் உரியேல், அவர் உறவின்முறையினர் நூற்றிருபது பேர்;
1 நாளாகமம் 15 : 6 (ECTA)
மெராரியின் புதல்வருள் தலைவர் அசாயா, அவர் உறவின்முறையினர் இருநூற்றிருபது பேர்;
1 நாளாகமம் 15 : 7 (ECTA)
கெர்சோம் புதல்வருள், தலைவர் யோவேல், அவன் உறவின்முறையினர் நூற்று முப்பது பேர்;
1 நாளாகமம் 15 : 8 (ECTA)
எலிசாப்பான் புதல்வருள் தலைவர் செமாயா, அவர் உறவின்முறையினர் இருநூறு பேர்;
1 நாளாகமம் 15 : 9 (ECTA)
எலிசாப்பான் புதல்வருள் தலைவர் எலியேல், அவர் உறவின்முறையினர் எண்பது பேர்;
1 நாளாகமம் 15 : 10 (ECTA)
உசியேல் புதல்வருள் தலைவர் அம்மினதாபு, அவர் உறவின்முறையினர் நூற்றுப் பன்னிரண்டுபேர்.
1 நாளாகமம் 15 : 11 (ECTA)
தாவீது, குருக்களாகிய சாதோக்கு அபியத்தார் ஆகியோரையும் லேவியராகிய உரியேல், அசாயா, யோவேல், செமாயா, எலியேல், அம்மினதாபு ஆகியோரையும் வரவழைத்தார்.
1 நாளாகமம் 15 : 12 (ECTA)
தாவீது அவர்களை நோக்கி, “நீங்கள் லேவியரின் மூதாதையர் வீட்டுத் தலைவர்கள்; ஆண்டவராகிய கடவுளின் பேழைக்கென நான் ஏற்பாடு செய்துள்ள இடத்திற்கு அதைக் கொண்டுவரும்படி நீங்களும் உங்கள் உறவின்முறையினரும் உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.
1 நாளாகமம் 15 : 13 (ECTA)
முன்பு ஒருமுறை நீங்கள் சுமக்காததால் நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குள் அழிவு உண்டாகச் செய்தார். ஏனெனில், நாம் அவர் கட்டளைப்படி செயற்படாமற் போனோம்” என்றார்.
1 நாளாகமம் 15 : 14 (ECTA)
எனவே, குருக்களும் லேவியரும், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பேழையைக் கொண்டு வரத் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டார்கள்.
1 நாளாகமம் 15 : 15 (ECTA)
பின்பு, லேவியர், மோசேயின் கட்டளையாகத் தந்த ஆண்டவரது வாக்கின்படி, கடவுளின் பேழையை அதன் தண்டுகளால் தங்கள் தோள்மேல் சுமந்து வந்தனர். * விப 25:14..
1 நாளாகமம் 15 : 16 (ECTA)
தாவீது, லேவியரின் தலைவர்களிடம் தங்கள் உறவின்முறையிலிருந்து தம்புரு, சுரமண்டலம், கைத்தாளம் ஆகிய கருவிகளை இசைத்து மகிழ்ச்சி ஒலி எழுப்பக்கூடிய பாடகரை நியமிக்கக் கட்டளையிட்டார்.
1 நாளாகமம் 15 : 17 (ECTA)
எனவே, லேவியர் யோவேலின் மகன் ஏமானையும், அவர் உறவின்முறையினருள் பெராக்கியாவின் புதல்வர் ஆசாபையும், மெராரியின் மைந்தரான அவர்கள் உறவின் முறையினருள் கூசயாவின் மகன் ஏத்தானையும்,
1 நாளாகமம் 15 : 18 (ECTA)
அவர்களோடு இரண்டாம் நிலையில், அவர்கள் உறவின்முறையினர் செக்கரியா, யகசியேல், செமிராமோத்து, எகியேல், உன்னி, எலியாபு, பெனாயா, மகசேயா, மத்தித்தியா, எலிப்பலேகு, மிக்னேயா மற்றும் வாயில் காவலரான ஓபேது, ஏதோம், எயியேல் ஆகியோரையும் நியமித்தனர்.
1 நாளாகமம் 15 : 19 (ECTA)
பாடகரான ஏமான், ஆசாபு, ஏத்தான் ஆகியோர் வெண்கலக் கைத்தாளங்களை ஒலிக்கச் செய்வார்கள்.
1 நாளாகமம் 15 : 20 (ECTA)
செக்கரியா, அசியேல், செமிரா மோத்து, எகியேல், உன்னி, எலியாபு, மகசேயா, பெனாயா, ஆகியோர் ‘அலமோத்து’ இசையில் தம்புருகளை வாசிப்பவர்கள்.
1 நாளாகமம் 15 : 21 (ECTA)
மத்தித்தியா, எலிப்பலேகு, மிக்னேயா, ஓபேது-ஏதோம், எயியேல், அசசியா ஆகியோர் உச்சத்தொனியில் சுரமண்டலங்கள் வாசிப்பவர்கள்.
1 நாளாகமம் 15 : 22 (ECTA)
லேவியர் தலைவர் கெனனியா இசையில் தேர்ச்சி பெற்றவராகையால், அவர் இசை கற்பிக்கவேண்டும்.
1 நாளாகமம் 15 : 23 (ECTA)
பெரக்கியாவும் எல்கானாவும் பேழையின் காவலர்.
1 நாளாகமம் 15 : 24 (ECTA)
குருக்களான செபனியா, யோசபாத்து, நெத்தனியேல், அமாசாய், செக்கரியா, பெனாயா, எலியேசர் ஆகியோர் கடவுளுடைய பேழைக்கு முன்பாக எக்காளங்களை ஊதியவர்கள். ஓபேது ஏதோமும், எகியாவும் பேழைக்குக் காவலாளர்.
1 நாளாகமம் 15 : 25 (ECTA)
உடன்படிக்கைப் பேழையை எருசலேமுக்கு எடுத்துச் செல்லல்
(2 சாமு 6:12-22)
இவ்வாறு, தாவீதும் இஸ்ரயேலின் பெரியோரும் ஆயிரவர் தலைவரும் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை ஓபேது-ஏதோம் வீட்டிலிருந்து மகிழ்ச்சியுடன் கொண்டு வரச் சென்றார்கள்.
1 நாளாகமம் 15 : 26 (ECTA)
ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைச் சுமந்த லேவியருக்குக் கடவுள் உதவி செய்தபடியால், அவர்கள் அவருக்கு ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கிடாய்களையும் பலி செலுத்தினர்.
1 நாளாகமம் 15 : 27 (ECTA)
தாவீதும், பேழையைச் சுமந்த லேவியர் எல்லாரும், பாடகரும், பாடகர் தலைவரான கெனனியாவும், மெல்லிய நார்ப்பட்டு அங்கி அணிந்திருந்தனர். மேலும், தாவீது நார்ப்பட்டாலான ஏபோது அணிந்திருந்தார்.
1 நாளாகமம் 15 : 28 (ECTA)
இஸ்ரயேல் அனைவரும் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை ஆர்ப்பரிப்போடும், இசைக்கொம்பு, எக்காளம். கைத்தாள ஒலியோடும், தம்புரு சுரமண்டல இசையோடும் கொண்டு வந்தார்கள்.
1 நாளாகமம் 15 : 29 (ECTA)
ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழை தாவீதின் நகரை அடைந்த போது, சவுலின் புதல்வி மீக்கால் சன்னல் வழியாக எட்டிப்பார்த்தாள். அப்பொழுது, தாவீது அரசர் அக்களித்து ஆடிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரைத் தன்னுள்ளத்தில் இகழ்ந்தாள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29