தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
உன்னதப்பாட்டு
1. தலைமகன்: இரண்டு சேனைகளுக்கிடையில் ஆடும் நாட்டியத்தைப் போல் சூலமித்தியை நீங்கள் ஏன் பார்க்க வேண்டும்? அரசிளம் கன்னிப் பென்னே! மிதியடியணிந்த உன் மெல்லடிகள் எவ்வளவு அழகுள்ளவை! வளைந்த உன் இடை கைதேர்ந்த பொற்கொல்லனால் செய்யப்பட்ட கழுத்தணிக்கு ஒப்பானது.
2. உன் கொப்பூழ் கலப்பு இரசம் குறையாதிருக்கும் கடைந்தெடுத்த கலசம் போன்றது; உன் வயிறு லீலிகள் சூழ்ந்திருக்கும் கோதுமை மணியின் குவியலை ஒக்கும்.
3. உன் கொங்கைகள் இரண்டும் இரண்டு இளமான்கள், வெளிமான் ஈன்ற இரட்டைக் கன்றுகள்.
4. உன் கழுத்து யானைத் தந்தத்தாலான கோபுரம், பாத்- ராபிம் வாயிலின் அருகே எசெபோனிலிருக்கும் குளங்களையொக்கும் உன் கண்கள். உன் மூக்கு தமஸ்கு நகரை நோக்கியிருக்கும் லீபானின் கோபுரத்துக்கு நிகரானது.
5. உன் தலை கர்மேல் மலை போல் நிமிர்ந்துள்ளது, உன் கூந்தல் செம்பட்டாடையொக்கும், அந்தப் புரிகுழலில் அரசன் ஒருவன் சிறைப்பட்டான்.
6. உள்ளத்திற்கு இன்பந் தரும் அன்பே, நீ எத்துணை அழகும் இனிமையும் வாய்ந்தவள்!
7. உனது வளர்த்தி ஓங்கிய பனையாம், உன் முலைகள் இரண்டும் அதன் குலைகளாம்.
8. பனை மரமேறி நான் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்; உன் முலைகள் திராட்சைக் குலைகள் போன்றவை, உன் மூச்சு கிக்சிலிப் பழங்கள் போல் இனிய மணமுள்ளது,
9. உன் பேச்சு சுவை மிகுந்த திராட்சை ரசம். தலைமகள்: அந்த இரசம் என் காதலர் குடிப்பதற்குத் தகுதியானது; உதடுகளுக்கும் பற்களுக்கும் நடுவில் நின்று சுவை தருகிறது.
10. நான் என் காதலர்க்குரியவள், அவர் ஆர்வமெல்லாம் என் மேலே.
11. என் காதலரே, வாரும், வயல்களுக்குப் போவோம்; சிற்றூர்களில் இராத் தங்குவோம்.
12. வைகறையில் துயிலெழுந்து நாம் திராட்சைத் தோட்டத்திற்குப் போவோம்; திராட்சைக் கொடிகள் பூத்தனவா என்றும், திராட்சைப் பூக்கள் மலர்ந்தனவா என்றும், மாதுளஞ் செடிகள் பூ விட்டனவா என்றும் பார்ப்போம்; அங்கே உம் மேல் என் காதலைப் பொழிவேன்.
13. காதற் பழங்களின் மணம் கமழுகின்றது, புதியனவும் பழையனவுமான சிறந்த கணிகள் நம் வீட்டு வாயிலண்டையில் இருக்கின்றன; என் காதலரே, உமக்கென்றே அவற்றைச் சேர்த்து வைத்தேன்.
மொத்தம் 8 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 7 / 8
1 2 3 4 5 6 7 8
1 தலைமகன்: இரண்டு சேனைகளுக்கிடையில் ஆடும் நாட்டியத்தைப் போல் சூலமித்தியை நீங்கள் ஏன் பார்க்க வேண்டும்? அரசிளம் கன்னிப் பென்னே! மிதியடியணிந்த உன் மெல்லடிகள் எவ்வளவு அழகுள்ளவை! வளைந்த உன் இடை கைதேர்ந்த பொற்கொல்லனால் செய்யப்பட்ட கழுத்தணிக்கு ஒப்பானது. 2 உன் கொப்பூழ் கலப்பு இரசம் குறையாதிருக்கும் கடைந்தெடுத்த கலசம் போன்றது; உன் வயிறு லீலிகள் சூழ்ந்திருக்கும் கோதுமை மணியின் குவியலை ஒக்கும். 3 உன் கொங்கைகள் இரண்டும் இரண்டு இளமான்கள், வெளிமான் ஈன்ற இரட்டைக் கன்றுகள். 4 உன் கழுத்து யானைத் தந்தத்தாலான கோபுரம், பாத்- ராபிம் வாயிலின் அருகே எசெபோனிலிருக்கும் குளங்களையொக்கும் உன் கண்கள். உன் மூக்கு தமஸ்கு நகரை நோக்கியிருக்கும் லீபானின் கோபுரத்துக்கு நிகரானது. 5 உன் தலை கர்மேல் மலை போல் நிமிர்ந்துள்ளது, உன் கூந்தல் செம்பட்டாடையொக்கும், அந்தப் புரிகுழலில் அரசன் ஒருவன் சிறைப்பட்டான். 6 உள்ளத்திற்கு இன்பந் தரும் அன்பே, நீ எத்துணை அழகும் இனிமையும் வாய்ந்தவள்! 7 உனது வளர்த்தி ஓங்கிய பனையாம், உன் முலைகள் இரண்டும் அதன் குலைகளாம். 8 பனை மரமேறி நான் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்; உன் முலைகள் திராட்சைக் குலைகள் போன்றவை, உன் மூச்சு கிக்சிலிப் பழங்கள் போல் இனிய மணமுள்ளது, 9 உன் பேச்சு சுவை மிகுந்த திராட்சை ரசம். தலைமகள்: அந்த இரசம் என் காதலர் குடிப்பதற்குத் தகுதியானது; உதடுகளுக்கும் பற்களுக்கும் நடுவில் நின்று சுவை தருகிறது. 10 நான் என் காதலர்க்குரியவள், அவர் ஆர்வமெல்லாம் என் மேலே. 11 என் காதலரே, வாரும், வயல்களுக்குப் போவோம்; சிற்றூர்களில் இராத் தங்குவோம். 12 வைகறையில் துயிலெழுந்து நாம் திராட்சைத் தோட்டத்திற்குப் போவோம்; திராட்சைக் கொடிகள் பூத்தனவா என்றும், திராட்சைப் பூக்கள் மலர்ந்தனவா என்றும், மாதுளஞ் செடிகள் பூ விட்டனவா என்றும் பார்ப்போம்; அங்கே உம் மேல் என் காதலைப் பொழிவேன். 13 காதற் பழங்களின் மணம் கமழுகின்றது, புதியனவும் பழையனவுமான சிறந்த கணிகள் நம் வீட்டு வாயிலண்டையில் இருக்கின்றன; என் காதலரே, உமக்கென்றே அவற்றைச் சேர்த்து வைத்தேன்.
மொத்தம் 8 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 7 / 8
1 2 3 4 5 6 7 8
×

Alert

×

Tamil Letters Keypad References