தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. நெஞ்சே, நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக! ஆண்டவரே, என் இறைவா, நீர் எத்துணை உயர்ந்தவர்!
2. மாண்பும் மகத்துவமும் நீர் அணிந்திருக்கிறீர்: ஒளியை நீர் போர்வையாகக் கொண்டுள்ளீர்; வானத்தை நீர் கூடாரம் போல் விரித்திருக்கிறீர்.
3. வெள்ளத்தின்மேல் உம் உறைவிடத்தை அமைத்திருக்கிறீர்; மேகங்களை நீர் தேராகக் கொண்டிருக்கிறீர்: காற்றை நீர் இறக்கை எனக் கொண்டு செல்கிறீர்.
4. காற்றே உம் தூதர்கள்: எரியும் நெருப்பே உம் ஊழியர்.
5. பூமியை நீர் அடித்தளத்தின்மேல் அமைத்தீர்: அது எந்நாளும் அசையவே அசையாது.
6. கடல்களை அதற்கு உடையெனத் தந்திருக்கிறீர்: வெள்ளப்பெருக்கு மலைகளையும் மூடியிருக்கும்படி செய்தீர்.
7. நீர் கண்டிக்கவே அவை விலகி ஓடின: இடிபோல் நீர் முழங்க அவை அச்சத்தால் மயங்கின.
8. நீர் நியமித்த இடத்தில் மலைகள் உயர்ந்து எழுந்தன: பள்ளத்தாக்குகள் பணிந்து இறங்கின.
9. நீர் குறித்த எல்லையை அவைகள் கடக்காமல் இருக்கச் செய்தீர்: மீளவும் அவை பூமியை மூழ்கடிக்காதபடி இவ்வாறு செய்தீர்.
10. நீரூற்றுகள் ஆறுகளாய்ப் பெருக்கெடுக்கக் கட்டளை இடுகிறீர்: அலைகளிடையே அவைகளை ஓடச் செய்கிறீர்.
11. வயல்வெளிகளில் வாழும் விலங்குகள் தாகம் தீர்க்கத் தண்ணீர் கொடுத்தீர்: காட்டுக் கழுதைகள் தங்கள் தாகத்தை அங்கே தான் தீர்த்து கொள்கின்றன.
12. அவற்றினருகே தான் வானத்துப் பறவைகள் குடியிருக்கின்றன: மரக்கிளைகளிடையே இன்னிசை எழுப்புகின்றன.
13. தம் உள்ளத்திடத்திலிருந்து மலைகள் மீது நீர் பாயச் செய்கிறீர்: உம் செயல்களின் பயனால் மாநிலம் நிறைவுறுகின்றது.
14. கால்நடைகள் உண்ணப் புல் முளைக்கச் செய்கிறீர்: மனிதருக்குப் பயன்படப் பயிர் பச்சைகள் வளரச் செய்கிறீர். இவ்வாறு நிலத்தினின்று மனிதர் உணவுப் பொருள் விளையச் செய்யவும்.
15. மனிதன் மகிழ்ச்சியுற, உள்ளம் மகிழச் செய்யும் திராட்சை இரசம் உண்டாகச் செய்யவும் முடிந்தது: முகத்துக்கு களை தரும் எண்ணெயும், உள்ளத்திற்கு உரம் தரும் உணவையும் அவன் விளையச் செய்கிறான்.
16. ஆண்டவர் நட்ட மரங்களுக்கு நிறைய நீர் கிடைக்கிறது: லீபானில் அவர் நட்ட கேதுரு மரங்கள் செழித்து வளருகின்றன.
17. அங்கே பறவைகள் தம் கூடுகளைக் கட்டுகின்றன: தேவதாரு மரங்கள் கொக்குகளின் குடியிருப்பாயிருக்கின்றன.
18. உயர்ந்த மலைகள் மலை ஆடுகளுக்கும், கல் மலைகள் குழிமுயல்களுக்கும் அடைக்கலம் தருகின்றன.
19. காலத்தைக் கணிக்க நிலவை நீர் அமைத்தீர்: கதிரவன் தான் மறையும் நேரத்தை அறிந்திருக்கிறான்.
20. இருள் படர்ந்து இரவு தோன்றச் செய்கிறீர்: அப்போது காட்டிலுள்ள விலங்குகளெல்லாம் நடமாடும்.
21. சிங்கக் குட்டிகள் உணவைத் தேடியலையும்: கடவுளிடமிருந்து தம் உணவை எதிர்பார்க்கும்.
22. காலையில் கதிரவன் எழ, அவை தம் இருப்பிடங்களுக்குப் போய் மறைந்து கொள்கின்றன.
23. அப்போது மனிதன் மாலை மட்டும் வேலை செய்யப் புறப்படுகிறான்.
24. ஆண்டவரே, உம் வேலைப்பாடுகள், எத்தனை, எத்தனை! அனைத்தையும் நீர் ஞானத்தோடு செய்து முடித்தீர்: உம் படைப்புகளால் நிறைந்துள்ளது வையகம்.
25. இதோ, பரந்து விரிந்து கிடக்கும் கடல்கள்: அவற்றில் சிறியனவும் பெரியனவுமாக வாழும் உயிரினங்கள் எண்ணிறந்தன.
26. அவற்றில் கப்பல்கள் ஓடுகின்றன; அவற்றில் விளையாடத் திமிலங்களையும் நீர் படைத்தீர்.
27. இவையெல்லாம் உம்மையே நம்பியிருக்கின்றன: தக்க காலத்தில் உணவளிப்பீர் என்று எதிர்பார்க்கின்றன.
28. நீர் கொடுக்க, அவை பெற்றுக்கொள்கின்றன: நீர் உமது கையைத் திறக்க அவை நலன்களால் நிறைவுறுகின்றன.
29. உம் முகத்தை நீர் மறைத்துக் கொண்டால், அவை தத்தளிக்கும். அவற்றின் மூச்சை நீர் நிறுத்தி விட்டால் அவை மடிந்து மறுபடியும் மண்ணாகி விடும்.
30. உமது ஆவியை நீர் அனுப்பினால் அவை படைக்கப்படும்: உலகனைத்தும் புத்துயிர் பெறும்.
31. ஆண்டவருடைய மாட்சிமை என்றென்றும் விளங்குவதாக; தம் படைப்புகளைக் குறித்து ஆண்டவர் மகிழ்வாராக.
32. பூமியின் மீது அவர் தம் பார்வையைத் திருப்ப, அது அதிரும்: மலைகளை அவர் தொட, அவை புகை கக்கும்.
33. உயிருள்ள வரை நான் ஆண்டவரைப் புகழ்ந்து பாடுவேன்: வாழ்நாளெல்லாம் என் இறைவனுக்குப் புகழ் பாடுவேன்.
34. என் புகழுரை அவருக்கு இனியதாய் இருப்பதாக: நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன்.
35. பாவிகள் பாரினின்று எடுபடுவார்களாக; தீயோர்கள் இனி இல்லாதொழிவார்களாக: நெஞ்சே ஆண்டவரை நீ வாழ்த்துவாயாக!

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 104 of Total Chapters 150
சங்கீதம் 104:39

×

Alert

×

tamil Letters Keypad References