தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
லேவியராகமம்
1. மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2. விளக்குகள் இடைவிடாமல் எரிந்து கொண்டிருக்கும்படி மிகச் சுத்தமும் தெளிவுமுள்ள ஒலிவ எண்ணெயை உங்களிடம் கொண்டு வர வேண்டுமென்று இஸ்ராயேல் மக்களுக்குக் கட்டளையிடு.
3. உடன்படிக்கைக் கூடாரத்தில் சாட்சியத் திரைக்கு வெளிப்புறமாக ஆரோன் அவற்றை எப்பொழுதும் மாலை முதல் காலைவரை எரியும்படி ஆண்டவர் திருமுன் ஏற்றக் கடவான். இது உங்கள் தலைமுறை தோறும் செய்யவேண்டிய நித்திய சட்டமாம்.
4. அவை ஆண்டவர் முன்னிலையில் எரியும்படி மிகத்தூய்மையான கிளை விளக்கின் மேல் எப்பொழுதும் வைக்கப்படும்.
5. மேலும், மிருதுவான மாவை எடுத்து, அதைப் பன்னிரண்டு அப்பங்களாகச் சுடுவாயாக. ஒவ்வொரு அப்பமும் ( மரக்காலிலே ) பத்தில் இரண்டுபங்கு மாவினால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
6. அவற்றை நீ ஆண்டவர் திருமுன் தூய்மையான மேசையின் மீது பக்கத்திற்கு ஆறாக இருபக்கமும் அடுக்கிவைப்பாய்.
7. அவ்வப்பங்கள் ஆண்டவருக்குச் செய்யப்பட்ட காணிக்கையின் நினைவுச் சின்னமாய் இருக்கத் தக்கனவாய் அவற்றின் மீது மிகவும் சத்தமான தூபவகைகளைப் போடக் கடவாய்.
8. நித்திய உடன்படிக்கையாக இஸ்ராயேல் மக்களிடமிருந்து பெற்றுக் கொண்ட அந்த அப்பங்களை ஓய்வு நாள் தோறும் ஆண்டவர் முன்னிலையில் மாற்றக்கடவாய்.
9. அவை ஆரோனையும் அவன் புதல்வரையும் சேரும். அவர்கள் அவற்றைப் பரிசுத்த இடத்தில் உண்ணக்கடவார்கள். ஏனென்றால், ஆண்டவருக்குச் செலுத்தப்படும் பலிகளிலே மிகவும் பரிசுத்தமான அது நித்திய உரிமையாக அவர்களுடையதாய் இருக்கும் என்றார்.
10. அக்காலத்தில் இஸ்ராயேல் இனத்தைச் சார்ந்த ஒரு பெண்ணுக்கும் இஸ்ராயேலரோடு குடியிருந்த எகிப்திய ஆடவன் ஒருவனுக்கும் பிறந்தவன் வெளியே வந்து, பாளையத்திலே ஓர் இஸ்ராயேலனோடு சண்டையிட்டு,
11. ஆண்டவருடைய ( திருப் ) பெயரையும் ஆண்டவரையும் பழித்துப் பேசினான். அவனை மோயீசனிடம் கொண்டுவந்தார்கள். ( அவனுடைய தாயின் பெயர் சலுமித், அவள்தான் கோத்திரத்தானான தாபிரியின் புதல்வி.
12. ஆண்டவருடைய திருவுளத்தை அறியும்வரை அவனைக் காவலில் வைத்தார்கள்.
13. அப்பொழுது ஆண்டவர் மோயீசனை நோக்கி:
14. இந்தத் தெய்வ நிந்தனையாளனைப் பாளையத்துக்கு வெளியே கொண்டு போங்கள். அவன் பழித்துப் பேசின வார்த்தையைக் கேட்டவர்கள் அனைவரும் தங்கள் கைகளை அவன் தலையின்மேல் வைப்பார்கள். பிறகு சபையார் யாவரும் அவனைக் கல்லாலெறிந்து சாகடிக்கக் கடவார்கள்.
15. மேலும் நீ இஸ்ராயேல் மக்களுக்குச் சொல்ல வேண்டியதாவது: தன் கடவுளைப் பழிப்பவன் தன் பாவத்தைச் சுமந்து கொள்வான்.
16. ஆண்டவருடைய பெயரைப் பழிப்பவன் கொலை செய்யப்படுவான். அவன் குடிமகனாயினும் சரி, அந்நியனாயினும் சரி சபையார் எல்லாரும் அவனைக் கல்லால் எறியவேண்டும். ஆண்டவருடைய பெயரைப் பழித்தவன் கொலை செய்யப்படுவான்.
17. ஒரு மனிதனைக் கொலை செய்தவன் கொலை செய்யப்படுவான்.
18. ஒரு விலங்கைக் கொன்றவன் பதிலுக்குக் வேறொன்றைக் கொடுக்கக்கடவான். அதாவது: விலங்குக்கு விலங்கு கொடுத்து ஈடுசெய்யக்கடவான்.
19. தன் ஊராரில் ஒருவனுக்கு எவன் தீங்கிழைத்தானே, அவன் செய்தபடியே அவனுக்குச் செய்யப்படும்.
20. முறிவுக்கு முறிவு, கண்ணுக்குக் கண், பல்லுக்குப்பல்: ஒருவன் தன் அயலானுக்கு எவ்விதத் தீமையைச் செய்தானோ அவ்விதத் தீமையே அவனுக்கும் செய்யப்படும்.
21. விலங்கைக் கொன்றவன் வேறொன்றைக் கொடுப்பான். மனிதனைக் கொன்றவனோ கொலை செய்யப்படுவான்.
22. உங்களிலே அந்நியனுக்கும் குடிமகனுக்கும் ஒரே நியாயம் இருக்கவேண்டும். ஏனென்றால், நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்று திருவுளம்பற்றினார்.
23. அவ்விதமே மோயீசன் இஸ்ராயேல் மக்களோடு பேசின பின், ஆண்டவரைப் பழித்தவனைப் பாளையத்திற்கு வெளியே கொண்டு போய்க் கல்லாலெறிந்து கொன்றனர். ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே இஸ்ராயேல் மக்கள் செய்தனர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 27 Chapters, Current Chapter 24 of Total Chapters 27
லேவியராகமம் 24:34

×

Alert

×

tamil Letters Keypad References