தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
லேவியராகமம்
1. மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2. ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் இஸ்ராயேல் மக்கள் அனைவருக்கும் நீ ஆண்டவருடைய கட்டளைப்படி சொல்ல வேண்டியதாவது:
3. இஸ்ராயேல் குடும்பத்தாரில் எவனேனும், பாளையத்திற்குள்ளாவது பாளையத்திற்கு வெளியேயாவது, மாட்டையோ, செம்மறியாட்டையோ, வெள்ளாட்டையோ கொன்று,
4. அவற்றைச் காட்சியக் கூடார வாயிலுக்கு முன்பாக ஆண்டவருக்குச் செலுத்தும்படி கொண்டு வராதிருந்தால், அது அவனுக்கு இரத்தப் பலியாக இருக்கும். அந்த மனிதன் இரத்தம் சிந்திக் கொலை செய்தவனைப் போலத்தன் இனத்தினின்று விலக்குண்டு போகக் கடவான்.
5. ஆகையால், இஸ்ராயேல் மக்கள் எந்தப் பலி மிருகத்தையும் வெளியே அடித்திருப்பார்களாயின், அவற்றைக் கூடாரவாயிலின் முன் ஆண்டவருக்கு அளிக்கும் பொருட்டும், சமாதானப் பலிகளாகச் செலுத்தும் படிக்கும் அதைக் குருவிடம் ஒப்புவிக்கக்கடவார்கள்.
6. குரு சாட்சியக் கூடார வாயிலிலிருக்கிற ஆண்டவருடைய பலிபீடத்தின் மேல் இரத்தத்தை ஊற்றி, கொழுப்பை ஆண்டவருக்கு நறுமணமாக எரிக்கக்கடவார்.
7. ஆகையால், அவர்கள் எந்தப் பேய்களோடு கள்ளமாய்த் திரிந்தார்களோ அவைகளுக்குத் தங்கள் பலிகளை இனிச் செலுத்தாதிருப்பார்களாக. இது அவர்களுக்கும் அவர்கள் வழித்தோன்றல்களுக்கும் நித்திய கட்டளையாயிருக்கும்.
8. மேலும், நீ அவர்களை நோக்கி: இஸ்ராயேல் சபையாரிலும் உங்கள் நடுவே வாழ்கிற அந்நியருள்ளும், தகனப்பலி முதலியவைகளை இட்டு,
9. அவற்றைச் சாட்சியக் கூடார வாயிலண்டை கொண்டுவராதிருப்பவன் தன் இனத்திலிருந்து விலக்குண்டு போகக்கடவான்.
10. இஸ்ராயேல் குடும்பத்தாரிலும் அவர்களிடையே வாழ்கிற அந்நியர்களிலும் எவனேனும் இரத்தத்தைக் குடித்திருந்தால், அவன் ஆன்மாவிற்கு எதிராக நாம் நமது முகத்தை நிலைப்படுத்தி, அவனைத் தன் இனத்திலிருந்து விலக்குண்டு போகச் செய்வோம்.
11. ஏனென்றால், உடலின் உயிர் இரத்தத்தில் அமைந்துள்ளது. இதை நாம் பலிபீடத்தின் மேல் உங்கள் ஆன்மாக்களுக்காகப் பாவப்பரிகாரம் செய்யும்படிக்கும், உங்கள் ஆன்மாவின் சுத்திகரத்திற்கு உதவும் படிக்கும் அல்லவோ உங்களுக்குத் தந்தருளினோம் ?
12. அதனால், நாம் இஸ்ராயேல் மக்களை நோக்கி: உங்களுள்ளும் உங்களிடையே வாழ்கிற அந்நியர்களுள்ளும் ஒருவனும் இரத்தத்தைக் குடிக்க வேண்டாமென்று திருவுளம் பற்றினோம்.
13. இஸ்ராயேல் மக்களிலும் உங்களிடையே வாழ்கிற அந்நியரிலும் எவனேனும் வேட்டையாடி அல்லது கண்ணிவைத்து, உண்ணத்தக்க ஒரு மிருகத்தையாவது பறவையையாவது பிடித்தால், அவன் அதன் இரத்தத்தைச் சிந்தி மண்ணைக்கொண்டு அதை மூடக்கடவான்.
14. ஏனென்றால், உடலின் உயிர் இரத்தத்தில் உள்ளது. ஆதலால், நாம் இஸ்ராயேல் மக்களை நோக்கி: உடலின் உயிர் இரத்தத்தினுள் அமைந்திருக்கின்றது. எனவே, நீங்கள் எந்த உடலிலுமுள்ள இரத்தத்தைக் குடிக்க வேண்டாம்; அதைக் குடிப்பவன் கொலை செய்யப்படுவான் என்று சொன்னோம்.
15. குடிமக்களாயினும் அந்நியர்களாயினும் தானாய்ச் செத்ததையாவது கொடிய மிருகத்தால் கொல்லப்பட்டதையாவது உண்பவன் தன் ஆடைகளைத் தோய்த்துத் தானும் தண்ணீரிலே குளித்து மாலைவரை தீட்டுப்பட்டவனாய் இருப்பான். இதை அவன் பின்பற்றினால் சுத்தமாவான்.
16. ஆனால், அவன் குளிக்காமலும் தன் ஆடைகளைத் தோய்க்காமலும் இருப்பானாயின், தன் அக்கிரமத்தைச் சுமந்துகொள்வான் என்று சொல்வாய் என்றார்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 27 Chapters, Current Chapter 17 of Total Chapters 27
லேவியராகமம் 17:51

×

Alert

×

tamil Letters Keypad References