தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
யோபு
1. அதன் பின்னர், யோபு பேசத் தொடங்கி, தாம் பிறந்த நாளைச் சபிக்கலானார்.
2. யோபு சொன்னது இதுவே:
3. நான் பிறந்த அந்த நாள் அழிக! 'ஆண் குழந்தையொன்று கருவாகியுள்ளது' என்று சொல்லிய அந்த இரவு தொலைக!
4. அந்த நாள் இருண்டு போகக்கடவது! மேலிருந்து கடவுள் அதைக் கண்ணோக்காது விடுக! ஒளியும் அதன் மேல் வீசாதிருப்பதாக!
5. இருட்டும் காரிருளும் அந்நாளைக் கவ்வி கொள்வதாக! கார் மேகங்கள் அதன் மேல் கவிந்து கொள்க! இருள் சூழச் செய்யும் அனைத்தும் அதை அச்சுறுத்துக!
6. அந்த இரவு- பேயிருட்டு அதனைப் பீடிக்கட்டும்! அவ்விரவு ஆண்டுக் கணக்கின் நாட்களுடன் எண்ணப்படாதொழிக! மாதங்களின் எண்ணிக்கையில் சேர்க்கப்படாதொழிக!
7. ஆம், அந்த இரவு துயர்நிறைந்த இரவாய் இருக்கட்டும்! மகிழ்ச்சிகுரிய குரல் அன்றிரவு கேட்கப்படாதிருக்கட்டும்!
8. லேவீயாத்தானை எழுப்பி விடும் திறன் வாய்ந்தவர்களும், நாளைச் சபிக்கிறவர்களும் அந்த இரவைச் சபிப்பார்களாக!
9. அவ்விரவின் விடியற்கால விண்மீன்கள் இருண்டொழிக! ஒளியைக் காண ஏங்கினாலும், காணாது போகக்கடவது! வைகறையின் கண்விழிப்பையும் காணாதொழிக!
10. ஏனெனில் என் தாய் வயிற்றின் கதவுகளை அவ்விரவு அடைக்கவில்லை; என் கண்கள் காணும் தீமையை மறைக்கவுமில்லை.
11. பிறக்கும் போதே நான் ஏன் சாகாமற் போனேன்? கருப்பையினின்று வெளிப்பட்ட உடனேயே நான் அழிந்து போயிருக்கக் கூடாதா!
12. தாயின் மடி என்னை ஏந்திக் கொண்டதேன்? நான் பால்குடிக்க முலைகள் இருந்ததேன்?
13. இதெல்லாம் இல்லாதிருந்தால் இப்போது நான் அமைதியாய்ப் படுத்து உறங்கி இளைப்பாறியிருப்பேன்;
14. பாழடைந்தவற்றைத் தங்களுக்கெனக் கட்டியெழுப்பிய உலகத்தின் மன்னர்கள் மந்திரிகளோடும்,
15. பொன்னைத் தேடிச் சேர்த்துத் தங்கள் வீடுகளை வெள்ளியால் நிரப்பிய தலைவர்களோடும் இளைப்பாறியிருப்பேன்.
16. அல்லது வெளிப்படாத முதிராப் பிண்டம் போலும், ஒருபோதும் ஒளியைக் காணாக் குழந்தைகள் போலும் இருந்திருப்பேனே!
17. அங்கே கொடியவர்கள் தரும் தொல்லை முடிவுறும், களைப்புற்றோர் அங்கே இளைப்பாறுவர்.
18. சிறைப்பட்டோர் ஆங்கே வருத்தமின்றிக் கூடியிருப்பர், சிறையதிகாரிகளின் குரல் அவர்களுக்குக் கேட்பதில்லை.
19. சிறியவனும் பெரியவனும் அங்கே இருக்கிறார்கள்; அடிமை தன் எசமானுக்குக் கீழ்ப்பட்டவனல்லன்.
20. வருத்தமுற்றவனுக்கு ஒளி தரப் படுவானேன்? உள்ளம் கசந்து போனவனுக்கு உயிர் எதற்கு?
21. புதையலைத் தேடுவதினும் ஆவலாய்த் தேடிச் சாவை விரும்பி ஏங்கியும் அது வராதவர்களுக்கும்,
22. பிணக்குழியைக் கண்டடையும் போது அகமகிழ்ந்து அக்களிப்போர்க்கும் வாழ்க்கை ஏன் தரப்பட வேண்டும்?
23. கடவுள் ஒருவனை எப்பக்கமும் வளைத்து அடைத்து விட, அவனுக்கு வழி மறைந்திருக்கும் போது அவனுக்கு எதற்காக ஒளி தரவேண்டும்?
24. பெருமூச்சுகளே எனக்கு உணவு, என் வேதனைக் குரல் நீராய் ஓடுகிறது.
25. நான் அஞ்சியது எனக்கு வந்துற்றது, நான் கண்டு நடுங்கியது எனக்கு நேரிட்டது.
26. எனக்கு ஓய்வில்லை, அமைதி கிடையாது; எனக்கு இளைப்பாற்றியே இல்லை, எனக்குத் தொல்லையே நேருகிறது."

குறிப்பேடுகள்

No Verse Added

Total 42 Chapters, Current Chapter 3 of Total Chapters 42
யோபு 3:27

×

Alert

×

tamil Letters Keypad References