தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஏசாயா
1. ஆண்டவர் கூறுகிறார்: "உங்கள் தாயைத் தள்ளி விடுவதற்காக நாம் எழுதிய மணமுறிவுச் சீட்டு எங்கே? உங்களை விற்று விடும்படிக்கு நமக்குக் கடன் கொடுத்தவன் எவன்? இதோ, உங்கள் அக்கிரமங்களால் தான் விற்கப்பட்டீர்கள், உங்கள் பாவங்களுக்காகவே உங்கள் தாயைத் தள்ளி விட்டோம்.
2. ஏனெனில் நாம் வந்த போது, ஒருவனையும் காணோமே! நாம் அழைத்த போது, ஒருவனும் பதில் தரவில்லையே! உங்களை மீட்க முடியாத அளவுக்கு நமது கை குறுகிச் சிறியதாகி விட்டதோ? உங்களை மீட்க நமக்கு ஆற்றல் இல்லையோ? இதோ, நமது பயமுறுத்தலால் கடலை மணல் திடலாக்குவோம், ஆறுகளை வற்றிப் போகச் செய்வோம்; தண்ணீரில்லாமல் மீன்கள் நொந்து போகும், தாகத்தினால் யாவும் செத்துப் போகும்.
3. வான்வெளியை இருளால் போர்த்துவோம், அதற்குப் போர்வையாய்க் கம்பளியாடையைத் தருவோம்."
4. களைத்தவனை வார்த்தையால் ஊக்கும்படி, கற்றதையுணர்த்தும் நாவை ஆண்டவர் எனக்களித்தார்; நாடோறும் காலையில் என்னை எழுப்புகிறார்; எழுப்பி, ஆசானுக்குச் செவி மடுப்பது போல் அவருக்கும் செவிமடுக்கும்படி என் செவிப்புலனைத் தூண்டுகிறார்.
5. கடவுளாகிய ஆண்டவர் என் காதுகளைத் திறந்தார், நானோ அவரை எதிர்த்துப் பேசவில்லை, அவரை விட்டுப் பின்வாங்கிப் போகவில்லை.
6. துன்புறுத்துகிறவர்களுக்கு என் உடலைக் கையளித்தேன், தாடியைப் பிய்க்கிறவர்களுக்கு என் கன்னங்களைக் காட்டினேன்; நிந்தை கூறுவோர்க்கும், காறி உமிழ்வோர்க்கும், என் முகத்தை மறைத்துக் கொள்ளவில்லை.
7. கடவுளாகிய ஆண்டவர் எனக்குத் துணை நிற்கிறார், ஆதலால் நான் கலக்கம் கொள்ளேன்; ஆதலால் என் முகத்தைக் கருங்கல் போல வைத்துக் கொண்டேன், அதற்காக வெட்கப்படேன் என்பது எனக்குத் தெரியும்.
8. என் சார்பில் தீர்ப்பு வழங்குபவர் அருகில் நிற்கிறார், எனக்கு எதிராய் வழக்குத் தொடுப்பவன் எவன்? நடுவர் முன் ஒருமிக்க எழுந்து நிற்போம். என் மேல் குற்றம் சுமத்துகிறவன் யார்? அவன் என்னை அணுகி வரட்டும்.
9. இதோ, கடவுளாகிய ஆண்டவர் எனக்குத் துணை நிற்கிறார், என்னைக் குற்றவாளியெனத் தீர்ப்பிடுகிறவன் யார்? இதோ, பழைய ஆடை போல் அனைவரும் நைந்து போவார்கள், அரிபுழுக்கள் அவர்களைத் தின்று விடும்.
10. ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவன் உங்களுள் எவன்? அவருடைய ஊழியன் பேச்சைக் கேட்பவன் யார்? ஒளியில்லாமல் இருளில் நடக்கிறவன் எவனோ, அவன் ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை வைக்கட்டும், தன் கடவுளின் மேல் ஊன்றியிருக்கட்டும்.
11. இதோ, நெருப்பு மூட்டிய நீங்கள் அனைவரும், தீயின் தழலால் சூழப்பட்ட நீங்கள் யாவரும், உங்கள் நெருப்பின் வெளிச்சத்திலேயே நடங்கள், நீங்கள் மூட்டிய தீயின் ஒளியிலேயே போங்கள்; நமது கையின் வல்லமையாலேயே உங்களுக்கு இது நடக்கும், வேதனைகளின் நடுவில் உறங்கிக் கிடப்பீர்கள்.

பதிவுகள்

மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 50 / 66
1 ஆண்டவர் கூறுகிறார்: "உங்கள் தாயைத் தள்ளி விடுவதற்காக நாம் எழுதிய மணமுறிவுச் சீட்டு எங்கே? உங்களை விற்று விடும்படிக்கு நமக்குக் கடன் கொடுத்தவன் எவன்? இதோ, உங்கள் அக்கிரமங்களால் தான் விற்கப்பட்டீர்கள், உங்கள் பாவங்களுக்காகவே உங்கள் தாயைத் தள்ளி விட்டோம். 2 ஏனெனில் நாம் வந்த போது, ஒருவனையும் காணோமே! நாம் அழைத்த போது, ஒருவனும் பதில் தரவில்லையே! உங்களை மீட்க முடியாத அளவுக்கு நமது கை குறுகிச் சிறியதாகி விட்டதோ? உங்களை மீட்க நமக்கு ஆற்றல் இல்லையோ? இதோ, நமது பயமுறுத்தலால் கடலை மணல் திடலாக்குவோம், ஆறுகளை வற்றிப் போகச் செய்வோம்; தண்ணீரில்லாமல் மீன்கள் நொந்து போகும், தாகத்தினால் யாவும் செத்துப் போகும். 3 வான்வெளியை இருளால் போர்த்துவோம், அதற்குப் போர்வையாய்க் கம்பளியாடையைத் தருவோம்." 4 களைத்தவனை வார்த்தையால் ஊக்கும்படி, கற்றதையுணர்த்தும் நாவை ஆண்டவர் எனக்களித்தார்; நாடோறும் காலையில் என்னை எழுப்புகிறார்; எழுப்பி, ஆசானுக்குச் செவி மடுப்பது போல் அவருக்கும் செவிமடுக்கும்படி என் செவிப்புலனைத் தூண்டுகிறார். 5 கடவுளாகிய ஆண்டவர் என் காதுகளைத் திறந்தார், நானோ அவரை எதிர்த்துப் பேசவில்லை, அவரை விட்டுப் பின்வாங்கிப் போகவில்லை. 6 துன்புறுத்துகிறவர்களுக்கு என் உடலைக் கையளித்தேன், தாடியைப் பிய்க்கிறவர்களுக்கு என் கன்னங்களைக் காட்டினேன்; நிந்தை கூறுவோர்க்கும், காறி உமிழ்வோர்க்கும், என் முகத்தை மறைத்துக் கொள்ளவில்லை. 7 கடவுளாகிய ஆண்டவர் எனக்குத் துணை நிற்கிறார், ஆதலால் நான் கலக்கம் கொள்ளேன்; ஆதலால் என் முகத்தைக் கருங்கல் போல வைத்துக் கொண்டேன், அதற்காக வெட்கப்படேன் என்பது எனக்குத் தெரியும். 8 என் சார்பில் தீர்ப்பு வழங்குபவர் அருகில் நிற்கிறார், எனக்கு எதிராய் வழக்குத் தொடுப்பவன் எவன்? நடுவர் முன் ஒருமிக்க எழுந்து நிற்போம். என் மேல் குற்றம் சுமத்துகிறவன் யார்? அவன் என்னை அணுகி வரட்டும். 9 இதோ, கடவுளாகிய ஆண்டவர் எனக்குத் துணை நிற்கிறார், என்னைக் குற்றவாளியெனத் தீர்ப்பிடுகிறவன் யார்? இதோ, பழைய ஆடை போல் அனைவரும் நைந்து போவார்கள், அரிபுழுக்கள் அவர்களைத் தின்று விடும். 10 ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவன் உங்களுள் எவன்? அவருடைய ஊழியன் பேச்சைக் கேட்பவன் யார்? ஒளியில்லாமல் இருளில் நடக்கிறவன் எவனோ, அவன் ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை வைக்கட்டும், தன் கடவுளின் மேல் ஊன்றியிருக்கட்டும். 11 இதோ, நெருப்பு மூட்டிய நீங்கள் அனைவரும், தீயின் தழலால் சூழப்பட்ட நீங்கள் யாவரும், உங்கள் நெருப்பின் வெளிச்சத்திலேயே நடங்கள், நீங்கள் மூட்டிய தீயின் ஒளியிலேயே போங்கள்; நமது கையின் வல்லமையாலேயே உங்களுக்கு இது நடக்கும், வேதனைகளின் நடுவில் உறங்கிக் கிடப்பீர்கள்.
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 50 / 66
×

Alert

×

Tamil Letters Keypad References