தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
ஏசாயா
1. ஆண்டவரே, நீரே என் கடவுள்; உம்மை நான் மகிமைப் படுத்துவேன், உமது திருப்பெயரைப் போற்றிப் புகழ்வேன்; ஏனெனில் நீர் வியத்தகு செயல்களைச் செய்தீர்; பழங்காலத்திலேயே வகுத்திருந்த உம் திட்டங்களைப் பிரமாணிக்கமாகவும் திண்ணமாகவும் செய்து முடித்தீர்.
2. ஏனெனில் அந் நகரத்தை நீர் மண்மேடாக்கினீர், அரண் சூழ்ந்த பட்டணத்தைப் பாழாக்கினீர்; திமிர் கொண்டவர்களின் கோட்டையாய் இருந்த அது இனி ஒரு நகரமாயிராது; மீண்டும் கட்டப்படாது.
3. ஆதலால் வலிமை மிக்க மக்கள் உம்மை மகிமைப்படுத்துவார்கள், முரட்டினத்தாரின் பட்டணங்கள் உமக்கு அஞ்சியிருக்கும்.
4. ஏனெனில் எளியவனுக்கு நீர் அரணாய் இருந்தீர், ஏழைக்கு அவன் துன்பத்தில் அரணாய் இருந்தீர்; கடும் புயலில் புகலிடமாகவும், கொடிய வெப்பத்தில் குளிர் நிழலாகவும் விளங்கினீர். ஏனெனில் முரடர்களின் சீற்றம் மதிலைத் தாக்கும் புயல் போலும், வறண்ட நிலத்தின் வெப்பம் போலும் இருக்கிறது.
5. கார்மேகத்தின் தண்ணிழல் வெப்பத்தை அடக்குவது போல, நீர் திமிர்கொண்டவர்களின் ஆர்ப்பாட்டத்தை அடக்குகிறீர், முரடர்களின் ஆரவாரமும் அடங்கிவிடும்.
6. சேனைகளின் ஆண்டவர் இந்த மலை மேலே எல்லா மக்களுக்கும் விருந்தொன்று தயாரிப்பார்; அறுசுவை உணவும் சிறந்த பழ ரசமும், கொழுப்பு நிறைந்த இறைச்சியும், வடிகட்டிச் சுத்தம் செய்த திராட்சை இரசமும் அவ்விருந்திலே பரிமாறப்படும்.
7. எல்லா மக்களையும் மூடியிருக்கிற மூடியையும், எல்லா இனத்தவர் மேலிருக்கும் அழுகையின் முக்காட்டையும் இந்த மலையின் மேல் அவர் அகற்றிடுவார்.
8. என்றென்றைக்கும் சாவை அழித்து விடுவார், கடவுளாகிய ஆண்டவர் எல்லா முகங்களினின்றும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்; உலகத்தில் எங்குமே இராதபடி தம் மக்களின் நிந்தையை அகற்றிவிடுவார்; ஏனெனில் ஆண்டவரே இதைச் சொல்லியிருக்கிறார்.
9. அந் நாளில் மக்கள் அனைவரும், "இதோ, இவரே நம் கடவுள், இவரையே நாம் எதிர்பார்த்திருந்தோம், இவரே நம்மை மீட்பார், இவரே ஆண்டவர், இவரையே நாம் எதிர்ப்பார்த்திருந்தோம், இவர் தரும் மீட்பைக் குறித்து அகமகிழ்ந்து அக்களிப்போம்" என்பார்கள்.
10. ஏனெனில் ஆண்டவருடைய கைவன்மை இம் மலை மேல் அமரும்; குப்பைக் குழியில் வைக்கோல் மிதிக்கப்படுவது போல, மோவாப் அதனுடைய இடத்திலேயே மிதிக்கப்படும்.
11. நீந்துபவன் நீந்தத் தன் கைகளை விரிப்பது போல மோவாப் அதன் நடுவில் தன் கைகளை விரிப்பான்; ஆயினும் ஆண்டவர் அவன் ஆணவத்தையும், கையினால் செய்யும் முயற்சிகளையும் தாழ்த்துவார்.
12. உயர்வான மதில்களுடைய கோட்டைகள் அழிக்கப்படும், தரைமட்டமாகும்; அவை தூசியாய்த் தரையோடு தரையாய்த் தாழ்த்தப்படும்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 66 Chapters, Current Chapter 25 of Total Chapters 66
ஏசாயா 25:2

×

Alert

×

tamil Letters Keypad References