தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஆமோஸ்
1. இஸ்ராயேல் வீட்டாரே, இந்த வாக்கைக் கேளுங்கள், உங்களைக் குறித்து பாடிய புலம்பல் இது:
2. இஸ்ராயேல் என்னும் கன்னிப் பெண், வீழ்ச்சியுற்றாள், இனி எழ மாட்டாள்; தரையில் தனியளாய்க் கிடக்கின்றாள், அவளைத் தூக்கி விடுவார் யாருமில்லை."
3. ஏனெனில், ஆண்டவராகிய இறைவன் இவ்வாறு கூறுகிறார்: "ஆயிரம் பேரை அனுப்பிய நகரத்தில் நூறு பேரே எஞ்சியிருப்பர், நூறு பேரை அனுப்பிய பட்டணத்தில், பத்தே பேர் எஞ்சியிருப்பர்; இஸ்ராயேல் வீட்டார் கதி இதுவே."
4. இஸ்ராயேல் வீட்டாருக்கு ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: "நம்மைத் தேடுங்கள், நீங்கள் வாழ்வீர்கள்;
5. ஆனால் பேத்தேலைத் தேடாதீர்கள், கல்கலாவில் நுழையாதீர்கள்; பெயேர்ஷுபாவுக்குக் கடந்துபோக வேண்டா, ஏனெனில் கல்கலா சிறைகொண்டு போகப்படும், பேத்தேல் வெறுமையாக்கப்படும்."
6. ஆண்டவரைத் தேடுங்கள், நீங்கள் வாழ்வீர்கள், இன்றேல், தீயைப்போல் அவர் யோசப் வீட்டின் மேல் இறங்குவார்; அந்நெருப்பு சுட்டெரித்து விடும், பேத்தேலில் அதை அணைக்கக் கூடியவர் எவருமிரார்.
7. நீங்கள் நீதியை எட்டிக்கசப்பாய் மாற்றுகிறீர்கள், நேர்மையைத் தரையில் வீழ்த்துகிறீர்கள்.
8. அவரே கார்த்திகை, மிருகசீரிடம் ஆகிய விண்மீன் குழுக்களை உண்டாக்கியவர்; அவரே காரிருளைக் காலைப் பொழுதாய் மாற்றுகிறவர், பகற்பொழுதை இரவு வேளையாய் ஆக்குகிறவர்; கடல்களின் நீரை முகந்தெடுத்து மாநிலத்தின் மேல் பொழிகிறவர் அவரே; ஆண்டவர் என்பது அவரது பெயராம்.
9. திடீரெனக் கோட்டை மேல் அழிவை அனுப்புகிறார், அழிவும் அரண் மேல் வருகிறது.
10. பொதுவிடத்தில் நின்று கண்டிப்பவனைப் பகைக்கிறார்கள், உண்மை பேசுபவனை வெறுத்து ஒதுக்குகிறார்கள்;
11. ஆதலால், நீங்கள் ஏழைகளை நசுக்கி அவர்களிடம் தானிய வரி வாங்கி, அதைக் கொண்டு செதுக்கிய கற்களால் வீடுகள் கட்டினீர்கள், அந்த வீடுகளில் நீங்கள் வாழப்போவதில்லை; அருமையான திராட்சைத் தோட்டங்களை நாட்டினீர்கள், அவற்றின் இரசத்தை நீங்கள் குடிக்கப்போவதில்லை.
12. உங்கள் பழிச்செயல்கள் பலவென்றும், உங்கள் பாவங்கள் கொடியவை என்றும் நாம் அறிவோம்; நீதிமான்களைத் துன்புறுத்துகிறீர்கள், கையூட்டு வாங்குகிறீர்கள், ஊர்ச்சபையில் ஏழையின் வழக்கை ஏற்க மறுக்கிறீர்கள்.
13. ஆகையால், விவேகமுள்ளவன் அப்போதெல்லாம் மவுனமாயிருப்பான், ஏனெனில் காலம் கெட்டுப் போயிற்று.
14. தீமையைத் தேடாதீர்கள்; நன்மையையே நாடுங்கள்; அப்பொழுது நீங்கள் வாழ்வீர்கள்; அப்பொழுது நீங்கள் சொல்வது போலவே, சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடிருப்பார்.
15. தீமையைப் பகையுங்கள், நன்மையை விரும்புங்கள், ஊர்ச்சபையில் நீதியை நிலைநாட்டுங்கள்; அப்போது ஒருவேளை சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் யோசப் வீட்டாரில் எஞ்சினோர்க்கு இரக்கம் காட்டுவார்.
16. ஆதலால் ஆண்டவர் - சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: " பொதுவிடங்களில் எல்லாம் அழுகுரல் கேட்கும், தெருக்களில் எங்கும், 'ஐயோ! ஐயோ! 'என்று புலம்பல் கேட்கும், உழவுத் தொழில் செய்வாரை அழுவதற்குக் கூப்பிடுவர், ஒப்பாரி தெரிந்தவர்களை ஓலமிட்டுப் புலம்ப அழைப்பார்கள்.
17. திராட்சைத் தோட்டங்கள் எங்கணும் ஒரே அழுகையாய் இருக்கும், ஏனெனில் உங்கள் நடுவே நாம் கடந்து போவோம்" என்கிறார் ஆண்டவர்.
18. ஆண்டவரின் நாளைப் பார்க்க விரும்புகிறவர்களே, உங்களுக்கு ஐயோ கேடு! ஆண்டவரின் நாளுக்காக நீங்கள் ஏங்குவதேன்? அது ஒளி மிக்க நாளன்று, இருள் சூழ்ந்த நாள் தான்.
19. அந்த நாள், சிங்கத்தினிடம் தப்பி ஓடிய ஒருவனைக் கரடியொன்று சந்தித்தாற் போலும், தப்பியோடி வீட்டிற்குள் நுழைந்து சுவரில் கை வைத்துச் சாயும் போது பாம்பொன்று கடித்தாற் போலும் இருக்கும்!
20. ஆண்டவரின் நாள் இருள் கவிந்தது அல்லவா? அது ஒளியின் நாளில்லையே! வெளிச்சமில்லாத காரிருள் அல்லவோ?
21. உங்கள் திருவிழாக்களை அருவருக்கிறோம், வெறுக்கிறோம்; உங்கள் வழிபாட்டுக் கூட்டங்களில் நமக்கு விருப்பமே இல்லை.
22. தகனப்பலிகளும் உணவுப்பலிகளும் நமக்கு நீங்கள் கொடுத்தாலும் நாம் ஏற்கமாட்டோம்; சமாதானப் பலிகளான உங்கள் கொழுத்த மிருகங்களையும் நாம் ஏறெடுத்துக்கூடப் பார்க்கமாட்டோம்.
23. உங்கள் பாடல்களின் பண்ணை நம்மிடமிருந்து அகற்றுங்கள், உங்கள் வீணைகளின் இசையை நாம் கேட்க மாட்டோம்.
24. அதற்கு மாறாக, நீதி தண்ணீரைப் போல வழிந்தோடட்டும், நேர்மை நீரோடை போலப் பாயட்டும்.
25. இஸ்ராயேல் வீட்டாரே, பாலைநிலத்தில் இருந்த அந்த நாற்பதாண்டுகளில் பலிகளும் காணிக்கைகளும் நமக்குக் கொடுத்தீர்களோ?
26. உங்கள் அரசனாகிய சக்கூத்தையும், உங்கள் விண்மீன் தெய்வமான காய்வானையும், உங்களுக்கென நீங்கள் செய்துகொண்ட அந்தச் சிலைகளைத் தூக்கிக் கொண்டு போவீர்கள்.
27. ஆகையால், தமஸ்குவுக்கும் அப்பால் உங்களை நாம் நாடு கடத்துவோம்" என்கிறார் ஆண்டவர்; சேனைகளின் கடவுள் என்பது அவரது பெயர்.

பதிவுகள்

மொத்தம் 9 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 5 / 9
1 2 3 4 5 6 7 8 9
1 இஸ்ராயேல் வீட்டாரே, இந்த வாக்கைக் கேளுங்கள், உங்களைக் குறித்து பாடிய புலம்பல் இது: 2 இஸ்ராயேல் என்னும் கன்னிப் பெண், வீழ்ச்சியுற்றாள், இனி எழ மாட்டாள்; தரையில் தனியளாய்க் கிடக்கின்றாள், அவளைத் தூக்கி விடுவார் யாருமில்லை." 3 ஏனெனில், ஆண்டவராகிய இறைவன் இவ்வாறு கூறுகிறார்: "ஆயிரம் பேரை அனுப்பிய நகரத்தில் நூறு பேரே எஞ்சியிருப்பர், நூறு பேரை அனுப்பிய பட்டணத்தில், பத்தே பேர் எஞ்சியிருப்பர்; இஸ்ராயேல் வீட்டார் கதி இதுவே." 4 இஸ்ராயேல் வீட்டாருக்கு ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: "நம்மைத் தேடுங்கள், நீங்கள் வாழ்வீர்கள்; 5 ஆனால் பேத்தேலைத் தேடாதீர்கள், கல்கலாவில் நுழையாதீர்கள்; பெயேர்ஷுபாவுக்குக் கடந்துபோக வேண்டா, ஏனெனில் கல்கலா சிறைகொண்டு போகப்படும், பேத்தேல் வெறுமையாக்கப்படும்." 6 ஆண்டவரைத் தேடுங்கள், நீங்கள் வாழ்வீர்கள், இன்றேல், தீயைப்போல் அவர் யோசப் வீட்டின் மேல் இறங்குவார்; அந்நெருப்பு சுட்டெரித்து விடும், பேத்தேலில் அதை அணைக்கக் கூடியவர் எவருமிரார். 7 நீங்கள் நீதியை எட்டிக்கசப்பாய் மாற்றுகிறீர்கள், நேர்மையைத் தரையில் வீழ்த்துகிறீர்கள். 8 அவரே கார்த்திகை, மிருகசீரிடம் ஆகிய விண்மீன் குழுக்களை உண்டாக்கியவர்; அவரே காரிருளைக் காலைப் பொழுதாய் மாற்றுகிறவர், பகற்பொழுதை இரவு வேளையாய் ஆக்குகிறவர்; கடல்களின் நீரை முகந்தெடுத்து மாநிலத்தின் மேல் பொழிகிறவர் அவரே; ஆண்டவர் என்பது அவரது பெயராம். 9 திடீரெனக் கோட்டை மேல் அழிவை அனுப்புகிறார், அழிவும் அரண் மேல் வருகிறது. 10 பொதுவிடத்தில் நின்று கண்டிப்பவனைப் பகைக்கிறார்கள், உண்மை பேசுபவனை வெறுத்து ஒதுக்குகிறார்கள்; 11 ஆதலால், நீங்கள் ஏழைகளை நசுக்கி அவர்களிடம் தானிய வரி வாங்கி, அதைக் கொண்டு செதுக்கிய கற்களால் வீடுகள் கட்டினீர்கள், அந்த வீடுகளில் நீங்கள் வாழப்போவதில்லை; அருமையான திராட்சைத் தோட்டங்களை நாட்டினீர்கள், அவற்றின் இரசத்தை நீங்கள் குடிக்கப்போவதில்லை. 12 உங்கள் பழிச்செயல்கள் பலவென்றும், உங்கள் பாவங்கள் கொடியவை என்றும் நாம் அறிவோம்; நீதிமான்களைத் துன்புறுத்துகிறீர்கள், கையூட்டு வாங்குகிறீர்கள், ஊர்ச்சபையில் ஏழையின் வழக்கை ஏற்க மறுக்கிறீர்கள். 13 ஆகையால், விவேகமுள்ளவன் அப்போதெல்லாம் மவுனமாயிருப்பான், ஏனெனில் காலம் கெட்டுப் போயிற்று. 14 தீமையைத் தேடாதீர்கள்; நன்மையையே நாடுங்கள்; அப்பொழுது நீங்கள் வாழ்வீர்கள்; அப்பொழுது நீங்கள் சொல்வது போலவே, சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடிருப்பார். 15 தீமையைப் பகையுங்கள், நன்மையை விரும்புங்கள், ஊர்ச்சபையில் நீதியை நிலைநாட்டுங்கள்; அப்போது ஒருவேளை சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் யோசப் வீட்டாரில் எஞ்சினோர்க்கு இரக்கம் காட்டுவார். 16 ஆதலால் ஆண்டவர் - சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: " பொதுவிடங்களில் எல்லாம் அழுகுரல் கேட்கும், தெருக்களில் எங்கும், 'ஐயோ! ஐயோ! 'என்று புலம்பல் கேட்கும், உழவுத் தொழில் செய்வாரை அழுவதற்குக் கூப்பிடுவர், ஒப்பாரி தெரிந்தவர்களை ஓலமிட்டுப் புலம்ப அழைப்பார்கள். 17 திராட்சைத் தோட்டங்கள் எங்கணும் ஒரே அழுகையாய் இருக்கும், ஏனெனில் உங்கள் நடுவே நாம் கடந்து போவோம்" என்கிறார் ஆண்டவர். 18 ஆண்டவரின் நாளைப் பார்க்க விரும்புகிறவர்களே, உங்களுக்கு ஐயோ கேடு! ஆண்டவரின் நாளுக்காக நீங்கள் ஏங்குவதேன்? அது ஒளி மிக்க நாளன்று, இருள் சூழ்ந்த நாள் தான். 19 அந்த நாள், சிங்கத்தினிடம் தப்பி ஓடிய ஒருவனைக் கரடியொன்று சந்தித்தாற் போலும், தப்பியோடி வீட்டிற்குள் நுழைந்து சுவரில் கை வைத்துச் சாயும் போது பாம்பொன்று கடித்தாற் போலும் இருக்கும்! 20 ஆண்டவரின் நாள் இருள் கவிந்தது அல்லவா? அது ஒளியின் நாளில்லையே! வெளிச்சமில்லாத காரிருள் அல்லவோ? 21 உங்கள் திருவிழாக்களை அருவருக்கிறோம், வெறுக்கிறோம்; உங்கள் வழிபாட்டுக் கூட்டங்களில் நமக்கு விருப்பமே இல்லை. 22 தகனப்பலிகளும் உணவுப்பலிகளும் நமக்கு நீங்கள் கொடுத்தாலும் நாம் ஏற்கமாட்டோம்; சமாதானப் பலிகளான உங்கள் கொழுத்த மிருகங்களையும் நாம் ஏறெடுத்துக்கூடப் பார்க்கமாட்டோம். 23 உங்கள் பாடல்களின் பண்ணை நம்மிடமிருந்து அகற்றுங்கள், உங்கள் வீணைகளின் இசையை நாம் கேட்க மாட்டோம். 24 அதற்கு மாறாக, நீதி தண்ணீரைப் போல வழிந்தோடட்டும், நேர்மை நீரோடை போலப் பாயட்டும். 25 இஸ்ராயேல் வீட்டாரே, பாலைநிலத்தில் இருந்த அந்த நாற்பதாண்டுகளில் பலிகளும் காணிக்கைகளும் நமக்குக் கொடுத்தீர்களோ? 26 உங்கள் அரசனாகிய சக்கூத்தையும், உங்கள் விண்மீன் தெய்வமான காய்வானையும், உங்களுக்கென நீங்கள் செய்துகொண்ட அந்தச் சிலைகளைத் தூக்கிக் கொண்டு போவீர்கள். 27 ஆகையால், தமஸ்குவுக்கும் அப்பால் உங்களை நாம் நாடு கடத்துவோம்" என்கிறார் ஆண்டவர்; சேனைகளின் கடவுள் என்பது அவரது பெயர்.
மொத்தம் 9 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 5 / 9
1 2 3 4 5 6 7 8 9
×

Alert

×

Tamil Letters Keypad References