தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
அப்போஸ்தலர்கள்
1. ஒருநாள், செபநேரமாகிய பிற்பகல் மூன்று மணிக்கு இராயப்பரும் அருளப்பரும் கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்தனர்.
2. அப்போது, பிறவியிலேயே முடவனாயிருந்த ஒருவன் தூக்கிக்கொண்டு வரப்பட்டான்; கோயிலுக்குள் போகிறவர்களிடம் பிச்சைவாங்குவதற்காக நாள்தோறும் அவனைக் கோயிலின் 'அழகு வாயில் ' என்னும் வாசலருகில் வைப்பதுண்டு.
3. இராயப்பரும் அருளப்பரும் கோயிலுக்குள் நுழைகையில், அவர்களைப் பார்த்துப் பிச்சை கேட்டான்.
4. இராயப்பரும் அருளப்பரும் அவனை உற்றுநோக்கினர். இராயப்பர் "இங்கே பார்" என்றார்.
5. அவனோ ஏதேனும் கிடைக்கும் என்று அவர்களை ஆவலோடு நோக்கினான்.
6. இராயப்பர் அவனிடம், "வெள்ளியோ பொன்னோ என்னிடம் இல்லை; என்னிடம் உள்ளதை உனக்குக் கொடுக்கிறேன்; நாசரேயராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நட! " என்று சொல்லி,
7. அவனது வலக்கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார். உடனே அவனுடைய பாதங்களும் கணுக்கால்களும் வலுவடைந்தன.
8. அவன் துள்ளி எழுந்து நடக்கத்தொடங்கினான்; துள்ளி நடந்து கடவுளைப் புகழ்ந்துகொண்டே அவர்களுடன் கோயிலுக்குள் சென்றான்.
9. அவன் நடப்பதையும், கடவுளைப் புகழ்வதையும் மக்கள் எல்லாரும் கண்டனர்.
10. கோயிலின் 'அழகு வாயிலில் பிச்சைகேட்டு உட்கார்ந்திருந்தவன் அவனே என்று அறிந்துகொண்டனர். அவனுக்கு நிகழ்ந்ததைப் பார்த்து, திகைப்புற்று மலைத்துப்போயினர்.
11. அவன் இராயப்பரையும் அருளப்பரையும் விடாமல், அவர்களுக்குப் பின்னாலேயே போய்க்கொண்டிருக்கவே மக்களெல்லாரும் திகைப்புற்று, ' சாலொமோன் மண்டபம் ' என்னும் இடத்திற்கு அவர்களிடம் ஓடிவந்தனர்.
12. இராயப்பர் அதைக் கண்டு, கூட்டத்திற்குக் கூறியது: "இஸ்ராயேல் மக்களே, இதைக் கண்டு நீங்கள் வியப்பதேன்? எங்கள் சொந்த வல்லமையாலோ பக்தியின் பலத்தினாலோ இவனை நடக்கவைத்ததாக எண்ணி நீங்கள் எங்களை இப்படி விழித்துப் பார்ப்பதேன்?
13. ஆபிரகாம், ஈசாக், யாக்கோபின் கடவுள், நம் முன்னோர்களின் கடவுள் தம் ஊழியர் இயேசுவை மகிமைப்படுத்தினார்; நீங்களோ அவரைப் பகைவர்களிடம் கையளித்துவிட்டீர்கள்; பிலாத்து விடுதலைத்தீர்ப்பு அளித்தபோதும் பிலாத்துவின்முன் அவரை மறுதலித்தீர்கள்.
14. புனிதமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்கு விடுதலைசெய்யக் கேட்டுக்கொண்டீர்கள்.
15. வாழ்வுக்கு வழிகாட்டும் தலைவரைக் கொன்றீர்கள்; ஆனால் கடவுள் அவரை இறந்தோரிடமிருந்து உயிர்ப்பித்தார். இதற்கு நாங்கள் சாட்சிகள்.
16. இதோ, உங்கள் கண்முன் நிற்கிறவன் உங்களுக்குத் தெரிந்தவன்; இயேசுவின் பெயர்மீதுள்ள விசுவாசத்தால், அவருடைய பெயரே இவனுக்கு வலுவூட்டியது; அவரால் உண்டாகிய விசுவாசமே, உங்கள் எல்லாருக்கும் முன்பாக, இவனுக்கு முழுக் குணம் அளித்துள்ளது.
17. "இனி, சகோதரர்களே, தெரியாமல் இப்படிச் செய்துவிட்டீர்கள் என்று அறிவேன்; அப்படியே உங்கள் தலைவர்களும் தெரியாமல் செய்துவிட்டார்கள்.
18. கடவுளோ, தம் மெசியா பாடுபட வேண்டுமென, இறைவாக்கினர் அனைவருடைய வாய்மொழியாலும் முன்னறிவித்ததை இவ்வாறு நிறைவேற்றினார்.
19. ஆகையால், உங்கள் பாவங்கள் ஒழியும்பொருட்டு மனம் மாறிக் கடவுளிடம் திரும்புங்கள்.
20. ஆண்டவர் அப்பொழுது இளைப்பாறும் காலத்தை அருளி, உங்களுக்கென மெசியாவாக ஏற்படுத்திய இயேசுவை அனுப்புவார்.
21. இந்த இயேசு, அனைத்தும் புதிதாக்கப்படும் காலம் வரும்வரை, வானகத்தில் இருத்தல்வேண்டும். தொன்றுதொட்டு வந்த தம் பரிசுத்த இறைவாக்கினர்களின் வாயிலாகக் கடவுள் அக்காலத்தைப்பற்றி அறிவித்திருந்தார்.
22. இவ்வாறு மோயீசன், ' கடவுளாகிய ஆண்டவர் என்னைப்போன்ற ஓர் இறைவாக்கினரை உங்கள் சகோதரர்களினின்று உங்களுக்கென எழச்செய்வார்; அவர் உங்களுக்கு என்ன சொன்னாலும் அதற்குச் செவிகொடுங்கள்.
23. அந்த இறைவாக்கினரின் சொல்லைக் கேளாத எவனும் மக்களினின்று களைந்தெறியப்படுவான் ' என உரைத்தார்.
24. அவ்வாறே, சாமுவேல் தொடங்கி இறைவாக்கு உரைத்த எல்லாரும் ஒருவருக்குப்பின் ஒருவராக இந்நாட்களைக்குறித்து முன்னறிவித்தனர்.
25. "நீங்களோ இறைவாக்கினர்களின் புதல்வர்கள்; ' உன் வித்தின்வழியாக மண்ணுலகின் குலமெல்லாம் ஆசிபெறும் ' என்று கடவுள் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம் முன்னோருடன் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு உரியவர்கள் நீங்கள்.
26. உங்களுக்கு அருள் வழங்கி, உங்களுள் ஒவ்வொருவனையும் அவன் தன் தீச்செயல்களினின்று விலக்குவதற்காக, கடவுள் தம் ஊழியரை உயிர்ப்பித்து முதன்முதல் உங்களிடம் அனுப்பினார்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 28 Chapters, Current Chapter 3 of Total Chapters 28
அப்போஸ்தலர்கள் 3:34

×

Alert

×

tamil Letters Keypad References