தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
1 சாமுவேல்
1. (2) சவுல் பிலிஸ்தியரைத் தொடர்ந்த பின் திரும்பி வந்த போது, "இதோ தாவீது எங்காதி பாலைவனத்தில் இருக்கிறான்" என்று அவருக்குத் தெரிவித்தார்கள்.
2. (3) அப்பொழுது சவுல் இஸ்ராயேல் அனைத்திலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்களில் மூவாயிரம் பேரை அழைத்துக் கொண்டு காட்டாடுகள் மட்டுமே ஏறக்கூடிய செங்குத்தான பாறைகளில் கூடத் தாவீதையும் அவனுடைய ஆட்களையும் தேடிப்போனர்.
3. (4) வழியோரத்தில் ஆட்டு மந்தைகளின் தொழுவங்கள் காணப்பட்டன. அவ்விடத்தில் ஒரு குகை இருந்தது. அதில் சவுல் வெளிக்கிருக்கப் போனார். தாவீதும் அவனுடைய ஆட்களும் குகையினுள் ஒளிந்து கொண்டிருந்தனர்.
4. (5) தாவீதின் ஆட்கள் அவனை நோக்கி, "இதோ, 'நாம் உன் எதிரியை உன் கையில் ஒப்படைத்தோம். உன் மனத்துக்குப் பிடித்தபடி அவனுக்குச் செய்வாய்' என்று ஆண்டவர் உனக்குச் சொன்ன நாள் இதுவே" என்று அவனுக்குச் சொன்னார்கள். தாவீது எழுந்து சவுலுடைய போர்வையின் விளிம்பை அறுத்துக் கொண்டான்.
5. (6) அதன் பின், சவுலின் போர்வை விளிம்பை அறுத்தது பற்றி தாவீது மிகவும் வருந்தினான்.
6. (7) அவன் தன் ஆட்களை நோக்கி, "ஆண்டவர் அவரை அபிஷுகம் செய்துள்ளார். அவர் ஆண்டவரால் அபிஷுகம் செய்யப்பட்டவராகவும் என் தலைவராகவும் இருக்கிறபடியால் அவர்மேல் கைபோடும்படியான இப்படிப்பட்ட செயலை நான் செய்யாதபடி ஆண்டவர் என்மேல் இரக்கம் கொள்வாராக" என்று சொல்லி,
7. (8) தன் ஆட்கள் சவுலின் மேல் பாயாதபடி தன் சொற்களால் அவர்களைத் தடுத்தான். பிறகு சவுல் குகையை விட்டுப் புறப்பட்டுத் தம் வழியே நடந்து போனார்.
8. (9) அப்போது தாவீதும் எழுந்து குகையிலிருந்து வெளியேறி சவுலுக்குப் பின்னே சென்று, "அரசே, என் தலைவா!" என்று கூப்பிடச் சவுல் திரும்பிப் பார்த்தார். உடனே தாவீது தரை மட்டும் குனிந்து வணங்கி,
9. (10) சவுலை நோக்கி, 'தாவீது உமக்குத் தீங்கு செய்யப் பார்க்கிறான்' என்று சொல்லும் மனிதருடைய பேச்சை நீர் கேட்கலாமா?
10. (11) இதோ ஆண்டவர் குகையில் உம்மை என் கையில் ஒப்படைத்தார் என்பதை இன்று உம் கண்களே கண்டன. நான் உம்மைக் கொல்ல வேண்டும் என்று நினைத்தது மெய்யே; ஆனால் என் கண் உம்மைக் காப்பாற்றியுள்ளது. நீர் ஆண்டவரால் அபிஷுகம் செய்யப்பட்டவராய் இருக்கிறபடியால் என் தலைவர் மேல் கை போடமாட்டேன் என்று சொல்லிக் கொண்டேன்.
11. (12) ஆதாரம் என்ன என்று கேட்கிறீரா? என் தந்தையே, என் கையில் உள்ள உமது போர்வையின் நுனியைப் பார்த்து அறிந்து கொள்ளும்; ஏனெனில் உம்மைக் கொன்று போடாமலே உம் போர்வையின் நுனியை அறுத்துக் கொண்டேன். ஆதலால், நீர் யோசித்துப் பார்ப்பீராயின் நான் யாதொரு குற்றமோ துரோகமோ நினைக்கவில்லை என்றும், நான் உமக்கு விரோதமாய்த் தீங்கு செய்ததில்லை என்றும் நீர் அறிந்து கொள்வீர். பின் நீர் என் உயிரை வாங்க வழி தேடுவது ஏன்?
12. (13) உமக்கும் எனக்கும் ஆண்டவர் நடுவராய் இருப்பாராக! உம் பொருட்டு ஆண்டவரே என்னைப் பழி வாங்கட்டும்! ஆனால் உம்மேல் நான் கைபோட மாட்டேன்.
13. (14) முதுமொழி வழங்குவது போல், 'தீயோனிடமிருந்து தீமை பிறக்கும்'. ஆதலால் நான் உம்மேல் கை வைக்க மாட்டேன்.
14. (15) இஸ்ராயேலின் அரசே! யாரைப் பின்தொடர்கிறீர்? யாரைப் பிடிக்க வந்துள்ளீர்? ஒரு செத்த நாயை, ஓர் உண்ணியை அன்றோ?
15. (16) ஆண்டவர் நடுவராயிருந்து உமக்கும் எனக்கும் நீதி வழங்குவாராக! அவர் என் வழக்கை விசாரித்துத் தீர்ப்பு சொல்லி, என்னை உமது கையினின்று விடுவிப்பாராக" என்று சொன்னான்.
16. (17) தாவீது சவுலை நோக்கி இச்சொற்களைச் சொல்லி முடித்தபோது, சவுல் "என் மகனாகிய தாவீதே, இது உன் குரல் தானா?" என்று சொல்லி ஓலமிட்டு அழுதார்.
17. (18) பின்பு தாவீதை நோக்கி, "நீ என்னிலும் நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; நானோ உனக்குத் தீமை செய்தேன்.
18. (19) ஆண்டவர் என்னை உன் கையில் ஒப்படைத்திருந்தும் நீ என்னை கொன்று போடவில்லை. நீ எனக்கு நன்மையே செய்து வந்துள்ளாய் என நன்கு விளங்குகிறது.
19. (20) ஒருவன் தன் எதிரியைக் கண்டு பிடிப்பானாகில், அவனை நலமுடன் போக விடுவானோ? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காக ஆண்டவர் உனக்கு நன்மை செய்வாராக!
20. (21) நீ உறுதியாக அரசாள்வாய் என்றும், இஸ்ராயேலின் ஆட்சியைக் கட்டாயம் அடைவாய் என்றும் இப்போது அறிவேன்.
21. (22) ஆதலால் நீ எனக்குப் பின்வரும் என் சந்ததியை அழிப்பதில்லை என்றும், என் தந்தை வீட்டினின்று என் பெயரை அகற்றுவதில்லை என்றும் ஆண்டவர் மேல் எனக்கு ஆனையிட்டுச் சொல்" என்றார்.
22. (23) தாவீது அவ்விதமே சவுலுக்கு ஆணையிட்டுக் கொடுத்தான். பின்னர் சவுல் தம் வீடு திரும்பினார். தாவீதும் அவன் ஆட்களும் பாதுகாப்பான இடங்களுக்கு ஏறிப்போனார்கள்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 31 Chapters, Current Chapter 24 of Total Chapters 31
1 சாமுவேல் 24:26

×

Alert

×

tamil Letters Keypad References