தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
1 சாமுவேல்
1. 'இதோ, பிலிஸ்தியர் கெயிலாவில் போர் புரிந்து களஞ்சியங்களை கொள்ளையிடுகிறார்கள்' என்ற தாவீதுக்குத் தெரிவிக்கப்பட்டது.
2. அப்பொழுது தாவீது, "நான் போய் அப் பிலிஸ்தியரை முறியடிக்க வேண்டுமா?" என்று ஆண்டவரிடத்தில் ஆலோசனை கேட்டதற்கு, ஆண்டவர், "நீ போ; பிலிஸ்தியரை முறியடித்துக் கெயிலாவை மீட்பாய்" என்று சொன்னார்.
3. ஆனால் தாவீதுடன் இருந்த மனிதர்கள் அவனை நோக்கி, "இதோ நாங்கள் இங்கு யூதேயாவில் இருந்துமே அஞ்சிக் கொண்டிருக்கிறோம்; பிலிஸ்தியருடைய படைகளை எதிர்க்கிறதற்குக் கெயிலாவுக்குப் போனால் இன்னும் எவ்வளவோ அஞ்ச நேரிடும்?" என்றனர்.
4. ஆதலால் தாவீது மறுபடியும் ஆண்டவரிடத்தில் ஆலோசனை கேட்டான். அவர் மறுமொழியாக, "நீ எழுந்து கெயிலாவுக்குப் போ; நாம் பிலிஸ்தியரை உன் கையில் ஒப்புவிப்போம்" என்று அவனுக்குச் சொன்னார்.
5. அப்படியே தாவீது தன் மனிதர்களோடு கெயிலாவுக்குப் போய்ப் பிலிஸ்தியருக்கு எதிராகப் போர் புரிந்து அவர்களில் எண்ணற்ற பேரைக் கொன்று குவித்தான்; அவர்களுடைய பொதி மிருகங்களையும் ஓட்டிக் கொண்டு போனான். தாவீது இவ்விதமாய் கெயிலாக் குடிகளை மீட்டான்.
6. ஆனால் அக்கிமெலேக்குடைய மகன் அபியாத்தார் கெயிலாவில் இருந்த தாவீதிடம் ஓடி வந்த போது தன்னுடன் ஒரு எபோதை எடுத்துக் கொண்டு வந்திருந்தான்.
7. பிறகு, 'தாவீது கெயிலாவுக்கு வந்துள்ளான்' என்று சவுலுக்குத் தெரிவிக்கப்பட்டது. சவுல் அதைக் கேள்விப்பட்டு, "கதவுகளும் பூட்டுகளும் உள்ள நகரில் நுழைந்தான், அடைப்பட்டான்; கடவுள் அவனை என் கைகளில் ஒப்படைத்துள்ளார்" என்று சொல்லி,
8. கெயிலா மேல் படை எடுத்துச் செல்லவும், தாவீதையும் அவன் ஆட்களையும் தாக்கவும் தம் மக்களுக்கெல்லாம் கட்டளையிட்டார்.
9. தனக்குத் தீங்கு செய்யச் சவுல் இரகசியமாய் முயல்கிறார் என்று தாவீது அறிந்த போது, குருவான அபியாத்தாரை நோக்கி, "எபோதை அணிந்து கொள்" என்று சொன்னான்.
10. பின்பு தாவீது, "இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரே, சவுல் என் பொருட்டுக் கெயிலாவுக்கு வந்து நகரை அழிக்கத் தயாராயிருப்பதை உன் ஊழியன் நான் கேள்விப்பட்டேன்.
11. கெயிலா மனிதர்கள் என்னை அவர் கையில் ஒப்படைப்பார்களா? உம் ஊழியன் கேள்விப்பட்டது போல், சவுல் வருவாரா? இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரே, இதை உம் அடியானுக்குத் தெரிவியும்" என்று வேண்டினான். அதற்கு, "அவன் வருவான்" என்று ஆண்டவர் சொன்னார்.
12. மறுபடியும் தாவீது, "கெயிலா மனிதர்கள் என்னையும் என்னுடன் இருக்கிற மனிதர்களையும் சவுல் கையில் ஒப்படைப்பார்களா?" என்று கேட்டான். அதற்கு ஆண்டவர், "ஒப்படைப்பார்கள்" என்று சொன்னார்.
13. ஆகையால் தாவீதும் அவனோடு இருந்த ஏறக்குறைய அறுநூறு பேர்களும் கெயிலாவை விட்டுப் புறப்பட்டு, திட்டமின்றி அங்கு மிங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். 'தாவீது கெயிலாவிலிருந்து ஓடித் தப்பிவிட்டான்' என்று சவுலுக்குத் தெரிவிக்கப்பட்டது; எனவே அவர் வெளியேறாதது போல் பாசாங்கு செய்தார்.
14. தாவீதோ, பாலைவனத்திலுள்ள மிகப் பாதுகாப்பான இடங்களில் தங்கி, ஜிப் என்ற பாலைவனத்தில் காடு அடர்ந்த ஒரு மலையில் தங்கியிருந்தான். சவுல் அவனைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று ஓயாமல் வழி தேடிக் கொண்டிருந்தார். ஆனால் ஆண்டவர் தாவீதை அவர் கையில் ஒப்படைக்கவில்லை.
15. பின்பு தன் உயிரை வாங்குவதற்குச் சவுல் புறப்பட்டார் என்று அறிந்து கொண்டதால் தாவீது பாலைவனத்திலுள்ள ஜிப் என்ற காட்டிலேயே இருந்து விட்டான்.
16. சவுலின் மகன் யோனத்தாசு காட்டிலிருந்த தாவீதிடம் வந்து கடவுளின் பெயரால் அவனைத் தேற்றி, "நீ எதற்கும் அஞ்சவேண்டாம்; என் தந்தை சவுல் கட்டாயம் உன்னைக் கண்டு பிடிக்கமாட்டார்.
17. நீ இஸ்ராயேலை ஆண்டு வருவாய்; அப்பொழுது நான் உனக்கு அடுத்த இடத்தை வகிப்பேன். இவையெல்லாம் என் தந்தை சவுலுக்குத் தெரியும்" என்று மொழிந்தான்.
18. அப்பொழுது அவர்கள் இருவரும் ஆண்டவருக்கு முன்பாக உடன்படிக்கை செய்து கொண்டார்கள். பிறகு தாவீது அந்தக் காட்டிலேயே தங்கினான்; யோனத்தாசோ தன் இல்லம் ஏகினான்.
19. பிறகு ஜிப் ஊரார் காபாவிலிருந்த சவுலிடம் போய், "தாவீது எங்கள் நாட்டை சேர்ந்த பாலைவனத்துக்குத் தெற்கேயுள்ள அக்கிலா மலையின் ஒரு காட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறான்.
20. அது மிகப் பாதுகாப்புள்ள இடம். நீர் விரும்பியது போல் இப்போதே வாரும். வருவீராயின், அவனை உம்மிடம் ஒப்படைப்பது எங்கள் பொறுப்பு" என்றனர்.
21. அதைக் கேட்டுச் சவுல், "நீங்கள் எனக்கு இரக்கம் காட்டினதால் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
22. நீங்கள் தயவு செய்து அங்குச் சென்று எல்லாவற்றையும் முன்னெச்சரிக்கையுடன் தயார் செய்யுங்கள். அவன் நடமாடுகிற இடம் எது என்றும், அவ்விடத்தில் அவனைக் கண்டவர்கள் எவர் என்றும் அக்கறையுடன் ஆராய்ந்து பாருங்கள். ஏனெனில் நான் அவனைப் பிடிக்க வழிதேடிக் கொண்டிருக்கிறேன் என்று அவனுக்குத் தெரியும்.
23. அவன் ஒளிந்து கொண்டிருக்கிற மறைவிடங்களை எல்லாம் ஆராய்ந்து உறுதிப்படுத்தினவுடனே நீங்கள் திரும்பி வந்து என்னிடம் சொல்லுங்கள். அப்பொழுது நான் உங்களோடு வருவேன். அவன் மண்ணுக்குள்ளே தன்னை மறைத்துக் கொண்டாலும் யூதாவின் எல்லா வீரர்களையும் நாம் கொண்டு வந்து கட்டாயமாய் அவனைக் கண்டு பிடிப்போம்" என்றார்.
24. அவர்கள் எழுந்து சவுலுக்கு முந்தியே ஜிப்புக்குப் போனார்கள். அந்நேரத்தில் தாவீதும் அவன் மனிதர்களும் எசிமோனுக்குத் தென்புறத்து வெளியிலுள்ள மாவோன் பாலைவனத்தில் இருந்தனர்.
25. அவனைத் தேடிச் சவுலும் அவர் ஆட்களும் புறப்பட்டுப் போனார்கள். இது தாவீதுக்குத் தெரிய வந்தது. உடனே அவன் பாறை அருகில் வந்து மாவோன் பாலைவனத்தில் தங்கினான். சவுல் இதைக் கேள்விப்பட்ட போது மாவோன் பாலைவனத்தில் தாவீதைத் தொடர்ந்து போனார்.
26. சவுல் மலையின் இப்பக்கத்திலும், தாவீதும் அவன் ஆட்களும் மலையின் அப்பக்கத்திலுமாக நடந்து கொண்டிருந்தார்கள். சவுலிடமிருந்து தப்பி விடலாம் என்ற நம்பிக்கை தாவீதுக்கு இல்லை; ஏனெனில் சவுலும் அவர் ஆட்களும் தாவீதையும் அவன் ஆட்களையும் பிடிக்கும் படி அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டார்கள்.
27. அப்போது ஒரு தூதன் சவுலிடம் வந்து, "பிலிஸ்தியர் உம் நாட்டைப் பிடிக்க வந்திருக்கிறார்கள். நீர் விரைந்து வாரும்" என்று சொன்னான்.
28. ஆகையால் சவுல் தாவீதைப் பின் தொடர்வதை விட்டுப் பிலிஸ்தியரை எதிர்க்கும்படி திரும்பினார். எனவே, அவ்விடத்திற்கு 'பிரிக்கிற கல்' என்று பெயரிடப்பட்டது.
29. (24:1) தாவீது அங்கிருந்து புறப்பட்டு எங்காதில் அதிகப் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருந்தான்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 31 Chapters, Current Chapter 23 of Total Chapters 31
1 சாமுவேல் 23:1

×

Alert

×

tamil Letters Keypad References