தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
1 சாமுவேல்
1. தாவீது ராமாத்தாவிலிருந்த நயோத்தை விட்டு ஓடி, யோனத்தாசிடம் வந்து, "உன் தந்தை என் உயிரைப் பறிக்கத் தேடுகிறாரே! நான் என்ன செய்தேன்? நான் என்ன தீங்கு செய்தேன்? நான் உன் தந்தைக்கு இழைத்த பழி என்ன?" என்று முறையிட்டான்.
2. அதற்கு அவன், "அப்படி நடவாதிருக்கட்டும்; நீ சாகமாட்டாய். எனக்கு தெரியப்படுத்தாமல் என் தந்தை பெரிய காரியமேனும் சிறிய காரியமேனும் ஒன்றும் செய்யமாட்டார். இக்காரியத்தை மட்டும் என் தந்தை எனக்குச் சொல்லாமல் மறைப்பாரோ? அப்படி நடக்காது" என்று அவனுக்குச் சொல்லி,
3. மறுபடியும் தாவீதுக்கு ஆணையிட்டான். அதற்கு அவன், "எனக்கு உன் கண்களில் தயவு கிடைத்துள்ளது என்று உன் தந்தை நன்றாய் அறிந்திருக்கிறார்; இது யோனத்தாசுக்குத் தெரிய வந்தால் அவன் மனம் வருந்துவானே என்பதற்காக அதை உனக்கு அறிவிக்கவில்லை போலும். எனக்கும் சாவுக்கும் ஓர் அடி தூரம் தான் இருக்கிறது என்று ஆண்டவரின் உயிரின் மேலும் உன் உயிரின் மேலும் ஆணையிடுகிறேன்" என்றான்.
4. அப்பொழுது, யோனத்தாசு தாவீதை நோக்கி, "நீ சொல்வதை எல்லாம் நான் செய்யத் தயார்" என்றான்.
5. தாவீது யோனத்தாசை நோக்கி, "இதோ நாளை மாதத்தின் முதல் நாள். அன்று நான் அரசரின் பந்தியில் அமர்வது வழக்கம். ஆனால் நான் மூன்றாம் நாள் மாலை வரை வெளியே ஒளிந்திருக்கும்படி நீ எனக்கு விடை கொடு.
6. உன்னுடைய தந்தை என்னைக் குறித்து விசாரித்தால், அதற்கு நீ, 'அவன் தன் சொந்த நகராகிய பெத்லகேமில் தன் குடும்பத்தார் அனைவருடனும் சிறப்புப் பலிகள் ஒப்புக்கொடுக்கச் சென்றிருக்கிறான். எனவே, அங்கு விரைந்து போக என்னிடம் அனுமதி கேட்டான் என்று சொல்.'
7. அவர், 'நல்லது' என்றால் உம் அடியான் நான் அமைதியுடன் இருப்பேன். அவர் கோபித்துக் கொண்டால், அவருடைய தீயகுணம் அதன் சிகரத்தை அடைந்து விட்டது என்று அறிந்து கொள்.
8. நான் ஆண்டவர் திருமுன் உன்னுடன் உடன்படிக்கை செய்தபடியால், உன் அடியான் மேல் இரக்கம் வை. என் மேல் ஏதாவது குற்றம் இருந்தால், உன் தந்தையிடம் என்னைக் கொண்டு போக வேண்டாம்; நீயே என்னைக் கொன்றுவிடு" என்றான்.
9. அதற்கு யோனத்தாசு, "அப்படி உனக்கு நேரிடாதிருப்பதாக! உனக்குத் தீங்கு செய்ய என் தந்தை முடிவு செய்திருக்கிறார் என்று நான் திட்டமாய் அறிந்தால், அதை உனக்குத் தெரிவிக்காமல் இருப்பேனா?" என்றான்.
10. தாவீது யோனத்தாசை நோக்கி, "ஒருவேளை உன் தந்தை என்னைக் குறித்து உன்னிடம் கடுமையாய் மறுமொழி சொன்னால் அதை யார் எனக்கு அறிவிப்பார்?" என்று கேட்டான்.
11. அதற்கு, யோனத்தாசு தாவீதை நோக்கி, "ஊருக்கு வெளியே வயலுக்குப் போவோம், வா" என்றான். இருவரும் வயலை அடைந்தனர்.
12. யோனத்தாசு தாவீதிடம், "இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரே, நாளையாவது மறுநாளாவது என் தந்தையின் கருத்தை நான் அறிந்து கொண்டு, அது தாவீதுக்கு நன்மை பயப்பதாய் இருக்குமென்றால் அதை அவனுக்கு உடனே தெரியப்படுத்துவேன்.
13. இல்லாவிடில் ஆண்டவர் எனக்குத் தகுந்த பிரதிபலன் அளிப்பாராக! என் தந்தை உன்மேல் கொண்டிருந்த பகையை விட்டு விடாதிருந்தால், நான் உனக்கு அதை வெளிப்படுத்துவேன். அப்பொழுது நீ சமாதானமாய் ஓடிப் போகும்படியும், ஆண்டவர் என் தந்தையோடு இருந்தது போல் உன்னுடனும் இருக்கும்படியும் உனக்குச் சொல்லி அனுப்புவேன்.
14. நான் இன்னும் உயிரோடு இருந்தால் ஆண்டவரை முன்னிட்டு நீ எனக்குத் தயை செய்; அதற்குள் நான் இறந்து போனால்,
15. ஆண்டவர் தாவீதின் எதிரிகள் அனைவரையும் பூமியினின்று அழித்தொழிக்கட்டும். அப்போது நீ அருள் கூர்ந்து என் வீட்டில் மேல் என்றும் இரக்கமாய் இருக்க வேண்டும். நான் இவ்வுடன்படிக்கையை மீறி நடந்தால், ஆண்டவர் என் வீட்டிலிருந்து என்னை அழித்தொழித்துத் தாவீதைத் தன் எதிரிகளின் கையினின்று மீட்பாராக" என்றான்.
16. இவ்விதமாய் யோனத்தாசு தாவீதின் குடும்பத்தாரோடு உடன்படிக்கை செய்து கொண்டான். ஆண்டவரும் தாவீதின் எதிரிகளைப் பழிவாங்கினார்.
17. யோனத்தாசு தாவீதின்மேல் அன்பு கூர்ந்திருந்தபடியால் பல முறை அப்படியே ஆணையிட்டுச் சத்தியம் செய்தான். ஏனெனில் தாவீதைத் தன்னுயிர் போல் அவன் அன்பு செய்து வந்திருந்தான்.
18. பிறகு யோனத்தாசு தாவீதை நோக்கி, "நாளை மாதத்தின் முதல் நாள். என் தந்தை உன்னைப் பற்றிக் கேட்பாரே.
19. இரண்டு நாள்வரை நீ அங்கு இருக்க வேண்டும் அன்றோ? வேலை செய்யக் கூடுமான மூன்றாவது நாளில் நீ உடனே இறங்கி மறைவிடத்திற்கு வந்து எசேல் என்னும் பெயர் கொண்ட கல் அருகில் அமர்ந்திரு.
20. அப்பொழுது அம்பு எய்யப் பழகுவது போல் நான் அந்தக் கல் இருக்கும் திசையில் மூன்று அம்புகளை எய்வேன்.
21. பிறகு ஒரு சிறுவனை நோக்கி, 'நீ போய் அம்புகளை எடுத்துவா' என்று சொல்லி அனுப்புவேன்.
22. அப்போது நான் அவனைப் பார்த்து, 'இதோ அம்புகள் உனக்கு இப்பக்கத்தில் இருக்கின்றன; அவற்றை எடுத்துவா' என்று சொல்வேனேயாகில், நீ என்னிடம் வா; ஏனெனில் உனக்கு அமைதி கிடைக்கும். ஆண்டவர் மேல் ஆணை, உனக்குத் தீங்கு ஒன்றும் நேரிடாது. ஆனால், 'இதோ அம்புகள் உனக்கு அப்பால் இருக்கின்றன' என்று நான் சிறுவனுக்குச் சொல்வேனேயாகில், நீ அமைதியுடன் ஓடிப்போக வேண்டியது தான். ஏனெனில் ஆண்டவரே உன்னை அனுப்பி வைக்கிறார்.
23. நீயும் நானும் செய்து கொண்ட இவ்வுடன்படிக்கைக்கு ஆண்டவரே என்றென்றும் நம் இருவருக்கும் இடையே சாட்சியாய் இருப்பாராக" என்றான்.
24. ஆகையால் தாவீது வயலில் ஒளிந்து கொண்டான். மாதத்தின் முதல் நாளும் வந்தது.
25. அரசர் உணவருந்த உட்கார்ந்தார். அவர் தம் வழக்கப்படி சுவர் அருகே இருந்த தம் இருக்கையில் அமர்ந்தபோது யோனத்தாசு எழுந்தான். அப்நேர் சவுலின் பக்கத்தில் உட்கார்ந்தான்; அப்பொழுது தாவீதின் இடம் காலியாயிருந்தது.
26. அன்று சவுல் ஒன்றும் சொல்லவில்லை; 'ஒருவேளை அவன் தீட்டுப்பட்டு இன்னும் தூய்மையாகவில்லை போலும்' என்று சவுல் நினைத்திருந்தார்.
27. மாதத்தின் இரண்டாம் நாளும் வந்தது; தாவீதின் இடம் இன்னும் காலியாகவே இருந்தது. அதைக் கண்ட சவுல் தம் மகன் யோனத்தாசை நோக்கி, "இசாயி மகன் நேற்றும் இன்றும் சாப்பிட வராதது ஏன்?" என்று கேட்டார்.
28. அதற்கு யோனத்தாசு, "அவன் பெத்லகேமுக்குப் போக என்னை வருத்திக் கேட்டுக் கொண்டு:
29. 'என் ஊரில் ஆடம்பரப்பலி இருக்கிறது; என் சகோதரர்களில் ஒருவன் தன்னிடம் வரும்படி கேட்டுள்ளான்; இப்பொழுது உமது கண்ணில் எனக்குத் தயை கிடைத்துள்ளதால், என்னை அனுப்பி வையும்; நான் விரைவில் சென்று என் சகோதரர்களைப் பார்த்து வருகிறேன்' என்றான். இதனால் தான் அவன் அரச பந்திக்கு வரவில்லை" என்றான்.
30. சவுல் யோனத்தாசு மேல் கோபமுற்று, "வேசி மகனே பேசாதே! உனக்கும் உன் மானம் கெட்ட தாய்க்கும் வெட்கமாய் இருக்கும் அளவுக்கு நீ இசாயி மகனுக்கு அன்பு செய்கிறாய் என்று எனக்குத் தெரியாதோ?
31. இசாயி மகன் பூமியின் மேல் உயிரோடு இருக்கும் வரை, நீயும் நிலைத்திருக்க மாட்டாய்; உன் ஆட்சியும் நிலைத்திருக்காது. ஆகையால் இப்போதே அவனை அழைத்து என்னிடம் கொண்டுவா; ஏனெனில் அவன் சாகவேண்டும்" என்று சொன்னார்.
32. யோனத்தாசு தன் தந்தை சவுலுக்கு மறுமொழியாக, "அவன் ஏன் சாக வேண்டும்? அவன் என்ன செய்தான் ? என்றான்.
33. சவுல் அவனைக் குத்திப் போட ஈட்டியை எடுத்தார். தாவீதைக் கொன்று போடத் தன் தந்தை தீர்மானித்திருக்கிறார் என்று யோனத்தாசு அறிந்து கொண்டான்.
34. எனவே கோபத்தோடு பந்தியை விட்டு எழுந்து மாதத்தின் இரண்டாம் நாளாகிய அன்று ஒன்றும் சாப்பிடாது இருந்தான். ஏனெனில் தன் தந்தை தன்னை அவமானப் படுத்தினதைப் பற்றியும் தாவீதைப் பற்றியும் மனம் வருந்திக் கொண்டிருந்தான்.
35. பொழுது விடிந்த போது யோனத்தாசு தாவீதுடன் உடன்பாடு செய்திருந்தபடி தன்னுடன் ஒரு சிறுவனை அழைத்துக் கொண்டு வயலுக்குப் போனான்.
36. சிறுவனை நோக்கி, "நீ போய் நான் எறியும் அம்புகளை எடுத்து வா" என்றான். சிறுவன் ஓடிய போது அவனுக்கு அப்பால் ஓர் அம்பை எய்தான்.
37. யோனத்தாசு விட்ட அம்பு கிடந்த இடத்திற்குச் சிறுவன் வந்த போது, யோனத்தாசு சிறுவனுக்குப் பின்னால் குரல் எழுப்பி, "அம்பு உனக்கு இன்னும் அப்பால் இருக்கிறது" என்றான்.
38. மறுபடியும் யோனத்தாசு சிறுவனுக்குப் பின்னால் கூவி, "நிற்காதே, விரைந்து போ" என்றான். யோனத்தாசின் சிறுவன் அம்புகளைப் பொறுக்கி எடுத்துத் தன் தலைவனிடம் கொண்டு வந்தான்.
39. யோனத்தாசும் தாவீதும் மட்டுமே அதன் பொருளை அறிந்திருந்தார்களேயன்றிச் சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
40. அப்பொழுது யோனத்தாசு சிறுவனிடம் தன் ஆயுதங்களைக் கொடுத்து விட்டு, "இவற்றை நீ நகருக்குக் கொண்டு போ" என்றான்.
41. சிறுவன் சென்ற பின், தாவீது தெற்கே இருந்த இடத்திலிருந்து எழுந்து, தரைமட்டும் குனிந்து விழுந்து மும்முறை அவனை வணங்கினான். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முத்தம் செய்து அழுதார்கள்.
42. பின்பு யோனத்தாசு தாவீதை நோக்கி, "நீ அமைதியோடு போ. ஆண்டவர் பெயரால் நாம் இருவரும் செய்து கொண்ட உடன்படிக்கையைப் பொருத்த மட்டில், ஆண்டவர் உனக்கும் எனக்கும், உன் சந்ததிக்கும் என் சந்ததிக்கும் நடுவே என்றும் சாட்சியாய் இருப்பாராக!" என்று சொன்னான். (43) பிறகு தாவீது எழுந்து சென்றான். யோனத்தாசு தன் நகர் திரும்பினான்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 31 Chapters, Current Chapter 20 of Total Chapters 31
1 சாமுவேல் 20:21

×

Alert

×

tamil Letters Keypad References