தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
1 பேதுரு
1. ஆகவே, கிறிஸ்து தம் ஊன் உடலில் பாடுபட்டதை நினைத்து, அவர் அப்போது கொண்டிருந்த உள்ளக் கருத்தை நீங்களும் படைக்கலமாக அணிந்து கொள்ளுங்கள்.
2. உடலில் துன்புற்றவன், பாவத்தினின்று விலகிவிடடான்; இனி அவன் தன் வாழ்வின் எஞ்சிய நாட்களில் மனித இச்சைகளின்படி வாழாமல், கடவுளின் திருவுளப்படி வாழ்பவன் ஆகிறான்.
3. புறமதத்தினர் செய்ய விரும்புவதையெல்லாம் நீங்கள் கடந்த காலத்தில் செய்து வந்தது போதும். அப்போது காமவெறி, தீய இச்சை, மது மயக்கம், களியாட்டம், குடிவெறி, வெறுப்புக்குரிய சிலை வழிபாடு இவற்றில் உழன்றீர்கள்.
4. இப்போதோ நீங்கள் அத்தகைய வெறி கொண்ட வாழ்க்கையில் தங்களோடு சேர்ந்து உழலாததைக் கண்டு, அவர்கள் அதைப் புரிந்துகொள்ள முடியாமல், உங்களைப் பழித்துரைக்கின்றனர்.
5. வாழ்வோருக்கும், இறந்தோருக்கும் தீர்ப்பிடத் தயாராயிருப்பவரிடம் அவர்கள் கணக்குக் கொடுப்பார்கள்.
6. இறந்தோர்க்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது எதற்காகவெனில், அவர்கள் உடலைப் பொருத்த மட்டில் எல்லா மனிதர்க்குமுரிய தீர்ப்புப் பெற்றிருந்தாலும், தேவ ஆவியைப் பெற்ற நிலையில் கடவுளுக்குரிய வாழ்வு பெறுவதற்காகவே.
7. அனைத்தின் முடிவும் நெருங்கிவிட்டது. எனவே, நீங்கள் செபத்தில் ஈடுபடுவதற்குச் சம நிலையோடும், மட்டுமிதத்தோடும் வாழுங்கள்.
8. அனைத்திற்கும் மேலாக, ஒருவர்க்கொருவர் எப்போதும் அன்பு காட்டுங்கள்; ஏனெனில், அன்பு திரளான பாவங்களை அகற்றி விடும்.
9. முணுமுணுக்காமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.
10. உங்களுள் ஒவ்வொருவரும் தாம் பெற்ற வரத்திற்கு ஏற்றவாறு கடவுளுடைய பலவகைப்பட்ட அருளின் சீரிய கண்காணிப்பாளர் என, கிடைத்த வரத்தைப் பிறர்க்குப் பணிபுரியப் பயன் படுத்துங்கள்.
11. பேசும் வரத்தைப் பெற்றவன், கடவுள் மொழியையே பேசுபவன்போல் பேசட்டும்; பணிசெய்யும் வரத்தைப் பெற்றவன், கடவுள் அளிக்கும் ஆற்றலை அடைந்தவன் போல் பணி செய்யட்டும்; இவ்வாறு இயேசு கிறிஸ்துவின் வழியாகக் கடவுள் அனைத்திலும் மகிமை அடைவார். அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றும் உரித்தாகும். ஆமென்.
12. அன்பிற்குரியவர்களே, துன்பத் தீயில் நீங்கள் புடமிடப்படுகையில், ஏதோ எதிர்பாராதது நேர்ந்து விட்டதென மலைத்துப் போகாதீர்கள்.
13. எந்த அளவிற்குக் கிறிஸ்துவின் பாடுகளில் நீங்கள் பங்கு கொள்ளுகிறீர்களோ, அந்த அளவிற்கு அகமகிழுங்கள்; அவரது மகிமை வெளிப்படும்போது, உவப்புடன் அக்களிப்புக் கொள்வீர்கள்.
14. இயேசுவினுடைய பெயரின் பொருட்டுப் பிறர் உங்களை வசை கூறினால், நீங்கள் பேறுபெற்றவர்கள்; அப்போது இறைமாட்சிமையும் கடவுளின் ஆவியும் உங்கள் மீது தங்கும்.
15. ஆனால், உங்களுள் எவனும் கொலைஞன் என்றோ, திருடன் தீமை செய்பவன் என்றோ, பிறர் காரியங்களில் தலையிடுபவன் என்றோ துன்பத்திற்குள்ளாதல் கூடாது.
16. மாறாக, ஒருவன் கிறிஸ்தவன் என்பதற்காகத் துன்பத்திற்கு உள்ளானால், அதைப் பற்றி வெட்கப்பட வேண்டாம்; அப்பெயரை பெற்றிருப்பதால், அவன் கடவுளை மகிமைப் படுத்துவானாக.
17. இதோ, தீர்ப்புத் தொடங்க வேண்டிய காலம் வந்துவிட்டது. முதலில் அது கடவுளுடைய குடும்பத்திலேயே தொடங்குகிறதென்றால், கடவுளின் நற்செய்தியை ஏற்காதவர்களின் முடிவு என்னவாகும்?
18. நீதிமான்களே மீட்படைவது அரிதென்றால் இறைப்பற்றில்லாதவர், பாவிகள் இவர்கள் கதி என்னவாகும்?"
19. எனவே, கடவுளின் திருவுளப்படி துன்பத்துக்கு ஆளாகிறவர்களும் நன்மை செய்வதில் நிலைத்திருந்து, படைத்தவரிடம் தம் ஆன்மாக்களை ஒப்படைப்பார்களாக; அவர் சொல் தவற மாட்டார்.
மொத்தம் 5 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 4 / 5
1 2 3 4 5
1 ஆகவே, கிறிஸ்து தம் ஊன் உடலில் பாடுபட்டதை நினைத்து, அவர் அப்போது கொண்டிருந்த உள்ளக் கருத்தை நீங்களும் படைக்கலமாக அணிந்து கொள்ளுங்கள். 2 உடலில் துன்புற்றவன், பாவத்தினின்று விலகிவிடடான்; இனி அவன் தன் வாழ்வின் எஞ்சிய நாட்களில் மனித இச்சைகளின்படி வாழாமல், கடவுளின் திருவுளப்படி வாழ்பவன் ஆகிறான். 3 புறமதத்தினர் செய்ய விரும்புவதையெல்லாம் நீங்கள் கடந்த காலத்தில் செய்து வந்தது போதும். அப்போது காமவெறி, தீய இச்சை, மது மயக்கம், களியாட்டம், குடிவெறி, வெறுப்புக்குரிய சிலை வழிபாடு இவற்றில் உழன்றீர்கள். 4 இப்போதோ நீங்கள் அத்தகைய வெறி கொண்ட வாழ்க்கையில் தங்களோடு சேர்ந்து உழலாததைக் கண்டு, அவர்கள் அதைப் புரிந்துகொள்ள முடியாமல், உங்களைப் பழித்துரைக்கின்றனர். 5 வாழ்வோருக்கும், இறந்தோருக்கும் தீர்ப்பிடத் தயாராயிருப்பவரிடம் அவர்கள் கணக்குக் கொடுப்பார்கள். 6 இறந்தோர்க்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது எதற்காகவெனில், அவர்கள் உடலைப் பொருத்த மட்டில் எல்லா மனிதர்க்குமுரிய தீர்ப்புப் பெற்றிருந்தாலும், தேவ ஆவியைப் பெற்ற நிலையில் கடவுளுக்குரிய வாழ்வு பெறுவதற்காகவே. 7 அனைத்தின் முடிவும் நெருங்கிவிட்டது. எனவே, நீங்கள் செபத்தில் ஈடுபடுவதற்குச் சம நிலையோடும், மட்டுமிதத்தோடும் வாழுங்கள். 8 அனைத்திற்கும் மேலாக, ஒருவர்க்கொருவர் எப்போதும் அன்பு காட்டுங்கள்; ஏனெனில், அன்பு திரளான பாவங்களை அகற்றி விடும். 9 முணுமுணுக்காமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள். 10 உங்களுள் ஒவ்வொருவரும் தாம் பெற்ற வரத்திற்கு ஏற்றவாறு கடவுளுடைய பலவகைப்பட்ட அருளின் சீரிய கண்காணிப்பாளர் என, கிடைத்த வரத்தைப் பிறர்க்குப் பணிபுரியப் பயன் படுத்துங்கள். 11 பேசும் வரத்தைப் பெற்றவன், கடவுள் மொழியையே பேசுபவன்போல் பேசட்டும்; பணிசெய்யும் வரத்தைப் பெற்றவன், கடவுள் அளிக்கும் ஆற்றலை அடைந்தவன் போல் பணி செய்யட்டும்; இவ்வாறு இயேசு கிறிஸ்துவின் வழியாகக் கடவுள் அனைத்திலும் மகிமை அடைவார். அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றும் உரித்தாகும். ஆமென். 12 அன்பிற்குரியவர்களே, துன்பத் தீயில் நீங்கள் புடமிடப்படுகையில், ஏதோ எதிர்பாராதது நேர்ந்து விட்டதென மலைத்துப் போகாதீர்கள். 13 எந்த அளவிற்குக் கிறிஸ்துவின் பாடுகளில் நீங்கள் பங்கு கொள்ளுகிறீர்களோ, அந்த அளவிற்கு அகமகிழுங்கள்; அவரது மகிமை வெளிப்படும்போது, உவப்புடன் அக்களிப்புக் கொள்வீர்கள். 14 இயேசுவினுடைய பெயரின் பொருட்டுப் பிறர் உங்களை வசை கூறினால், நீங்கள் பேறுபெற்றவர்கள்; அப்போது இறைமாட்சிமையும் கடவுளின் ஆவியும் உங்கள் மீது தங்கும். 15 ஆனால், உங்களுள் எவனும் கொலைஞன் என்றோ, திருடன் தீமை செய்பவன் என்றோ, பிறர் காரியங்களில் தலையிடுபவன் என்றோ துன்பத்திற்குள்ளாதல் கூடாது. 16 மாறாக, ஒருவன் கிறிஸ்தவன் என்பதற்காகத் துன்பத்திற்கு உள்ளானால், அதைப் பற்றி வெட்கப்பட வேண்டாம்; அப்பெயரை பெற்றிருப்பதால், அவன் கடவுளை மகிமைப் படுத்துவானாக. 17 இதோ, தீர்ப்புத் தொடங்க வேண்டிய காலம் வந்துவிட்டது. முதலில் அது கடவுளுடைய குடும்பத்திலேயே தொடங்குகிறதென்றால், கடவுளின் நற்செய்தியை ஏற்காதவர்களின் முடிவு என்னவாகும்? 18 நீதிமான்களே மீட்படைவது அரிதென்றால் இறைப்பற்றில்லாதவர், பாவிகள் இவர்கள் கதி என்னவாகும்?" 19 எனவே, கடவுளின் திருவுளப்படி துன்பத்துக்கு ஆளாகிறவர்களும் நன்மை செய்வதில் நிலைத்திருந்து, படைத்தவரிடம் தம் ஆன்மாக்களை ஒப்படைப்பார்களாக; அவர் சொல் தவற மாட்டார்.
மொத்தம் 5 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 4 / 5
1 2 3 4 5
×

Alert

×

Tamil Letters Keypad References