1. [PS]யூதாவின் அரசர்களான யோதாம், ஆகாஸ், எசேக்கியா ஆகியோர்களின் ஆட்சிக்காலத்தில், மோரேசேத் ஊரைச்சேர்ந்த மீகா என்பவனுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை இதுவே. சமாரியாவையும், எருசலேமையும் குறித்து அவன் கண்ட தரிசனம்: [PE][PBR] [PBR]
2. [QS]மக்கள் கூட்டங்களே, நீங்கள் எல்லோரும் கேளுங்கள், [QE][QS2]பூமியே, அதில் உள்ளவர்களே, செவிகொடுங்கள், [QE][QS]ஆண்டவராகிய யெகோவா உங்களுக்கு எதிராய் சாட்சி கூறப்போகிறார், [QE][QS2]யெகோவா பரலோகத்திலுள்ள தமது பரிசுத்த ஆலயத்திலிருந்து பேசப்போகிறார். [QE]
3. {#1சமாரியா, எருசலேமுக்கு எதிரான நியாயத்தீர்ப்பு, } [QS]நோக்கிப்பாருங்கள்; யெகோவா தமது உறைவிடத்திலிருந்து வருகிறார். [QE][QS2]அவர் இறங்கி பூமியின் உயர்ந்த இடங்களில் உலாவுகிறார். [QE]
4. [QS]நெருப்பின் முன் மெழுகு போலவும், [QE][QS2]மலைச்சரிவில் பாய்ந்தோடும் தண்ணீர் போலவும் [QE][QS]மலைகள் அவருக்குக் கீழ் உருகுகின்றன. [QE][QS2]பள்ளத்தாக்குகள் பிளக்கின்றன. [QE]
5. [QS]யாக்கோபின் மீறுதல்களினாலும், [QE][QS2]இஸ்ரயேல் வீட்டாரின் பாவங்களினாலுமே இவை எல்லாம் நடக்கின்றன. [QE][QS]யாக்கோபின் மீறுதல் என்ன? [QE][QS2]சமாரியா அல்லவா? [QE][QS]யூதாவின் வழிபாட்டு மேடை எது? [QE][QS2]எருசலேம் அல்லவா? [QE][PBR]
6. [QS]“எனவே யெகோவா சொல்கிறதாவது: [QE][QS2]நான் சமாரியாவை ஒரு இடிபாட்டுக் குவியலாக்குவேன். [QE][QS]திராட்சைத் தோட்ட நிலமாக அதை மாற்றுவேன். [QE][QS2]அவற்றின் கற்களை பள்ளத்தாக்கில் கொட்டி, அஸ்திபாரங்களை வெறுமையாக்குவேன். [QE]
7. [QS]சமாரியாவின் விக்கிரகங்கள் யாவும் [QE][QS2]துண்டுகளாய் நொறுக்கப்படும்; [QE][QS]அவள் ஆலயத்திற்குக் கொடுத்த அன்பளிப்புகள் எல்லாம் [QE][QS2]நெருப்பில் சுட்டெரிக்கப்படும்; [QE][QS2]அவளுடைய உருவச்சிலைகள் அனைத்தையும் அழிப்பேன். [QE][QS]அவள் தன் அன்பளிப்புகளை கோயில் வேசிகளின் கூலியிலிருந்து பெற்றபடியால், [QE][QS2]பகைவர்கள் அவற்றைத் திரும்பவும் வேசிகளின் கூலியாகவே பயன்படுத்துவார்கள்.” [QE]
8. {#1மீகாவின் அழுகையும் புலம்பலும் } [QS]சமாரியாவின் அழிவின் நிமித்தம் நான் அழுது புலம்புவேன்; [QE][QS2]வெறுங்காலோடும் நிர்வாணத்துடனும் நடந்து திரிவேன். [QE][QS]நரியைப்போல் ஊளையிட்டு, [QE][QS2]ஆந்தையைப்போல் அலறுவேன். [QE]
9. [QS]ஏனெனில் சமாரியாவின் புண் குணமாக்க முடியாதது; [QE][QS2]அது யூதாவரை வந்துள்ளது. [QE][QS]என் மக்கள் வாழும் [QE][QS2]எருசலேம் வரையுங்கூட அது வந்துள்ளது. [QE]
10. [QS]அதை காத் பட்டணத்தில் சொல்லவேண்டாம்; [QE][QS2]கொஞ்சமும் அழவே வேண்டாம். [QE][QS]பெத் அப்பிராவிலே [QE][QS2]புழுதியில் புரளுங்கள். [QE]
11. [QS]சாப்பீரில் வாழ்கிறவர்களே, நிர்வாணத்துடனும் வெட்கத்துடனும் கடந்துபோங்கள். [QE][QS2]சாயனானில் வாழ்கிறவர்கள் [QE][QS]வெளியே வரமாட்டார்கள். [QE][QS2]பெத் ஏசேல் துக்கங்கொண்டாடுகிறது. [QE][QS]அதற்குரிய பாதுகாப்பு [QE][QS2]உன்னிடமிருந்து எடுபட்டுப் போயிற்று. [QE]
12. [QS]மாரோத்தில் வாழ்கிறவர்கள் வேதனையில் துடித்து, [QE][QS2]விடுதலைக்காகக் காத்திருக்கின்றனர். [QE][QS]ஏனெனில், யெகோவாவிடமிருந்து பேராபத்து வந்திருக்கிறது. [QE][QS2]அது எருசலேமின் வாசலுக்கும் வந்திருக்கிறது. [QE]
13. [QS]லாகீசில் வாழ்கிறவர்களே, [QE][QS2]குதிரைகளை தேரில் பூட்டுங்கள்! [QE][QS]நீங்களே சீயோன் மகளுடைய பாவத்தின் ஆரம்பம். [QE][QS2]ஏனெனில் இஸ்ரயேலின் மீறுதல்கள் உங்களிடத்திலேயும் காணப்பட்டன. [QE]
14. [QS]ஆதலால் யூதாவின் மக்களே, [QE][QS2]நீங்கள் மோர்ஷேத் காத்துக்கு பிரியாவிடை சொல்லி அனுப்பிவிடுவீர்கள். [QE][QS]அக்சீப் பட்டணம் [QE][QS2]இஸ்ரயேலின் அரசர்களுக்கு ஏமாற்றமாகும். [QE]
15. [QS]மரேஷாவில் வாழ்கிறவர்களே, [QE][QS2]உங்களுக்கெதிராக வெற்றி வீரனொருவனை யெகோவா கொண்டுவருவார். [QE][QS]இஸ்ரயேலின் மேன்மையான தலைவர்கள் [QE][QS2]அதுல்லாம் குகையில் ஒளிந்துகொள்வார்கள். [QE]
16. [QS]நீங்கள் மகிழ்ச்சிகொள்கிற பிள்ளைகளுக்காகத் துக்கங்கொண்டாடி, [QE][QS2]உங்கள் தலையை மொட்டையடியுங்கள்; [QE][QS]அவர்கள் உங்களைவிட்டு நாடு கடத்தப்படப் போவதால், [QE][QS2]கழுகின் தலையைப்போல் உங்கள் தலைகளை மொட்டையடித்துக் கொள்ளுங்கள். [QE]