1. {#1இஸ்ரயேலுக்குத் தண்டனை } [QS]இஸ்ரயேலே, நீ மகிழாதே; [QE][QS2]மற்ற நாடுகளைப்போல் களிகூராதே; [QE][QS]ஏனெனில் நீ உனது இறைவனுக்கு உண்மையில்லாமல் இருக்கிறாய். [QE][QS2]நீ தானியத்தை சூடடிக்கும் எல்லா களங்களிலும் [QE][QS2]வேசித்தனத்தின் கூலியைப் பெற விரும்புகிறாய். [QE]
2. [QS]சூடடிக்கும் களங்களும் திராட்சை ஆலைகளும் மக்களுக்கு உணவளிக்காது; [QE][QS2]புதுத் திராட்சை இரசம் அவர்களுக்குக் கிடைக்காது. [QE]
3. [QS]அவர்கள் யெகோவாவின் நாட்டில் குடியிருக்கமாட்டார்கள்; [QE][QS2]ஆனால் எப்பிராயீம் எகிப்திற்குத் திரும்பிப் போகும், [QE][QS2]அசீரியாவில் அசுத்தமான உணவைச் சாப்பிடும். [QE]
4. [QS]அவர்கள் யெகோவாவுக்கு திராட்சை இரசக் காணிக்கைகளைச் செலுத்தமாட்டார்கள்; [QE][QS2]அவர்களுடைய பலிகள் அவரை மகிழ்விக்காது. [QE][QS]அப்படிப்பட்ட பலிகள், அவர்களுக்கு துக்க வீட்டு உணவைப் போன்றவை; [QE][QS2]அவற்றைச் சாப்பிடுகிறவர்கள் எல்லோரும் அசுத்தமாயிருப்பார்கள். [QE][QS]ஏனெனில், இந்த உணவு அவர்களுக்கானதாக மட்டுமே இருக்கும்; [QE][QS2]அது யெகோவாவின் ஆலயத்திற்குள் வருவதில்லை. [QE][PBR]
5. [QS]யெகோவாவின் பண்டிகை நாட்களிலும், [QE][QS2]நியமிக்கப்பட்ட உங்கள் கொண்டாட்ட நாட்களிலும் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? [QE]
6. [QS]உங்களில் சிலர் அழிவிலிருந்து தப்பி ஓடினாலுங்கூட, [QE][QS2]எகிப்து அவர்களை அழிவுக்கு ஒன்றுசேர்க்கும்; [QE][QS2]மெம்பிஸ் அவர்களை அடக்கம்பண்ணும். [QE][QS]அவர்களுடைய வெள்ளியினாலான திரவியங்களை நெரிஞ்சில்கள் மூடும்; [QE][QS2]அவர்களுடைய கூடாரத்தையும் முட்செடிகள் மூடும். [QE]
7. [QS]தண்டனையின் நாட்கள் சமீபமாயிருக்கின்றன; [QE][QS2]கணக்குக் கேட்கும் நாட்களும் நெருங்கிவிட்டன. [QE][QS2]இதை இஸ்ரயேல் தெரிந்துகொள்ளட்டும். [QE][QS]உனது பாவங்கள் அநேகமாயிருக்கிறதினாலும், [QE][QS2]உனது பகைமையுணர்வு அதிகமாயிருக்கிறதினாலும் [QE][QS]இறைவாக்கினன் மூடனாக எண்ணப்படுகிறான். [QE][QS2]இறைவனால் தூண்டுதல் பெற்றவன் பைத்தியக்காரனாய் எண்ணப்படுகிறான். [QE]
8. [QS]என் இறைவனோடு இறைவாக்கினனே [QE][QS2]எப்பிராயீமுக்குக் காவலாளியாய் இருக்கிறேன். [QE][QS]ஆயினும் அவனுடைய வழிகளிலெல்லாம் கண்ணிகள் காத்திருக்கின்றன; [QE][QS2]அவனுடைய இறைவனின் ஆலயத்தில் பகைமை காத்திருக்கிறது. [QE]
9. [QS]கிபியாவின் நாட்களில் இருந்ததுபோல், [QE][QS2]அவர்கள் சீர்கேட்டில் மூழ்கியிருக்கிறார்கள். [QE][QS]யெகோவா அவர்களின் கொடுமையை நினைவிற்கொண்டு, [QE][QS2]அவர்களுடைய பாவங்களுக்காக அவர்களைத் தண்டிப்பார். [QE][PBR]
10. [QS]நான் இஸ்ரயேலை முதன்முதல் கண்டபோது, [QE][QS2]அது பாலைவனத்தில் திராட்சைப் பழங்களைக் [QE][QS2]கண்டுபிடித்ததுபோல் எனக்கு இருந்தது; [QE][QS]நான் உனது முற்பிதாக்களைக் கண்டபோது, [QE][QS2]அது அத்திமரத்தில் அதன் பருவகாலத்தின் [QE][QS2]முதல் பழங்களைப் பார்ப்பதுபோல் இருந்தது. [QE][QS]ஆனால், அவர்கள் பாகால் பேயோரிடத்திற்கு வந்தபோது, [QE][QS2]வெட்கக்கேடான பாகால் விக்கிரகத்திற்கு தங்களை அர்ப்பணித்து, [QE][QS2]தாங்கள் நேசித்த அந்த விக்கிரகத்தைப் போலவே, கேவலமானவர்களானார்கள். [QE]
11. [QS]எப்பிராயீமின் மகிமை ஒரு பறவையைப்போல் பறந்தோடிவிடும்; [QE][QS2]அவர்களுக்குள் பிறப்போ, கருவில் சுமப்பதோ [QE][QS2]அல்லது கருத்தரிப்பதோ இல்லை. [QE]
12. [QS]அவர்கள் பிள்ளைகளைப் பெற்று வளர்த்தாலுங்கூட, [QE][QS2]அவர்களுடைய பிள்ளைகள் ஒவ்வொருவரையும் அவர்கள் இழக்கும்படி நான் செய்வேன். [QE][QS]நான் அவர்களைவிட்டு விலகும்போது, [QE][QS2]அவர்களுக்கு ஐயோ கேடு! [QE]
13. [QS]இன்பமான இடத்தில் அமைந்திருக்கும் தீரு நாட்டைப்போல், [QE][QS2]நான் எப்பிராயீமை கண்டேன். [QE][QS]ஆனால், எப்பிராயீம் தன் பிள்ளைகளைக் [QE][QS2]கொலைக்குக் கொடுக்கும்படி பகைவனைக் கூட்டிவருவான். [QE][PBR]
14. [QS]யெகோவாவே, அவர்களுக்கு எதைக் கொடுப்பீர்? [QE][QS2]கருச்சிதைவு உண்டாகும் கர்ப்பப்பைகளையும், [QE][QS]பால் சுரக்க முடியாத மார்பகங்களையும் [QE][QS2]அவர்களுக்குக் கொடும். [QE][PBR]
15. [QS]“கில்காலிலே அவர்கள் செய்த கொடுமைக்காக [QE][QS2]அங்கே நான் அவர்களை வெறுத்தேன். [QE][QS]அவர்களுடைய பாவச் செயல்களின் நிமித்தம், [QE][QS2]நான் எனது நாட்டிலிருந்து அவர்களைத் துரத்துவேன். [QE][QS]நான் இனிமேலும் அவர்களில் அன்பாயிருக்கமாட்டேன், [QE][QS2]அவர்களுடைய தலைவர்கள் எல்லோரும் கலகக்காரர்கள். [QE]
16. [QS]எப்பிராயீம் மக்கள் வெட்டுண்டு வீழ்ந்தார்கள், [QE][QS2]அவர்களின் வேர் உலர்ந்துபோயிற்று; [QE][QS2]இனிமேல் அவர்கள் கனி கொடுப்பதில்லை. [QE][QS]அவர்கள் பிள்ளைகளைப் பெற்றாலும், [QE][QS2]அவர்களுடைய அருமையான சந்ததிகளை நான் நீக்கிப்போடுவேன்.” [QE][PBR]
17. [QS]என் இறைவன் அவர்களைத் தள்ளிவிடுவார், [QE][QS2]ஏனெனில் அவர்கள் அவருக்குக் கீழ்ப்படியவில்லை; [QE][QS2]அவர்கள் பிற நாடுகளுக்குள்ளே அலைந்து திரிகிறவர்களாயிருப்பார்கள். [QE][PBR]