1. {#1இஸ்ரயேல் அழிக்கப்படுதல் } [PS]யெகோவா பலிபீடத்தின் அருகே நிற்பதைக் கண்டேன்: [PE][QS]அவர் சொன்னதாவது: தூண்களின் உச்சியை இடித்துப்போடுங்கள். [QE][QS2]தூண்களின் வாசல் நிலைகள் அசையட்டும். [QE][QS]அவற்றை மக்கள் எல்லோரின் தலைகள்மேலும் விழப்பண்ணுங்கள். [QE][QS2]மீந்திருப்போரை நான் வாளினால் கொல்லுவேன். [QE][QS]ஒருவனும் தப்பி ஓடமாட்டான், [QE][QS2]ஒருவனுமே தப்பமாட்டான். [QE]
2. [QS]பாதாளத்தின் ஆழங்கள்வரை அவர்கள் தோண்டிக்கொண்டு போனாலும், [QE][QS2]அங்கிருந்தும் என் கை அவர்களைப் பிடித்தெடுக்கும். [QE][QS]அவர்கள் வானங்கள்வரை ஏறினாலும், [QE][QS2]அங்கிருந்தும் அவர்களை கீழே கொண்டுவருவேன். [QE]
3. [QS]கர்மேல் மலையுச்சியில் அவர்கள் ஒளிந்துகொண்டாலும், [QE][QS2]நான் அங்கேயும் அவர்களைத் தேடிப் பிடித்துக்கொள்வேன். [QE][QS]என் பார்வைக்குத் தப்பி கடலின் அடியில் மறைந்துகொண்டாலும் [QE][QS2]அவர்களைக் கடிக்க பாம்பிற்குக் கட்டளையிடுவேன். [QE]
4. [QS]தங்கள் பகைவரால் நாடுகடத்தப்பட்டுத் துரத்தப்பட்டாலும், [QE][QS2]அங்கே அவர்களைக் கொல்லும்படி வாளுக்குக் கட்டளையிடுவேன். [QE][PBR] [QS]“நன்மைக்காக அல்ல, [QE][QS2]தீமைக்காகவே அவர்கள்மேல் என் கண்களை வைப்பேன்.” [QE][PBR]
5. [QS]யெகோவா, சேனைகளின் யெகோவா பூமியைத் தொடுகிறார், [QE][QS]அது உருகுகிறது, [QE][QS2]அதில் வாழும் அனைவரும் புலம்புகிறார்கள்; [QE][QS]முழு நாடும் நைல் நதியைப்போல் பொங்கி எழுகிறது, [QE][QS2]பின்னர் எகிப்தின் நதியைப்போல் வற்றிப்போகிறது. [QE]
6. [QS]யெகோவா வானங்களின் உயர்வில் தமது அரண்மனைகளைக் கட்டுகிறார், [QE][QS2]பூமியின்மேல் அஸ்திபாரத்தை அமைக்கிறார்; [QE][QS]கடல்நீரை அழைத்து [QE][QS2]பூமியின் மேற்பரப்பில் அதைப் பொழிகிறார். [QE][QS2]யெகோவா என்பது அவர் பெயர். [QE][PBR]
7. [QS]இஸ்ரயேலின் மக்களே, [QE][QS2]நீங்களும் எனக்கு எத்தியோப்பியரைப்போல் அல்லவோ இருக்கிறீர்கள் [QE][QS2]என்று யெகோவா அறிவிக்கிறார். [QE][QS]நான் இஸ்ரயேலரை எகிப்திலிருந்து கொண்டுவந்தேன். [QE][QS2]பெலிஸ்தியரை கப்தோரிலிருந்தும், [QE][QS2]சீரியரை கீரிலிருந்தும் கொண்டுவரவில்லையோ? [QE][PBR]
8. [QS]“நிச்சயமாக ஆண்டவராகிய [QE][QS2]யெகோவாவின் கண்கள் பாவமுள்ள அரசின்மேல் இருக்கின்றன. [QE][QS]பூமியின்மேல் இராதபடி அந்த அரசை அழிப்பேன். [QE][QS2]எனினும் யாக்கோபின் குடும்பத்தை [QE][QS]நான் முற்றிலும் [QE][QS2]அழிக்கமாட்டேன்” [QE][QS2]என்று யெகோவா அறிவிக்கிறார். [QE]
9. [QS]“நானே கட்டளையிட்டு, [QE][QS2]தானியத்தை அரிதட்டில் போட்டு அரித்தெடுப்பதுபோல, [QE][QS2]எல்லா நாடுகளுக்குள்ளேயும் [QE][QS]இஸ்ரயேல் குடும்பத்தை அரித்தெடுப்பேன். [QE][QS2]ஒரு கூழாங்கல்லும் தரையில் விழாது. [QE]
10. [QS]என் மக்களுள் வாழும் எல்லா பாவிகளும், [QE][QS2]பேராபத்து எங்களை [QE][QS]மேற்கொள்ளவோ சந்திக்கவோ மாட்டாது என்று [QE][QS2]சொல்கின்ற எல்லோரும் வாளினால் சாவார்கள். [QE]
11. {#1இஸ்ரேலின் மறுசீரமைப்பு } [PS]“அந்த நாளில் [PE][QS]“நான் விழுந்து கிடக்கும் தாவீதின் கூடாரத்தைத் திரும்பவும் அமைப்பேன். [QE][QS2]நான் அதன் உடைந்த இடங்களை பழுதுபார்த்து, [QE][QS2]அதன் பாழிடங்களை சீரமைப்பேன். [QE][QS2]முன் இருந்ததுபோல அதைக் கட்டுவேன், [QE]
12. [QS]அப்பொழுது என் மக்கள் ஏதோமில் மீதியாக இருப்போரையும், [QE][QS2]என் பெயரைத் தரித்திருக்கும் எல்லா நாடுகளையும் [QE][QS]உரிமையாக்கிக்கொள்வார்கள் என்று [QE][QS2]இவற்றைச் செயற்படுத்தப்போகிற யெகோவா அறிவிக்கிறார். [QE]
13. [PS]“நாட்கள் வருகின்றன” என்று யெகோவா அறிவிக்கிறார். [PE][QS]“அப்பொழுது அறுவடை செய்கிறவனை உழுகிறவன் முந்திக்கொள்வான்; [QE][QS2]நடுகிறவனை திராட்சைப் பழத்தைப் பிழிகிறவன் முந்திக்கொள்வான். [QE][QS]மலைகளிலிருந்து புது திராட்சை இரசம் [QE][QS2]வடிந்து எல்லாக் குன்றுகளின்மேலும் ஓடும், [QE]
[QS2]14. நாடுகடத்தப்பட்ட என் மக்களாகிய இஸ்ரயேலரை முன்நிலைக்குக் கொண்டுவருவேன். [QE][PBR] [QS]“அவர்கள் பாழடைந்த பட்டணங்களை திரும்பக் கட்டி, அவற்றில் குடியிருந்து, [QE][QS2]திராட்சைத் தோட்டங்களை நாட்டி, அதன் இரசத்தைக் குடித்து, [QE][QS2]தோட்டங்களை உண்டாக்கி, அதன் பழங்களைச் சாப்பிடுவார்கள். [QE]
15. [QS]நான் இஸ்ரயேலை அவர்கள் சொந்த நாட்டிலே நாட்டுவேன். [QE][QS2]நான் அவர்களுக்குக் கொடுத்திருக்கும் நாட்டிலிருந்து, [QE][QS2]இனியொருபோதும் வேரோடு பிடுங்கப்படமாட்டார்கள் என்று” [QE][MS]உங்கள் இறைவனாகிய யெகோவா சொல்கிறார். [ME]