1. {#1எருசலேமின் மேல் தேவனுடைய கோபம் } [QS]ஐயோ, ஆண்டவர் தமது கோபத்தில் மகளாகிய சீயோனை கரும்மேகத்தினால் மூடினார்; [QE][QS]அவர் தமது கோபத்தின் நாளிலே தமது பாதபீடத்தை நினைக்காமல் [QE][QS]இஸ்ரவேலின் மகிமையை வானத்திலிருந்து பூமியிலே விழச்செய்தார். [QE]
2. [QS]ஆண்டவர் தப்பவிடாமல் யாக்கோபின் குடியிருப்புகளையெல்லாம் விழுங்கினார்; [QE][QS]அவர், மகளாகிய யூதாவின் பாதுகாப்புகளையெல்லாம் தமது கோபத்திலே இடித்து, [QE][QS]தரையோடே தரையாக்கிப்போட்டார்; [QE][QS]இராஜ்ஜியத்தையும் அதின் தலைவர்களையும் பரிசுத்தக்குலைச்சலாக்கினார். [QE]
3. [QS]அவர் தமது கடுங்கோபத்திலே இஸ்ரவேலின் வல்லமை முழுவதையும் வெட்டிப்போட்டார்; [QE][QS]விரோதிகளுக்கு முன்பாக அவர் தமது வலதுகரத்தைப் பின்னாகத் திருப்பி, [QE][QS]சுற்றிலும் இருப்பதை எரித்துப்போடுகிற நெருப்புத்தழலைப்போல் யாக்கோபுக்கு விரோதமாக எரித்தார். [QE]
4. [QS]பகைவனைப்போல் தம்முடைய வில்லை நாணேற்றினார்; [QE][QS]எதிரியைப்போல் தம்முடைய வலதுகரத்தை நீட்டி நின்று, [QE][QS]கண்ணுக்கு இன்பமானதையெல்லாம் அழித்துப்போட்டார்; [QE][QS]மகளாகிய சீயோனின் கூடாரத்திலே தம்முடைய கோபத்தை அக்கினியைப்போல் விழச்செய்தார். [QE]
5. [QS]ஆண்டவர் பகைவனைப் போலானார்; [QE][QS]இஸ்ரவேலை விழுங்கினார்; [QE][QS]அதின் அரண்மனைகளையெல்லாம் விழுங்கினார்; [QE][QS]அதின் அரண்களை அழித்து, மகளாகிய யூதாவுக்கு மிகுந்த துக்கத்தையும் சோர்வையும் உண்டாக்கினார். [QE]
6. [QS]தோட்டத்தின் வேலியைப்போல இருந்த தம்முடைய வேலியைப் பலவந்தமாகப் பிடுங்கிப்போட்டார்; [QE][QS]சபைகூடுகிற தம்முடைய இடங்களை அழித்தார்; [QE][QS]யெகோவா சீயோனிலே பண்டிகையையும் ஓய்வு நாளையும் மறக்கச்செய்து, [QE][QS]தமது கடுங்கோபத்தில் ராஜாவையும் ஆசாரியனையும் அகற்றிவிட்டார். [QE]
7. [QS]ஆண்டவர் தமது பலிபீடத்தை ஒழித்துவிட்டார்; [QE][QS]தமது பரிசுத்த ஸ்தலத்தை வெறுத்துவிட்டார்; [QE][QS]அதினுடைய அரண்மனைகளின் மதில்களை விரோதியின் கையில் ஒப்புக்கொடுத்தார்; [QE][QS]பண்டிகைநாளில் ஆரவாரம் செய்கிறதுபோல் யெகோவாவின் ஆலயத்தில் ஆரவாரம் செய்தார்கள். [QE]
8. [QS]யெகோவா, மகளாகிய சீயோனின் மதிலை நிர்மூலமாக்க நினைத்தார்; [QE][QS]நூலைப்போட்டார்; அழிக்காதபடி தம்முடைய கையை அவர் முடக்கிக்கொண்டதில்லை; [QE][QS]அரண்களையும் மதிலையும் புலம்பச்செய்தார்; [QE][QS]அவைகள் முற்றிலும் பெலனற்றுக்கிடக்கிறது. [QE]
9. [QS]எருசலேம் பட்டணத்து வாசல்கள் தரையில் புதைந்துகிடக்கிறது; [QE][QS]அவளுடைய தாழ்ப்பாள்களை உடைத்துப்போட்டார்; [QE][QS]அவளுடைய ராஜாவும் அவளுடைய பிரபுக்களும் அந்நியமக்களுக்குள் இருக்கிறார்கள்; [QE][QS]வேதமுமில்லை; அவளுடைய தீர்க்கதரிசிகளுக்குக் யெகோவாவால் தரிசனம் கிடைப்பதில்லை. [QE]
10. [QS]மகளாகிய சீயோனின் மூப்பர்கள் தரையில் உட்கார்ந்து மெளனமாக இருக்கிறார்கள்; [QE][QS]தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொள்ளுகிறார்கள்; [QE][QS]சணலாடை உடுத்தியிருக்கிறார்கள்; [QE][QS]எருசலேமின் இளம்பெண்கள் தலைகுனிந்து தரையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். [QE]
11. [QS]என் மகளாகிய எனது மக்களின் பாடுகளினிமித்தம் கண்ணீர் விடுகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது; [QE][QS]என் குடல்கள் கொதிக்கிறது; [QE][QS]என் ஈரல் உருகி தரையிலே வடிகிறது; [QE][QS]குழந்தைகளும் சிறுபிள்ளைகளும் நகரத்தின் வீதிகளிலே மயக்கநிலையில் கிடக்கிறார்கள். [QE]
12. [QS]அவர்கள் காயப்பட்டவர்களைப்போல [QE][QS]பட்டணத்தின் வீதிகளிலே மயக்கநிலையில் கிடக்கும்போதும், [QE][QS]தங்கள் தாய்களின் மடியிலே தங்கள் உயிரை விடும்போதும், தங்கள் தாய்களை நோக்கி: [QE][QS]தானியமும் திராட்சைரசமும் எங்கே என்கிறார்கள். [QE]
13. [QS]மகளாகிய எருசலேமே, நான் உனக்குச் சாட்சியாக என்னத்தைச் சொல்லுவேன்? [QE][QS]உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? [QE][QS]மகளாகிய சீயோன் என்னும் இளம்பெண்ணே, [QE][QS]நான் உன்னைத் தேற்றுவதற்கு உன்னை எதற்கு ஒப்பிட்டுச் சொல்லுவேன்? [QE][QS]உன் காயம் சமுத்திரத்தைப்போல் பெரிதாயிருக்கிறதே, [QE][QS]உன்னைக் குணமாக்குகிறவன் யார்? [QE]
14. [QS]உன் தீர்க்கதரிசிகள் பொய்யும் பயனற்ற தரிசனங்களை உனக்காகத் தரிசித்தார்கள்; [QE][QS]அவர்கள் உன்னுடைய சிறையிருப்பு விலகும்படி உன் அக்கிரமத்தை சுட்டிக்காட்டாமல், [QE][QS]பொய்யானவைகளையும் கேடானவைகளையும் உனக்காகத் தரிசித்தார்கள். [QE]
15. [QS]வழிப்போக்கர்கள் அனைவரும் உன்னைப்பார்த்துக் கை கொட்டுகிறார்கள்; [QE][QS]மகளாகிய எருசலேமைப்பார்த்து விசிலடித்து, [QE][QS]கேலியாக தங்கள் தலைகளை அசைத்து: [QE][QS]பூரணவடிவும் உலகத்தின் மகிழ்ச்சியுமான நகரம் இதுதானா என்கிறார்கள். [QE]
16. [QS]உன்னுடைய பகைவர்கள் எல்லோரும் உன்னைப்பார்த்துத் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்; [QE][QS]பரியாசம் செய்து பல்லைக் கடிக்கிறார்கள்; [QE][QS]அதை விழுங்கினோம், நாம் காத்திருந்த நாள் இதுவே, [QE][QS]இப்பொழுது நமக்குக் கிடைத்தது, அதைக் கண்டோம் என்கிறார்கள். [QE]
17. [QS]யெகோவா தாம் நினைத்ததைச் செய்தார்; [QE][QS]ஆரம்பநாட்கள் முதற்கொண்டு தாம் கட்டளையிட்ட தமது வார்த்தையை நிறைவேற்றினார்; [QE][QS]அவர் தப்பவிடாமல் நிர்மூலமாக்கி, உன்மேல் பகைவன் மகிழ்ச்சியடையச் செய்தார்; [QE][QS]உன் எதிரிகளின் கொம்பை உயர்த்தினார். [QE]
18. [QS]அவர்களுடைய இருதயம் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுகிறது; [QE][QS]மகளாகிய சீயோனின் மதிலே, இரவும் பகலும் நதியைப்போல கண்ணீர் விடு, ஓய்ந்திராதே, [QE][QS]உன் கண்ணின் கருவிழியை சும்மாயிருக்கவிடாதே. [QE]
19. [QS]எழுந்திரு, இரவிலே முதல் ஜாமத்தில் கூப்பிடு; [QE][QS]ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றிவிடு; [QE][QS]எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மயங்கியிருக்கிற உன் குழந்தைகளின் உயிருக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு. [QE]
20. [QS]யெகோவாவே, யாருக்கு இந்த விதமாகச் செய்தீரென்று நோக்கிப்பாரும்; [QE][QS]பெண்கள், கைக்குழந்தைகளாகிய தங்கள் கர்ப்பத்தின் பிள்ளைகளை சாப்பிடவேண்டுமோ? [QE][QS]ஆண்டவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் ஆசாரியனும் தீர்க்கதரிசியும் கொலைசெய்யப்படவேண்டுமோ? [QE]
21. [QS]வாலிபனும் முதிர்வயதுள்ளவனும் தெருக்களில் தரையிலே கிடக்கிறார்கள்; [QE][QS]என்னுடைய இளம்பெண்களும், வாலிபர்களும் பட்டயத்தால் விழுந்தார்கள்; [QE][QS]உமது கோபத்தின் நாளிலே வெட்டி, அவர்களைத் தப்பவிடாமல் கொன்றுபோட்டீர். [QE]
22. [QS]பண்டிகைநாளில் மக்கள் கூட்டத்தை வரவழைப்பதுபோல் சுற்றிலுமிருந்து எனக்கு பயத்தை வரவழைத்தீர்; [QE][QS]யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே தப்பினவனும் மீதியானவனுமில்லை; [QE][QS]நான் கைகளில் ஏந்தி வளர்த்தவர்களை என் பகைவன் அழித்தான். [QE]