1. {#1யோபுவின் வார்த்தைகள் } [PS]அதற்குப் பின்பு யோபு தன் வாயைத்திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து,
2. வசனித்துச் சொன்னது என்னவென்றால்: [PE]
3. [QS]நான் பிறந்தநாளும் ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியானது என்று சொல்லப்பட்ட இரவும் அழிவதாக. [QE]
4. [QS]அந்த நாள் இருளாக்கப்படுவதாக; [QE][QS]தேவன் உயரத்திலிருந்து அதை விசாரிக்காமலும், [QE][QS]வெளிச்சம் அதின்மேல் பிரகாசிக்காமலும், [QE]
5. [QS]கடுமையான இருளும் [QE][QS]மரண இருளும் அதைக் கறைப்படுத்தி, கருமேகம் அதை மூடி, [QE][QS]மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை பயமுறுத்துவதாக. [QE]
6. [QS]அந்த இரவை இருள் பிடிப்பதாக; [QE][QS]வருடத்தின் நாட்களில் அது சந்தோஷப்படுகிற நாளாக இராமலும் மாதக்கணக்கிலே அது வராமலும் போவதாக. [QE]
7. [QS]அந்த இரவு தனிமையாயிருப்பதாக; அதிலே கெம்பீரசத்தம் இல்லாமற்போவதாக. [QE]
8. [QS]நாளைச் சபிக்கிறவர்களும், லிவியாதானை எழும்பச் செய்கிறவர்களும், [QE][QS]அதைச் சபிப்பார்களாக. [QE]
9. [QS]அதின் மறையும் காலத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருண்டு, [QE][QS]அது எதிர்பார்த்திருந்த வெளிச்சம் தோன்றாமலும், விடியற்காலத்து வெளுப்பை அது பார்க்காமலும் இருப்பதாக. [QE]
10. [QS]நான் இருந்த கர்ப்பத்தின் வாசலை அது அடைக்காமலும், [QE][QS]என் கண்கள் காண்கிற வருத்தத்தை மறைத்துவிடாமலும் இருந்ததே. [QE]
11. [QS]நான் கர்ப்பத்தில் அழியாமலும், [QE][QS]கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே இறக்காமலும் போனதென்ன? [QE]
12. [QS]என்னை ஏந்திக்கொள்ள மடியும், [QE][QS]நான் பாலுண்ண மார்பகங்களும் இருந்ததென்ன? [QE]
13. [QS]அப்படியில்லாதிருந்தால், [QE][QS]அசையாமல்கிடந்து அமர்ந்திருந்து, [QE]
14. [QS]பாழ்நிலங்களில் தங்களுக்கு மாளிகையைக் கட்டின பூமியின் ராஜாக்களுடனும் மந்திரிமார்களுடனும், [QE]
15. [QS]அல்லது, பொன்னை உடையவர்களும், [QE][QS]தங்கள் வீடுகளை வெள்ளியினால் நிரப்பினவர்களுமான பிரபுக்களுடன் நான் இப்பொழுது தூங்கி இளைப்பாறுவேனே. [QE]
16. [QS]அல்லது, வெளிப்படாத வளர்ச்சியடையாத கருவைப்போலவும், [QE][QS]வெளிச்சத்தைப் பார்க்காத குழந்தைகளைப்போலவும் இருப்பேனே. [QE]
17. [QS]துன்மார்க்கருடைய தொந்தரவு அங்கே ஓய்ந்திருக்கிறது; [QE][QS]பெலனற்று சோர்ந்து போனவர்கள் அங்கே இளைப்பாறுகிறார்கள். [QE]
18. [QS]சிறைப்பட்டிருந்தவர்கள் அங்கே ஏகமாக அமர்ந்திருக்கிறார்கள்; [QE][QS]ஒடுக்குகிறவனுடைய சத்தம் அங்கே கேட்கப்படுகிறதில்லை. [QE]
19. [QS]சிறியவனும் பெரியவனும் அங்கே சமமாக இருக்கிறார்கள்; [QE][QS]அடிமை தன் எஜமானுக்கு நீங்கலாயிருக்கிறான். [QE]
20. [QS]மரணத்திற்கு ஆசையாகக் காத்திருந்து, [QE][QS]புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும், [QE]
21. [QS]கல்லறையைக் கண்டுபிடித்ததினால் மிகவும் மகிழ்ந்து, [QE]
22. [QS]அதற்காகச் சந்தோஷப்படுகிற பாக்கியம் இல்லாதவராகிய இவர்களுக்கு வெளிச்சமும், [QE][QS]மனவருத்தமும் உள்ள இவர்களுக்கு உயிர் கொடுக்கப்படுகிறதினால் பலன் என்ன? [QE]
23. [QS]தன் வழியைக் காணமுடியாதபடிக்கு, [QE][QS]தேவனால் வளைந்துகொள்ளப்பட்டவனுக்கு வெளிச்சத்தினால் பலன் என்ன? [QE]
24. [QS]என் சாப்பாட்டுக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது; [QE][QS]என் கதறுதல் வெள்ளம்போல் புரண்டுபோகிறது. [QE]
25. [QS]நான் பயந்த காரியம் எனக்குச் சம்பவித்தது; [QE][QS]நான் பயப்பட்டது எனக்கு வந்தது. [QE]
26. [QS]எனக்குச் சுகமுமில்லை, [QE][QS]நிம்மதியுமில்லை, அமைதலுமில்லை; [QE][QS]எனக்குத் துன்பமே வந்தது. [QE]