1. [QS]“நான் இஸ்ரவேலைக் குணப்படுத்துவேன். [QE][QS2]பிறகு ஜனங்கள் எப்பிராயீம் பாவம் செய்ததை அறிவார்கள். [QE][QS]ஜனங்கள் சமாரியவின் பொய்களை அறிவார்கள். [QE][QS2]ஜனங்கள் நகரத்திற்குள் வந்து போகிற திருடர்களைப் பற்றி அறிவார்கள். [QE]
2. [QS]அந்த ஜனங்கள் நான் அவர்களின் குற்றங்களை நினைப்பேன் என்பதை நம்பமாட்டார்கள். [QE][QS2]அவர்கள் செய்த கெட்டவைகளெல்லாம் சுற்றிலும் உள்ளன. [QE][QS2]நான் அவர்களது பாவங்களைத் தெளிவாகப் பார்க்கமுடியும். [QE]
3. [QS]அவர்களது தீமை அவர்களின் அரசனை மகிழ்ச்சிப்படுத்துகிறது. [QE][QS2]அவர்களது அந்நியத் தெய்வங்கள் அவர்களின் தலைவர்களை மகிழ்ச்சிப்படுத்தும். [QE]
4. [QS]அப்பம் சுடுகிறவன் அப்பம் சுடுவதற்காக அடுப்பை எரிக்கிறான். [QE][QS2]அவன் அடுப்பில் அப்பத்தை வைக்கிறான். [QE][QS]அப்பத்தின் மாவு புளித்துகொண்டிருக்கும்போது அப்பம் சுடுபவன் அடுப்பில் அளவுக்கு அதிகமான நெருப்பைப் போடமாட்டான். [QE][QS2]ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் அவ்வாறு இல்லை. [QE][QS2]இஸ்ரவேல் ஜனங்கள் எப்பொழுதும் தம் நெருப்பை மேலும் சூடாக்குகின்றனர். [QE]
5. [QS]நம்முடைய அரசனின் நாளில் அவர்கள் தம் நெருப்பை மேலும் சூடாக்குகின்றனர். அவர்கள் குடி விருந்துகளைக் கொடுக்கிறார்கள். [QE][QS2]தலைவர்கள் திராட்சைரசத்தின் சூட்டால் நோயடைகின்றனர். எனவே அரசர்கள் தேவனைப் பரிகாசம் செய்யும் ஜனங்களோடு சேருகின்றார்கள். [QE]
6. [QS]ஜனங்கள் தமது இரகசிய திட்டங்களைப் போடுகிறார்கள். [QE][QS2]அவர்களது இதயங்கள் சூட்டடுப்பைப் போன்று கிளர்ச்சியடைகின்றன. [QE][QS]அவர்களின் ஆர்வம் இரவு முழுவதும் எரியும். [QE][QS2]காலையில் அது நெருப்பாய் எரியும். [QE]
7. [QS]அவர்கள் அனைவரும் எரியும் சூட்டடுப்பாய் இருக்கிறார்கள். [QE][QS2]அவர்கள் தமது ஆட்சியாளர்களை அழித்தார்கள். [QE][QS]அவர்களின் அரசர்கள் அனைவரும் விழுந்தார்கள். [QE][QS2]அவர்களில் ஒருவரும் என்னை உதவிக்கு அழைக்கவில்லை.” [QE]
8. [QS]“எப்பிராயீம் மற்ற தேசங்களோடு கலக்கிறான். [QE][QS2]எப்பிராயீம் இரண்டு பக்கமும் வேகாத அப்பத்தைப் போன்று இருக்கிறான். [QE]
9. [QS]அந்நியர்கள் எப்பிராயீமின் பலத்தை அழிக்கிறார்கள். [QE][QS2]ஆனால் எப்பிராயீம் இதை அறியவில்லை எப்பிராயீம் மேல் நரை மயிர்கள் தெளிக்கப்பட்டுள்ளன. [QE][QS2]ஆனால் எப்பிராயீம் இதனை அறியவில்லை. [QE]
10. [QS]எப்பிராயீமின் பெருமை அவனுக்கு எதிராகப் பேசுகிறது. [QE][QS2]ஜனங்களுக்குப் பற்பல தொல்லைகள் இருக்கின்றன. [QE][QS]ஆனால் அவர்கள் இன்னும் தமது தேவனாகிய கர்த்தரிடம் திரும்பிப் போகவில்லை. [QE][QS2]ஜனங்கள் உதவிக்கு அவரை நோக்கிப் பாக்கவில்லை. [QE]
11. [QS]எனவே, எப்பிராயீம் புரிந்துக்கொள்ளாத பேதையான சிறிய புறாவைப் போலானான். [QE][QS2]ஜனங்கள் எகிப்திடம் உதவிக் கேட்டார்கள். [QE][QS2]ஜனங்கள் அசீரியாவிடம் உதவி கேட்டுப்போனார்கள். [QE]
12. [QS]அவர்கள் அந்நாடுகளுக்கு உதவிக் கேட்டுப் போனார்கள். [QE][QS2]ஆனால் நான் அவர்களை கண்ணியில் சிக்கவைப்பேன். [QE][QS]நான் எனது வலையை அவர்கள் மேல் வீசுவேன். [QE][QS2]நான் அவர்களை வானத்துப் பறவைகளைப் போன்று பிடித்து அவர்களை கிழே கொண்டு வருவேன். [QE][QS]நான் அவர்களை அவர்களது உடன்படிக்ககைளுக்காகத் தண்டிப்பேன். [QE]
13. [QS]இது அவர்களுக்குக் கேடாகும். அவர்கள் என்னை விட்டு விலகினார்கள். [QE][QS2]அவர்கள் எனக்கு அடிபணிய மறுத்தார்கள். [QE][QS2]எனவே அவர்கள் அழிக்கப்படுவார்கள். [QE][QS]நான் அந்த ஜனங்களைக் காப்பாற்றினேன். [QE][QS2]ஆனால் எனக்கு எதிராக அவர்கள் பொய்களைப் பேசுகின்றார்கள். [QE]
14. [QS]அவர்கள் தம் மனப்பூர்வமாக என்னை எப்பொழுதும் அழைக்கிறதில்லை. [QE][QS2]ஆம் அவர்கள் தங்கள் படுக்கையிலிருந்து அழுகின்றார்கள். [QE][QS]தானியத்திற்காகவும் புதுத் திராட்சை ரசத்திற்காகவும் கேட்கும்போது தங்களைத் தாங்களே வெட்டிக்கொள்கிறார்கள். [QE][QS2]ஆனால் அவர்களின் இதயங்களில் அவர்கள் என்னிடமிருந்து விலகியிருக்கிறார்கள். [QE]
15. [QS]நான் அவர்களுக்குப் பயிற்சியளித்து அவர்கள் கைகளை பலப்படுத்தினேன். [QE][QS2]ஆனால் அவர்கள் எனக்கு எதிராகத் தீய திட்டங்களைப் போட்டிருக்கிறார்கள். [QE]
16. [QS]ஆனால் அவர்கள் வளைந்த தடியைப் போல இருந்தார்கள். [QE][QS2]அவர்கள் தங்கள் திசைகளை மாற்றிக்கொண்டார்கள். [QE][QS]ஆனால் என்னிடம் திரும்பி வரவில்லை. அவர்கள் தலைவர்கள் தங்கள் பலத்தைப்பற்றி பெருமை பேசுகிறார்கள். [QE][QS2]ஆனால் அவர்கள் வாள்களால் கொல்லப்டுவார்கள். [QE][QS]பிறகு எகிப்து ஜனங்கள் [QE][QS2]அவர்களைப் பார்த்து சிரிப்பார்கள்.” [QE]