தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சகரியா
1. {அண்டை நாட்டினருக்கு வரும் தண்டனை} [PS] ஓர் இறைவாக்கு: ஆண்டவரின் வாக்கு அதிராக்கு நாட்டிற்கு எதிராக எழும்புகிறது; அது தமஸ்கு நகர்மீது இறங்கித் தங்கும்; ஏனெனில் இஸ்ரயேலின் எல்லாக் குலங்களைப் போலவே சிரியா நாட்டின் நகர்களும் ஆண்டவருக்கே உரியன. [* எசா 17:1-3; எரே 49:23-27; ஆமோ 1:3-5. ; எசா 23:1-18; எசே 26:1-28:26; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; மத் 11:21-22; லூக் 10:13-14. ]
2. அதன் எல்லைக்கு அடுத்துள்ள ஆமாத்தும் ஞானத்தில் சிறந்த தீரும் சீதோனும் அவருக்கே சொந்தம். [* எசா 23:1-18; எசே 26:1-28:26; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; மத் 11:21-22; லூக் 10:13-14. ]
3. தீர் தன்னைச் சுற்றிலும் அரண் ஒன்றைக் கட்டியெழுப்பியது; தூசியைப் போல் வெள்ளியையும் தெருச் சேற்றைப்போல் பொன்னையும் சேமித்தது. [* எசா 23:1-18; எசே 26:1-28:26; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; மத் 11:21-22; லூக் 10:13-14. ]
4. இதோ என் தலைவர் அவற்றைப் பறிமுதல் செய்வார்; அதன் அரணைக் கடலுக்குள் தூக்கி எறிவார்; அந்நகரும் நெருப்புக்கு இரையாகும். [* எசா 23:1-18; எசே 26:1-28:26; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; மத் 11:21-22; லூக் 10:13-14. ]
5. அஸ்கலோன் இதைக் கண்டு அஞ்சி நடுங்கும்; காசா நகர் வேதனையால் துடிதுடிக்கும்; அவ்வாறே எக்ரோனும் நம்பிக்கை இழந்துவிடும். காசா நகரிலிருந்து அரசன் அழித்தொழிவான்; அஸ்கலோன் குடியற்றுப்போகும். [* எசா 14:29-31; எரே 47:1-7; எசே 35:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7. ]
6. அஸ்தோதில் கலப்பினத்தார் குடியிருப்பார்கள்; பெலிஸ்தியரின் ஆணவத்தை நான் ஒழித்திடுவேன். [* எசா 14:29-31; எரே 47:1-7; எசே 35:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7. ] [PE]
7. [PS] [QS][SS] இரத்தம் வடியும் இறைச்சியை[SE][SS] அவர்கள் வாயினின்று அகற்றுவேன்;[SE][SS] அருவருப்பான உணவை அதன்[SE][SS] பற்களிடையிருந்து நீக்குவேன்;[SE][SS] அவ்வினம் நம் கடவுளுக்கு[SE][SS] எஞ்சியதாகும்;[SE][SS] அது யூதாவின் குலங்களில்[SE][SS] தலையாயது ஆகும்.[SE][SS] எக்ரோன் நகரத்தார்[SE][SS] எபூசியரைப் போல் இருப்பார்கள்; [* எசா 14:29-31; எரே 47:1-7; எசே 35:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7. ] [SE][QE]
8. [QS][SS] அங்குமிங்கும் தாக்கும்[SE][SS] படையினின்று[SE][SS] எனது இல்லத்தைக் காப்பதற்கு[SE][SS] நான் பாளையம் இறங்குவேன்;[SE][SS] ஒடுக்குகிறவன் எவனும் இனி[SE][SS] அவர்களின் நகர்களை[SE][SS] ஊடுருவிச் செல்லான்;[SE][SS] ஏனெனில், என் கண்களாலேயே[SE][SS] யாவற்றையும் நான்[SE][SS] பார்த்துக் கொண்டிருக்கிறேன்.[SE][PE][QE]
9. {வருங்கால அரசன்} [PS] [QS][SS] மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு;[SE][SS] மகளே எருசலேம்! ஆர்ப்பரி.[SE][SS] இதோ! உன் அரசர்[SE][SS] உன்னிடம் வருகிறார்.[SE][SS] அவர் நீதியுள்ளவர்;[SE][SS] வெற்றிவேந்தர்;[SE][SS] எளிமையுள்ளவர்;[SE][SS] கழுதையின்மேல்,[SE][SS] கழுதைக் குட்டியாகிய[SE][SS] மறியின்மேல் ஏறி வருகிறவர். [* மத் 21:5; யோவா 12:15. ] [SE][QE]
10. [QS][SS] அவர் எப்ராயிமில் தேர்ப்படை[SE][SS] இல்லாமற் போகச்செய்வார்;*[SE][SS] எருசலேமில் குதிரைப்படையை[SE][SS] அறவே ஒழித்து விடுவார்;*[SE][SS] போர்க் கருவியான வில்லும்[SE][SS] ஒடிந்து போகும்.[SE][SS] வேற்றினத்தார்க்கு அமைதியை அறிவிப்பார்;[SE][SS] அவரது ஆட்சி ஒரு கடல்முதல் மறு கடல் வரை,[SE][SS] பேராறுமுதல்[SE][SS] நிலவுலகின் எல்லைகள்வரை செல்லும். [* திபா 72:8. ; ‘செய்வேன்… விடுவேன்’ என்பது எபிரேய பாடம்.[QE]. ] [SE][PE][QE]
11. {கடவுளின் மக்களுக்குக் கிடைக்கும் மீட்பு} [PS] [QS][SS] உன்னைப் பொறுத்தமட்டில்[SE][SS] உன்னோடு நான் செய்த[SE][SS] உடன்படிக்கையின்[SE][SS] இரத்தத்தை முன்னிட்டு,[SE][SS] சிறைப்பட்டிருக்கும்[SE][SS] உன்னைச் சார்ந்தோரை[SE][SS] நீரற்ற படுகுழியிலிருந்து விடுவிப்பேன். [* விப 24:8. ] [SE][QE]
12. [QS][SS] நம்பிக்கையுடன் காத்திருக்கும்[SE][SS] சிறைக் கைதிகளே,[SE][SS] உங்கள் அரணுக்குத் திரும்பி வாருங்கள்;[SE][SS] இருமடங்கு நன்மைகள்[SE][SS] நான் உங்களுக்குத் தருவேன் என்று[SE][SS] நான் இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன்.[SE][QE]
13. [QS][SS] நான் யூதாவை[SE][SS] என் வில்லாக்கிக் கொண்டேன்;[SE][SS] எப்ராயிமை அம்பாக[SE][SS] அமைத்துக்கொண்டேன்;[SE][SS] சீயோனே! உன் மக்களை[SE][SS] யவனருக்கு எதிராக ஏவிவிட்டு[SE][SS] உன்னை வல்லவனின்[SE][SS] வாள் போல் ஆக்குவேன்.[SE][QE]
14. [QS][SS] அப்போது அவர்கள்மீது[SE][SS] ஆண்டவர் தோன்றுவார்.[SE][SS] அவரது அம்பு மின்னலைப்போல்[SE][SS] பாய்ந்து செல்லும்;[SE][SS] தலைவராகிய ஆண்டவர்[SE][SS] எக்காளம் ஊதி ஒலி எழுப்புவார்;[SE][SS] அவர் தென்திசைச்[SE][SS] சூறாவளிக்கு இடையே[SE][SS] நடந்து வருவார்.[SE][QE]
15. [QS][SS] படைகளின் ஆண்டவர் அவர்களுக்கு[SE][SS] அடைக்கலமாய் இருப்பார்;[SE][SS] அவர்கள் தங்கள் பகைவரை[SE][SS] ஒழித்துக்கட்டி,[SE][SS] அவர்களுடைய கவண் கற்களை[SE][SS] மிதித்துப்போடுவார்கள்;[SE][SS] திராட்சை இரசத்தைப்போல்[SE][SS] அவர்களது குருதியைக் குடிப்பார்கள்;[SE][SS] கிண்ணம்போல் நிரம்பி வழிந்தும்,[SE][SS] பலிபீடத்தின் கொம்புகளைப் போல்[SE][SS] நனைந்தும்,[SE][SS] இரத்தத்தால் நிறைந்திருப்பார்கள்.[SE][QE]
16. [QS][SS] அந்நாளில் அவர்களுடைய[SE][SS] கடவுளாகிய ஆண்டவர்,[SE][SS] தம் மக்களாகிய அவர்களை[SE][SS] ஆயர் தம் மந்தையை மீட்பது போல்[SE][SS] மீட்டருள்வார்;[SE][SS] அவர்களும் அவரது நாட்டில்[SE][SS] மணிமுடியில் பதிக்கப்பட்டுள்ள[SE][SS] கற்களைப்போல் ஒளிர்வார்கள்.[SE][QE]
17. [QS][SS] ஆம், அக்காட்சி எத்துணை இனியது;[SE][SS] எத்துணை அழகியது;[SE][SS] கோதுமை இளங்காளையரையும்[SE][SS] புதுத்திராட்சை இரசம் கன்னியரையும்[SE][SS] செழிப்புறச் செய்யும்.[SE][PE]
மொத்தம் 14 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 9 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
அண்டை நாட்டினருக்கு வரும் தண்டனை 1 ஓர் இறைவாக்கு: ஆண்டவரின் வாக்கு அதிராக்கு நாட்டிற்கு எதிராக எழும்புகிறது; அது தமஸ்கு நகர்மீது இறங்கித் தங்கும்; ஏனெனில் இஸ்ரயேலின் எல்லாக் குலங்களைப் போலவே சிரியா நாட்டின் நகர்களும் ஆண்டவருக்கே உரியன. * எசா 17:1-3; எரே 49:23-27; ஆமோ 1:3- 5. ; எசா 23:1-18; எசே 26:1-28:26; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; மத் 11:21-22; லூக் 10:13- 14. 2 அதன் எல்லைக்கு அடுத்துள்ள ஆமாத்தும் ஞானத்தில் சிறந்த தீரும் சீதோனும் அவருக்கே சொந்தம். * எசா 23:1-18; எசே 26:1-28:26; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; மத் 11:21-22; லூக் 10:13- 14. 3 தீர் தன்னைச் சுற்றிலும் அரண் ஒன்றைக் கட்டியெழுப்பியது; தூசியைப் போல் வெள்ளியையும் தெருச் சேற்றைப்போல் பொன்னையும் சேமித்தது. * எசா 23:1-18; எசே 26:1-28:26; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; மத் 11:21-22; லூக் 10:13- 14. 4 இதோ என் தலைவர் அவற்றைப் பறிமுதல் செய்வார்; அதன் அரணைக் கடலுக்குள் தூக்கி எறிவார்; அந்நகரும் நெருப்புக்கு இரையாகும். [* எசா 23:1-18; எசே 26:1-28:26; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; மத் 11:21-22; லூக் 10:13-1 4 ] 5 அஸ்கலோன் இதைக் கண்டு அஞ்சி நடுங்கும்; காசா நகர் வேதனையால் துடிதுடிக்கும்; அவ்வாறே எக்ரோனும் நம்பிக்கை இழந்துவிடும். காசா நகரிலிருந்து அரசன் அழித்தொழிவான்; அஸ்கலோன் குடியற்றுப்போகும். * எசா 14:29-31; எரே 47:1-7; எசே 35:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4- 7. 6 அஸ்தோதில் கலப்பினத்தார் குடியிருப்பார்கள்; பெலிஸ்தியரின் ஆணவத்தை நான் ஒழித்திடுவேன். * எசா 14:29-31; எரே 47:1-7; எசே 35:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4- 7. 7 இரத்தம் வடியும் இறைச்சியை அவர்கள் வாயினின்று அகற்றுவேன்; அருவருப்பான உணவை அதன் பற்களிடையிருந்து நீக்குவேன்; அவ்வினம் நம் கடவுளுக்கு எஞ்சியதாகும்; அது யூதாவின் குலங்களில் தலையாயது ஆகும். எக்ரோன் நகரத்தார் எபூசியரைப் போல் இருப்பார்கள்; [* எசா 14:29-31; எரே 47:1-7; எசே 35:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4- 7 ] 8 அங்குமிங்கும் தாக்கும் படையினின்று எனது இல்லத்தைக் காப்பதற்கு நான் பாளையம் இறங்குவேன்; ஒடுக்குகிறவன் எவனும் இனி அவர்களின் நகர்களை ஊடுருவிச் செல்லான்; ஏனெனில், என் கண்களாலேயே யாவற்றையும் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வருங்கால அரசன் 9 மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு; மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்; வெற்றிவேந்தர்; எளிமையுள்ளவர்; கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர். * மத் 21:5; யோவா 12: 15. 10 அவர் எப்ராயிமில் தேர்ப்படை இல்லாமற் போகச்செய்வார்;* எருசலேமில் குதிரைப்படையை அறவே ஒழித்து விடுவார்;* போர்க் கருவியான வில்லும் ஒடிந்து போகும். வேற்றினத்தார்க்கு அமைதியை அறிவிப்பார்; அவரது ஆட்சி ஒரு கடல்முதல் மறு கடல் வரை, பேராறுமுதல் நிலவுலகின் எல்லைகள்வரை செல்லும். [* திபா 72: 8. ; ‘செய்வேன்… விடுவேன்’ என்பது எபிரேய பாடம்.. ] கடவுளின் மக்களுக்குக் கிடைக்கும் மீட்பு 11 உன்னைப் பொறுத்தமட்டில் உன்னோடு நான் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை முன்னிட்டு, சிறைப்பட்டிருக்கும் உன்னைச் சார்ந்தோரை நீரற்ற படுகுழியிலிருந்து விடுவிப்பேன். * விப 24: 8. 12 நம்பிக்கையுடன் காத்திருக்கும் சிறைக் கைதிகளே, உங்கள் அரணுக்குத் திரும்பி வாருங்கள்; இருமடங்கு நன்மைகள் நான் உங்களுக்குத் தருவேன் என்று நான் இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன். 13 நான் யூதாவை என் வில்லாக்கிக் கொண்டேன்; எப்ராயிமை அம்பாக அமைத்துக்கொண்டேன்; சீயோனே! உன் மக்களை யவனருக்கு எதிராக ஏவிவிட்டு உன்னை வல்லவனின் வாள் போல் ஆக்குவேன். 14 அப்போது அவர்கள்மீது ஆண்டவர் தோன்றுவார். அவரது அம்பு மின்னலைப்போல் பாய்ந்து செல்லும்; தலைவராகிய ஆண்டவர் எக்காளம் ஊதி ஒலி எழுப்புவார்; அவர் தென்திசைச் சூறாவளிக்கு இடையே நடந்து வருவார். 15 படைகளின் ஆண்டவர் அவர்களுக்கு அடைக்கலமாய் இருப்பார்; அவர்கள் தங்கள் பகைவரை ஒழித்துக்கட்டி, அவர்களுடைய கவண் கற்களை மிதித்துப்போடுவார்கள்; திராட்சை இரசத்தைப்போல் அவர்களது குருதியைக் குடிப்பார்கள்; கிண்ணம்போல் நிரம்பி வழிந்தும், பலிபீடத்தின் கொம்புகளைப் போல் நனைந்தும், இரத்தத்தால் நிறைந்திருப்பார்கள். 16 அந்நாளில் அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர், தம் மக்களாகிய அவர்களை ஆயர் தம் மந்தையை மீட்பது போல் மீட்டருள்வார்; அவர்களும் அவரது நாட்டில் மணிமுடியில் பதிக்கப்பட்டுள்ள கற்களைப்போல் ஒளிர்வார்கள். 17 ஆம், அக்காட்சி எத்துணை இனியது; எத்துணை அழகியது; கோதுமை இளங்காளையரையும் புதுத்திராட்சை இரசம் கன்னியரையும் செழிப்புறச் செய்யும்.
மொத்தம் 14 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 9 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
×

Alert

×

Tamil Letters Keypad References