1. [PS] [QS][SS] “பெண்களுக்குள் பேரழகியே,[SE][SS] உன் காதலர் எங்கே போனார்?[SE][SS] உன் காதலர் எப்பக்கம் திரும்பினார்?[SE][SS] உன்னோடு நாங்களும்[SE][SS] அவரைத் தேடுவோம்.” [* 1 அர 4:32.[QE]. ] [SE][QE]
2. [QS][SS] “என் காதலர் தம் தோட்டத்திற்கும்[SE][SS] நறுமண நாற்றங்கால்களுக்கும்[SE][SS] போனார்;[SE][SS] தோட்டங்களில் மேய்க்கவும்[SE][SS] லீலி மலர்களைக் கொய்யவும்[SE][SS] சென்றுள்ளார்”.[SE][QE]
3. [QS][SS] நான் என் காதலர்க்குரியள்;[SE][SS] என் காதலர் எனக்குரியர்;[SE][SS] லீலிகள் நடுவில் அவர் மேய்க்கின்றார்.[SE][PE][QE]
4. {பாடல் 18: தலைவன் கூற்று} [PS] [QS][SS] என் அன்பே.நீ திரட்சாவைப்போல்[SE][SS] அழகுள்ளவள்;[SE][SS] எருசலேமைப்போல் எழில் நிறைந்தவள்;[SE][SS] போரணிபோல் வியப்பார்வம்[SE][SS] ஊட்டுகின்றாய்![SE][QE]
5. [QS][SS] என்னிடமிருந்து உன் கண்களைத்[SE][SS] திருப்பிக்கொள்;[SE][SS] அவை என்னை மயக்குகின்றன;[SE][SS] கிலயாதிலிருந்து இறங்கிவரும்[SE][SS] வெள்ளாட்டு மந்தை போன்றது[SE][SS] உன் கூந்தல்.[SE][QE]
6. [QS][SS] உன் பற்களோ, குளித்துக்கரையேறும்[SE][SS] பெண் ஆடுகளின் மந்தைபோல்வன;[SE][SS] அவையாவும் இரட்டைக்குட்டி போட்டவை;[SE][SS] அவற்றுள் ஒன்றேனும் மலடு இல்லை.[SE][QE]
7. [QS][SS] முகத்திரையின் பின்னிருக்கும்[SE][SS] உன் கன்னங்கள்[SE][SS] பிளந்த மாதுளம் பழத்திற்கு நிகரானவை.[SE][PE][QE]
8. {பாடல் 19: தலைவன் கூற்று} [PS] [QS][SS] அரசியர் அறுபது பேர்;[SE][SS] வைப்பாட்டியர் எண்பது பேர்;[SE][SS] இளம்பெண்கள் எண்ணிறந்தவர்.[SE][QE]
9. [QS][SS] என் வெண்புறா,[SE][SS] அழகின் வடிவம் அவள் ஒருத்தியே![SE][SS] அவள் தாய்க்கும் அவள் ஒருத்தியே;[SE][SS] அவளைப் பெற்றவளுக்கு[SE][SS] அவள் அருமையானவள்;[SE][SS] மங்கையர் அவளைக் கண்டனர்;[SE][SS] வாழ்த்தினர்;[SE][SS] அரசியரும் வைப்பாட்டியரும்[SE][SS] அவளைப் புகழ்ந்தனர்;[SE][QE]
10. [QS][SS] “யாரிவள்![SE][SS] வைகறைபோல் தோற்றம்;[SE][SS] திங்களைப் போல் அழகு;[SE][SS] ஞாயிறுபோல் ஒளி;[SE][SS] போரணிபோல் வியப்பார்வம்;[SE][SS] யாரிவள்!”[SE][PE][QE]
11. {பாடல் 20: தலைவன் கூற்று} [PS] [QS][SS] வாதுமைச் சோலைக்குள் சென்றேன்;[SE][SS] பள்ளத்தாக்கில் துளிர்த்தவற்றைப்[SE][SS] பார்க்கப் போனேன்;[SE][SS] திராட்சை பூத்துவிட்டதா என்றும்[SE][SS] மாதுளைகள் மலர்ந்தனவா என்றும்[SE][SS] காணச் சென்றேன்.[SE][QE]
12. [QS][SS] என்னவென்றே[SE][SS] எனக்குத் தெரியவில்லை![SE][SS] மகிழ்ச்சியில் மயங்கினேன்;[SE][SS] இளவரசனுடன் தேரில் செல்வது போல்[SE][SS] நான் உணர்ந்தேன்.[SE][PE][QE]
13. {பாடல் 21: கண்டோர் கூற்று: உரையாடல்} [PS] [QS][SS] திரும்பி வா! திரும்பி வா![SE][SS] சூலாமியளே![SE][SS] திரும்பி வா! திரும்பி வா![SE][SS] நாங்கள் உன்னைப் பார்க்க வேண்டும்![SE][SS] இரண்டு பாசறைகள் நடுவில்[SE][SS] ஆடுபவளைப்போல் சூலாமியளை[SE][SS] நீங்கள் ஏன் நோக்க வேண்டும்?[SE][PE][QE]