தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {அரசரின் வெற்றிப்பாடல்[BR](பாடகர் தலைவர்க்கு: ஆண்டவரின் அடியாராகிய தாவீது, தம் எதிரிகள் கையினின்றும் சவுலின் கையினின்றும் அவர் தம்மை விடுவித்த நாளில் அவரை நோக்கிப் பாடியது)} [PS] [QS][SS] அவர் உரைத்தது:[SE][SS] என் ஆற்றலாகிய ஆண்டவரே![SE][SS] உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.[SE][QE]
2. [QS][SS] ஆண்டவர் என் கற்பாறை;[SE][SS] என் கோட்டை; என் மீட்பர்; என் இறைவன்;[SE][SS] நான் புகலிடம் தேடும் மலை அவரே;[SE][SS] என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும்[SE][SS] வல்லமை, என் அரண்.[SE][QE]
3. [QS][SS] போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி[SE][SS] நான் மன்றாடினேன்;[SE][SS] என் எதிரிகளிடமிருந்து நான்[SE][SS] மீட்கப்பட்டேன்.[SE][QE]
4. [QS][SS] சாவின் கயிறுகள் என்னை இறுக்கின;[SE][SS] அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன.[SE][QE]
5. [QS][SS] பாதாளக் கயிறுகள் என்னைச்[SE][SS] சுற்றி இறுக்கின;[SE][SS] சாவின் கண்ணிகள் என்னைச்[SE][SS] சிக்க வைத்தன.[SE][QE]
6. [QS][SS] என் நெருக்கடி வேளையில்[SE][SS] நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்;[SE][SS] என் கடவுளை நோக்கிக் கதறினேன்;[SE][SS] தமது கோவிலினின்று[SE][SS] அவர் என் குரலைக் கேட்டார்;[SE][SS] என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது.[SE][QE]
7. [QS][SS] அப்பொழுது, மண்ணுலகம்[SE][SS] அசைந்து அதிர்ந்தது;[SE][SS] மலைகளின் அடித்தளங்கள் கிடுகிடுத்தன;[SE][SS] அவர்தம் கடுஞ்சினத்தால்[SE][SS] அவை நடுநடுங்கின.[SE][QE]
8. [QS][SS] அவரது நாசியினின்று புகை கிளம்பிற்று;[SE][SS] அவரது வாயினின்று[SE][SS] எரித்தழிக்கும் தீ மூண்டது;[SE][SS] அவரிடமிருந்து நெருப்புக்கனல் [BR] வெளிப்பட்டது.[SE][QE]
9. [QS][SS] வானைத் தாழ்த்தி அவர் கீழிறங்கினார்;[SE][SS] கார் முகில் அவரது காலடியில் இருந்தது.[SE][QE]
10. [QS][SS] கெருபுமீது அவர் ஏறிப் பறந்து வந்தார்;[SE][SS] காற்றை இறக்கைகளாகக் கொண்டு[SE][SS] விரைந்து வந்தார்.[SE][QE]
11. [QS][SS] காரிருளைத் தமக்கு அவர்[SE][SS] மூடுதிரை ஆக்கிக்கொண்டார்;[SE][SS] நீர்கொண்ட முகிலைத் தமக்குக் கூடாரம் ஆக்கிக்கொண்டார்.[SE][QE]
12. [QS][SS] அவர்தம் திருமுன்னின் பேரொளியில்,[SE][SS] மேகங்கள் கல் மழையையும்[SE][SS] நெருப்புக் கனலையும் பொழிந்தன.[SE][QE]
13. [QS][SS] ஆண்டவர் வானங்களில்[SE][SS] இடியென முழங்கினார்;[SE][SS] உன்னதர் தம் குரலை அதிரச் செய்தார்.[SE][SS] கல் மழையையும் நெருப்புக் கனலையும் [BR] பொழிந்தார்.[SE][QE]
14. [QS][SS] தம் அம்புகளை எய்து[SE][SS] அவர் அவர்களைச் சிதறடித்தார்;[SE][SS] பெரும் மின்னல்களைத் தெறித்து[SE][SS] அவர்களைக் கலங்கடித்தார்.[SE][QE]
15. [QS][SS] ஆண்டவரே, உமது கடிந்துரையாலும்[SE][SS] உமது மூச்சுக்காற்றின் வலிமையாலும்[SE][SS] நீர்த்திரளின் அடிப்பரப்பு தென்பட்டது;[SE][SS] நிலவுலகின் அடித்தளம் காணப்பட்டது.[SE][QE]
16. [QS][SS] உயரத்தினின்று அவர் என்னை[SE][SS] எட்டிப் பிடித்துக் கொண்டார்;[SE][SS] வெள்ளப்பெருக்கினின்று[SE][SS] என்னைக் காப்பாற்றினார்.[SE][QE]
17. [QS][SS] என் வலிமைமிகு எதிரியிடமிருந்து[SE][SS] அவர் என்னை விடுவித்தார்;[SE][SS] என்னைவிட வலிமைமிகு பகைவரிடமிருந்து[SE][SS] என்னைப் பாதுகாத்தார்;[SE][QE]
18. [QS][SS] எனக்கு இடுக்கண் வந்த நாளில்[SE][SS] அவர்கள் என்னை எதிர்த்தார்கள்;[SE][SS] ஆண்டவரோ எனக்கு[SE][SS] ஊன்றுகோலாய் இருந்தார்.[SE][QE]
19. [QS][SS] நெருக்கடியற்ற இடத்திற்கு[SE][SS] அவர் என்னைக் கொணர்ந்தார்;[SE][SS] நான் அவர் மனத்திற்கு[SE][SS] உகந்தவனாய் இருந்ததால்,[SE][SS] அவர் என்னை விடுவித்தார்.[SE][QE]
20. [QS][SS] ஆண்டவர் எனது நேர்மைக்கு[SE][SS] உரிய பயனை எனக்களித்தார்;[SE][SS] என் மாசற்ற செயலுக்கு ஏற்ப[SE][SS] கைம்மாறு செய்தார்.[SE][QE]
21. [QS][SS] ஏனெனில், நான் ஆண்டவர் காட்டிய[SE][SS] நெறியைக் கடைப்பிடித்தேன்;[SE][SS] பொல்லாங்கு செய்து[SE][SS] என் கடவுளை விட்டு அகலவில்லை.[SE][QE]
22. [QS][SS] அவர்தம் நீதிநெறிகளை எல்லாம்[SE][SS] என் கண்முன் வைத்திருந்தேன்;[SE][SS] அவர்தம் விதிமுறைகளை நான்[SE][SS] ஒதுக்கித் தள்ளவில்லை.[SE][QE]
23. [QS][SS] அவர் முன்னிலையில்[SE][SS] நான் மாசற்றவனாய் இருந்தேன்;[SE][SS] தீங்கு செய்யாவண்ணம்[SE][SS] என்னைக் காத்துக் கொண்டேன்.[SE][QE]
24. [QS][SS] ஆண்டவர், என் நேர்மைக்கு[SE][SS] உரிய பயனை அளித்தார்;[SE][SS] அவர்தம் பார்வையில்[SE][SS] நான் குற்றம் அற்றவனாய் இருந்தேன்.[SE][QE]
25. [QS][SS] ஆண்டவரே, மாறா அன்பர்க்கு[SE][SS] மாறா அன்பராகவும்[SE][SS] மாசற்றோர்க்கு மாசற்றவராகவும்[SE][SS] நீர் விளங்குவீர்.[SE][QE]
26. [QS][SS] தூயோருக்குத் தூயவராகவும்[SE][SS] வஞ்சகர்க்கு விவேகியாகவும்[SE][SS] உம்மை நீர் காட்டுகின்றீர்.[SE][QE]
27. [QS][SS] எளியோருக்கு நீர் மீட்பளிக்கின்றீர்;[SE][SS] செருக்குற்றோரை ஏளனத்துடன் [BR] நீர் பார்க்கின்றீர்.[SE][QE]
28. [QS][SS] ஆண்டவரே, நீர் என் விளக்குக்கு[SE][SS] ஒளியேற்றுகின்றீர்.[SE][SS] என் கடவுளே, நீர் என் இருளை[SE][SS] ஒளிமயமாக்குகின்றீர்.[SE][QE]
29. [QS][SS] உம் துணையுடன் நான்[SE][SS] எப்படையையும் நசுக்குவேன்;[SE][SS] என் கடவுளின் துணையால்[SE][SS] எம்மதிலையும் தாண்டுவேன்.[SE][QE]
30. [QS][SS] இந்த இறைவனின் வழி நிறைவானது;[SE][SS] ஆண்டவரின் வாக்கு நம்பத்தக்கது;[SE][SS] அவரிடம் அடைக்கலம் புகும் அனைவர்க்கும்[SE][SS] அவரே கேடயமாய் இருக்கின்றார்.[SE][QE]
31. [QS][SS] ஏனெனில், ஆண்டவரைத் தவிர[SE][SS] வேறு கடவுள் யார்?[SE][SS] நம் கடவுளைத் தவிர நமக்கு[SE][SS] வேறு கற்பாறை ஏது?[SE][QE]
32. [QS][SS] வலிமையை அரைக்கச்சையாக[SE][SS] அளித்த இறைவன் அவரே;[SE][SS] என் வழியைப் பாதுகாப்பானதாய்ச்[SE][SS] செய்தவரும் அவரே.[SE][QE]
33. [QS][SS] அவர் என் கால்களை மான்களின்[SE][SS] கால்களைப் போல் ஆக்குகின்றார்;[SE][SS] உயர்ந்த இடத்தில்[SE][SS] என்னை நிலைநிறுத்துகின்றார்.[SE][QE]
34. [QS][SS] போருக்கு என்னை அவர் பழக்குகின்றார்;[SE][SS] எனவே, வெண்கல வில்லையும் [BR] என் புயங்கள் வளைக்கும். [* அப 3:19 ] [SE][QE]
35. [QS][SS] ஆண்டவரே, பாதுகாக்கும் உம் கேடயத்தை[SE][SS] நீர் எனக்கு வழங்கினீர்;[SE][SS] உமது வலக்கரத்தால்[SE][SS] என்னைத் தாங்கிக் கொண்டீர்;[SE][SS] உமது துணையால்[SE][SS] என்னைப் பெருமைப்படுத்தினீர்.[SE][QE]
36. [QS][SS] நான் நடக்கும் வழியை அகலமாக்கினீர்;[SE][SS] என் கால்கள் தடுமாறவில்லை.[SE][QE]
37. [QS][SS] என் எதிரிகளைத் துரத்திச்சென்று[SE][SS] நான் அவர்களைப் பிடித்தேன்;[SE][SS] அவர்களை அழித்தொழிக்கும் வரையில்[SE][SS] திரும்பவில்லை.[SE][QE]
38. [QS][SS] அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி[SE][SS] அவர்களை நான் வெட்டித்தள்ளினேன்;[SE][SS] அவர்கள் என் காலடியில் வீழ்ந்தார்கள்.[SE][QE]
39. [QS][SS] போரிடும் ஆற்றலை நீர் எனக்கு[SE][SS] அரைக்கச்சையாக அளித்தீர்;[SE][SS] என்னை எதிர்த்தவர்களை[SE][SS] எனக்கு அடிபணியச் செய்தீர்.[SE][QE]
40. [QS][SS] என் எதிரிகளைப் புறமுதுகிடச் செய்தீர்;[SE][SS] என்னை வெறுத்தோரை[SE][SS] நான் அழித்துவிட்டேன்.[SE][QE]
41. [QS][SS] உதவி வேண்டி அவர்கள் கதறினார்கள்;[SE][SS] ஆனால், அவர்களுக்கு உதவுவார்[SE][SS] யாருமில்லை. அவர்கள்[SE][SS] ஆண்டவரை நோக்கி மன்றாடினார்கள்;[SE][SS] ஆனால், அவர்களுக்கு[SE][SS] அவர் பதிலளிக்கவில்லை.[SE][QE]
42. [QS][SS] எனவே, நான் அவர்களை நொறுக்கிக்[SE][SS] காற்றடித்துச் செல்லும் புழுதிபோல்[SE][SS] ஆக்கினேன்; தெருச் சேறென[SE][SS] அவர்களைத் தூர எறிந்து விட்டேன்.[SE][QE]
43. [QS][SS] என் மக்களின் கலகத்தினின்று[SE][SS] என்னை விடுவித்தீர்;[SE][SS] பிற இனங்களுக்கு[SE][SS] என்னைத் தலைவன் ஆக்கினீர்;[SE][SS] நான் முன்பின் அறியாத மக்கள்[SE][SS] எனக்குப் பணிவிடை செய்தனர்.[SE][QE]
44. [QS][SS] அவர்கள் என்னைப்பற்றிக்[SE][SS] கேள்விப்பட்டவுடன்[SE][SS] எனக்குப் பணிந்தனர்;[SE][SS] வேற்று நாட்டவர் என்னிடம்[SE][SS] கூனிக் குறுகி வந்தனர்.[SE][QE]
45. [QS][SS] வேற்று நாட்டவர் உள்ளம் தளர்ந்தனர்;[SE][SS] தம் அரண்களிலிருந்து[SE][SS] நடுங்கிக் கொண்டு வெளியே வந்தனர்.[SE][QE]
46. [QS][SS] ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்![SE][SS] என் கற்பாறையாம் அவர் [BR] போற்றப் பெறுவாராக![SE][SS] என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக![SE][QE]
47. [QS][SS] எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவர்;[SE][SS] மக்களினங்களை எனக்குக் [BR] கீழ்ப்படுத்தியவரும் அவரே![SE][QE]
48. [QS][SS] என் பகைவரிடமிருந்து[SE][SS] என்னை விடுவித்தவரும் அவரே![SE][SS] ஆண்டவரே! என் எதிரிகளுக்கு மேலாக[SE][SS] என்னை உயர்த்தினீர்![SE][SS] என்னைக் கொடுமைப்படுத்தியவரிடமிருந்து[SE][SS] நீர் என்னைக் காத்தீர்![SE][QE]
49. [QS][SS] ஆகவே, பிற இனத்தாரிடையே[SE][SS] உம்மைப் போற்றுவேன்;[SE][SS] உம் பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன்.[SE][QE]
50. [QS][SS] தாம் ஏற்படுத்திய அரசருக்கு[SE][SS] மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்;[SE][SS] தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும்[SE][SS] அவர்தம் மரபினருக்கும்[SE][SS] என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே. [* உரோ 15:9.[QE] ] [SE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 18 / 150
சங்கீதம் 18:65
அரசரின் வெற்றிப்பாடல்
(பாடகர் தலைவர்க்கு: ஆண்டவரின் அடியாராகிய தாவீது, தம் எதிரிகள் கையினின்றும் சவுலின் கையினின்றும் அவர் தம்மை விடுவித்த நாளில் அவரை நோக்கிப் பாடியது)

1 அவர் உரைத்தது: என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன். 2 ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண். 3 போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன். 4 சாவின் கயிறுகள் என்னை இறுக்கின; அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன. 5 பாதாளக் கயிறுகள் என்னைச் சுற்றி இறுக்கின; சாவின் கண்ணிகள் என்னைச் சிக்க வைத்தன. 6 என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்; என் கடவுளை நோக்கிக் கதறினேன்; தமது கோவிலினின்று அவர் என் குரலைக் கேட்டார்; என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது. 7 அப்பொழுது, மண்ணுலகம் அசைந்து அதிர்ந்தது; மலைகளின் அடித்தளங்கள் கிடுகிடுத்தன; அவர்தம் கடுஞ்சினத்தால் அவை நடுநடுங்கின. 8 அவரது நாசியினின்று புகை கிளம்பிற்று; அவரது வாயினின்று எரித்தழிக்கும் தீ மூண்டது; அவரிடமிருந்து நெருப்புக்கனல்
வெளிப்பட்டது.
9 வானைத் தாழ்த்தி அவர் கீழிறங்கினார்; கார் முகில் அவரது காலடியில் இருந்தது. 10 கெருபுமீது அவர் ஏறிப் பறந்து வந்தார்; காற்றை இறக்கைகளாகக் கொண்டு விரைந்து வந்தார். 11 காரிருளைத் தமக்கு அவர் மூடுதிரை ஆக்கிக்கொண்டார்; நீர்கொண்ட முகிலைத் தமக்குக் கூடாரம் ஆக்கிக்கொண்டார். 12 அவர்தம் திருமுன்னின் பேரொளியில், மேகங்கள் கல் மழையையும் நெருப்புக் கனலையும் பொழிந்தன. 13 ஆண்டவர் வானங்களில் இடியென முழங்கினார்; உன்னதர் தம் குரலை அதிரச் செய்தார். கல் மழையையும் நெருப்புக் கனலையும்
பொழிந்தார்.
14 தம் அம்புகளை எய்து அவர் அவர்களைச் சிதறடித்தார்; பெரும் மின்னல்களைத் தெறித்து அவர்களைக் கலங்கடித்தார். 15 ஆண்டவரே, உமது கடிந்துரையாலும் உமது மூச்சுக்காற்றின் வலிமையாலும் நீர்த்திரளின் அடிப்பரப்பு தென்பட்டது; நிலவுலகின் அடித்தளம் காணப்பட்டது. 16 உயரத்தினின்று அவர் என்னை எட்டிப் பிடித்துக் கொண்டார்; வெள்ளப்பெருக்கினின்று என்னைக் காப்பாற்றினார். 17 என் வலிமைமிகு எதிரியிடமிருந்து அவர் என்னை விடுவித்தார்; என்னைவிட வலிமைமிகு பகைவரிடமிருந்து என்னைப் பாதுகாத்தார்; 18 எனக்கு இடுக்கண் வந்த நாளில் அவர்கள் என்னை எதிர்த்தார்கள்; ஆண்டவரோ எனக்கு ஊன்றுகோலாய் இருந்தார். 19 நெருக்கடியற்ற இடத்திற்கு அவர் என்னைக் கொணர்ந்தார்; நான் அவர் மனத்திற்கு உகந்தவனாய் இருந்ததால், அவர் என்னை விடுவித்தார். 20 ஆண்டவர் எனது நேர்மைக்கு உரிய பயனை எனக்களித்தார்; என் மாசற்ற செயலுக்கு ஏற்ப கைம்மாறு செய்தார். 21 ஏனெனில், நான் ஆண்டவர் காட்டிய நெறியைக் கடைப்பிடித்தேன்; பொல்லாங்கு செய்து என் கடவுளை விட்டு அகலவில்லை. 22 அவர்தம் நீதிநெறிகளை எல்லாம் என் கண்முன் வைத்திருந்தேன்; அவர்தம் விதிமுறைகளை நான் ஒதுக்கித் தள்ளவில்லை. 23 அவர் முன்னிலையில் நான் மாசற்றவனாய் இருந்தேன்; தீங்கு செய்யாவண்ணம் என்னைக் காத்துக் கொண்டேன். 24 ஆண்டவர், என் நேர்மைக்கு உரிய பயனை அளித்தார்; அவர்தம் பார்வையில் நான் குற்றம் அற்றவனாய் இருந்தேன். 25 ஆண்டவரே, மாறா அன்பர்க்கு மாறா அன்பராகவும் மாசற்றோர்க்கு மாசற்றவராகவும் நீர் விளங்குவீர். 26 தூயோருக்குத் தூயவராகவும் வஞ்சகர்க்கு விவேகியாகவும் உம்மை நீர் காட்டுகின்றீர். 27 எளியோருக்கு நீர் மீட்பளிக்கின்றீர்; செருக்குற்றோரை ஏளனத்துடன்
நீர் பார்க்கின்றீர்.
28 ஆண்டவரே, நீர் என் விளக்குக்கு ஒளியேற்றுகின்றீர். என் கடவுளே, நீர் என் இருளை ஒளிமயமாக்குகின்றீர். 29 உம் துணையுடன் நான் எப்படையையும் நசுக்குவேன்; என் கடவுளின் துணையால் எம்மதிலையும் தாண்டுவேன். 30 இந்த இறைவனின் வழி நிறைவானது; ஆண்டவரின் வாக்கு நம்பத்தக்கது; அவரிடம் அடைக்கலம் புகும் அனைவர்க்கும் அவரே கேடயமாய் இருக்கின்றார். 31 ஏனெனில், ஆண்டவரைத் தவிர வேறு கடவுள் யார்? நம் கடவுளைத் தவிர நமக்கு வேறு கற்பாறை ஏது? 32 வலிமையை அரைக்கச்சையாக அளித்த இறைவன் அவரே; என் வழியைப் பாதுகாப்பானதாய்ச் செய்தவரும் அவரே. 33 அவர் என் கால்களை மான்களின் கால்களைப் போல் ஆக்குகின்றார்; உயர்ந்த இடத்தில் என்னை நிலைநிறுத்துகின்றார். 34 போருக்கு என்னை அவர் பழக்குகின்றார்; எனவே, வெண்கல வில்லையும்
என் புயங்கள் வளைக்கும். * அப 3:19
35 ஆண்டவரே, பாதுகாக்கும் உம் கேடயத்தை நீர் எனக்கு வழங்கினீர்; உமது வலக்கரத்தால் என்னைத் தாங்கிக் கொண்டீர்; உமது துணையால் என்னைப் பெருமைப்படுத்தினீர். 36 நான் நடக்கும் வழியை அகலமாக்கினீர்; என் கால்கள் தடுமாறவில்லை. 37 என் எதிரிகளைத் துரத்திச்சென்று நான் அவர்களைப் பிடித்தேன்; அவர்களை அழித்தொழிக்கும் வரையில் திரும்பவில்லை. 38 அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி அவர்களை நான் வெட்டித்தள்ளினேன்; அவர்கள் என் காலடியில் வீழ்ந்தார்கள். 39 போரிடும் ஆற்றலை நீர் எனக்கு அரைக்கச்சையாக அளித்தீர்; என்னை எதிர்த்தவர்களை எனக்கு அடிபணியச் செய்தீர். 40 என் எதிரிகளைப் புறமுதுகிடச் செய்தீர்; என்னை வெறுத்தோரை நான் அழித்துவிட்டேன். 41 உதவி வேண்டி அவர்கள் கதறினார்கள்; ஆனால், அவர்களுக்கு உதவுவார் யாருமில்லை. அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடினார்கள்; ஆனால், அவர்களுக்கு அவர் பதிலளிக்கவில்லை. 42 எனவே, நான் அவர்களை நொறுக்கிக் காற்றடித்துச் செல்லும் புழுதிபோல் ஆக்கினேன்; தெருச் சேறென அவர்களைத் தூர எறிந்து விட்டேன். 43 என் மக்களின் கலகத்தினின்று என்னை விடுவித்தீர்; பிற இனங்களுக்கு என்னைத் தலைவன் ஆக்கினீர்; நான் முன்பின் அறியாத மக்கள் எனக்குப் பணிவிடை செய்தனர். 44 அவர்கள் என்னைப்பற்றிக் கேள்விப்பட்டவுடன் எனக்குப் பணிந்தனர்; வேற்று நாட்டவர் என்னிடம் கூனிக் குறுகி வந்தனர். 45 வேற்று நாட்டவர் உள்ளம் தளர்ந்தனர்; தம் அரண்களிலிருந்து நடுங்கிக் கொண்டு வெளியே வந்தனர். 46 ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர்
போற்றப் பெறுவாராக!
என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக!
47 எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவர்; மக்களினங்களை எனக்குக்
கீழ்ப்படுத்தியவரும் அவரே!
48 என் பகைவரிடமிருந்து என்னை விடுவித்தவரும் அவரே! ஆண்டவரே! என் எதிரிகளுக்கு மேலாக என்னை உயர்த்தினீர்! என்னைக் கொடுமைப்படுத்தியவரிடமிருந்து நீர் என்னைக் காத்தீர்! 49 ஆகவே, பிற இனத்தாரிடையே உம்மைப் போற்றுவேன்; உம் பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன். 50 தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்; தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே. [* உரோ 15:9. ]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 18 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References