தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
மீகா
1. [PS] [QS][SS] அரண்சூழ் நகரில் வாழும் மக்களே![SE][SS] உங்கள் மதில்களுக்குப் பின்னால்[SE][SS] ஒளிந்து கொள்ளுங்கள்;[SE][SS] உங்களுக்கு எதிராக[SE][SS] முற்றுகையிடப்பட்டுள்ளது;[SE][SS] இஸ்ரயேலின் ஆளுநன்[SE][SS] கோலால் கன்னத்தில் அடி பெறுவான்.[SE][PE][QE]
2. {ஆட்சி செலுத்துபவர் பெத்லெகேமிலிருந்து தோன்றுவார்} [PS] [QS][SS] நீயோ, எப்ராத்தா எனப்படும்[SE][SS] பெத்லகேமே![SE][SS] யூதாவின் குடும்பங்களுள்[SE][SS] மிகச் சிறியதாய் இருக்கின்றாய்![SE][SS] ஆயினும், இஸ்ரயேலை[SE][SS] என் சார்பாக ஆளப் போகின்றவர்[SE][SS] உன்னிடமிருந்தே தோன்றுவார்;[SE][SS] அவர் தோன்றும் வழி மரபோ[SE][SS] ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும். [* மத் 2:6; யோவா 7:42. ] [SE][QE]
3. [QS][SS] ஆதலால்,[SE][SS] பேறுகால வேதனையில் இருப்பவள்[SE][SS] பிள்ளை பெறும்வரை[SE][SS] அவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்;[SE][SS] அதன் பின்னர்[SE][SS] அவருடைய இனத்தாருள்[SE][SS] எஞ்சியிருப்போர்[SE][SS] இஸ்ரயேல் மக்களிடம்[SE][SS] திரும்பி வருவார்கள்.[SE][QE]
4. [QS][SS] அவர் வரும்போது,[SE][SS] ஆண்டவரின் வலிமையோடும்[SE][SS] தம் கடவுளாகிய ஆண்டவரது[SE][SS] பெயரின் மாட்சியோடும் விளங்கித்[SE][SS] தம் மந்தையை மேய்ப்பார்;[SE][SS] அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்;[SE][SS] ஏனெனில், உலகின்[SE][SS] இறுதி எல்லைகள்வரை[SE][SS] அப்போது அவர்[SE][SS] மேன்மை பொருந்தியவராய்[SE][SS] விளங்குவார்;[SE][QE]
5. [QS][SS] அவரே அமைதியை அருள்வார்.[SE][PE][QE]{விடுதலையும் தண்டனைத் தீர்ப்பும்} [PS] [QS][SS] (5b) அசீரியர் நம் நாட்டிற்குள்[SE][SS] படையெடுத்து வரும்போதும்,[SE][SS] நம் அரண்களை[SE][SS] அழித்தொழிக்கும்போதும்[SE][SS] அவர்களுக்கு எதிராக[SE][SS] மேய்ப்பர் எழுவரையும்[SE][SS] மக்கள் தலைவர் எண்மரையும்[SE][SS] நாம் கிளர்ந்தெழச் செய்வோம்.[SE][QE]
6. [QS][SS] அவர்கள் அசீரியா நாடு முழுவதையும்[SE][SS] நிம்ரோது நாட்டை[SE][SS] அதன் நுழைவாயில்கள் வரையிலும்[SE][SS] தங்கள் வாளுக்கு[SE][SS] இரையாக்குவார்கள்;[SE][SS] அசீரியர் நம் நாட்டிற்குள்[SE][SS] படையெடுத்து வரும் போதும்,[SE][SS] நம் எல்லைகளைக் கடந்து வரும்போதும்,[SE][SS] நம்மை அவர்களிடமிருந்து[SE][SS] விடுவிப்பார்கள். [* தொநூ 10:8-11.[QE]. ] [SE][QE]
7. [QS][SS] அப்போது யாக்கோபில் எஞ்சியிருப்போர்[SE][SS] ஆண்டவரிடமிருந்து வரும்[SE][SS] பனியைப் போலவும்[SE][SS] மனிதருக்காகக் காத்திராமலும்[SE][SS] மானிடர்க்காகத் தாமதிக்காமலும்,[SE][SS] புல்மேல் பெய்கின்ற[SE][SS] மழைத்துளிகள் போலவும்,[SE][SS] பல மக்களினங்களிடையே இருப்பார்கள்.[SE][QE]
8. [QS][SS] மேலும், யாக்கோபிலே எஞ்சியிருப்போர்[SE][SS] காட்டு விலங்குகளிடையே இருக்கும்[SE][SS] சிங்கம் போலவும்,[SE][SS] ஆட்டு மந்தைக்குள் நுழைந்து[SE][SS] யாரும் விடுவிக்க இயலாத நிலையில்[SE][SS] அவற்றை மிதித்துத்[SE][SS] துண்டு துண்டாய்க் கிழித்துப் போடும்[SE][SS] சிங்கக் குட்டி போலவும்,[SE][SS] பல மக்களினங்களிடையே இருப்பார்கள்.[SE][QE]
9. [QS][SS] உனது கை[SE][SS] உன்னுடைய பகைவர்களுக்கு மேலாக[SE][SS] உயர்த்தப்படும்;[SE][SS] உன்னுடைய எதிரிகள் அனைவரும்[SE][SS] அழிந்தொழிவார்கள்.[SE][QE]
10. [QS][SS] அந்நாளில், “நான் உன்னிடமுள்ள[SE][SS] உன் குதிரைகளை வெட்டி வீழ்த்துவேன்;[SE][SS] உன் தேர்ப்படையை அழித்தொழிப்பேன்”[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][QE]
11. [QS][SS] “உன் நாட்டிலுள்ள நகர்களைத்[SE][SS] தகர்த்தெறிவேன்;[SE][SS] உன் அரண்கள் அனைத்தையும்[SE][SS] தரைமட்டமாக்குவேன்.[SE][QE]
12. [QS][SS] உன்னுடைய மாயவித்தைக்காரர்களை[SE][SS] ஒழித்துக்கட்டுவேன்;[SE][SS] குறிசொல்லுவோர்[SE][SS] உன்னிடம் இல்லாதொழிவர்.[SE][QE]
13. [QS][SS] நீ செய்து வைத்திருக்கும்[SE][SS] சிலைகளையும் படிமங்களையும்[SE][SS] உடைத்தெறிவேன்;[SE][SS] உன் கைவினைப் பொருள்கள்முன்[SE][SS] இனி நீ தலைவணங்கி நிற்கமாட்டாய்.[SE][QE]
14. [QS][SS] நீ நிறுத்தியிருக்கும் கம்பங்களைப்[SE][SS] பிடுங்கி எறிவேன்;[SE][SS] உன் நகரங்களை அழித்தொழிப்பேன்.[SE][QE]
15. [QS][SS] எனக்குச் செவி கொடாத[SE][SS] வேற்றினத்தார்மேல்[SE][SS] சினத்துடனும் கடும் சீற்றத்துடனும்[SE][SS] பழிதீர்த்துக் கொள்வேன்.”[SE][PE]

பதிவுகள்

மொத்தம் 7 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 5 / 7
1 2 3 4 5 6 7
1 அரண்சூழ் நகரில் வாழும் மக்களே! உங்கள் மதில்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளுங்கள்; உங்களுக்கு எதிராக முற்றுகையிடப்பட்டுள்ளது; இஸ்ரயேலின் ஆளுநன் கோலால் கன்னத்தில் அடி பெறுவான். ஆட்சி செலுத்துபவர் பெத்லெகேமிலிருந்து தோன்றுவார் 2 நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழி மரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும். [* மத் 2:6; யோவா 7: 42 ] 3 ஆதலால், பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை பெறும்வரை அவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்; அதன் பின்னர் அவருடைய இனத்தாருள் எஞ்சியிருப்போர் இஸ்ரயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள். 4 அவர் வரும்போது, ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்; ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள்வரை அப்போது அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்; 5 அவரே அமைதியை அருள்வார்.விடுதலையும் தண்டனைத் தீர்ப்பும் (5b) அசீரியர் நம் நாட்டிற்குள் படையெடுத்து வரும்போதும், நம் அரண்களை அழித்தொழிக்கும்போதும் அவர்களுக்கு எதிராக மேய்ப்பர் எழுவரையும் மக்கள் தலைவர் எண்மரையும் நாம் கிளர்ந்தெழச் செய்வோம். 6 அவர்கள் அசீரியா நாடு முழுவதையும் நிம்ரோது நாட்டை அதன் நுழைவாயில்கள் வரையிலும் தங்கள் வாளுக்கு இரையாக்குவார்கள்; அசீரியர் நம் நாட்டிற்குள் படையெடுத்து வரும் போதும், நம் எல்லைகளைக் கடந்து வரும்போதும், நம்மை அவர்களிடமிருந்து விடுவிப்பார்கள். [* தொநூ 10:8-11.. ] 7 அப்போது யாக்கோபில் எஞ்சியிருப்போர் ஆண்டவரிடமிருந்து வரும் பனியைப் போலவும் மனிதருக்காகக் காத்திராமலும் மானிடர்க்காகத் தாமதிக்காமலும், புல்மேல் பெய்கின்ற மழைத்துளிகள் போலவும், பல மக்களினங்களிடையே இருப்பார்கள். 8 மேலும், யாக்கோபிலே எஞ்சியிருப்போர் காட்டு விலங்குகளிடையே இருக்கும் சிங்கம் போலவும், ஆட்டு மந்தைக்குள் நுழைந்து யாரும் விடுவிக்க இயலாத நிலையில் அவற்றை மிதித்துத் துண்டு துண்டாய்க் கிழித்துப் போடும் சிங்கக் குட்டி போலவும், பல மக்களினங்களிடையே இருப்பார்கள். 9 உனது கை உன்னுடைய பகைவர்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; உன்னுடைய எதிரிகள் அனைவரும் அழிந்தொழிவார்கள். 10 அந்நாளில், “நான் உன்னிடமுள்ள உன் குதிரைகளை வெட்டி வீழ்த்துவேன்; உன் தேர்ப்படையை அழித்தொழிப்பேன்” என்கிறார் ஆண்டவர். 11 “உன் நாட்டிலுள்ள நகர்களைத் தகர்த்தெறிவேன்; உன் அரண்கள் அனைத்தையும் தரைமட்டமாக்குவேன். 12 உன்னுடைய மாயவித்தைக்காரர்களை ஒழித்துக்கட்டுவேன்; குறிசொல்லுவோர் உன்னிடம் இல்லாதொழிவர். 13 நீ செய்து வைத்திருக்கும் சிலைகளையும் படிமங்களையும் உடைத்தெறிவேன்; உன் கைவினைப் பொருள்கள்முன் இனி நீ தலைவணங்கி நிற்கமாட்டாய். 14 நீ நிறுத்தியிருக்கும் கம்பங்களைப் பிடுங்கி எறிவேன்; உன் நகரங்களை அழித்தொழிப்பேன். 15 எனக்குச் செவி கொடாத வேற்றினத்தார்மேல் சினத்துடனும் கடும் சீற்றத்துடனும் பழிதீர்த்துக் கொள்வேன்.”
மொத்தம் 7 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 5 / 7
1 2 3 4 5 6 7
×

Alert

×

Tamil Letters Keypad References