தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
மீகா
1. {இஸ்ரயேல் தலைவர்களுக்கு எதிரான மீக்காவின் கண்டனக் குரல்} [PS] [QS][SS] அப்பொழுது நான் கூறியது:[SE][SS] “யாக்கோபின் தலைவர்களே![SE][SS] இஸ்ரயேலின் குடும்பத்தை[SE][SS] ஆள்பவர்களே,[SE][SS] நீதியை அறிவிப்பது[SE][SS] உங்கள் கடமை அன்றோ![SE][QE]
2. [QS][SS] நீங்களோ நன்மையை வெறுத்துத்[SE][SS] தீமையை நாடுகின்றீர்கள்;[SE][SS] என் மக்களின் தோலை[SE][SS] உயிரோடே உரித்து,[SE][SS] அவர்கள் எலும்புகளிலிருந்து[SE][SS] சதையைக் கிழித்தெடுக்கின்றீர்கள்;[SE][QE]
3. [QS][SS] என் மக்களின் சதையைத்[SE][SS] தின்கின்றீர்கள்;[SE][SS] அவர்களின் தோலை[SE][SS] உரிக்கின்றீர்கள்;[SE][SS] அவர்களின் எலும்புகளை முறித்து,[SE][SS] சட்டியில் போடப்படும்[SE][SS] இறைச்சி போலவும்,[SE][SS] கொப்பரையில் கொட்டப்படும்[SE][SS] மாமிசம் போலவும்[SE][SS] துண்டு துண்டாக்குகின்றீர்கள்.[SE][QE]
4. [QS][SS] அப்பொழுது நீங்கள்[SE][SS] ஆண்டவரை நோக்கிக்[SE][SS] கூக்குரலிடுவீர்கள்;[SE][SS] ஆனால் உங்களுக்கு அவர்[SE][SS] செவிசாய்க்கமாட்டார்.[SE][SS] அந்த நேரத்தில் அவர் தம் முகத்தை[SE][SS] உங்களிடம் இருந்து[SE][SS] மறைத்துக்கொள்வார்;[SE][SS] ஏனெனில், உங்களின் செயல்கள்[SE][SS] தீயனவாய் இருக்கின்றன.”[SE][QE]
5. [QS][SS] இறைவாக்கினர்களைக் குறித்து[SE][SS] ஆண்டவர் கூறுவது இதுவே:[SE][SS] “அவர்கள் என் மக்களைத்[SE][SS] தவறான வழியில்[SE][SS] நடத்திச் செல்கின்றார்கள்.[SE][SS] வயிறார உண்ணக் கொடுத்தவரிடம்[SE][SS] ‘அமைதி உண்டாகுக!’ என[SE][SS] உரக்கச் சொல்கின்றார்கள்;[SE][SS] வாய்க்குத் தீனி போடாதவரிடம்[SE][SS] ‘புனிதப் போர் வரும்’ எனக்[SE][SS] கூறுகின்றார்கள்.”[SE][QE]
6. [QS][SS] ஆதலால் “இறைவாக்கினரே,[SE][SS] திருக்காட்சி உங்களுக்குக்[SE][SS] கிடைக்காது;[SE][SS] முன்னுரைத்தல் இராது;[SE][SS] காரிருள் உங்களைக்[SE][SS] கவ்விக் கொள்ளும்;[SE][SS] இனி உங்கள்மேல்[SE][SS] கதிரவன் ஒளி படராது;[SE][SS] பகலும் உங்களுக்கு[SE][SS] இருளாய் இருக்கும்.”[SE][QE]
7. [QS][SS] காட்சி காண்பவர்கள்[SE][SS] மானக்கேடு அடைவார்கள்;[SE][SS] முன்னுரைப்பவர்கள்[SE][SS] நாணிப்போவார்கள்;[SE][SS] அவர்கள் அனைவரும்[SE][SS] தங்கள் வாயைப்[SE][SS] பொத்திக் கொள்வார்கள்;[SE][SS] ஏனெனில் கடவுளிடமிருந்து[SE][SS] மறுமொழி ஏதும் வராது.[SE][QE]
8. [QS][SS] ஆனால், நான் யாக்கோபுக்கு[SE][SS] அவன் குற்றத்தையும்,[SE][SS] இஸ்ரயேலுக்கு அவன் பாவத்தையும்[SE][SS] அறிவிக்க,[SE][SS] வல்லமையாலும்[SE][SS] ஆண்டவரின் ஆவியாலும்,[SE][SS] நீதியாலும் ஆற்றலாலும்[SE][SS] நிரப்பப்பட்டுள்ளேன்.[SE][QE]
9. [QS][SS] யாக்கோபு குடும்பத்தாரின்[SE][SS] தலைவர்களே,[SE][SS] இஸ்ரயேல் குடும்பத்தை ஆள்பவர்களே,[SE][SS] இதைக் கேளுங்கள்;[SE][SS] நீங்கள் நீதியை அருவருக்கிறீர்கள்;[SE][SS] நேர்மையானவற்றைக்[SE][SS] கோணலாக்குகின்றீர்கள்.[SE][QE]
10. [QS][SS] இரத்தப்பழியால் சீயோனையும்,[SE][SS] அநீதியால் எருசலேமையும்[SE][SS] கட்டியெழுப்புகின்றீர்கள்.[SE][QE]
11. [QS][SS] அந்த நகரின் தலைவர்கள்[SE][SS] கையூட்டு வாங்கிக்கொண்டு[SE][SS] தீர்ப்பு வழங்குகிறார்கள்;[SE][SS] அதன் குருக்கள்[SE][SS] கூலிக்காகப் போதிக்கின்றனர்;[SE][SS] இறைவாக்கினர்[SE][SS] பணத்துக்காக முன்னுரைக்கின்றனர்;[SE][SS] ஆயினும் ஆண்டவரது துணையை நம்பி,[SE][SS] ‘ஆண்டவர் நம் நடுவில்[SE][SS] இருக்கின்றார் அல்லவா?[SE][SS] எனவே தீமை நம்மை அணுகாது’ என்று[SE][SS] சொல்லிக்கொள்கின்றார்கள்.[SE][QE]
12. [QS][SS] ஆதலால், உங்களை முன்னிட்டுச்[SE][SS] சீயோன் வயல்வெளியைப்போல்[SE][SS] உழப்படும்;[SE][SS] எருசலேம் பாழடைந்த[SE][SS] மண் மேடாக மாறும்;[SE][SS] கோவில் உள்ள மலையோ[SE][SS] அடர்ந்த காடாகும்.” [* எரே 26:18.[QE]. ] [SE][PE]

பதிவுகள்

மொத்தம் 7 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 3 / 7
1 2 3 4 5 6 7
இஸ்ரயேல் தலைவர்களுக்கு எதிரான மீக்காவின் கண்டனக் குரல் 1 அப்பொழுது நான் கூறியது: “யாக்கோபின் தலைவர்களே! இஸ்ரயேலின் குடும்பத்தை ஆள்பவர்களே, நீதியை அறிவிப்பது உங்கள் கடமை அன்றோ! 2 நீங்களோ நன்மையை வெறுத்துத் தீமையை நாடுகின்றீர்கள்; என் மக்களின் தோலை உயிரோடே உரித்து, அவர்கள் எலும்புகளிலிருந்து சதையைக் கிழித்தெடுக்கின்றீர்கள்; 3 என் மக்களின் சதையைத் தின்கின்றீர்கள்; அவர்களின் தோலை உரிக்கின்றீர்கள்; அவர்களின் எலும்புகளை முறித்து, சட்டியில் போடப்படும் இறைச்சி போலவும், கொப்பரையில் கொட்டப்படும் மாமிசம் போலவும் துண்டு துண்டாக்குகின்றீர்கள். 4 அப்பொழுது நீங்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிடுவீர்கள்; ஆனால் உங்களுக்கு அவர் செவிசாய்க்கமாட்டார். அந்த நேரத்தில் அவர் தம் முகத்தை உங்களிடம் இருந்து மறைத்துக்கொள்வார்; ஏனெனில், உங்களின் செயல்கள் தீயனவாய் இருக்கின்றன.” 5 இறைவாக்கினர்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே: “அவர்கள் என் மக்களைத் தவறான வழியில் நடத்திச் செல்கின்றார்கள். வயிறார உண்ணக் கொடுத்தவரிடம் ‘அமைதி உண்டாகுக!’ என உரக்கச் சொல்கின்றார்கள்; வாய்க்குத் தீனி போடாதவரிடம் ‘புனிதப் போர் வரும்’ எனக் கூறுகின்றார்கள்.” 6 ஆதலால் “இறைவாக்கினரே, திருக்காட்சி உங்களுக்குக் கிடைக்காது; முன்னுரைத்தல் இராது; காரிருள் உங்களைக் கவ்விக் கொள்ளும்; இனி உங்கள்மேல் கதிரவன் ஒளி படராது; பகலும் உங்களுக்கு இருளாய் இருக்கும்.” 7 காட்சி காண்பவர்கள் மானக்கேடு அடைவார்கள்; முன்னுரைப்பவர்கள் நாணிப்போவார்கள்; அவர்கள் அனைவரும் தங்கள் வாயைப் பொத்திக் கொள்வார்கள்; ஏனெனில் கடவுளிடமிருந்து மறுமொழி ஏதும் வராது. 8 ஆனால், நான் யாக்கோபுக்கு அவன் குற்றத்தையும், இஸ்ரயேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்க, வல்லமையாலும் ஆண்டவரின் ஆவியாலும், நீதியாலும் ஆற்றலாலும் நிரப்பப்பட்டுள்ளேன். 9 யாக்கோபு குடும்பத்தாரின் தலைவர்களே, இஸ்ரயேல் குடும்பத்தை ஆள்பவர்களே, இதைக் கேளுங்கள்; நீங்கள் நீதியை அருவருக்கிறீர்கள்; நேர்மையானவற்றைக் கோணலாக்குகின்றீர்கள். 10 இரத்தப்பழியால் சீயோனையும், அநீதியால் எருசலேமையும் கட்டியெழுப்புகின்றீர்கள். 11 அந்த நகரின் தலைவர்கள் கையூட்டு வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்குகிறார்கள்; அதன் குருக்கள் கூலிக்காகப் போதிக்கின்றனர்; இறைவாக்கினர் பணத்துக்காக முன்னுரைக்கின்றனர்; ஆயினும் ஆண்டவரது துணையை நம்பி, ‘ஆண்டவர் நம் நடுவில் இருக்கின்றார் அல்லவா? எனவே தீமை நம்மை அணுகாது’ என்று சொல்லிக்கொள்கின்றார்கள். 12 ஆதலால், உங்களை முன்னிட்டுச் சீயோன் வயல்வெளியைப்போல் உழப்படும்; எருசலேம் பாழடைந்த மண் மேடாக மாறும்; கோவில் உள்ள மலையோ அடர்ந்த காடாகும்.” [* எரே 26:18.. ]
மொத்தம் 7 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 3 / 7
1 2 3 4 5 6 7
×

Alert

×

Tamil Letters Keypad References