தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
லேவியராகமம்
1. ஆண்டவர் மோசேயிடம் கூறியது;
2. இஸ்ரயேல் மக்கள் எனக்கு நேர்ச்சையாகச் செலுத்தும் தூய பொருள்களால் ஆரோனும் அவன் பிள்ளைகளும் என் பெயரை இழிவுபடுத்தாதபடி எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று அவர்களிடம் கூறு. நானே ஆண்டவர்.
3. அவர்களிடம் நீ கூற வேண்டியது; உங்கள் வழிமரபினருள் எவனும் தீட்டுப்பட்டிருந்து, இஸ்ரயேல் மக்கள் நேர்ச்சையாகச் செலுத்தும் தூய பொருள்கள் அருகில் வந்தால், அவன் என் முன் இராதபடி அழிவான். நானே ஆண்டவர்.
4. ஆரோன் குடும்பத்தினரில் தொழு நோயாளியோ விந்து ஒழுக்கு உடையவனோ இருந்தால் குணமாகும் மட்டும் அவன் தூய பொருள்களை உண்ண வேண்டாம். பிணத்தால் தீட்டானதைத் தொட்டவனும் விந்தொழுகியவனும்,
5. தீட்டு என ஒதுக்கிய ஊர்வனவற்றையோ, தீட்டான மனிதரையோ தொட்டவனும்,
6. மாலைமட்டும் தீட்டுடன் இருப்பான். அவன் தூய பொருள்களை உண்ணாமல் தன் உடலைத் தண்ணீரால் கழுவ வேண்டும்.
7. கதிரவன் மறைந்தபின் தூய்மை அடைவான், அப்பொழுது அவன் தூய பொருள்களை உண்ணலாம். ஏனெனில் அது அவன் உணவு.
8. தானாய்ச் செத்ததையும், பீறிக் கிழிக்கப்பட்டதையும் அவன் உண்டு தீட்டாக வேண்டாம். நானே ஆண்டவர்.
9. எனவே தூய்மையானதைத் தீட்டாக்குவதால் தங்கள் மேல் பாவத்தைச் சுமத்திக்கொண்டு சாகாதவாறு, நான் ஒப்படைத்தவற்றை அவர்கள் காப்பார்களாக! நானே அவர்களைத் தூயோராக்கும் ஆண்டவர்!
10. வேற்றினத்தார் எவரும் தூய பொருள்களை உண்ண வேண்டாம். குரு வீட்டிலுள்ள விருந்தினரும் கூலிக்காக வேலை செய்பவரும் தூய பொருளை உண்ண வேண்டாம்.
11. குருவின் பணம் கொடுத்து வாங்கிய அடிமையும், அவன் வீட்டில் பிறந்தவனும் குருவின் உணவை உண்ணலாம்.
12. குருவின் மணமுடித்த மகள் தூயபொருள்களை உண்ண வேண்டாம்.
13. குருவின் குழந்தைகளற்ற கைம்பெண் அல்லது மணவிலக்குப் பெற்றவளான மகள் திரும்பிவந்து இளமையிலிருந்து தன் தந்தையோடு வாழ்ந்ததுபோல வாழ்ந்தாளாயின், தந்தையின் உணவில் பங்கு பெறலாம். ஆனால் பொது நிலையர் எவரும் அதை உண்ணலாகாது.
14. தூய பொருளை அறியாமல் உண்பவர். அப்பொருளின் விலையில் ஐந்தில் ஒரு பங்கைக் கூடுதலாகக் கொடுத்து தூய பொருளுடன் குருவுக்குக் கொடுக்க வேண்டும்.
15. ஆண்டவருக்கு இஸ்ரயேலர் நேர்ச்சையாக அளிக்கும் புனிதப் பொருள்களைக் குருக்கள் இழிவுக்கு உள்ளாக்கக்கூடாது.
16. அப்புனிதப் பொருள்களை உண்டு இழிவுக்கு உள்ளாக்குவதால், அவர்கள் தண்டம் செலுத்தும் குற்றப்பழிக்கு ஆளாவர். ஏனெனில், நானே அவர்களைத் தூய்மையாக்கும் ஆண்டவர்!
17. ஆண்டவர் மீண்டும் மோசேயிடம் கூறியது;
18. "ஆரோன், அவன் புதல்வர் மற்றும் இஸ்ரயேல் மக்கள் அனைவரிடமும் கூற வேண்டியது; இஸ்ரயேலரோ இஸ்ரயேலரிடையே தங்கியிருக்கும் அன்னியர்களோ தங்கள் பொருத்தனைக்கேற்ப அல்லது ஆர்வமிகுதியால் எரிபலியாகச் செலுத்தும் காணிக்கை
19. அவரவர் விருப்பப்படியே மாடு, ஆடு, வெள்ளாடு எவற்றிலேனும் பழுதற்ற ஓர் ஆணாய் இருப்பதாக!
20. பழுதான எதையும் உங்களுக்காகச் செலுத்தலாகாது. அது ஆண்டவருக்கு உகந்தது அன்று.
21. சிறப்புப் பொருத்தனையோ, தன்னார்வக் காணிக்கையோ மாடுகளில் அல்லது ஆடுகளில் நல்லுறவுப் பலியாகச் செலுத்தினால், அது ஏற்கத்தக்கதாக அமைய, மாசுமறுவற்றதாய் இருத்தல் வேண்டும்.
22. குருடு, ஊனம், நெரிவு, கழிச்சல் நோய், சொறி, சிரங்கு முதலிய குறைபாடுள்ளவற்றைச் செலுத்தாமலும் அவற்றை ஆண்டவரின் பலிபீடத்தில் எரிபலியாக்காமலும் இருப்பீர்களாக.
23. உறுப்பு ஒழுங்கற்ற ஆடோ, மாடோ, மகிழ்வுப்பலி ஆகலாம். ஆனால் அது பொருத்தனைக்கு ஏற்றதன்று.
24. விதை நசுங்கினதையும் நொறுங்கினதையும், காயம்பட்டதையும் விதை அடிக்கப்பட்டதையும் ஆண்டவருக்கு நீங்கள் காணிக்கை ஆக்காமலும் உங்கள் நாட்டில் பலியிடாமலும் இருப்பீர்களாக!
25. வேற்றின் மக்களிடமிருந்து இத்தகையவற்றை வாங்கி உங்கள் கடவுளுக்கு உணவுப் படையலாகச் செலுத்தாதீர். அவற்றில் கேடும் பழுதும் உள்ளன. அவை உங்கள் சார்பாக எற்றுக்கொள்ளப்பட மாட்டா. "
26. ஆண்டவர் மோசேயிடம் கூறியது;
27. ஒரு கன்று, செம்மறி, அல்லது வெள்ளாட்டுக்குட்டி பிறந்தால், ஏழு நாளளவும் தன் தாயிடம் அது இருக்கட்டும். எட்டாம் நாளிலிருந்து அது ஆண்டவருக்குரிய எரிபலியாகச் செலத்தப்படும். இது விரும்பத்தக்கது.
28. பசுவையும் அதன் கன்றையும் அல்லது ஆட்டையும் அதன் குட்டியையும் ஒரே நாளில் பலியிட வேண்டாம்.
29. நன்றிப்பலியை ஆண்டவருக்குச் செலுத்தினால், அது உங்கள் சார்பாக ஏற்கத் தகுந்ததாக இருக்கட்டும்.
30. அன்றே அது உண்ணப்படவேண்டும். விடியற்காலை மட்டும் அதில் ஒன்றும் மீதியாக வேண்டாம். நானே ஆண்டவர்!
31. கட்டளைகளைக் கடைப்பிடித்து அவற்றிற்கேற்ப ஒழுகுங்கள். நானே ஆண்டவர்!
32. இஸ்ரயேல் மக்களிடையே நான் தூயவராகக் கருதப்படுமாறு, என் திருப்பெயரை இழிவுப் படுத்தாதிருங்கள். நானே உங்களைப் புனிதர் ஆக்கும் ஆண்டவர்!
33. உங்களுக்குக் கடவுளாய் இருக்குமாறு உங்களை எகிப்தினின்று அழைத்து வந்தேன். நானே ஆண்டவர்! என்று சொல். "

குறிப்பேடுகள்

No Verse Added

Total 27 Chapters, Current Chapter 22 of Total Chapters 27
லேவியராகமம் 22:37

×

Alert

×

tamil Letters Keypad References