1. {யோனாவின் மன்றாட்டு} [PS] யோனா அந்த மீன் வயிற்றில் இருந்தவாறு, தம் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடலானார்: [* 2 அர 14:25. ]
2. [QS][SS] “ஆண்டவரே! எனக்கு[SE][SS] இக்கட்டு வந்த வேளைகளில்[SE][SS] நான் உம்மை நோக்கி மன்றாடினேன். [BR] நீர் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தீர்.[SE][SS] பாதாளத்தின் நடுவிலிருந்து[SE][SS] உம்மை நோக்கிக் கதறினேன்;[SE][SS] என் கூக்குரலுக்கு நீர் செவிகொடுத்தீர்;[SE][QE]
3. [QS][SS] நடுக் கடலின் ஆழத்திற்குள்[SE][SS] என்னைத் தள்ளினீர்;[SE][SS] தண்ணீர்ப் பெருக்கு[SE][SS] என்னைச் சூழ்ந்துகொண்டது.[SE][SS] நீர் அனுப்பிய அலைதிரை எல்லாம்[SE][SS] என்மீது புரண்டு கடந்து சென்றன. [* * நினிவே நகருக்கு எதிர் திசையிலிருந்த ஓர் ஊர். . இது ஸ்பெயின் நாட்டில் இருந்ததாகக் கருதப்படுகிறது. ] [SE][QE]
4. [QS][SS] அப்பொழுது நான்,[SE][SS] ‛உமது முன்னிலையிலிருந்து[SE][SS] புறம்பே தள்ளப்பட்டேன்;[SE][SS] இனி எவ்வாறு உமது கோவிலைப்[SE][SS] பார்க்கப் போகிறேன்’ என்று[SE][SS] சொல்லிக்கொண்டேன்.[SE][QE]
5. [QS][SS] மூச்சுத் திணறும்படி[SE][SS] தண்ணீர் என்னை அழுத்திற்று;[SE][SS] ஆழ்கடல் என்னைச் சூழ்ந்தது;[SE][SS] கடற்பாசி என் தலையைச் [BR] சுற்றிக் கொண்டது.[SE][QE]
6. [QS][SS] மலைகள் புதைந்துள்ள ஆழம்வரை[SE][SS] நான் கீழுலகிற்கு இறங்கினேன்.[SE][SS] அங்கேயே என்னை என்றும்[SE][SS] இருத்தி வைக்கும்படி,[SE][SS] அதன் தாழ்ப்பாள்கள்[SE][SS] அடைத்துக் கொண்டன.[SE][SS] ஆனால், என் கடவுளாகிய ஆண்டவரே,[SE][SS] நீர் அந்தக் குழியிலிருந்து [BR] என்னை உயிரோடு மீட்டீர்.[SE][QE]
7. [QS][SS] என் உயிர்[SE][SS] ஊசலாடிக் கொண்டிருந்தபோது,[SE][SS] ஆண்டவரே! உம்மை நினைத்து[SE][SS] வேண்டுதல் செய்தேன்.[SE][SS] உம்மை நோக்கி[SE][SS] நான் எழுப்பிய மன்றாட்டு[SE][SS] உமது கோவிலை வந்தடைந்தது.[SE][QE]
8. [QS][SS] பயனற்ற சிலைகளை[SE][SS] வணங்குகின்றவர்கள்[SE][SS] உம்மிடம் கொண்டிருந்த பற்றினைக்[SE][SS] கைவிட்டார்கள்.[SE][QE]
9. [QS][SS] ஆனால், நான்[SE][SS] உம்மைப் புகழ்ந்து பாடி[SE][SS] உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்;[SE][SS] நான் செய்த பொருத்தனைகளை [BR] நிறைவேற்றுவேன்.[SE][SS] மீட்பு அளிப்பவர் ஆண்டவரே” என்று[SE][SS] வேண்டிக்கொண்டார்.[SE][PE][QE]
10. [PS] ஆண்டவர் அந்த மீனுக்குக் கட்டளையிட, அது யோனாவைக் கரையிலே கக்கியது.[PE]