தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
ஓசியா
1. {குருக்களுக்கும் அரச குடும்பத்தினருக்கும் எதிரான குற்றச்சாட்டு} [PS] [QS][SS] குருக்களே, இதைக் கேளுங்கள்;[SE][SS] இஸ்ரயேல் குடும்பத்தாரே,[SE][SS] கவனியுங்கள்;[SE][SS] அரசனின் வீட்டாரே,[SE][SS] செவி கொடுங்கள்;[SE][SS] உங்களுக்கு எதிராகவே[SE][SS] தீர்ப்புத் தரப்படுகின்றது;[SE][SS] நீங்கள் மிஸ்பாவில்[SE][SS] ஒரு கண்ணியாய் இருக்கின்றீர்கள்;[SE][SS] தாபோர்மீது விரிக்கப்பட்ட[SE][SS] வலையுமாயிருக்கின்றீர்கள்.[SE][QE]
2. [QS][SS] வஞ்சகர்கள் கொலைத் தொழிலில்[SE][SS] ஆழ்ந்துள்ளார்கள்;[SE][SS] அவர்கள் அனைவரையும்[SE][SS] தண்டிப்பேன்.[SE][QE]
3. [QS][SS] எப்ராயிமை நான் அறிந்திருக்கிறேன்;[SE][SS] இஸ்ரயேல் எனக்கு மறைவானதன்று;[SE][SS] எப்ராயிமே! நீ வேசித்தனத்தில்[SE][SS] ஈடுபட்டிருக்கின்றாய்;[SE][SS] இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருக்கின்றது;[SE][QE]
4. [QS][SS] அவர்களுடைய கடவுளிடம் திரும்பிவர[SE][SS] அவர்களின் செயல்கள் விடுவதில்லை;[SE][SS] ஏனெனில், விபசாரப் புத்தி[SE][SS] அவர்களை ஆட்கொண்டுள்ளது;[SE][SS] ஆண்டவரைப்பற்றிய அறிவு[SE][SS] அவர்களுக்கில்லை. [* "உன் மக்கள் குருவோடு வழக்காடுகிறவர்களைப் போலிருக்கிறார்கள்" என்பது "குருவே, உன்னோடு தான் என் வழக்கு" எனவும் பொருள்படும்.[QE]. ] [SE][QE]
5. [QS][SS] இஸ்ரயேலின் இறுமாப்பு[SE][SS] அவனுக்கு எதிராகச் சான்று கூறும்;[SE][SS] இஸ்ரயேலும் எப்ராயிமும்[SE][SS] தங்கள் தீச்செயலால்[SE][SS] இடறிவிழுவார்கள்;[SE][SS] யூதாவும் அவர்களோடு[SE][SS] இடறிவிழுவான்.[SE][QE]
6. [QS][SS] தங்கள் ஆடு மாடுகளோடு[SE][SS] அவர்கள் ஆண்டவரைத்[SE][SS] தேடிப் போவார்கள்;[SE][SS] ஆனால் அவரைக் காணமாட்டார்கள்;[SE][SS] அவர் அவர்களை விட்டு விலகி விட்டார்.[SE][QE]
7. [QS][SS] ஆண்டவருக்கு நம்பிக்கைத் துரோகம்[SE][SS] செய்தார்கள்; ஏனெனில்[SE][SS] அன்னியப் பிள்ளைகளைப்[SE][SS] பெற்றார்கள்; இப்பொழுதே அவர்களையும்[SE][SS] அவர்கள் நிலங்களையும்[SE][SS] அமாவாசை விழுங்கப் போகிறது.[SE][QE]
8. [QS][SS] கிபயாவில் கொம்பு ஊதுங்கள்;[SE][SS] இராமாவில் எக்காளம் முழக்குங்கள்;[SE][SS] பெத்தாவேனில் போர்க்குரல்[SE][SS] எழுப்புங்கள்;[SE][SS] பென்யமின்! உன்னைப்[SE][SS] பின் தொடருகின்றார்கள்.[SE][QE]
9. [QS][SS] தண்டனை வழங்கப்படும் நாளில்[SE][SS] எப்ராயிம் பாழாவான்;[SE][SS] இஸ்ரயேலின் குலங்களுக்கு[SE][SS] உறுதியாய் நேரிடப் போவதையே[SE][SS] அறிவிக்கின்றேன்.[SE][QE]
10. [QS][SS] யூதாவின் தலைவர்கள்[SE][SS] எல்லைக்கல்லைத் தள்ளி[SE][SS] வைக்கிறவர்களுக்கு ஒப்பாவார்கள்;[SE][SS] அவர்கள் மேல் என் கோபத்தை[SE][SS] வெள்ளப்பெருக்கைப்போல்[SE][SS] கொட்டித் தீர்ப்பேன்.[SE][QE]
11. [QS][SS] எப்ராயிம் ஒடுக்கப்படுகின்றான்;[SE][SS] தண்டனைத் தீர்ப்பால்[SE][SS] நொறுக்கப்படுகின்றான்;[SE][SS] அவன் வீணான கட்டளைகளைப்[SE][SS] பின்பற்றுவதில் கருத்தாய் இருந்தான்.[SE][QE]
12. [QS][SS] ஆகையால் எப்ராயிமுக்கு[SE][SS] நான் விட்டில்போல் இருக்கின்றேன்;[SE][SS] யூதாவின் வீட்டாருக்குப்[SE][SS] புற்றுநோய்போல் இருக்கின்றேன்.[SE][PE][QE]
13. {வேற்று நாட்டுடன் செய்த மதியீனமான உடன்படிக்கை} [PS] [QS][SS] எப்ராயிம் தன் பிணியைக்[SE][SS] கண்டுகொண்டான்;[SE][SS] யூதா தன் காயத்தை[SE][SS] உணர்ந்து கொண்டான்;[SE][SS] எப்ராயிம் அசீரியாவில் புகலிடம் தேடி,[SE][SS] யாரேபு அரசனுக்கு ஆளனுப்பினான்.[SE][SS] ஆனால், உங்களைக் குணமாக்கவோ,[SE][SS] உங்கள் காயங்களை ஆற்றவோ[SE][SS] அவனால் இயலாது.[SE][QE]
14. [QS][SS] ஏனெனில், நான் எப்ராயிமுக்குச்[SE][SS] சிங்கத்தைப் போலவும்,[SE][SS] யூதாவின் வீட்டாருக்குச்[SE][SS] சிங்கக்குட்டியைப்போலவும்[SE][SS] இருப்பேன்;[SE][SS] நான், நானே அவர்களைக்[SE][SS] கவ்விப் பிடிப்பேன்;[SE][SS] தூக்கிக்கொண்டு போவேன்;[SE][SS] விடுவிப்பவன் எவனுமே இரான்.[SE][QE]
15. [QS][SS] தங்கள் குற்றத்திற்கான பழியை ஏற்று,[SE][SS] என்னைத் தேடி வரும்வரை,[SE][SS] நான் என் இடத்திற்குத்[SE][SS] திரும்பிப் போய்விடுவேன்.[SE][SS] தங்கள் துன்பத்திலே அவர்கள்[SE][SS] என்னைத் தேடுவார்கள்.[SE][PE][QE]

பதிவுகள்

மொத்தம் 14 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 5 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
குருக்களுக்கும் அரச குடும்பத்தினருக்கும் எதிரான குற்றச்சாட்டு 1 குருக்களே, இதைக் கேளுங்கள்; இஸ்ரயேல் குடும்பத்தாரே, கவனியுங்கள்; அரசனின் வீட்டாரே, செவி கொடுங்கள்; உங்களுக்கு எதிராகவே தீர்ப்புத் தரப்படுகின்றது; நீங்கள் மிஸ்பாவில் ஒரு கண்ணியாய் இருக்கின்றீர்கள்; தாபோர்மீது விரிக்கப்பட்ட வலையுமாயிருக்கின்றீர்கள். 2 வஞ்சகர்கள் கொலைத் தொழிலில் ஆழ்ந்துள்ளார்கள்; அவர்கள் அனைவரையும் தண்டிப்பேன். 3 எப்ராயிமை நான் அறிந்திருக்கிறேன்; இஸ்ரயேல் எனக்கு மறைவானதன்று; எப்ராயிமே! நீ வேசித்தனத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்; இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருக்கின்றது; 4 அவர்களுடைய கடவுளிடம் திரும்பிவர அவர்களின் செயல்கள் விடுவதில்லை; ஏனெனில், விபசாரப் புத்தி அவர்களை ஆட்கொண்டுள்ளது; ஆண்டவரைப்பற்றிய அறிவு அவர்களுக்கில்லை. [* "உன் மக்கள் குருவோடு வழக்காடுகிறவர்களைப் போலிருக்கிறார்கள்" என்பது "குருவே, உன்னோடு தான் என் வழக்கு" எனவும் பொருள்படும்.. ] 5 இஸ்ரயேலின் இறுமாப்பு அவனுக்கு எதிராகச் சான்று கூறும்; இஸ்ரயேலும் எப்ராயிமும் தங்கள் தீச்செயலால் இடறிவிழுவார்கள்; யூதாவும் அவர்களோடு இடறிவிழுவான். 6 தங்கள் ஆடு மாடுகளோடு அவர்கள் ஆண்டவரைத் தேடிப் போவார்கள்; ஆனால் அவரைக் காணமாட்டார்கள்; அவர் அவர்களை விட்டு விலகி விட்டார். 7 ஆண்டவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தார்கள்; ஏனெனில் அன்னியப் பிள்ளைகளைப் பெற்றார்கள்; இப்பொழுதே அவர்களையும் அவர்கள் நிலங்களையும் அமாவாசை விழுங்கப் போகிறது. 8 கிபயாவில் கொம்பு ஊதுங்கள்; இராமாவில் எக்காளம் முழக்குங்கள்; பெத்தாவேனில் போர்க்குரல் எழுப்புங்கள்; பென்யமின்! உன்னைப் பின் தொடருகின்றார்கள். 9 தண்டனை வழங்கப்படும் நாளில் எப்ராயிம் பாழாவான்; இஸ்ரயேலின் குலங்களுக்கு உறுதியாய் நேரிடப் போவதையே அறிவிக்கின்றேன். 10 யூதாவின் தலைவர்கள் எல்லைக்கல்லைத் தள்ளி வைக்கிறவர்களுக்கு ஒப்பாவார்கள்; அவர்கள் மேல் என் கோபத்தை வெள்ளப்பெருக்கைப்போல் கொட்டித் தீர்ப்பேன். 11 எப்ராயிம் ஒடுக்கப்படுகின்றான்; தண்டனைத் தீர்ப்பால் நொறுக்கப்படுகின்றான்; அவன் வீணான கட்டளைகளைப் பின்பற்றுவதில் கருத்தாய் இருந்தான். 12 ஆகையால் எப்ராயிமுக்கு நான் விட்டில்போல் இருக்கின்றேன்; யூதாவின் வீட்டாருக்குப் புற்றுநோய்போல் இருக்கின்றேன். வேற்று நாட்டுடன் செய்த மதியீனமான உடன்படிக்கை 13 எப்ராயிம் தன் பிணியைக் கண்டுகொண்டான்; யூதா தன் காயத்தை உணர்ந்து கொண்டான்; எப்ராயிம் அசீரியாவில் புகலிடம் தேடி, யாரேபு அரசனுக்கு ஆளனுப்பினான். ஆனால், உங்களைக் குணமாக்கவோ, உங்கள் காயங்களை ஆற்றவோ அவனால் இயலாது. 14 ஏனெனில், நான் எப்ராயிமுக்குச் சிங்கத்தைப் போலவும், யூதாவின் வீட்டாருக்குச் சிங்கக்குட்டியைப்போலவும் இருப்பேன்; நான், நானே அவர்களைக் கவ்விப் பிடிப்பேன்; தூக்கிக்கொண்டு போவேன்; விடுவிப்பவன் எவனுமே இரான். 15 தங்கள் குற்றத்திற்கான பழியை ஏற்று, என்னைத் தேடி வரும்வரை, நான் என் இடத்திற்குத் திரும்பிப் போய்விடுவேன். தங்கள் துன்பத்திலே அவர்கள் என்னைத் தேடுவார்கள்.
மொத்தம் 14 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 5 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
×

Alert

×

Tamil Letters Keypad References