தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
ஆமோஸ்
1. [PS] [QS][SS] “சமாரியா மலைமேல் வாழும் பாசான்[SE][SS] பசுக்களே! இந்த வாக்கைக் கேளுங்கள்;[SE][SS] ஏழைகளை ஒடுக்கி,[SE][SS] வறியோரை நசுக்குகின்ற நீங்கள்[SE][SS] உங்கள் கணவர்களைப் பார்த்து,[SE][SS] “கொண்டுவாருங்கள், குடிப்போம்” என்று சொல்கிறீர்கள்.[SE][QE]
2. [QS][SS] இறைவனாகிய ஆண்டவர்[SE][SS] தம் புனிதத்தின்மேல்[SE][SS] ஆணையிட்டுக் கூறுவது இதுவே:[SE][SS] “உங்களுக்கு அந்த நாள்கள்[SE][SS] வருகின்றன;[SE][SS] அப்பொழுது அவர்கள் உங்களைக்[SE][SS] கொக்கிகளாலும்,[SE][SS] உங்களுள் எஞ்சியிருப்போரைத்[SE][SS] தூண்டில்களாலும்[SE][SS] இழுத்துக் கொண்டு போவார்கள்.[SE][QE]
3. [QS][SS] நீங்கள் ஒருவர் பின் ஒருவராய்[SE][SS] அருகிலுள்ள கோட்டையின்[SE][SS] பிளவு வழியாய் வெளியேற்றப்பட்டு[SE][SS] அர்மோனை நோக்கித்[SE][SS] தள்ளப்படுவீர்கள்”[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][PE][QE]
4. {இஸ்ரயேலின் பிடிவாதம்} [PS] [QS][SS] “வாருங்கள், பெத்தேலுக்கு வந்து[SE][SS] குற்றம் செய்யுங்கள்;[SE][SS] கில்காலுக்கு வந்து[SE][SS] குற்றங்களைப் பெருக்குங்கள்;[SE][SS] நாள்தோறும் காலையில்[SE][SS] உங்கள் பலிகளைக்[SE][SS] கொண்டு வாருங்கள்;[SE][SS] மூன்று நாளைக்கு ஒருமுறை[SE][SS] பத்திலொரு பங்கையும் செலுத்துங்கள்.[SE][QE]
5. [QS][SS] புளித்த மாவின் அப்பத்தைக்[SE][SS] கொண்டுவந்து[SE][SS] நன்றிப் பலியாகப் படையுங்கள்;[SE][SS] நேர்ச்சைகளைச் செலுத்தி[SE][SS] அவற்றை விளம்பரப்படுத்துங்கள்.[SE][SS] இஸ்ரயேல் மக்களே,[SE][SS] இப்படிச் செய்வதுதானே[SE][SS] உங்கள் விருப்பம்”,[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][QE]
6. [QS][SS] “உங்கள் நகர்களில் எல்லாம்[SE][SS] உங்கள் பற்களுக்கு[SE][SS] வேலை இல்லாமல் செய்தேன்;[SE][SS] நீங்கள் குடியிருக்கும்[SE][SS] இடங்களிலெல்லாம்[SE][SS] உணவுப் பற்றாக்குறையை[SE][SS] உண்டாக்கினேன்;[SE][SS] ஆயினும் நீங்கள்[SE][SS] என் பக்கம் திரும்பவில்லை”[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][QE]
7. [QS][SS] “நீங்கள் அறுவடை செய்ய[SE][SS] மூன்று மாதம் இருந்த போதே[SE][SS] உங்களுக்கு மழையை நிறுத்திவிட்டேன்;[SE][SS] ஓர் ஊரில் மழைபெய்யச் செய்து[SE][SS] அடுத்த ஊரில்[SE][SS] வறட்சியை உண்டாக்கினேன்.[SE][SS] ஒரு வயலில் மழை பெய்யச் செய்தேன்.[SE][SS] வேறொரு வயல்[SE][SS] மழையின்றிக் காய்ந்து போயிற்று.[SE][QE]
8. [QS][SS] ஆகையால், இரண்டு மூன்று[SE][SS] நகர்களின் மக்கள்[SE][SS] தண்ணீர் தேடித் தள்ளாடித் திரிந்து[SE][SS] வேறொரு நகருக்குப் போயும்[SE][SS] அவர்கள் தாகம் தீரவில்லை;[SE][SS] இப்படியெல்லாம் செய்தும்[SE][SS] நீங்கள் என் பக்கம் திரும்பவில்லை”[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][QE]
9. [QS][SS] ‘வெப்பக் காற்றாலும்[SE][SS] பயிரழிக்கும் நோயாலும்[SE][SS] உங்களை வதைத்தேன்.[SE][SS] உங்கள் தோப்புகளையும்[SE][SS] திராட்சைத் தோட்டங்களையும்[SE][SS] அழித்தேன்;[SE][SS] அத்திமரங்களையும் ஒலிவமரங்களையும்[SE][SS] வெட்டுக்கிளி தின்றது;[SE][SS] ஆயினும் நீங்கள்[SE][SS] என்பக்கம் திரும்பவில்லை,”[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][QE]
10. [QS][SS] “எகிப்தின்மீது அனுப்பிய[SE][SS] கொள்ளை நோய் போன்ற[SE][SS] கொடிய நோயை[SE][SS] உங்கள்மீதும் அனுப்பினேன்;[SE][SS] உங்கள் இளைஞர்களை[SE][SS] வாளால் வெட்டி வீழ்த்தினேன்;[SE][SS] உங்கள் குதிரைகளும்[SE][SS] கொள்ளை போயின;[SE][SS] உங்கள் பாளையங்களில்[SE][SS] செத்தவர்களின் பிணநாற்றம்[SE][SS] உங்கள் மூக்கில் ஏறும்படி செய்தேன்;[SE][SS] ஆயினும் நீங்கள்[SE][SS] என் பக்கம் திரும்பவில்லை,”[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][QE]
11. [QS][SS] “சோதோம், கொமோராவின் மக்களைக்[SE][SS] கடவுள் அழித்ததுபோல[SE][SS] உங்களுள் சிலரை அழித்தேன்.[SE][SS] நீங்களோ,[SE][SS] நெருப்பிலிருந்து இழுக்கப்பட்ட[SE][SS] கொள்ளிக் கட்டைபோல் ஆனீர்கள்;[SE][SS] ஆயினும் நீங்கள்[SE][SS] என்பக்கம் திரும்பவில்லை”[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][QE]
12. [QS][SS] “ஆகையால், இஸ்ரயேலே![SE][SS] உனக்கும் இவ்வாறே செய்வேன்,[SE][SS] இஸ்ரயேலே![SE][SS] இப்படி நான் செய்யப் போவதால்[SE][SS] உன் கடவுளைச் சந்திக்கத் தயாராயிரு!”[SE][QE]
13. [QS][SS] ஏனெனில், மலைகளை உருவாக்கியர் அவரே;[SE][SS] காற்றைத் தோற்றுவிப்பவர் அவரே;[SE][SS] தம் எண்ணத்தை மனிதனுக்கு[SE][SS] வெளிப்படுத்துபவரும் அவரே;[SE][SS] காலைப்பொழுதைக்[SE][SS] காரிருள் ஆகச்செய்பவரும் அவரே;[SE][SS] நிலத்தின் உயர்ந்த இடங்களில்[SE][SS] நடமாடுபவரும் அவரே;[SE][SS] படைகளின் கடவுளாகிய[SE][SS] ஆண்டவர் என்பதே அவரது பெயராகும்.[SE][PE][QE]

பதிவுகள்

மொத்தம் 9 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 4 / 9
1 2 3 4 5 6 7 8 9
1 “சமாரியா மலைமேல் வாழும் பாசான் பசுக்களே! இந்த வாக்கைக் கேளுங்கள்; ஏழைகளை ஒடுக்கி, வறியோரை நசுக்குகின்ற நீங்கள் உங்கள் கணவர்களைப் பார்த்து, “கொண்டுவாருங்கள், குடிப்போம்” என்று சொல்கிறீர்கள். 2 இறைவனாகிய ஆண்டவர் தம் புனிதத்தின்மேல் ஆணையிட்டுக் கூறுவது இதுவே: “உங்களுக்கு அந்த நாள்கள் வருகின்றன; அப்பொழுது அவர்கள் உங்களைக் கொக்கிகளாலும், உங்களுள் எஞ்சியிருப்போரைத் தூண்டில்களாலும் இழுத்துக் கொண்டு போவார்கள். 3 நீங்கள் ஒருவர் பின் ஒருவராய் அருகிலுள்ள கோட்டையின் பிளவு வழியாய் வெளியேற்றப்பட்டு அர்மோனை நோக்கித் தள்ளப்படுவீர்கள்” என்கிறார் ஆண்டவர். இஸ்ரயேலின் பிடிவாதம் 4 “வாருங்கள், பெத்தேலுக்கு வந்து குற்றம் செய்யுங்கள்; கில்காலுக்கு வந்து குற்றங்களைப் பெருக்குங்கள்; நாள்தோறும் காலையில் உங்கள் பலிகளைக் கொண்டு வாருங்கள்; மூன்று நாளைக்கு ஒருமுறை பத்திலொரு பங்கையும் செலுத்துங்கள். 5 புளித்த மாவின் அப்பத்தைக் கொண்டுவந்து நன்றிப் பலியாகப் படையுங்கள்; நேர்ச்சைகளைச் செலுத்தி அவற்றை விளம்பரப்படுத்துங்கள். இஸ்ரயேல் மக்களே, இப்படிச் செய்வதுதானே உங்கள் விருப்பம்”, என்கிறார் ஆண்டவர். 6 “உங்கள் நகர்களில் எல்லாம் உங்கள் பற்களுக்கு வேலை இல்லாமல் செய்தேன்; நீங்கள் குடியிருக்கும் இடங்களிலெல்லாம் உணவுப் பற்றாக்குறையை உண்டாக்கினேன்; ஆயினும் நீங்கள் என் பக்கம் திரும்பவில்லை” என்கிறார் ஆண்டவர். 7 “நீங்கள் அறுவடை செய்ய மூன்று மாதம் இருந்த போதே உங்களுக்கு மழையை நிறுத்திவிட்டேன்; ஓர் ஊரில் மழைபெய்யச் செய்து அடுத்த ஊரில் வறட்சியை உண்டாக்கினேன். ஒரு வயலில் மழை பெய்யச் செய்தேன். வேறொரு வயல் மழையின்றிக் காய்ந்து போயிற்று. 8 ஆகையால், இரண்டு மூன்று நகர்களின் மக்கள் தண்ணீர் தேடித் தள்ளாடித் திரிந்து வேறொரு நகருக்குப் போயும் அவர்கள் தாகம் தீரவில்லை; இப்படியெல்லாம் செய்தும் நீங்கள் என் பக்கம் திரும்பவில்லை” என்கிறார் ஆண்டவர். 9 ‘வெப்பக் காற்றாலும் பயிரழிக்கும் நோயாலும் உங்களை வதைத்தேன். உங்கள் தோப்புகளையும் திராட்சைத் தோட்டங்களையும் அழித்தேன்; அத்திமரங்களையும் ஒலிவமரங்களையும் வெட்டுக்கிளி தின்றது; ஆயினும் நீங்கள் என்பக்கம் திரும்பவில்லை,” என்கிறார் ஆண்டவர். 10 “எகிப்தின்மீது அனுப்பிய கொள்ளை நோய் போன்ற கொடிய நோயை உங்கள்மீதும் அனுப்பினேன்; உங்கள் இளைஞர்களை வாளால் வெட்டி வீழ்த்தினேன்; உங்கள் குதிரைகளும் கொள்ளை போயின; உங்கள் பாளையங்களில் செத்தவர்களின் பிணநாற்றம் உங்கள் மூக்கில் ஏறும்படி செய்தேன்; ஆயினும் நீங்கள் என் பக்கம் திரும்பவில்லை,” என்கிறார் ஆண்டவர். 11 “சோதோம், கொமோராவின் மக்களைக் கடவுள் அழித்ததுபோல உங்களுள் சிலரை அழித்தேன். நீங்களோ, நெருப்பிலிருந்து இழுக்கப்பட்ட கொள்ளிக் கட்டைபோல் ஆனீர்கள்; ஆயினும் நீங்கள் என்பக்கம் திரும்பவில்லை” என்கிறார் ஆண்டவர். 12 “ஆகையால், இஸ்ரயேலே! உனக்கும் இவ்வாறே செய்வேன், இஸ்ரயேலே! இப்படி நான் செய்யப் போவதால் உன் கடவுளைச் சந்திக்கத் தயாராயிரு!” 13 ஏனெனில், மலைகளை உருவாக்கியர் அவரே; காற்றைத் தோற்றுவிப்பவர் அவரே; தம் எண்ணத்தை மனிதனுக்கு வெளிப்படுத்துபவரும் அவரே; காலைப்பொழுதைக் காரிருள் ஆகச்செய்பவரும் அவரே; நிலத்தின் உயர்ந்த இடங்களில் நடமாடுபவரும் அவரே; படைகளின் கடவுளாகிய ஆண்டவர் என்பதே அவரது பெயராகும்.
மொத்தம் 9 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 4 / 9
1 2 3 4 5 6 7 8 9
×

Alert

×

Tamil Letters Keypad References